உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. முன்னர் சொன்ன குரூப் எல்லாம், குளிச்சேன் தூங்கினேன் சாப்பிட்டேன்னு சொல்லும் நம்ம கேட்டா, அதுவே அடுத்த குரூப், வார இறுதி, விடுமுறைன்னாலே, கேளிக்கை பொழுது போக்குன்னு உடனே கிளம்பிருவாங்க.
நாலு சக்கரமும் ஓடக் கூடிய வண்டிய (நல்லா பாருங்க, அல்லது கேளுங்க, கார் நாலு சக்கரத்தில இருந்தாலும், ஒடுறது என்னவோ இரண்டுதான், மத்த இரண்டும் உப்புக்குச் சப்பாணி (16 வயதினிலே கமல் அல்ல) மாதிரி சும்மா சுத்திக்கிட்டு இருக்கும்) எடுத்துக்கிட்டு, பாலைவனத்துக்கு போயி, டயர்ல உள்ள பாதிக் காத்த காத்து வாங்க விட்டுபுட்டு, ரோடே இல்லாத சொரி மண்ணுல வண்டிய ஓட்டுவாங்க. காத்து தான் பாலைவனத்துல பி.டபிள்யூ.டி, அதாங்க ரோடு போடுற வேலை. அது பாட்டுக்கு போற வழிக்கு மண்ண குமிச்சு வைச்சுட்டு போயிடும். அந்த ஏற்ற இறக்கங்கள்ல வண்டி போறது ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் பயமாவும் இருக்கும். வானத்துல / காத்துல போயிருப்பீங்க, கடல்ல போயிருப்பீங்க, பாலைவனத்துல போறது ஒரு தனி அனுபவம். எல்லா இடமும் ஒரே மாதிரி தெரியும். காந்த துணையோட உள்ள காம்பஸ் மட்டும் இல்ல நாம் தொலைஞ்சு போற சான்ஸ் ரெம்ப அதிகம். இந்த பீதி பயணம் முடிந்ததும் தற்காலிக டெண்ட்ல ரிலாக்சேஷன். நல்ல அரேபிய சாப்பாடு, பெண்கள் என்றால் கையில் மருதாணி, எகிப்தின் விசேஷமான பெல்லி டான்ஸ் (தொப்பை நடனம்), அரபி உடையணிந்து ஒரு ஃபோட்டோ, ஒட்டகத்தின் மேல் ஒரு ஒய்யார சவாரி. இந்த முழுதும் ஒரு பேக்கஜ் ஆக டெஸர்ட் டிரைவ் என்ற பெயரிலும், நம்மூர் கணக்கில் 3000 ரூபாயிலும் கிடைக்கும்.
கடலுக்குள்ள வாயில ஆக்ஸிஜன் குழாய கடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ள அப்படி என்னதாம்மா இருக்கு என்று பார்த்து வரலாம். அடிக்கடலுக்குள்ள மீனம்மா, மீன் மாமியார்ன்னு ஸ்பெஷலா பாட்டுப் பாடி ஆடலாம். போயிட்டு வந்த மக்கள் சொல்றாங்க, பழக்கப்படுத்தின டால்பின் வந்து நம்ம கிட்ட குஷி படுத்திட்டு போகுதுன்னு. என்ன நம்ம ஊர் காசில ஒரு 10000 ரூபா அம்புட்டுதேன், ஒரு அரை மணி நேரத்துக்கு.
இல்ல வானத்துல போயி பாராசூட் கட்டிக்கிட்டு, தொபுக்க்டீர்ன்னு கீழ குதிக்கலாம். கடல்ல டால்பினோட நீந்தி அதுக்கு ஒரு முத்தமும் தரலாம். அல்லது நமக்கு ரொம்ப பழகிப் போன தண்ணீர் பார்க் ! அதாங்க வாட்டர் அம்யூஸ்மெண்ட் பார்க் எல்லாம் சர்வதேச தரத்தில நம்ம பர்ஸ்ச பதம் பார்க்க பல் இளிச்சுகிட்டு நிக்குது. சரி ரேட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, சினிமா டிராமா பத்தி சொல்லுங்கன்னா.
தமிழ் படம் ஒடுற தியேட்டர் முந்தி ரெண்டு, மூணு இருந்துச்சு, இப்போ ஒண்ணே ஒண்ணு என் ஒன்றரை கண்ணுன்னு கலேரியாங்கிற பேரில இருக்கு. "டோன்யா"ன்னு ஒரு தியேட்டர் போர்ட்டுக்கு உள்ளே ரெஸ்டிரிக்ட்ட் ஏரியாக்கு (எங்க ஏரியா உள்ள வராதே!!) உள்ள இருக்கிறதால, அங்க உள்ள மக்களுக்கு தான் உதவும். நம்ம துபாய் காரருக்கு வண்டி பிடிச்சு, கேட் பாஸ் வாங்கி உள்ள போறது எல்லாம் நடக்குற வேலைய சொல்லுங்க பாஸ் என்ற வார்த்தையோடு போகும்.
ஒவ்வொரு எமிரேட்டுலயும் ஒரு தியேட்டர் இருக்கு. அதென்ன ஒன்றரை, கலேரியா 1, 2ன்னு ரெண்டு தியேட்டர் இருந்தாலும் ஒண்ணு ரொம்ப பெரிசு (நம்ம நமீதா மாதிரி), அடுத்தது ரொம்ப சின்னது (நம்ம பாவனா மாதிரி). நம்ம வீட்டுல உட்கார்ந்து பாக்கிற மாதிரியே இருக்கும். ஒரு டிக்கெட் விலை திராம் 30 மட்டுமே (ரூ.400 வரை)... அதுக்கு கார்ல போய், அங்ஙனயே பார்க்கிங் போட்டா, அதுக்கு ஒவ்வொரு மணிக்கும் திராம் 10. ஆக, ரூ.400 குடுத்து டிக்கெட் வாங்கி "கந்தசாமி" படம் பாத்தவியங்களுக்கு, பார்க்கிங் ரூ.525க்கு குறையாம... எவ்ளோ சல்லிசா இருக்கு இல்ல... சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம் என்று.
தமிழ் அசோசியேஷன் எல்லாம் இல்லையா என்ற கேள்விக்கு ஏன் இல்லாம ஒண்ணுக்கு பத்து இருக்கு என்று பதில்லலாம். அதுவே பக்கத்து சேர நாட்டுக்கு ஒரே அமைப்பு அம்சமா இருக்கு. ஒண்ணு மண்ணா இருக்கதால நல்ல அறுவடை மிதமிஞ்சிய மகசூல். நம்ம ஆளுங்க தான் மதம், வட்டாரம், பின்ன தான் "தலை"வனா இருக்கணும்னு இப்படி எல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு சகட்டு மேனிக்கு கடை துறந்ததாலே நீ பெரிசா நான் பெரிசா என்ற முக்கிய சண்டையில் முழு முச்சா இருக்காங்க. ஒத்துமையா ஒரே அமைப்பா இருங்கப்பா என்று ஒவ்வொரு மேடையிலும் எம்பெஸி ஆளுங்க கரிசனமா
சொல்றதெல்லாம் ஆறிப்போன காப்பி மாதிரி. குடிச்சதும் தெரியல, செமிச்சதும் தெரியல.
வருடா வருடம் நடக்கும் ஒரு கோலாகல கொண்டாட்டம் ‘துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்’. அக்கம் பக்கம் உள்ள அத்தனை சுத்து பட்டி அரேபிய நாடுகளும் வந்து கூடிக் கும்மாளம் போடும் திருவிளாதேன். ஊரே திருவிழா கோலம் பூண்டு, வெளியூர் வாசிகளால் தங்கும் விடுதிகள் எல்லாம் நிரம்பி வழியும், விமான போக்குவரத்து சில பல/ பல சில மடங்குகளாகும். இந்த ஒரு மாத வருமானம் சில ஹோட்டல்களுக்கு ஒரு வருடம் வரை தாக்கு பிடிக்க ஊதியம் தரும்.
சரி அப்படி எங்கு கொண்டாட்டம். நம் ஊர் பொருட்காட்சி போல், ராட்டினம், பஞ்சு மிட்டாய் சமாச்சாரங்கள் ஒரு இடத்தில் உண்டு. அந்த இடத்திற்கு "க்ளோபல் வில்லேஜ்" என்று பெயர். உள்ளூர் கடைகள் முழுதும், தள்ளுபடி விலையில் வாடிக்கையாளரை கூப்பிட்டு பொருட்களை கையில் திணிப்பார்கள்.வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றாலும் அந்த சலுகை விலையில் நம் மனமே சபலப்படும்.
சொல்லுங்கப்பா உங்க வீகத்தன்னு நீங்க கேட்டீங்கன்னா, உள்ளூர் வர்ததகத்த உசர வைக்க 1996 வருசம் சும்மா திருவிழான்னு தொடங்குனது, இன்னைக்கு ரொம்ப பெரிசா இந்த வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைக்குது. ஜனவரி 15 தொடங்கி ஃபிப்ரவரி 15 வரை ஒரு மாத கூத்து தான், உள்ளுர் சராசரிவாதியை போக்குவரத்து நெரிசல் என்ற பெயரில் பதம் பார்க்கும். இத்தனைக்கும் 1 லட்சம் பார்வையாளர்கள் முதல் நாள்லயும் மொத்தமா 35 லட்சம் பேர் ஒரு மாசத்திலயும்னு அவங்க பெருமையா கணக்கு சொல்லும் போது நமட்டு சிரிப்பு சிரிச்சு, "எங்க ஊர் தீவுத்திடல்"ல இத விட பெருசா பண்ணிட்டோம்டா என்று நினைக்கும் நம் நினைப்பே, அடுத்த தகவலில் தடுக்கி விழும். இந்த திருவிழாவில 100 கோடி ரூவாய்ல சாமான் வாங்கியிருக்காக. நம்முர்ல வெறும் பஜ்ஜி, போண்டா சேல்ஸ்தேன்....
உள்ள நுழைய கட்டணம் 10 திராம், நம்மூர் கணக்கில 130 ரூபா – ஒரு ஆளுக்குத்தான். சரியாத்தான் நினைச்சீக. கொஞ்சம் ஜாஸ்தியாச்சேன்னு நினைச்சீங்கன்னா, இதையும் கேட்டுகோங்க, இந்த சமயத்துல கவர்மெண்ட்டே லெக்ஸஸ் கார் அதிர்ஷ்ட குலுக்கல் ஒண்ண நடத்துது. ஒரு டிக்கட்டோட வெல வெறும் 250 திராம் தான்... அதாவது, நம்மூர் காசுல ரூ.3250 தேன்... ஒவ்வொரு 5000 டிக்கட்டுக்கு ஒரு குலுக்கல்.
நம்ம டிக்கட்டோட நம்பர் குலுக்கிப் போட்டு, அதில நமக்கு அதிர்ஷ்டம் மட்டும் இருந்துச்சுன்னா, போகும் போது லெக்சஸ் கார் கொண்டு போக வாய்ப்பு இருக்கு. பின்ன என்னங்க, ஒவ்வொரு 5000 டிக்கெட்டுக்கும் ஒரு குலுக்கல், தினத்துக்கும் இரண்டு லெக்சஸ் கார்ங்கிறப்போ கிடைக்க நல்ல சான்ஸ் இருக்கில்லையா. அந்த நப்பாசையில நம்மாளும் போவாய்ங்க. கிட்ட போயி கேட்டீங்கன்னா, மன்னன் பட "கவுண்டமணி" ஸ்டைல்ல ‘உள்ள வாங்கி வெளியில விக்க வேண்டியது தான், அத யாருப்பா அசிங்கமா ரோட்டுல எல்லாம் ஓட்டுவாய்ங்கம்பான்’
இது மட்டும் இல்ல. பத்தாயிரத்துக்கு தங்கம் வாங்கினா, பெட்ரோல் பங்க்ல போயி பெட்ரோல் இல்லாம 50 ரூபாய்க்கு மேலா சாமான் வாங்கினா (மேலயும் கீழயும் பார்க்காதீங்க..... ஆயில், ரேடியேட்டர் தண்ணீ, குழாய்புட்டு, கேக், பிஸ்கட், ஜூஸ் இந்த மாதிரி இத்யாதி இத்யாதி சாமான்கள்) உங்களுக்கு கூப்பன் தான், குலுக்கல் தான், குப்புன்னு பரிசு மழைதான். தினத்துக்கு நிசான் கார், 1 கிலோ தங்கம், ஒன்றரை கோடி ரூபான்னு பூரா வாய் ஜொல்லு விடுறா மாதிரி பரிசுதேன்.
இங்கனதான்னு இல்ல, துபாய் முழுக்க இந்த பரிசு கலாச்சாரம் அதிகம் தான். உள்ளூர் வங்கிகள் கூட டெபாஸிட் பெற்றுக் கொண்டு மாதம் ஒரு முறை காலாண்டுக்கு ஒரு முறை எனும் விதமாய் குலுக்கி பரிசு தருவார். எமிரேட்ஸ் போஸ்ட் எனும் நிறுவனம் கூட 1 கோடி கனவு எனும் திட்ட்த்தின் கீழ் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை விதை விதைப்பார். என்னடா தூக்கி பிடிச்சு பேசுறீங்களே, இதுவும் ஒரு லாட்டரி சீட்டு போலத்தானே, என்பவருக்கு. இல்லைங்க, இது சிறு சேமிப்பு. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சேமிப்பு பத்திரத்தின் குலுக்கலே இந்த அதிரடி பரிசு.
வருசத்துக்கு ஒரு தடவை ஷாப்பிங் பெஸ்டிவல், நடக்குறதால நடுவில ‘துபாய் சம்மர் சர்பிரைஸ்’ நடக்கும். இதுவும் அது போலத்தான். கேளிக்கைகள், கொண்டாட்டம் எல்லாம் தூள் பறக்கும்.
ரெண்டுக்கு என்ன வித்தியாசம்னா, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் குளிர் காலத்தில் நடக்கும்... துபாய் சம்மர் சர்ப்ரைஸஸ் என்பது கோடை காலத்தில் நடக்கும்... பின்னே, வெயில்காலத்துல ஊருக்குள்ள ஆளுங்கள எப்படி கூப்பிடறது... இல்ல..எவன் இந்த சூட்டுக்கு உள்ள வருவான்?

(இன்னும் கொஞ்சமா இருக்கு....)