மத்திய கிழக்கு நாடுகள் அயல் நாட்டு மோக‌ம் (இறுதி பகுதி)

வேலை தேடுவது பற்றியும் இண்டெர்வியூ சென்று வேலை கிடைத்ததும் அது பற்றி நண்பர்களிடத்தில் பேசச்சொல்லி முந்தைய பதிவில் பார்த்தோம். இனி என்ன?

வேலை கொடுக்கிற நிறுவனம் நமக்கு தரும் சம்பளத்தையும் சலுகையையும் நல்லதா தானே சொல்லும். இல்லாம, உங்க தகுதிக்கு நாங்க ரொம்ப குறையாத்தான் கொடுக்கிறோம் என்றா உண்மையை சொல்லுவார்கள்.

இதுதான் சம்பளம், இது தான் சலுகைகள் என கேட்கும் போது, கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரித்தான் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் தான் அதே ஊரில் இருக்கும் நமது நண்பரிடத்தில் சொல்லும் போது அவர் சொல்லுவார்.

தங்க இவ்வளவு, சாப்பிட இவ்வளவு, இந்த சம்பளம் போதுமா போதாதா எனும் போதனை எல்லாம் அவர் தான் சொல்ல வேண்டும். என்ன சில சமயம் ஆர்வ கோளாறினால் நண்பர் கொஞ்சம் அதிகம் பேசலாம். பொறுமையாய் சகித்துக் கொண்டால், கை மேல் பலன் உண்டு.

சரி, பணம் சம்பாதிக்கிறதுண்ணு முடிவு செஞ்சாச்சு, துபாய் பத்தியும் தெரிஞ்சாச்சு, நல்ல வேலையும் தேடியாச்சு. அப்புறம் என்ன என படிப்படியாய் நாம் சிந்திக்கும் போது, ஒரு முக்கியமான விசயம். இது தான் வெற்றியின் ரகசியம்.

அது என்ன !!!

இது சுலபம் இல்லை. சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். தீபாவளி சேல்ஸ்ல தள்ளுபடில வாங்கி மலை இல்ல மடுகுதான்னாலும் ஓகே.

புது நாடு, புது கலாச்சாரம், எல்லாத்துக்கும் நம்மை மாற்றிக் கொள்கிற போக்கு வேண்டும். முனைப்பும் வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கையும் தள்ளுபடி இல்லாமல் வேண்டும். இதுக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல பொறுப்புணர்ச்சி பொங்கிப் பெருகணும்.

இது இல்லன்னா, இத புரியலேன்னா ‘எங்க ஆத்துக்கார்ரும் கச்சேரிக்கு போறார்ங்க’ கதையா நானும் போயி கொட்டிக் கிடக்கிற காச அள்ளிட்டு வந்திடரேன்னு நினைச்சா கஷ்டம் ஆயிடுங்க.

சரி வந்து இறங்கினாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இன்னொரு விசயம் உண்டு.

வெளி நாடு வந்து இறங்கியதும் சில அடிப்படைகளை உணர்ந்தால் நல்லது என தோணுது. என்ன தான் இருந்தாலும் இது நம்ம ஊர் இல்ல. இந்த ஊர் சட்ட திட்டம், நடைமுறை, தட்ப வெப்பம், சுற்று சூழல் எல்லாம் பார்த்து நாம கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறது அவசியம்.

நாம எதுக்கு வந்திருக்கிறோம், காசு சேக்க‌றதுக்கு. அந்த நெனைப்ப விட்டு விடாம, கெட்டியா பிடிச்சுக்கணும்னு சொல்லலாம். அனாவசிய செலவை குறைக்கலாம். அடுத்தவனுக்காக வாழாம நமக்காக வாழலாம். அது என்ன அவனுக்காக, அடுத்தவனுக்காகன்னு கேட்டீங்கன்னா.

ராசா மாதிரி மெத்து மெத்துன்னு உக்கார்ரதுக்கு சோபா இங்க கிடைக்கும். வாங்கி போட்டா எவ்வளவு நாள் நாம இதுல உக்காருவோன்னு தெரியாது. ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது. வேலை இல்ல போடான்னு கம்பெனிக்காரன் சொன்னா, சொன்ன 30 நாள்ல நம்ம வெளிய போகணும். இதென்ன நம்ம ஊரா, இங்க இருக்கணும்னா விசா என்கிற ஒரு விஷயம் வேணும்.

அதனால எந்த செலவு செய்தாலும் யோசிச்சு சரின்னு பட்ட பின்னால செய்யுறது நல்லதுன்னு தோணுது.

இதே கருத்தை ஒரு கவிஞர் சொல்கிறார். யார் அவர்.
"கவிஞர் காத்துவாயன்". அவர் இலக்கிய பங்களிப்பு நேயர்கள் அறிந்ததே. இலக்கிய வட்டங்களால் பின்னர் ‘எல்லாம் தெரிந்த ஏழுமலை எனச் செல்லமாய் அழைக்கப்பட்டவரும் அவரே. துபாய் பற்றிய கவிதையில் இப்படி சொல்கிறார்.

லெப்ட்ல பாரு மண்ணு
ரைட்டுல பாரு பொண்ணு
நடுவால நீ நின்னு
சாப்டா ஒரு பன்னு
யோசிச்சு தின்னு
தின்னுட்டு பணத்த எண்ணு

(முற்றும்..... கனத்த மனதுடன்....)

துபாய் பற்றிய தொடரில் வளைகுடா, அன்னிய தேசம் என்பதை தகவலாய் மட்டும் சொல்லாமல், ஒரு கதை போல, நகைச்சுவையாய் சொல்ல வேண்டும். முடிந்தால் உலக, தத்துவ, தார்மீக அடிப்படையிலான எங்கள் சிந்தனையும் இணைக்க விரும்பினோம். தங்கள் கருத்துக்களை அறியும் போது, நாங்கள் விரும்பியது நடந்தது என்றே தெரிகிறது. வெற்றி பெற்றுத்தந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த தொடர் எழுதியது, "பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் தென்றலின் கை கோர்த்து நடந்து வந்தது" போல் ஒரு திருப்தி. ஒருமித்த கருத்துடைய நண்பர் குழுவோடு, சிலுசிலுவென ரயிலில் பயணம் போவது போல. கலகலப்பும் நகைச்சுவையுமாய், அவ்வப்போது தகவல்களோடு பேசி சிரித்த கும்மாளம். இந்த பகுதியோடு நிறைவு பெறுகிறது எனும் போது இறுகிய இதயத்துடன் இறுதி பகுதி எழுதுகிறோம்.

எழுதுகிறோம் எனும் வார்த்தையில் விநோதம் உள்ளது. இருவர் எப்படி ஒரு தொடர் எழுத முடியும். முடியும், நல்ல புரிதலும், சக விட்டு கொடுக்கும் மனப்பான்மையும், பரஸ்பர மதிப்பும், ஆழ்ந்த அன்பும், இருந்த்தால் இது சாத்தியமாயிற்று.

இந்த தொடரை எழுத உறுதுணையாய் இருந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நிறைவு செய்கிறோம்.

நன்றி வணக்கம்........

(குறிப்பு : துபாய் பற்றிய மேலே முடிந்த தொடரில் "வாழ்க்கை" பற்றி நாங்கள் எழுதிய குறிப்புக்கள் பிடித்ததாய் சொன்னதால், முழுமையாய் "வாழ்க்கை" பற்றி விரிவாய் ஒரு தொடர் எழுத உத்தேசித்துள்ளோம் - ஆர்.கோபி / லாரன்ஸ்)

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

தீபாவளிப் பண்டிகையை, 'பகவத் கீதையின் தம்பி' என்பார் ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 'என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ''நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்' எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்'' என்று அருளியுள்ளார் ஸ்ரீமகா சுவாமிகள்.

இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனுடைய தேசத்துக்கு பாதுகாவலாக கிரி துர்கம், அக்கினி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா! பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது!

கிரி துர்கம் - மண்; அக்கினி துர்கம் - நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று! ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப் பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.

பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும். பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.

ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
''தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர். இது தொடர்பான கதை...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!

தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். மார்வாடி பெருமக்கள், தீபாவளியன்று புது வருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.

அயோத்தியில் தீபாவளி:

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள்... தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் 'எம தீபம்' எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உண்டு.

ஆக, தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள்; அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம்... 'கெட்டவை நீங்கி நல்லதை அடைய வேண்டும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி' என்கின்றனர் சான்றோர்.

(தகவல் உதவி : சக்தி விகடன்...)


என் குறிப்பு : மேலே நான் அளித்துள்ள‌ பணம் "தீபாவளி" கொண்டாட்டத்திற்காக நான் உங்களுக்கு கொடுப்பது... KEEP IT YOURSELF AND ENJOY IT YOURSELF..... சும்மா அதிருதுல்ல..

மத்திய கிழக்கு நாடுகள் அயல்நாட்டு மோகம் (பகுதி 13)

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ("தல" தேர்தல் அறிக்கை) பாணியில் சொல்லி அதை செய்தும் விட்டது. 9999, அதாங்க, 2009 செப்டம்பர் 9ம் தேதி, 9 மணிக்கு ரயில் விடுவோம் என சொன்ன துபாய் அரசு சொன்ன தேதியில் சுக்கு புக்கு ரயில் விட்டு அமர்களப் படுத்தி விட்டார்கள்.

இந்த ஊர் வெயிலுக்கு இதெல்லாம் சரியா வருமா, இருக்குறதே முழ நீள ஊரு இதுலே ரயிலா, என்ற கேள்விகளை புரம் தள்ளி நல்லா வரும் என நம்பிக்கையோடே இருக்கிறது. பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.

இது சொர்க்க புரியா, விமான நிலையமா எனக் கேட்கும் வண்ணம், பாதாள ரயில் ஸ்டேஷன்கள், பறக்கும் ரயில் என நல்லா இருக்குது. ஏர்போர்ட்ல வண்டி ஏறியாச்சுன்னா, நிச்சயமா மூணே நிமிசத்தில் அல் ரிக்கா என்ற இடம் வந்து விடலாம். இதுவே சாலை வழி வந்தால் குறைந்த பட்சம் 30 நிமிடம் எனும் ரயிலுக்கே உண்டான சொகுசு மாற்றுக் குறையாமல் உள்ளது. பாதி ஸ்டேஷன் தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து, கடை கண்ணி பெருகி, டாக்ஸி எல்லாம் ஸ்டேஷன் வாசல் வரை வந்து விட்டால் இன்னும் ஒரு இரண்டு வருட்த்தில் இது முழுமை பெறும் போது நிச்சயம் நல்லா வரும். இதில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும், மனிதர்களுக்கும் பாராட்டு சொல்லி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

போன வாரம் சொன்ன 7 நட்சத்திர ஹோட்டல் பற்றி பேசுவோமே. சின்ன வயதில் நாமாய் தீர்மானம் செய்து இருந்தோம் 3ஐ விட 5 நட்சத்திர ஹோட்டல், பெரிதும் வசதியும் ஆனது என. அதுவே வளர்ந்து வரும் போது ஏன் இதுவும் பெரிசாத்தான் இருக்கு, நல்லாத்தான இருக்கு இது மட்டும் ஏன் 3 ஸ்டார் ஹோட்டல் என்று. அன்று நாம் கேட்டது இப்படி.

அழகு, வசதி இன்ன பிற‌ இத்தியாதிகள் எல்லாம் இல்லாமல், அன்னிய தேசத்தினரை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டதே இந்த கோட்பாடுகள் என்று. அதாவது வெள்ளைக்காரன் பர்ஸ்ல டாலர் குமிஞ்சு இருக்கும், அதை லோக்கல் கரன்ஸியா மாற்ற எக்ஸ்சேஞ்சு ஹோட்டக்குள்ளயே இருந்து, 24 மணி நேரமும் அவன் எப்போ வந்தாலும் அவன் பசியார உணவு கொடுக்க மல்டி குசின் உணவகமும் இருந்தா அது 5 ஸ்டார்ன்னு.

ஆனா உண்மை என்ன‌ன்னா, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அல்லது எல்லோரும் ஒப்புக்கொண்ட ரேட்டிங் சிஸ்டம் எல்லாம் கிடையாது. ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் இதுக்கென சில வரைமுறைகள் உண்டு.அம்புட்டுதேன். இல்லாமல் நாமாக அறிவித்து கொள்வது தான் இந்த 7 ஸ்டார். சுருங்கச் சொல்லின் தன் துருத்தியை தானே ஊதுவது 7 ஸ்டார். உலகில் இப்போது இருவர் ஊதி உள்ளனர். நாங்க 7 ஸ்டார்ன்னு. ஒருவர் துபாய், மற்றவர் இத்தாலி. பொறுங்கள் ஊதுவதற்கு இன்னும் அஞ்சு பேர் இருக்காங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க அல்லது ஹோட்டல் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதில் சென்னையில் உள்ள கிராண்ட் சோழாவும் ஒருவர்.

ஆயிரம் அடிக்கு மேலா நிமிர்ந்து நிக்குற‌ இந்த புர்ஜ் அல் அரப் ஒரு கட்டிட அதிசயம் எனச் சொன்னால் மிகையாகாது. கடலுக்கடியில் பவுண்டேசன் போட்டு, கம்பீரமாக நிற்கும் அதன் அழகை படத்தில் பாருங்களேன். கடலில் இருப்பதால் இது அமைக்கப்பட்டுள்ள கப்பல் போலத் தோற்றம் பொருத்தமாகவும், பொம்பார்டாவும் இருக்கு (பெங்களூர் தமிழில் இது பிரபலம். சூப்பர், நச்சு, பின்னிருச்சு எனும் அர்த்தம் வரும் சொல்) என்ன ஒண்ணு தங்கணும்னா, ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். இதுக்கு பேசாம் ஒரு வீடே வாங்கி தங்கிராலாமே என தங்கள் மனது முணுமுணுப்பது கேட்டாலும், ரோல்ஸ் ராய்ஸ்ல விமான நிலையம் வந்து கூப்பிட்டு போவாய்ங்கங்கும் போது, ஒரு ராஜ உபசாரம் எனும் போது, சரி ரைட்டு என்று சொல்லத்தானே தோன்றுகிறது.

போய் பக்கத்தில போயி ஃபோட்டா எடுத்துக்கிட்ட்தோட சரி. நாங்க உள்ள எல்லாம் போனதில்ல. சொல்லக் கேள்விதான், நம்மள மாதிரி ஆளுங்க உள்ள நுழையிறதே கொஞ்சம் கஷ்டம் என்று.

எந்த பிரபலமான ஒரு கட்டிடத்துக்கும் ஒரு காண்ட்ராவெர்ஸி உண்டல்லவா. இதுக்கும் உண்டு. அது உண்மையா பொய்யான்னு எங்களுக்கும் தெரியல, கேட்டா கேட்டவய்ங்களுக்கும் தெரியல. எது எப்படியோ, அது உண்மையில்லை என தெரியும் வரை நாமும் பெர்மூடா ட்ரையங்கிள் போல கேட்டு வைப்போம்.

இதை வடிவமைத்த நிர்மாண என்ஜினியர், தனது மதத்தின் அடையாளம் பொறித்த ஒரு வழிபாட்டுத்தலம் போல இருக்குதாம் இந்த டிசைன். கஷ்டப்பட்டு கடலுக்கு அடியில கட்டினாலும், கடலுக்குள்ள போயி கடல் எல்லாம் தெரியுர மாதிரி போட்டா புடிக்க முடியலயாம். சைடு வியூவுல தான் இன்னும் போட்டா எடுக்க வேண்டி இருக்குதுன்னு சொல்றாங்க.
****

தகவல்களாய் துபாய் பற்றியும் வளைகுடா பற்றியும் விலாவாரியா பாத்தோம்.

வெறும் 150 வருடங்களை வரலாறை கொண்ட இந்த சிறிய ஊர்.

சில தகவல்களின் அடிப்படையில் 1200 பிரஜைகளை 1822 ஆம் வருடத்தில் கொண்டிருந்தது எனும் போது சின்ன ஊர் எனச் சொல்வது எவ்வளவு உண்மையாகிறது. ஆனால் இன்று உலகின் 20 வது விலை உயர்ந்த நகரம் என பட்டியலிடும் போது, உலகின் மூன்றாவது விமான நிலையம் உள்ளது எனும் போது அதன் வளர்ச்சி அதிசயிக்க வைக்கிறது. ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.

இந்த தொடர் 13 பகுதிகளாக வந்து தங்கள் பேராதரவை பெற்றதும் நன்றியோடு எங்கள் வணக்கத்தை பதிவு செய்கிறோம். தங்களின் ஊக்கமும் தூண்டுதலுமே இந்த தொடரின் வெற்றி.

இதோ அரபு மண்ணின் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த கஷ்ட நஷ்டங்கள் புரிந்து, ஒரு வளமான வாழ்வுக்காக நான் தயார் என நீங்கள் முடிவெடுத்தால். சபாஷ். வாருஙகள். வளைகுடா உங்களுக்காக காத்திருக்கிறது, உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும். ஒளிமயமான வாழ்வின் சேமிப்பிற்கு நிச்சயம் உதவும்.

வேலை தேடுதல் கடினம் அல்ல. நல்ல ஏஜெண்ட், நல்ல கம்பெனிகள் என பல உண்டு. உஷார், ஏமாற்றும் கூட்டமும் உண்டு. இதை விளக்கிச் சொல்ல ஒரு உண்மை சம்பவம் இதோ.

எங்கள் தொலைபேசி சினுங்கியது. நாங்கள் சார்ந்திருந்த ஒரு சமூக சேவை குழுமத்திலிருந்து இந்தியன் எம்பெஸியில் ஒரு பெண் காத்திருக்கிறார்கள், அவர்களிட்த்தில் இதை சேர்த்து விடுங்கள் என சொன்ன போது இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை.

மருத்துவமனை வேலை என ஏமாத்தி, விலைமகளாய் மாற்றும் ஒரு முயற்சியில் இருந்து விடுபட்டு, நம் நாட்டிற்கு செல்ல தயாராய் அந்த பெண். சோர்ந்த உடலிலும், தளர்ந்த மன நிலையிலும் உள்ளவர், நம் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்.

இந்திய முன்னணி விளையாட்டு வீராங்கனை. இதற்கு மேல் கேட்காதீர்கள். அவரது அடையாளம், அவரையும் அவர் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் நாங்கள் பெயர் குறிப்பிடவில்லை.

இவ்வளவு விவரம் உள்ள இவரா இப்படி மாட்டிக் கொண்டார், அவரது கணவர் கூட இந்த ஊரில் இருந்துமா இந்த நிலை, என்ற எங்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானது. நம் எல்லா வாசகர்களுக்கும் அவசியமானது.

இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.

கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.

தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.

(அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)

ச‌ங்கி ம‌ங்கி டெர்ர‌ரோ டெர்ர‌ர் கூட்ட‌ணி - (01.10.09)

எலே சங்கி... எங்கடா பூட்ட இம்புட்டு நாளா.. நாட்டுல எவ்ளோ அக்குரும்பு நடக்குது தெரியுமாடா??

இன்னாடா வர்ற சொல்லவே மெரிசல் வுடற மங்கி... ஒரு வாரத்துல இன்னாடா அக்குரும்பு நடந்துட்ச்சி...

சொல்றேன்டா... நம்ம "தல"க்கு "அண்ணா விருது" குடுத்தாங்கடா... அந்த வியாவுல அன்பய‌கன் "இதயம் இனிக்க, கண்கள் பனிக்க" நின்னாராமாம்...

ஒரு நாளாவ‌து அந்த‌ சீட்ல‌ உட்கார‌ணும்னு நென‌ச்சேன்... அது முடியலியேன்னு நென‌ச்சு அயுதாரோ இன்னா‌வோ?

அதான் தெரிமேடா... யாரும் குடுக்கலியேன்னு, அவிய்ங்களே அவிய்ங்களுக்கு குடுத்துக்கறாய்ங்க.. அதுவும் இல்லாம, அதெல்லாம் "தல"யோட நுண்ணரசியல்டா.

அத்த பத்தியெல்லாம் ஊர்ல த‌கிரியமா "தண்டோரா" மட்டும் தான்டா பேசுவாரு...இதுல நமக்கு இன்னாடா... ரேசன்ல தீவாளிக்கு எக்ஸ்ட்ரா சக்கரை குடுக்கறாய்ங்களா, அத்த பத்தி சொல்றா... பொயப்ப பாப்போம்...

டேய், எடுபட்ட பயலே...நீ எந்த ஊர்ல இருக்கடா??!! எக்ஸ்ட்ரா எதுக்குடா? வயக்கமா குடுக்கறதுல கொறைக்காம இருந்தா போதாதாடா??

அதுவும் சரிதான்... அப்புறம் இன்னொரு மெரிசல் மேட்டர் கேட்டு மயங்கி வுயுந்துட்டேம்பா... "தல"க்கு சினிமாவுல ஏதோ அவார்டு குடுத்தாய்ங்களாமே...

அத்த ஏண்டா கேக்கற... படா டமாசுடா... அவருக்கு "உளியின் ஓசை" படத்துக்கு...

டேய்...டேய்... வேணாம்டா...அந்த பேர கேட்டாலே ஒதறுதுடா மக்கா... பெரிய டெர்ரர் படமாச்சேடா அது... அதுக்கு இன்னாடா??

இல்லடா... அந்த திரைப்படத்திற்கு (அப்படின்னு சொன்னா கோவம் வருமாம்... திரைக்காவியம்னு சொல்லணுமாம்..

இந்த மேட்டர நம்ம டக்ளஸ் ராஜூ அண்ணாத்த ரீஜன்டா சொன்னாருபா...) படா ஷோக்கா வசனம் கட்டுனாருன்னு 2008ம் வருடத்தின் தமிழக அரசுக்கான சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு தந்துட்டாய்ங்களாம்டா...

டேய்... நீ என்னிய திட்டறதுன்னா, நேரடியா திட்டுடா... ஏண்டா, இப்படி கூப்பிட்டு வச்சு வெறுப்பேத்தற... இந்த விருது இப்போ இவருக்கு தேவையா...

ஏண்டா மக்கு பயலே மங்கி... அவரு ஆட்சில இருக்க சொல்லோ கூட அவருக்கு குடுத்துக்கலேன்னா, அப்புறம் வேற யாருடா அவருக்கு தருவாய்ங்க?

அதுவும், சரியான பாயிண்டுடா... இன்னாத்த சொல்றது...
பொறவு, நம்ம கவுர்மெண்டு 2007 / 2008ல சிறந்த நடிகர்னு ரஜினிகாந்த் (சிவாஜி படத்துக்கும்) கமல்தாசன் (தசாவதாரம்) ரெண்டு பேருக்கும் அவார்டு குடுத்தாய்ங்களாம்..

கமல்தாசன் சினிமாவுக்கு வந்து 50 வருசம் ஆவுது... தலைவர் ரஜினிக்கு இந்த வருசம் 60 வயசு ஆவுது... அதனால, இத்த கொண்டாடற மாதிரி ரெண்டு பேருக்கும் இந்த அவார்டு இருக்கட்டும்னு குடுத்ததா சொல்றாங்க...

இன்னொரு மேட்டரு இன்னான்னா, கேப்டன் விஜயகாந்த், அவரு நடிச்ச "எங்கள் ஆசான்", "மரியாதை" படத்துக்கும் ஏதாவது விருது கொடுக்க முடியுமா, முடியாதான்னு கேட்டு கடுதாசி போட்டு இருக்காராம்...தமிழ்நாட்டுல இருந்து பதில் வரலேன்னா, டெல்லியில உண்ணாவிரதம் இருக்கப்போறாராம்...

ஏண்டா... டெர்ரர் மேட்டர் சொல்லிட்டு வர்ர சொல்ல, இந்த மாதிரி கிச்சு கிச்சு மேட்டர்லாம் சொல்ற, இப்போ சிரிச்சு சிரிச்சு வவுறு வலிக்குதுடா... அப்பாலிக்கா டாஸ்மாக் அடிக்க முடியாதுடா...

அப்புறம் பொயப்பு பாக்கற எடத்துல ஒருத்தரு என்னிய ஒரு கேள்வி கேட்டாருடா... எனக்கு பதில் தெர்ல... ஒரே படா டென்சனா கீதுடா... மேட்டர் இன்னானா...
ஈயும் பறக்கும்
ஏரோப்ளேனும் பறக்கும்
அதனால, ஈ மேல ஏறி இந்தியா போக முடியுமான்னு கேட்டாருடா மக்கா...

இத்த கேட்ட ஒடனே, எனக்கு பகீர்னு ஆயிட்சுடா...ஒனக்கு தெரிஞ்சா சொல்லுடா...

இன்னிக்கு இது போதும்டா... வர்ட்டா....