HAPPY NEW YEAR 2012

புத்தாண்டாம் ஆங்கில புத்தாண்டு

கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு

அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று


கடந்தகால சோதனைகளை துடைத்து விட்டு

சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்து விட்டு

புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்

மதத்தின் பெயரால் மண்டை உடைய வேண்டாம்

நாம் அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்

இதை அனுதினமும் மனதில் நிலைநிறுத்துவோம்


கடினமாய் உழைத்தே பிழைத்திடுவோம்

சோம்பல் எண்ணங்களை அழித்திடுவோம்

தீவிரவாத எண்ணங்களை கைவிடுவோம்

அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்

அனைவரின் வாழ்விலும் அமைதியும், சந்தோஷமும் நிலைத்திருக்க

என்றென்றும் அந்த ஆண்டவனை நினைத்திடுவோம்

(தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய 2012 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....)