ரஜினி - மூன்றெழுத்து காந்தம்


ரஜினி என்கிற மூன்றெழுத்து காந்தம்
அந்த முகத்தில் தான் எத்தனை சாந்தம்

வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி
தோல்வி என்பது இல்லை உனக்கினி

உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்
கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை
இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை
அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை

நீ ராஜாக்கள் விரும்பும் ராஜாதி ராஜா
சேரனும், சோழனும் கொண்டாடும் - பாண்டியன்
உன் எதிரிகளையும் உன் முன்
மண்டி இட வைக்கும் - மாவீரன்
ரசிகர்கள் கூட்டத்தை நல்வழியில்
வழி நடத்தி செல்லும் தளபதி
தர்மத்தை போதித்த தர்மதுரை
உழைப்பின் பெருமையை
உரக்க சொல்லிய உழைப்பாளி
தரணிக்கே ஒரு மகன் - தமிழ் நாட்டின் தலைமகன்
நான் மகான் அல்ல, சாமான்யன் தான்
என சொல்லிய தங்க மகன்

நீ சொல்லி அடித்த படம் பில்லா
உன்னால் நிரம்பியது தியேட்டரில் கல்லா
நீ சுழன்று அடித்தது அனைத்து ஜில்லா
எதுத்து நிக்கல ஒருத்தனும் தில்லா

உன் விருப்ப பெயரோ வீரா -
நீ செய்ய விரும்பாத போரா ??
ஆனாலும் நிஜத்தில் நீ சமாதான புறா

ஒன்ன எதுத்து நின்னு சவாலு
வுட்டவன் எல்லாம் திவாலு

அகவை ஐம்பத்து ஐந்து கடந்த
சிறியோரும் பெரியோரும் விரும்பும்
மீசை வைத்த குழந்தை நீ

சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்
அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்
சிவாஜி என்ற ஒரே படத்தின் மூலம்
அகண்டு விரிய செய்த அற்புத மனிதன் நீ

ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,
இன்னும் உன் இளமை ஊஞ்சலாடுகிறது.

தேனையோ, சர்க்கரையையோ உண்டால்தான் இனிக்கும்
ஆனால், உன்னை பற்றியோ நினைத்தாலே இனிக்கும்

நீ பாசத்தின் பாவலன், ஊர்காவலன்
நேசத்தில் ஒரு அன்புள்ள ரஜினிகாந்த்
அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான வேலைக்காரன்
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன் தர்ம யுத்தம்

சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வந்தது வீர சிவாஜி - அன்று
சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வருவது உன் சிவாஜி தி பாஸ் - இன்று

உலகின் அனைவரின் முகமெங்கும் அரிதாரம்
அரிதாரமின்றி உன் முகம் அவனியில் அரிதாகும்

அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்
தீராத ஆசையில் அனைவரும் தேடி அலைய
நீயோ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய

வார்த்தைகள் தேடி வந்து, விழுந்து ஆனது கவிதை
அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை

உனக்கே சமர்பணம் இந்த பாமரனின் பா
அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா

அங்கோர் உயர்ந்த மனிதன் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக)

அவன் எப்படி இருந்தான்

மனிதன்தான் என சொல்லும்படி இருந்தான்
என சொல்லிக்கொள்ளும்படியாக இருந்தானா
என சொல்லத் தெரியாதபடி தான் இருந்தான் .....

விவரிக்க சுவாரசியமாக எதுவுமே இல்லாதது போல இருந்தான் ....

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை ...
இப்படி ஏதுமின்றி , சற்றே கூன் முதுகுடன்,
ஒன்றரை கண்ணுடன் இருந்தான்......

தலையில் நன்கு எண்ணையிட்டு,
வகிடெடுத்து சீவி,
சிங்காரித்து - இப்படி ஏதும் இன்றி .....

எண்ணை என்றால் என்னவென்றே அறியாத,
சீப்பை சில மாதம் பார்க்காத, சிடுக்கு பிடித்த தலை .........

மூக்கு கூட, ஒரு ஒழுங்கு ஏதுமின்றி, கோணலாக இருந்தது. இரு புறமும் துவாரங்கள் இருந்ததால், அதன் வழியாக சுவாசிப்பான் என்று மட்டும் தெரிந்தது. அதில் பல பல டப்பாக்கள் பொடி போட்டு அடைத்ததற்கான அடையாளம் அழுக்குடன் காணப்பட்டது. கிழிந்த கோட்டின் ஊடே துரித்திய கணேஷ் பீடிக்கட்டு ஒன்று ....

காது என ஒன்று, இருபுறமும் நீட்டிக்கொண்டிருந்தது. எல்லோராலும் அதன் வழியே கேட்க முடியும். கேட்டதை கிரகிக்க முடியும். இவனுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஒழுங்கற்ற பல் வரிசையில், அவன் ஈ ஈ என இளித்தபோது, அந்த இளிப்பில் தெரிந்தது பத்து வருஷ பான்பராக் (நன்றி சுஜாதா) ....

ஒன்றரை காலை விந்தி விந்தி, இழுத்து இழுத்து நடந்து போகும் வழியில் .....

ஒரு குருட்டு பிச்சைக்காரன், உப்பு காகிதத்தை தகரத்தில் வைத்து தேய்த்த குரலில், உச்சஸ்தாயியில் ஏதோ ஒரு பாட்டை அபஸ்வரமாய் பாடிக்கொண்டிருந்தான் (ஈனஸ்வரத்தில் ஒரு அபஸ்வரம்). பசியின் வேகம் அவனை அழுத்த, அந்த அழுகுரலில், பசியின் வேதனை துல்லியமாய் தெரிந்தது .....

வருவோர், போவோர் மற்றும் போவோர் வருவோர் அனைவரும் அசுவாரசியமாய் அவரை கவனித்தும், கவனிக்காமலும், அவசர கதியில், கடந்து போய் கொண்டிருக்க .....

ஒரு வேளை சோத்துக்கு காசு எதுவும் தேறாத நிலையில்,
அவன் வயிறு காய்ந்து, சுருதி பிசகி,
சோகம் தாங்கி, தாளம் தப்பி பாடிக்கொண்டிருக்க ....

அதைக்கண்ட இந்த கதையின் நாயகன், தன் கசங்கிய கோட் பைக்குள் கை விட்டு, கிடைத்த மொத்த காசையும் எடுத்து அந்த குருட்டு பிச்சைக்காரனின் தட்டில் இட்டான் - தன் அடுத்த வேளை சோற்றைப்பற்றி கவலை இன்றி ......

கடந்து போன அனைவரின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிய
தலைகள் வெட்கத்தில் கவிழ்ந்து தரையை நோக்க

கதை நாயகன் தன் கூன் முதுகை நிமிர்த்த முடியாது, நிமிர்த்தி நடந்தான் ...

அவன் அங்கே உயர்ந்த மனிதன் ........

தூரத்தில் இன்னும் கேட்டு கொண்டிருந்தது அந்த குருட்டு பிச்சைக்காரனின் ஈனஸ்வர பாட்டு ...........

ஜாலி கவி வாலி

வாலி வாலி வாலி
வாலு இல்லா வாலி
நூறு கவி வந்தாலும்
வாலி என்றும் ஜாலி

வாய் நிறைய வெத்தல
உன் பாட்டில் வீரம் வத்தல
ஊரெல்லாம் ஓடினாலும்
பாரெல்லாம் தேடினாலும்
ஒன்ன போல பாட்டெழுத
ஒலகத்துல ஆளில்ல

உன் மூஞ்சி முழுக்க தாடி
பாட்டு பாஞ்சு வருதே தேடி
பாட்ட கேட்ட பல ஜோடி
வாழ்த்தறாங்க வந்து நாடி

ஆயிரம் பேர் வந்தாலும்
கை கோர்த்து நின்றாலும்
ஒன் எழுத்து மட்டும் நிக்குது
எதுத்து நின்னவன் தல சுத்துது

இப்போ ஒனக்கு ஆச்சு வயசு
ஒன் எழுத்துக்கு இன்னும் மவுசு

ஒன் உழைப்புக்கு இல்ல வரைமுறை
ஒன் எழுத்துக்கு இல்ல விடுமுறை

ஒன் எழுத்த படிச்சு தெளிஞ்சவன்
வேற படிக்கணும்னா ஓடி ஒளிஞ்சவன்

வாலி வாலி வாலி
வாலு இல்லா வாலி
நூறு கவி வந்தாலும்
வாலி என்றும் ஜாலி

கேள்வியும் நானே பதிலும் நானே - 1

கேள்வி : நேற்றைய மற்றும் இன்றைய இசை

பதில் : நேற்றைய இசை மெல்லிசையும், தேன் வரிகளும் இணைந்து நந்தவனத்தில் நடந்த தென்றல்
இன்றைய இசை வல்லிசையும் தென்படாத வரிகளும் இணைந்து பாலைவனத்தில் நடக்கும் சுனாமி.

கேள்வி : இன்றைய இந்தியா பொருளாதாரம்

பதில் : நேற்றைய விலைவாசியை விட இன்று குறைவு என்று யாராவது கூறினால் அதைக்கேட்டு சந்தோஷப்படும் முதல் ஆளாக நான் இருப்பேன். ரேஷன் கடையில் கூட குறைவு என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு தான் தெரிந்தது, குறைந்தது விலை அல்ல, எடை என்று ..............

கேள்வி : எந்தப்பால் பிடிக்கும் ??

பதில் : குடிப்பதற்கு பசுவின் பாலும், படிப்பதற்கு திருக்குறளின் காமத்துப்பாலும்

கேள்வி : சாதனையாக நீங்கள் நினைப்பது என்ன ?

பதில் : இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதை

கேள்வி : வேதனை என்றால் ??

பதில் : பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்படும்போது ஏற்படுவது ....

கேள்வி : சோதனை என்றால் ??

பதில் : கேட்டால் பதில் கிடைக்கும் என்பதற்காக என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பது ...........

கேள்வி : போதனை என்பது ??

பதில் : நாம் அடுத்தவருக்கு மட்டும் கொடுப்பது

கேள்வி : தானம் என்பது !!!

பதில் : வாங்குவதில் தான் தனி சுகம்

கேள்வி : லஞ்சம் என்பது ??

பதில் : அப்படி என்று ஒரு வார்த்தை தமிழில் உள்ளதா ??

கேள்வி : சரி, கையூட்டு என்பது ??

பதில் : தன் மகவுக்கு, தாய் தன் கையால் சோறு ஊட்டுவது

கேள்வி : ஆசை என்பது ??

பதில் : அது அளவற்றது .....

கேள்வி : உங்களின் எல்லை !!!

பதில் : அது என்னிடம் இல்லை

கேள்வி : ஒரு தத்துவம் !!!

பதில் : மீசை வைத்தவன் எல்லாம் வீரன் இல்லை ....... ஆசை வைக்காதவன் எவனும் மனிதன் இல்லை ......

கேள்வி : பூ மற்றும் பூவையர் !!

பதில் : செடி கொடியில் பூப்பது, மஞ்சத்தில் மலர்வது

கேள்வி : பட்டம், பதவி, புகழ், செல்வம் !!!

பதில் : படிக்காமலே எனக்கு கிடைத்தது, தேடாமலே என்னை அடைந்தது, தானாகவே எனக்கு கிடைத்தது, தேடி வந்து சேர்ந்தது

(தொடரும்)

நான் ரசித்த காமெடி காட்சி

படம் - கோவில்
நடிப்பு : வடிவேலு & சிம்பு
----------------------------------------------------------------------
சிம்பு : அய்யோ, யம்மா ..... அய்யோ யப்பா

வடிவேலு : டேய் டேய் ... ஏண்டா நடுராத்திரில இந்த கத்து கத்துற ......

சிம்பு : அது ஒண்ணும் இல்ல சித்தப்பா ... நீங்க பேசாம தூங்குங்க ....

வடிவேலு : ஏண்டா, நடு ராத்திரில .... தூக்கத்துல இந்த மாதிரி கத்துனா ஏதாவது விஷயம் இல்லாமயா இருக்கும் ... என்னன்னு சொல்லுடா .....

சிம்பு : அது ஒண்ணும் இல்ல சித்தப்பா .. ஒரு கெட்ட கனவு அதான்.

வடிவேல் : என்ன கெட்ட கனவுடா, அத சொல்லுடா.

சிம்பு : அந்த மைக்கேல் சூசை இல்ல ...அவன் உங்கள வெட்டிடறான் .... அதான் கத்திட்டேன்...

வடிவேலு : மைக்கேல் சூசையா, அவன் என்னிய ஏண்டா வெட்றான் ......

சிம்பு : அது என்னன்னா, நான் அவரோட பொண்ண லவ் பண்றேன் இல்ல, அதான் ஒங்கள வெட்டிடறான் ...

வடிவேலு : டேய் ....அவரு பொண்ண நீ லவ் பண்ணினா அவன் ஒன்னியதானடா வெட்டனும் ... என்னிய ஏண்டா வெட்டணும் ...... ஏதோ கனவுன்னாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமாடா ????

கேப்டன் மற்றும் பெரிய கரடி ராஜேந்தர்

கேப்டன் மற்றும் பெரிய கரடி ராஜேந்தர் ஒரு கலந்துரையாடல்
----------------------------------------------------------------------------
கேப்டன் : வணக்கம் பெரிய கரடி ராஜேந்தர் அவர்களே

டி.ஆர் : படிக்காமலே டாக்டர் ஆனா சபரி அவர்களே. வணக்கம் ..
வணக்கம் வணக்கம் எனக்கு சொன்ன வணக்கம்
திருப்பி சொல்லு வணக்கம், சொன்னா ஒனக்கு இனிக்கும்

உங்கள ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன்.
எல்லாரும் கேப்டன் கேப்டன்னு ஒங்கள சொல்றாங்களே .... நீங்க
கப்பல் கேப்டனா
ஆர்மி கேப்டனா
இல்ல கிரிக்கெட் டீம் கேப்டனா ??

கேப்டன் : பட்டம் குடுத்த ரகசியத்த மட்டும் கேக்காதீங்க ....
படிக்காட்டியும் நாங்க மேதை தான் ....
நீங்க நல்லா டமில் பேசறீங்க, எந்த கான்வென்ட்ல படிச்சீங்க ...
எட்டாம்பு முடிச்சாச்சுல்ல ......

டி.ஆர் : மொதல் கேள்வியே தப்பு.
கான்வென்ட்ல படிச்சா அது ஆங்கிலம்,
அரசாங்க பள்ளியில் படித்தால் அது தமிழ்.
மொதல்ல தமிழ், தமிழ்னு சொல்லி பழகுங்க ....
அப்புறம் எல்லாத்தையும் பத்தி யோசிப்போம் .......

கேப்டன் : அரசாங்க பள்ளியா ??
எனக்கு நான் நடிச்ச படம் அரசாங்கம் தான் தெரியும்.
அது சரி, பள்ளின்னா இஸ்கூல் தானே ........
கேப்டனுக்கு தெரியாத ஒரு விசயம் கூட இந்த ஒலகத்துல இருக்கா என்ன ??

டி.ஆர் : அது அரசாங்கம் இல்ல, அராஜகம்.
அது படம் அல்ல, பாடம் (எப்படி படம் எடுக்க கூடாதுன்ற பாடம்).
எப்படி எடுத்தாலும் இல்ல படம்
என்ன மாதிரி எடுத்தா தான் படம்
மிச்சது எல்லாம் பப்படம்
என் சொந்த ஊரு உக்கடம்

கேப்டன் : ஐயோ இவன் தொல்லைய ஆரம்பிச்சுட்டானே .... ஆமா ஆமா நீங்க இப்போ வீராசாமி படத்த பத்தி தானே சொன்னீங்க. நான் கூட கேள்விப்பட்டேன். தியேட்டர்ல இருந்த ரெண்டு பேரும் தூக்கு போட்டுடாங்கன்னு. இதெல்லாம் தேவையா கரடி ?? நீயும் இம்சை, உன் படமும் இம்சை ............ எல்லாத்தையும் நிறுத்து ......

டி.ஆர் : அது சரி .... நீங்க கூட இப்போ ஏதோ படம் நடிக்க போறீங்கன்னு செய்தி வந்ததே, அது சும்மா டகால்டி தானே. ஏன்னா ஒங்க படம் பாத்து இனிமே யாரும் பொழக்க போறது இல்ல. அந்த வெளம்பரத்த பாத்த ஒண்ணு ரெண்டு பேரும் இப்போ ஆஸ்பத்திரில.

வயசாயி போச்சே ... போனோமா வந்தோமா குவாட்டர் அடிச்சோமா தூங்குனோமான்னு இல்லாம ........ டன் டன்னா கயிறு வாங்கி, அதுல தொங்கி .... இதெல்லாம் தேவையா ?? என்ன கேப்டன் பேச்சையே காணும் ??

கேப்டன் : நெறைய பேசினா ஆச்சிய பிடிக்க முடியுமா ?? அதான் பேச்ச கம்மி பண்ண சொல்லி பிரேமாவும் சொல்லிச்சு .... சுதீஷ் கூட சொன்னான் ..... நம்ம ஆளுங்களும் சொல்றாங்க .... பார்ப்போம்

டி.ஆர் : மொதல்ல ஆச்சின்னு சொல்லாம, ஆட்சின்னு சொல்ல பழகுங்க .... தமிழ் கத்துகோங்க, அப்புறம் தமிழ்நாட்ட ஆட்சி பண்ணலாம் .... கெரகம்டா சபரி நீயி .....

(தொடரும்) ..........

மெகா ஹிட்ஸ் - ஆறு

ஒன்று - மொக்கையோ மொக்கை

கட்டு கட்டு கீரை கட்டு
வாங்கி தரேன் கீரை கட்டு
என்ன நீயும் ஓரம் கட்டு ஒ பாப்பம்மா

புட்டு புட்டு கொழா புட்டு
வாங்கி தரேன் கேப்ப புட்டு
வந்து நீயும் ஓரம் கட்டு பப்பையா

இரண்டு - கேட்க கோடி காது வேண்டும்

வருவியா வர மாட்டியா
வரலேன்னா உன் பேச்சு கா
தருவியா தர மாட்டியா
தரலேன்னா உன் பேச்சு கா

மூன்று - வீரம்

எ பகைவனுக்கு அருள்வது பிழையே
வா பகைவனை அழிப்பது முறையே
பொறுப்பது புழுக்களின் குணமே
அழிப்பது புலிகளின் குணமே
எட்டி போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அராஜகம் அழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ படை அழியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

நான்கு - காமெடி

ஒங்கப்பனுக்கு பே பே
ஒங்க பாட்டனுக்கும் பே பே
காவலுக்கு வந்தவனும் பே பே
உன் காதில் ஒரு பூ முடிப்போம் பே பே
அடிச்சாலும் பே பே புடிச்சாலும் பே பே
நீ கிட்ட வந்து முட்ட வந்தா பே பே பே பே

ஐந்து - சோகம்

சொந்த சொமைய தூக்கி தூக்கி
சோர்ந்து போனேன் (அவரோட தொப்பையோ என்னவோ)
வந்த சொமைய தாங்கி தாங்கி சோகமானேன்

ஆறு - நையாண்டி

ஆசை கிளியே அரை கிலோ புளியே
அழுகின தக்காளியே, மேயுற கோழி எல்லாம்
பாயுறது சரியா, மேயுற கோழி எல்லாம்
பாயுறது சரியா, அடியே என்னருமை தவக்களையே
ஆசை கிளியே அரை கிலோ புளியே
அழுகின தக்காளியே .............

விஞ்ஞானக் கவிஞர் வெத்து வேட்டு வீராசாமி

வேதியியலில் மேதை
அறிவியலில் ஆந்தை
வேதாந்தத்தில் பேதை
சித்தாந்தத்தில் மொந்தை
விஞ்ஞானக் கவிஞர் வெத்து வேட்டு வீராசாமி
இவர் இயற்பியல் இத்தகன், புறவியல் புத்தகன்
சரவியல் சத்தகன், முரவியல் மொத்தகன்
அடிப்பது பல்டி, மொத்தத்தில் டகால்டி

விஞ்ஞான கவிஞரின் வித்தக கவிதை இதோ

ஆட்டமே... (ATOM) என் ஆட்டத்தின் ஓட்டமே
நாட்டமே உன் இதயத்தின் பாட்டமே (BOTTOM)
நாற்றமே ... சல்பரின் சீற்றமே
ஊற்றுமே ஊர் கூடி போற்றுமே

மின் விழியில் மிருதுவான எலெக்ட்ரான் நீ
விண்வெளியில் மிதக்கின்ற ப்ரோடானும் நீ
நியூ இயரை எதிர்நோக்கும் எலக்ட்ரானும் நீ
தன் சுழியில் தகிக்கின்ற த்ய்ரிஸ்தொரும் நீ
மண் பரப்பில் மங்காத குப்பையும் நீ

மங்காத குப்பையின் கழிவே
உன்னை தொட்டால் வராது இழிவே

நீ வெண்ணை வெட்டி வெங்கி
சன்னை சுற்றும் சங்கி
மொத்தத்தில் நீ சங்கி மங்கி

பாட்டி சுட்ட வடை

ஒரே ஒரு ஊரு பாரு
அந்த ஊர்ல கெழவி பாரு
அந்த ஆயா சுட்ட பலகாரம்
சாப்பிட்டா நமக்கு பசியாறும்

அங்க - துட்டு குடுத்தா பலகாரம்
குடுக்கலேன்னா வெவகாரம்
வேணும் நமக்கு பலகாரம்
வேணாம் நமக்கு வெவகாரம்
துட்டு குடுத்துடுடா சிங்காரம்

வயல் நோட்டம்

வயல்ல ஒரு ஆடு
பயலே நீயும் பாடு

ஆட முடிஞ்சா ஆடு
முடியலேன்னா ஓடு

வெடல புள்ள ஆட்டம்
பாத்து பயந்தவுக ஓட்டம்

சீறி பாயும் பாம்பு
அடிக்க எடுடா ஒரு கம்பு
அடிக்க இருக்கு தெம்பு
அத அடிக்கலேன்னா வம்பு
அட என்ன நீயும் நம்பு

பெரிய பண்ண வயலு
வயல்ல ஒரு மயிலு
மயில பாத்த குயிலு
அடிச்சுது ஒரு பிகிலு
ஆஹா என்ன ஒரு ஒயிலு

நிலவரம் ரொம்ப கலவரம்

ஊரு பேரு முட்டம்
அந்த ஊருக்கு ஒரு திட்டம்
பறக்குதெங்க பட்டம்
அதை சுத்தி ஒரு வட்டம்

மன்னர் சென்றார் நகர்வலம்
அறிய சென்றார் நிலவரம்
கண்டால் எங்கும் கலவரம்

வட்டத்துள் ஒரு சதுரம்
குப்பிக்குள் தான் மதுரம்

ஊருக்குள்ளே ஆட்டை
போட்டான் அந்த பரட்டை
சட்டத்துள்ளே ஓட்டை
வெளியே வந்தான் பரட்டை
அவன் உடம்பெங்கும் மச்சம்
அவன் மச்சத்தில் மிச்சம்

ஊர் சொல்லும் பல பழி
ஊருக்கெல்லாம் ஒரே வழி
ஆனா அவன் வழி தனி வழி

பப்பரப்ப... பஞ்சாயத்து

ஜல்... ஜல்... ஜல்

வில்லு வண்டி வில்லு வண்டி
கிளம்பிரிச்சி வில்லு வண்டி.
ரெக்க கட்டி கெளம்பிடிச்சி
ஜல் ஜல் வில்லு வண்டி

வெள்ளாவி வைச்ச சட்டையிலே

கலக்குறாரு நம்ப நாட்டாமை .
வண்டிக்காரன் அண்ணாவி,

அவன் வாயி நெறைய கொட்டாவி
அவனும் இப்போ குளிக்கல
வண்டி மாடும் குளிக்கலே.
வண்டிக்குள்ளே விரிச்சு வைச்ச

வைக்கோல் மெத்தை குழிக்குள்ளே.

பஞ்சாயத்து பஞ்சாயத்து

இன்னிக்கு தான் பஞ்சாயத்து.

வெடல பய விஜய்
வெட்டியா ஒரு பிரஜை
திரும்பி திரும்பி பாத்தான்
ஏதோ சொல்லி கேட்டான் ,.
சந்தையில வாங்கின கில்ட் வாட்ச்
வாய தொறந்தா உல்டா பேச்சு
நாக்க மூக்க விஜயா
பாக்குரா இப்போ புதுசா
ஆடிக்கு பொறவு ஆவணி
மாடில பறக்குது தாவணி

அஞ்சலை
கிழவி காது!

பாம்படம் தொங்குது பாரு !!!
கேக்காத காதிலே - முள்ளு முள்ளா புல்லாக்கு

மாட்டுக்கு தான் வச்சுட்டேன் நானும் இப்போ புண்ணாக்கு
இத்துப்போன பெரிசுக இருந்துட்டு போவட்டும்
கூட அந்த சிறுசுகள் இருக்கட்டும் இலவசம் .

பாரு பாரு இங்க பாரு
பிராது கொடுத்தவரு டமாரு ….
பிரச்சினைன்னு சொன்னதும்

ஓடிட்டாரு குமாரு

நாட்டாமை

ஒரு டகால்டி ஊரு
அங்க ஒரு பழைய ஆலமரம்
மரத்தடில காரை போன திண்ணை
திண்ணை மேல ஒரு நசுங்கின சொம்பு
அதுல பாதி அளவு தண்ணி
சுத்தி வெத்தல போட்டு துப்பின கறை

பஞ்சாயத்துல பிராது குடுக்க
ஒரு நாளு நம்ம நாட்டாமையே
நேர வந்துட்டாரு

பிராது என்னன்னா, அவரோட சொம்பு காணும்
இப்போ அவரே பிராது, அவரே தீர்ப்பு

நாட்டாமை சொம்ப எடுத்து போய்
பழைய பாத்திர கடையில போட்டு
பேரீச்சம்பழம் வாங்கி ஏப்பம் விட்டுட்டாரு
இத பாத்துட்ட பேச்சிமுத்துவ பட்டணம் போக சொல்லிட்டு
இங்க ஒரு தீர்ப்பு சொன்னார் பாருங்க !!!! சூப்பர் தீர்ப்பு அது

-----------------------------------------------------------------
என்ன தீர்ப்பு சொல்லி இருப்பாருன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்

கவிஞர் கரடிமுத்து

என்ன சத்தம் இந்த நேரம்
என் சாப்பாட்டில் ஏன் இத்தனை காரம்
சுமை அதிகமானால் பாரம்
சும்மா ஒதுங்கிப்போனேன் ஓரம்
என்ன சத்தம் இந்த நேரம்
----------------------------------------------

இலவசமா சர்க்கரைப் பொங்கல்!

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசம் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவு. இது பொங்கல் அன்னிக்கி அல்வா குடுக்கற வேல தானப்பு ......

இலவசம் என்ற பட்டியல் கீழே...
பச்சரிசி 500 கிராம்
வெல்லம் 500 கிராம்
பாசி பருப்பு 100 கிராம்
முந்திரி, திராட்சை
ஏலக்காய் 20 கிராம்
-------------------------------------
கட்டுரையோட தலைப்பு சூப்பர்

ஆனா என்ன, இவங்க எத்தன கோடி போட்டு எவ்ளோ கிலோ அல்வா கெளறினாலும் :
அவக திம்பாக
அவுக வூட்டுல இருக்கறவக திம்பாக
அவுக கட்சிக்காரங்க திம்பாக -
அவரின் மற்ற பல உறவினர்களும் திம்பாக

பாக்கத்தானே போறீக இந்த டகால்டிகள ...

இதுவரைக்கும் :
கெளறி தந்தீக ... திங்க சொன்னீக

இனி :
கெளறி தருவீக ... திருப்பி தருவோம் ... நீங்களே தின்னு தீப்பீக ......

இது என்ன கலாட்டா

சிதம்பரத்தில் ஒரு குப்புசாமி
அயனாவரத்தில் ஒரு அப்புசாமி
அக்ரகாரத்தில் ஒரு அண்ணாசாமி
மாயவரத்தில் ஒரு மன்னார்சாமி
பாக்தாத் பல்டிமணி
ஜப்பானில் ஜானகிராமன்
அறந்தாங்கியில் ஒரு அர்த்தநாரி
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கிருபா
அமெரிக்காவில் ஒரு பேரிக்கா
இந்தியாவில் ஒரு விந்தியா
ஈரானில் ஒரு பூரான்
கமுதியில் ஒரு கபோதி
ஏர்வாடியில் ஒரு மார்வாடி
பூட்டானில் ஒரு சேட்டன்
மாயவரத்தில் ஒரு ஆரவாரம்
சுங்குவாரில் கிழிந்த டங்குவார்

ஆழ்வார்பேட் ஆண்டவர்

மலேசியாவில் மன்னாரு

----------------------------------------------------------------------------------------------

இவை யாவும் சில படப்பெயர்கள்

சொன்னது யாரு ??

சித்தாந்தமும் வேதாந்தமும்
கூடி கை கோர்த்து
கும்மி அடிக்கும் நேரத்தில்
மொத்தமாக வை
பத்து முத்தமாக வை
அதையும் சத்தமாக வை

ஒரு துளி வெண்மை
உறைத்தது என் ஆண்மை
மலர்ந்தது பெண்மை
இதை கண்டோர்கெல்லாம்
புரிந்தது உண்மை

சாத்திரத்தின் சூத்திரத்தை
ஆத்திரம் அறியாது
ஆத்திரத்தின் சூத்திரத்தை
பாத்திரம் அறியாது
பாத்திரத்தின் சூத்திரத்தை
சொன்னாலும் புரியாது

நிரம்ப பேசும் உலகில்
ஊமைக்கு இல்லை மதிப்பு
ஊமைகள் உலவும் உலகில்
பேச்சாளிக்கு வரிவிதிப்பு

ப்ரொபஸ்ஸர் மித்ரா

யார் இந்த ப்ரொபஸ்ஸர் மித்ரா

தெரியாதவர்களுக்காக :

இவர் பாலில் விஷம் கலப்பார்
காற்றில் விஷ கிருமிகளை கலப்பார்
கைகளில் கிளவுஸ் போட்டுக்கொண்டு இருப்பார்
கண்களில் (இரவு நேரமாக இருந்தால் கூட) கூலிங் கிளாஸ் இருக்கும்
கேவலமாக இளித்து கொண்டே இருப்பார்
கோட் பாக்கெட்டில் எப்போதும் ஒரு விஷ ஊசி இருக்கும்
ஒரு முக்கியமான விஷயம் - தன்னை ப்ரொபஸ்ஸர் என்று கூறிக்கொள்வார்

இவரது சில முக்கியமான நண்பர்கள் :

அர்த்தநாரி
கரிவரதன்
ஜெ. டி.
தர்மராஜ்
வல்லவராயன்
வெறிநாய் வெங்கையா

இவரது ஒரு மகத்தான சாதனை என்னவென்றால் :

ரஜினியை சங்கிலியால் கட்டி போட்டுவிட்டு
ஒரு சூப்பர் கும்மாங்குத்து பாடலுக்கு பெரிய தொப்பையுடன்
கவர்ச்சிக் கன்னி ஜெயமாலினியை ஆட விட்டு
முடிவில் ரஜினியை தீர்த்து கட்ட திட்டம் போடுவார்

அந்த வரலாற்று சிறப்பு பாடல் என்ன தெரியுமா

ஜூம்பர ஜூம்பர ஜூம்பர பா
சூப்புக்கு கோழியும் வந்ததப்பா
தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது

ஜூம்பர ஜூம்பர ஜூம்பர பா
சூப்புக்கு கோழியும் வந்ததப்பா

ஒரு வழியாக பாடல் முடிந்து, மித்ரா ஹீரோவை
பழி வாங்கும் நோக்கத்தில், கோட் பாக்கெட்டில் இருந்து
அந்த விஷ ஊசியை எடுத்து குத்த போக, ஹீரோ
அந்த விஷ ஊசியை வைத்து, மித்ராவின் கதையை முடித்து விடுவார்
---------------------------------------------------------------------------------------------
மற்ற விரிவான விஷயங்களுக்கு வெண்திரையில் காண்க
அதிரடி திரைப்படம் - கர்ஜனை

உடல் ஊனமுற்றோரும், மெய்ப்புலம் அறை கூவலரும்! - கைப்புள்ளையின் ஆதங்கமும்

சென்னை விமான நிலையத்தின் கழிவறைக்குச் செல்வோரை தலை சுற்றிகிறுகிறுக்க வைக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பலகையை வைத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறைஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.
இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.

மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர் என்று பொருளாம்.
பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல்ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில்எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?

நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல்ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இதுஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல்திரும்பிப் போகக் கூடும்.

தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?
------------------------------------------------------------------------------------------------- டேய், என்னதான் தமிழ் பற்றுன்னாலும் ஒரு அளவு இல்லையாடா
என்னடா சொல்ல வரீங்க ... நான் பாட்டுக்கு ஒண்ணுக்கு போயிருப்பேன் ... இப்ப, என்னடான்னா, கவிச்சக்கரவர்த்தி கம்பன வச்சு பதிப்புரை, பொழிப்புரையும், வைரமுத்துவ வச்சு வசனமும் எழுத வச்சுட்டீங்களேடா !!!!
இந்த மாதிரி எழுதறத படிச்சு, புரிஞ்சுக்கறதுக்குள்ள, வாசல்லயே நான் போயிடுவேன்.......

நான் இப்படி பொலம்பறேன். அங்க ஒருத்தர் என்ன சொல்றாருன்னு நீங்களே கேளுங்கய்யா, நாடு வெளங்கிடும்.

உடல் ஊனமுற்றோர்களை மெயப்புலம் அறைகூவலர்கள் என்று அழைக்கும்படி என்னால் உத்தரவிடப்பட்டது
இதைக்கண்டு கூச்சலிடுவோர் - மதியிலி அறிவிலர் என்று இனிமேல்அழைக்கப்படுவர் என்று கூறிக்கொள்கிறேன் ....

மதியிலி அறிவிலி
என்றினி அழைப்பவர்
அவர்தம் பிறியிலி
என்போர் பிணக்கு

இது வாழும் வள்ளுவன் வாக்கு .....
-------------------------------------------------------------------------------------------------
இதுக்கு மொதல்ல சொன்னாங்களே அதுவே பரவாயில்ல
நான் முடிவு பண்ணிட்டேன், இந்த ஊர்ல சத்தியமா பாத்ரூம் பக்கமே போக மாட்டேன்.
ஊராய்யா இது ....... சீ சீ சீ சீ
நம்ம ஊர்னா கம்மா கரையில ஒதுங்குநோமா
சும்மா சர்னு அடிச்சோமான்னு இல்லாம

சித்திரமே விசித்திராய டகால்டி டயலாகாய நம

ஒன்று

கடவுள் இல்லேன்னு சொல்லல
இருந்துருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்

இரண்டு

சூர்யாவுக்கு நல்லா ஆயிடும்
யார் சொன்னா டாக்டரா -
இல்ல சூர்யாவே சொன்னான்

மூன்று

தன் சொம்பு காணாமல் போனதை
ஊர் பஞ்சாயத்தில் உசிலைமணி கூறுகிறார்

தொலஞ்சு போன உங்க சொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்
ஆனா, சொம்போட எதாவது அடையாளம் சொல்ல முடியுமா

சொல்றேன் - அந்த சொம்புல ஒரு மச்சம் இருக்கும்

நான்கு

யாரு மொதல்ல முன்னாடி ஓடறாங்கன்னு முக்கியம இல்ல
ஆனா லாஸ்ட்ல யாரு மொதல்ல வராங்கன்றதுதான் முக்கியம

ஐந்து

பூட்டுக்கேத்த சாவி போடலேன்னா பூட்டும் திறக்காது
சாவி போட்டு பூட்டலேன்னா எந்த பூட்டும் பூட்டாது

ஆனந்த ரசம்

ஆனந்த ரசம்

நான் பழரசம் அருந்தியதுண்டு
அதிரசம் சுவைத்ததுண்டு
பூண்டு ரசம், தக்காளி ரசம் குடித்ததுண்டு
நடிகர் திலகத்தின் நவரசமும் கண்டு களித்ததுண்டு
அனால் அது என்ன ஆனந்த ரசம்

பங்கிலி கிருகன் கண்ணசைத்து அழைக்க
பைங்கிளி ஒன்று குப்பியுடன் விரைய
எதிரே இருப்பவரிடம் அந்த பைங்கிளி
கோப்பையில் ஒரு ரசத்தை ஊற்றி தர
ரசத்தை ருசிக்கும் போது பங்கிலி கிருகன்
எதிரே இருப்பவரை தன் சிவந்த விழிகளால் நோக்க
ரசத்தின் ருசியில் மயங்கிய அவர்
பங்கிலி கிருகனின் சிவந்த விழிகளை நோக்க
நோக்கியவர் தன் வசமிழந்து பங்கிலி கிருகனின் அடிமை ஆனார்
அந்த சூழலில் எழுந்த பாடல் இதோ

தேடும் தெய்வம் நேரில் வந்தது
மனம் காணும் இன்பம் கோடி தந்தது

ஆனந்த ரசமும் உண்டு ஒ ஒ
ஆனந்த ரசமும் உண்டு

மேல் விபரங்களுக்கு பாருங்கள்
தமிழின் திகில் த்ரில்லர்
கழுகு

குருவைத் தேடி

சம்சார பந்தத்தில் வாழ்வெங்கும் உழன்று

ஆதலால் தலை சுழன்று, மறை கழன்று
தறிகெட்டு ஓடினேன் குருவை தேடி


அமைதியை தேடி, திக்கெட்டும் ஓடி

நா வறண்டு, தலை சுற்றி

மயங்கி சரிந்தேன்


மயக்கம் தெளிந்ததும் ,அணைத்த கரங்களை

பார்த்ததும் அதிர்ந்தேன்

தேடிய குருவே நேரில் வந்த போது ஏன் இந்த நடுக்கம்

வந்தது நான் தேடிய குருவல்ல

அவர் - காடு வெட்டி குரு

பிதற்றல் பிச்சுமணி

ஒப்பிலார் ஒழுங்கிலார் முகர்ந்தப்போ செப்பிலார்
ஈருடன் பேன் நிகர்த்து

பொழிப்புரை :
காதலன் தன் தலைவியின் உச்சி முகர்ந்து சொல்லியது.
ஒரு பய பக்கத்திலே வர முடியாத அளவிலே, வாய் திறந்து பேசக்கூட முடியாத அளவிலே, குட்டி குருமாவுடன் இருந்தது.

- இது இன்பத்து பாலின் இரண்டாம் அத்தியாயத்தில் 298871 பாடல்

புவி சிற்றரசு பித்தளை மணி

தத்தித் தாவுது தத்தை
அதை ஊர்ந்து நோக்குது நத்தை
இதை எட்டிப்பார்த்த அத்தை
அவள் எட்டாவது பல் சொத்தை

ஒரு பிரபலமான நிறுவனத்தின் பிரம்மாண்டமான படத்திற்காக எழுதப்பட்ட இந்த பிரமாதமான பாடல் அந்த படத்தில் இடம் பெறவில்லை
என்பதில் எனக்கு வருத்தமுண்டு .....
தமிழின் இழப்பை நினைத்து எனக்கு சிறிது கலக்கமுண்டு .....