ரஜினி - மூன்றெழுத்து காந்தம்


ரஜினி என்கிற மூன்றெழுத்து காந்தம்
அந்த முகத்தில் தான் எத்தனை சாந்தம்

வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி
தோல்வி என்பது இல்லை உனக்கினி

உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்
கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை
இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை
அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை

நீ ராஜாக்கள் விரும்பும் ராஜாதி ராஜா
சேரனும், சோழனும் கொண்டாடும் - பாண்டியன்
உன் எதிரிகளையும் உன் முன்
மண்டி இட வைக்கும் - மாவீரன்
ரசிகர்கள் கூட்டத்தை நல்வழியில்
வழி நடத்தி செல்லும் தளபதி
தர்மத்தை போதித்த தர்மதுரை
உழைப்பின் பெருமையை
உரக்க சொல்லிய உழைப்பாளி
தரணிக்கே ஒரு மகன் - தமிழ் நாட்டின் தலைமகன்
நான் மகான் அல்ல, சாமான்யன் தான்
என சொல்லிய தங்க மகன்

நீ சொல்லி அடித்த படம் பில்லா
உன்னால் நிரம்பியது தியேட்டரில் கல்லா
நீ சுழன்று அடித்தது அனைத்து ஜில்லா
எதுத்து நிக்கல ஒருத்தனும் தில்லா

உன் விருப்ப பெயரோ வீரா -
நீ செய்ய விரும்பாத போரா ??
ஆனாலும் நிஜத்தில் நீ சமாதான புறா

ஒன்ன எதுத்து நின்னு சவாலு
வுட்டவன் எல்லாம் திவாலு

அகவை ஐம்பத்து ஐந்து கடந்த
சிறியோரும் பெரியோரும் விரும்பும்
மீசை வைத்த குழந்தை நீ

சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்
அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்
சிவாஜி என்ற ஒரே படத்தின் மூலம்
அகண்டு விரிய செய்த அற்புத மனிதன் நீ

ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,
இன்னும் உன் இளமை ஊஞ்சலாடுகிறது.

தேனையோ, சர்க்கரையையோ உண்டால்தான் இனிக்கும்
ஆனால், உன்னை பற்றியோ நினைத்தாலே இனிக்கும்

நீ பாசத்தின் பாவலன், ஊர்காவலன்
நேசத்தில் ஒரு அன்புள்ள ரஜினிகாந்த்
அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான வேலைக்காரன்
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன் தர்ம யுத்தம்

சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வந்தது வீர சிவாஜி - அன்று
சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வருவது உன் சிவாஜி தி பாஸ் - இன்று

உலகின் அனைவரின் முகமெங்கும் அரிதாரம்
அரிதாரமின்றி உன் முகம் அவனியில் அரிதாகும்

அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்
தீராத ஆசையில் அனைவரும் தேடி அலைய
நீயோ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய

வார்த்தைகள் தேடி வந்து, விழுந்து ஆனது கவிதை
அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை

உனக்கே சமர்பணம் இந்த பாமரனின் பா
அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா

13 comments:

Abu said...

என் அருமை திரு கோபி அவர்களே ,

தலைவரை பற்றி பலர் பல விதமாக கவிதை எழுதி இருந்தாலும் உங்களின் சில வரிகள் புல் அரிக்க வைக்கின்றன.

குறிப்ப சொல்லவேண்டும் என்றால்......
--------------------------------------------------------------------------
ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,
இன்னும் உன் இளமை ஊஞ்சலாடுகிறது.

தேனையோ, சர்க்கரையையோ உண்டால்தான் இனிக்கும்
ஆனால், உன்னை பற்றியோ நினைத்தாலே இனிக்கும்
-----------------------------------------------------------------------------------
உங்களை போல் உங்கள் கவிதையும் இனிக்கிறது !

வாழ்த்துகளுடன்,
அபுதாகீர், துபாய்

Anonymous said...

----------
உலகின் அனைவரின் முகமெங்கும் அரிதாரம்
அரிதாரமின்றி உன் முகம் அவனியில் அரிதாகும்
---------
SUPER LINES.

jegan said...

superb lines .kallakunga .thodaratum ungal thondu

Unknown said...

Simply superb brother ...

Anonymous said...

நல்ல கவிதை பாஸ்!!

Anonymous said...

Thanks

1. Abu, Dubai
2. Beski
3. Jegan
4. V
5. Bhuvanesh

for your visit and wishes...

Unknown said...

Gopi the Great Poet. Superb,kavidhai cinema peyarula yaru venumna sollalam, ana adha korvaiyaya meaningful a panni iruppathu Gopi yin speciality. Keep up the Good work

Regards,
Dharma

R.Gopi said...

Thanks for your wish Dharma

Unknown said...

//ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,//

lattest aa mattum varaliey thalaiva

Senthilmohan said...

நான் மகான் அல்ல என்று மாற்றுங்கள்.

jokkiri said...

//SenthilMohan said...
நான் மகான் அல்ல என்று மாற்றுங்கள்.//

*******

வாங்க செந்தில் மோகன்...

பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி..

திருத்தப்பட்டு விட்டது....

jokkiri said...

// jaisankar jaganathan said...
//ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,//

lattest aa mattum varaliey thalaiva//

வெயிட் பண்ணுங்க... வருவார்...

mrs.krishnan said...

உனக்கே சமர்பணம் இந்த பாமரனின்
பா
அகிலமே காத்திருக்கு , அரியணை ஏற
வா//

Nalla comedy eazhudiyadhu padichiruken. Romba nalla kavidhaum eazhudareenga.

Ovvoru varium oru thani thani kavidhai.

Thanks