கோவை மாவட்டம் சிறுமுகை புதூர் ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் 1330 திருக்குறளையும், திருவள்ளுவரின் உருவத்தையும் ஒரே பட்டுச் சேலையில் நெய்துள்ளனர்.
கோ ஆப்டெக்ஸ் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரே பட்டுப் புடவையில் 1330 குறளையும், திருவள்ளுவர் உருவத்தையும் வடிவமைத்துள்ளனர். 4 மாதம் 10 நாட்களில் ரூ.3.27 லட்சம் செலவில் இந்த சேலை தயாராகியுள்ளது. இந்த பட்டுப் புடவை நேற்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதேப்போன்ற சேலை வேண்டுமானால், முன்கூட்டியே தெரிவித்தால் நெய்து தர முடிவு செய்துள்ளோம். பட்டுச் சேலையின் மதிப்பு 70 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்கும் என்று சிறுமுகை புதூர் ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் சங்க மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த திருக்குறள் பட்டுச்சேலையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்த முயற்சியில் பாரதியார் பல்கலைக்கழகம், கோவை மாவட்ட லயன் சங்கமும் ஈடுபட்டுள்ளன.
(நன்றி : வெப்துனியா)
No comments:
Post a Comment