'மேதை'யாக வந்து கலக்கப்போகும் 'கி'ராமராஜன்!


கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன். (இதுவரை பட்டாப்பட்டி டவுசரில் அனைத்து கிராமங்களையும் கலக்கி வந்த "மாமேதை கி ராமராஜன்" இந்த "மேதை" படத்தில் ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் அசரும் வகையில் கோட் சூட் அணிந்து கலக்குகிறார். ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஒரு காட்சியில் பால்சொம்புடன், பட்டபட்டி டவுசர் அணிந்து வருவார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).
இது அவருக்கு 44-வது படம். (முந்தைய 43 படங்களிலும் டவுசர் அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு).

இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.
படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பண்ண தயாராகிறார். (வடிவேலு இந்த படத்துல அண்ணன் மேட்டர முடிச்சுடுவாருன்னு நெனக்கறேன்).
புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா.
மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.
(இந்த படத்தின் மூலம் கி"ராமராஜன்" முன்னணியில் இருக்கும் டெர்ரர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ் மற்றும் யுனிவர்சல் ஹீரோ சாம் ஆண்டர்சன் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று அகில உலக கி"ராமராஜன்" ரசிகர் மன்றம்? தெரிவித்துள்ளது).

4 comments:

Anonymous said...

சூப்பர். கிராமங்களின் நாயகன் என்று சிறப்பு பெற்று, கலக்கிய அண்ணன் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டு வருவது வரவேற்கதக்கது . இயக்குனராய் அறிமுகமாகி கதாநாயகனாய் மின்னி, அரசியலில் அடி பட்டு, குடும்ப வாழ்கையில் சின்னா பின்ன மாகி, உடல் உபாதையால் சிரமப் பட்ட நம் நண்பன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

ஏன் அண்ணே இசை யாரு ன்னு சொல்லவே இல்லை. அவர் வெற்றியின் முக்கிய சக்தி யான இசை ஞானி உண்டா

R.Gopi said...

அனானி அவர்களே

வருகைக்கு நன்றி. இசைஞானி இந்த படத்திற்கு இசை அமைக்கவில்லை.

மேலே உள்ள செய்தியில், இதை - தினா என்று உள்ளதே.

R.Gopi said...

மேலே உள்ள செய்தியில், இசை - தினா என்று உள்ளதே.

கிரி said...

//முந்தைய 43 படங்களிலும் டவுசர் அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு//

:-))))

டவுசர் போடாமையும் (அட! பேன்ட் போட்டுட்டு தாங்க) நடித்து இருக்காரு! :-)