இன்றைய செய்திகள் - 19.02.09

இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று சோனியா காந்தி உறுதி.
**********
போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்த முடியாது என்று பிரணாப் முகர்ஜி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பி.க்கள் கடும் அமளி.
***********
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தையை சேர்ந்த பிரமுகர் தீக்குளித்தார்.
***********
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.11,480-ஆக உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் ரூ.544 கூடியது.
************
போர் பகுதியில் இருந்து வெளியேறும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.சபை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு.
*************
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 17 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல்.
************
ஏவுகணை சோதனை நடத்தினால் வடகொரியா மீது தடை விதிக்கப்படும் என்று தென்கொரியா அறிவிப்பு.
************
இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை என்று டெல்லி மேல்சபையில் பிரணாப் முகர்ஜி விளக்கம்.
************
பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதால் தீவிரவாத பிரச்சனை தீர்ந்துவிடாது என்று பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி பேச்சு.
************
மும்பை தாக்குதலில் பிடிபட்டுள்ள முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாபை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தல்.
***********
மங்களூரை தாலிபான்களின் நகரங் என்று கூறிய மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு.
************
"சத்யம்" நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.
************
பெங்களூரை உலுக்கிய தொடர்கொலையில் பரபரப்பு தீர்ப்பு. பெண்களை கற்பழித்து கொன்ற போலீஸ்காரருக்கு தூக்கு தண்டனை.
***********
சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்ட வழக்கில் வக்கீல் கைது. 19 பேர் மீது வழக்கு பதிவு.
***********
தனது 61-வது பிறந்தநாளை ஒட்டி 61 ஜோடிகளுக்கு இலவச திருமணம். சென்னையில் ஜெயலலிதா இன்று நடத்தி வைக்கிறார்.
**********
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை. போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்.
************
சிங்கப்பூரில் இருந்து ரூ.1 1/2 கோடி தங்க நகைகளை கடத்தி வந்த தொழில் அதிபர் பிடிபட்டார்.
************
நியூசிலாந்து சுற்றுப்பயணம் கடினமாக இருக்கும். பயணம் புறப்படும் முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பேட்டி.
**********
துபாய் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்த இந்தியாவின் சானியா மிர்சா இரட்டையர் பிரிவிலும் தோல்வி.
**********
திரைப்பட இயக்குனர் சீமானை கைது செய்ய அவர் வீட்டு வாசலில் காத்து இருக்கும் புதுச்சேரி போலீசாரின் தனிப்படை.
***********
விரைவில் கேப்டன் டி.வி. - விஜயகாந்த் அறிவிப்பு.

No comments: