சொன்னது யாரு ??

சித்தாந்தமும் வேதாந்தமும்
கூடி கை கோர்த்து
கும்மி அடிக்கும் நேரத்தில்
மொத்தமாக வை
பத்து முத்தமாக வை
அதையும் சத்தமாக வை

ஒரு துளி வெண்மை
உறைத்தது என் ஆண்மை
மலர்ந்தது பெண்மை
இதை கண்டோர்கெல்லாம்
புரிந்தது உண்மை

சாத்திரத்தின் சூத்திரத்தை
ஆத்திரம் அறியாது
ஆத்திரத்தின் சூத்திரத்தை
பாத்திரம் அறியாது
பாத்திரத்தின் சூத்திரத்தை
சொன்னாலும் புரியாது

நிரம்ப பேசும் உலகில்
ஊமைக்கு இல்லை மதிப்பு
ஊமைகள் உலவும் உலகில்
பேச்சாளிக்கு வரிவிதிப்பு

1 comment:

Anonymous said...

நிச்சயமாக சத்தமாக சொல்லுவேன் இது சூப்பர்

நிரம்ப பேசும் உலகில்ஊமைக்கு இல்லை மதிப்பு ஊமைகள் உலவும் உலகில்பேச்சாளிக்கு வரிவிதிப்பு
... நல்லா தான போய்கிட்டு இருக்குது