ரஜினி ராம்கிக்கு வாழ்த்துக்கள்பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் போட்டியில் நமது அருமை நண்பர் ரஜினி ராம்கி எழுதிய மு.க புத்தகம் பரிசுக்குரிய புத்தகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து ஆண்டு தோறும் புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக பரிசுகள் அளித்து பாராட்டி வருகிறது. இந்த ஆண்டின் பரிசுக்குரிய புத்தகங்களில் ஒன்றாக மு.க புத்தகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், பரிசுகளும் அவரை மேலும் நல்ல படைப்புகள் படைக்க உத்வேகம் கொடுக்கும் என்பது திண்ணம்.

நம் அருமை நண்பர் ரஜினி ராம்கி இது போன்று மேலும் பல பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

நன்றி : www.rajinifans.com (செய்தி)

No comments: