இன்றைய செய்திகள் - 09.02.09

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இலங்கை அரசை மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.
**********
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜனநாயக முறையில் தீர்வு காண வலியுறுத்தி, மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மாபெரும் பேரணி.
***********
இலங்கை போர்கப்பல் மூழ்கடிப்பு. விடுதலைபுலிகளின் கடற்படை தாக்குதல்.
*************
மும்பை தாக்குதல் தொடர்பான இந்தியாவின் ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் இன்று பதில் அளிக்கிறது. ஐரோப்பாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்.
*************
பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட இங்கிலாந்து தீவிரவாதிகளால், அமெரிக்காவுக்கு ஆபத்து.
*************
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்கு 84 பேர் பலி.
**************
போலந்து நாட்டு என்ஜினியர் தலை துண்டித்து கொலை. தாலிபான்கள் அட்டூழியம்.
*************
ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்து. காங்கிரஸ் மீது நரேந்திர மோடி கடும் தாக்கு.
*************
ஓய்வூதியத்தில் அதிருப்தி. விருதுகளை திருப்பி அளித்தனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.
*************
ஹாவேரி அருகே விபத்து. பெங்களூரில் ரயில் தடம் புரண்டது. 8 பேட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
*************
வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.
*************
இருதய ஆப்பரேஷன் செய்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தையல் பிரிக்கப்பட்டது.
*************
இலங்கை தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த ஆண்டு, என் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
**************
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றினார்.
**************
இலங்கை பிரச்சனை தொடர்பான மாற்று கட்சிகளின் இழிவு பேச்சு. உடல் தாங்குகிறதே, உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும் - கருணாநிதி வேதனை.
***************
நடிகர் பிரபு மகள் திருமணம். ரஜினிகாந்த், கமலஹாசன் நேரில் வாழ்த்து.
***************
கைக்குழந்தைகளுடன் வந்து பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 3 பெண்கள் கைது.
****************
சென்னை நகரில், விடுமுறை நாட்களில் கூட எங்கு பார்த்தாலும் "எம்" சர்வீஸ் பஸ்கள். அதிக கட்டணத்தால் அவதி - பொதுமக்கள் புகார்.
****************
5 போட்டிகள் கொண்ட இந்திய-இலங்கை கிரிக்கெட் தொடரின், கடைசி போட்டியில், இலங்கை ஆறுதல் வெற்றி. இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. யுவராஜ் தொடர் நாயகன் விருது பெற்றார்.
***************
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட். இங்கிலாந்து 51 ருன்னில் சுருண்டு, இன்னிங்க்ஸ் தோல்வி.
*************
3-வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
**************

No comments: