ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

தீபாவளிப் பண்டிகையை, 'பகவத் கீதையின் தம்பி' என்பார் ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 'என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ''நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்' எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்'' என்று அருளியுள்ளார் ஸ்ரீமகா சுவாமிகள்.

இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனுடைய தேசத்துக்கு பாதுகாவலாக கிரி துர்கம், அக்கினி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா! பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது!

கிரி துர்கம் - மண்; அக்கினி துர்கம் - நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று! ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப் பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.

பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும். பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.

ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
''தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர். இது தொடர்பான கதை...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!

தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். மார்வாடி பெருமக்கள், தீபாவளியன்று புது வருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.

அயோத்தியில் தீபாவளி:

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள்... தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் 'எம தீபம்' எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உண்டு.

ஆக, தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள்; அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம்... 'கெட்டவை நீங்கி நல்லதை அடைய வேண்டும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி' என்கின்றனர் சான்றோர்.

(தகவல் உதவி : சக்தி விகடன்...)


என் குறிப்பு : மேலே நான் அளித்துள்ள‌ பணம் "தீபாவளி" கொண்டாட்டத்திற்காக நான் உங்களுக்கு கொடுப்பது... KEEP IT YOURSELF AND ENJOY IT YOURSELF..... சும்மா அதிருதுல்ல..

82 comments:

Anonymous said...

ரொம்ப நல்லவரு நீங்க... இம்புட்டும் எனக்கா? தேங்க்ஸ்..

R.Gopi said...

//mayil said...
ரொம்ப நல்லவரு நீங்க... இம்புட்டும் எனக்கா? தேங்க்ஸ்..//

************

ஹா..ஹா..ஹா...

மயிலே வருக...

இம்புட்டும் உங்களுக்கே... நான் சொன்னது போல்...

KEEP IT YOURSELF AND ENJOY IT YOURSELF.....

மணிஜி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கோபி

R.Gopi said...

//தண்டோரா ...... said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கோபி//

********

வருகைக்கு நன்றி தண்டோரா...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ppage said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

எனக்கு மிகவும் பிடித்த தங்கள் பதிவுகளில் இதுவும் ஒன்று.

வெறும் வாழ்த்தாய் இல்லாமல், தகவல் களஞ்சியம்.

1. நரகாசுரனின் தாய் வேண்டியதே கொண்டாட்டம் ஆனது
2. புராணம் சொன்ன நரகாசுரன் வெளியில் இல்லை, நமக்குள் உறையும் தீயதே
3. பஞ்ச பூத கோட்டை எனும் மனித உடலில் விடுபட்ட அந்த ஐந்தாவது இதில் சேறும் என தாங்கள் குறிப்பிட்டது, வெளி அல்லவா. இறை அல்லவா வெளி என உணரப் பட்டது.
4. தீபங்களின் ஆவளி (வரிசை) எனும் தமிழ் வார்த்தை புதிய என் நினைவுச் சேர்க்கை. நன்றி.

மாமியாரின் கொடுமையை சொல்ல கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு.
'என் மக, பாவம் தினம் தினந்தான் எண்ண தேச்சு குளிக்கா, பாரு என் மருமகள, தீவளிக்கு தீவளி குளிக்கிறா' இனி தீவளி எனச் சொல்லாமல் தீபாவளி என சொல்லுவேன். ஆங்கிலத்திலும் இந்த பிரச்சனை உண்டு. சிலர் Deepavali தீபாவளி எனவும், சிலர் Diwali தீவாளி. இனி சந்தேகம் தீர்ந்தது.

5. லட்சுமி தேவியின் தீப ஐக்கியம், இன்னும் சில ஆழமான கருத்துக்கு இட்டு செல்கிறது.
6. ராமன், பிரகலாதன், வாமன எனும் பிர தீபாவளி விளக்கங்களும் பிரமாதம்.

ஞானம் கிடைப்பதே ! ஞான ஒளி கிடைப்பதே தீபாவளி என சொல்லிவிட்டு இலவசமாய் தாங்கள் தந்த (கணக்கில வீக்..... அமெண்ட் சரியா தெரியல) ரூபாயில் இது கிடைக்குமா..

பரவாயில்ல, ஞான ஒளிதான, ??? என்று ந‌டிகர் திலகம் பட டிவீடி கொடுக்காமல் வீட்டீர்களே....

தப்பித்தது தம்புரான் புண்ணியம் !!!!

R.Gopi said...

பதிவை பிரித்து மேய்ந்து பின்னூட்டம் இட்ட படுக்காளிக்கு ஒரு சல்யூட்... முன்பெல்லாம் இது போன்ற‌ செய‌லுக்கு நான் "ராய‌ல் ச‌ல்யூட்" அடிப்ப‌து வ‌ழ‌க்க‌ம்... பின்ன‌ர் தான் ஞாப‌க‌ம் வந்த‌து... ராய‌ல் ச‌ல்யூட் என்றால் சீமை ச‌ர‌க்காமே... அத‌னால‌ இப்போல்லாம் சொல்றது வெறும் ச‌ல்யூட்தான்..

ரூவா பூரா உங்களுக்குதேன்... செலவு ப்ண்ணுங்க...

"ஞான ஒளி" டிவிடி யா?? அய்யா, உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி.. நல்ல வேளை "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு" படத்த பத்தி நெனவு படுத்தாம போனீயளே..

Eswari said...

"ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்..."

வாழ்த்துக்கு நன்றி கோபி.

அங்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டம் எப்படி?????

மாமியார் வீட்டு சீர் எல்லாம் வாங்கியாச்சா??

R.Gopi said...

//Eswari said...
"ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்..."

வாழ்த்துக்கு நன்றி கோபி.

அங்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டம் எப்படி?????

மாமியார் வீட்டு சீர் எல்லாம் வாங்கியாச்சா??//

வாங்க‌ ஈஸ்வ‌ரி... ரொம்ப‌ நாள் க‌ழிச்சு வ‌ர்றீங்க‌... எப்படி இருக்கீங்க...

இங்க எல்லாம் தீபாவளி கொண்டாட்டம் ஸோ ஸோ தான்... பெரிய அளவில் எல்லாம் இல்லை.. எங்களுக்கு கம்பெனியில் 2 மணி நேரம் பெர்மிஷன் கிடைக்கும்... இரவு சரவண பவன் போய் ஒரு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிடணும்... அவ்ளோதான்...

என்ன கேட்டீங்க மாமியார் வீட்டு சீரா?? அது சரி... இன்னும் எவ்ளோ வருஷத்துக்கு கொடுப்பாங்க??

ஈ ரா said...

//என்ன கேட்டீங்க மாமியார் வீட்டு சீரா?? அது சரி... இன்னும் எவ்ளோ வருஷத்துக்கு கொடுப்பாங்க??//

(நமக்கு இப்ப தாறாங்களே ) அப்போ அம்புட்டுதானா?

R.Gopi said...

//ஈ ரா said...
//என்ன கேட்டீங்க மாமியார் வீட்டு சீரா?? அது சரி... இன்னும் எவ்ளோ வருஷத்துக்கு கொடுப்பாங்க??//

(நமக்கு இப்ப தாறாங்களே ) அப்போ அம்புட்டுதானா?//

வாங்க‌ ஈ.ரா...

உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌லா "த‌லை தீபாவ‌ளி" ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

ஆமாம்... இப்போ குடுக்க‌ற‌த‌ ந‌ல்ல‌ ச‌ம‌த்து புள்ளையா வாங்கிக்கோங்க‌... இத்த‌ ரிப்பீட்டினா கேக்கற எல்லாரும் (நீங்க கூட தான்), அடிக்கற அடியில அப்பாலிக்கா அப்பீட்டு...‌

Vidhoosh said...

இதெல்லாம் ஙாயமா கோபி. :))

அந்நியன் கணக்கு போல, அஞ்சஞ்சு காசா ஐம்பது கோடிய பிரிச்சுக் கொடுத்தாலும், தீபாவளி அன்பளிப்பா நினைச்சு மகிழ்கிறோம்.

-வித்யா

R.Gopi said...

//Vidhoosh said...
இதெல்லாம் ஙாயமா கோபி. :))

அந்நியன் கணக்கு போல, அஞ்சஞ்சு காசா ஐம்பது கோடிய பிரிச்சுக் கொடுத்தாலும், தீபாவளி அன்பளிப்பா நினைச்சு மகிழ்கிறோம்.

-வித்யா//

************

வாங்க விதூஷ்...

ஹா...ஹா...ஹா.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தான் இந்த பரிசின் தத்துவம்...

குறையிருப்பின் அடுத்த முறை மதிப்பை கூட்டுவோம்...

கலகலப்ரியா said...

ம்ம்ம்.. அருமையான பதிவு.. அழகா விஷயத்த தொகுத்து கொடுத்திருக்கீங்க.. !

இவ்ளோ.. பெரீஈஈஈஈய்ய்ய்ய கிஃப்ட்டா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி ஜோக்கிரி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கே..

கலகலப்ரியா said...

உங்களுக்கும் என்னோட தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

R.Gopi said...

//கலகலப்ரியா said...
ம்ம்ம்.. அருமையான பதிவு.. அழகா விஷயத்த தொகுத்து கொடுத்திருக்கீங்க.. !

இவ்ளோ.. பெரீஈஈஈஈய்ய்ய்ய கிஃப்ட்டா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி ஜோக்கிரி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கே..//

வ‌ருகைக்கு ந‌ன்றி...

உங்க‌ ஹார்ட் இந்த‌ கிஃப்ட் தாங்குமா என்று ப‌ல‌முறை யோசித்து தானே தைரிய‌த்துட‌ன் வ‌ர‌வ‌ழைத்தேன்...

பரிசை பெற்றுக்கொண்டதற்கு நன்றி...

R.Gopi said...

//கலகலப்ரியா said...
உங்களுக்கும் என்னோட தீபாவளி நல் வாழ்த்துக்கள்..//

********

நன்றி... என்சாய் தங்கமணி.........

RAMYA said...

இம்புட்டு நல்லவரா கோபி நீங்க எனக்கு தெரியாம போச்சே:-)

தெரிஞ்சிருந்தா ஒரு கோணி எடுத்து வந்து அள்ளிகிட்டு போய் இருப்பேனே:)

இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்துகிட்டு போறேன் :))

நன்றி! நன்றி! நன்றி!

பரிசுக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்!

எனதன்பு தீபாவளி வாழ்த்துக்கள் கோபி!

R.Gopi said...

//RAMYA said...
இம்புட்டு நல்லவரா கோபி நீங்க எனக்கு தெரியாம போச்சே:-)

தெரிஞ்சிருந்தா ஒரு கோணி எடுத்து வந்து அள்ளிகிட்டு போய் இருப்பேனே:)

இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்துகிட்டு போறேன் :))

நன்றி! நன்றி! நன்றி!

பரிசுக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்!

எனதன்பு தீபாவளி வாழ்த்துக்கள் கோபி!//

***********
வாங்க ரம்யா...

ரொம்ப நாளாச்சு நீங்க நம்ம வலைப்பக்கம் எல்லாம் வந்து....

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ரம்யா

SUFFIX said...

உங்களுக்கும், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபி.

R.Gopi said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
உங்களுக்கும், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபி.//


Thanks for your maiden visit and wish ஷ‌ஃபிக்ஸ்/Suffix.

Do visit regularly and read the updates...

Also visit my another blogspot www.jokkiri.blogspot.com

கிரி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கோபி (ரொம்ப முன்னாடியே சொல்லிட்டீங்க போல)

ராமலக்ஷ்மி said...

ஆகா, நிஜமாகவே உங்கள் வாழ்த்து அதிருது கோபி:)! வாழ்த்துக்களுக்கும், தீபாவளி பரிசுக்கும், பண்டிகையைப் பற்றிய விளக்கங்களைத் தந்த நல்ல பகிர்வுக்கும் நன்றி நன்றி நன்றி!

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வலை நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

Princess said...

ungalukkum deepavali vazhthukkal..
niraya thagaval thandhu irukeenga.. arumai.

R.Gopi said...

//கிரி said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கோபி (ரொம்ப முன்னாடியே சொல்லிட்டீங்க போல)//

வாங்க‌ கிரி...

கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டேன்... எல்லா நண்பர்களையும் முன்கூட்டியே அடைய வேண்டுமே என்றுதான்...

//ராமலக்ஷ்மி said...
ஆகா, நிஜமாகவே உங்கள் வாழ்த்து அதிருது கோபி:)! வாழ்த்துக்களுக்கும், தீபாவளி பரிசுக்கும், பண்டிகையைப் பற்றிய விளக்கங்களைத் தந்த நல்ல பகிர்வுக்கும் நன்றி நன்றி நன்றி!

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வலை நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!//

ந‌லம் நலம் அறிய ஆவல் மேடம்... தங்கள் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி மேட‌ம்...

//Princess said...
ungalukkum deepavali vazhthukkal..
niraya thagaval thandhu irukeenga.. arumai.//

Thanks for your maiden visit and encouraging comment Princess... Do come regularly and read all articles....

கல்யாணி சுரேஷ் said...

தீபாவளி குறித்து தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவிய பதிவு. நன்றி கோபி. உங்க gift நிஜமாவே priceless. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய thanks ங்கோ.

கோமதி அரசு said...

//ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
“தீய எண்ணங்கள் தான் நரகன் அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல் அந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது அதாவது,ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி” என்கிறார் பகவான் ரமணர்!//
தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர விடும் போது அங்கு இறைவன் குடியேறுவான்.

இருள் அடைந்த இதயத்தில் ஞானஒளியை ஏற்றி வைத்தால்
அங்கு இறைவன் குடியேறுவான்.

நல்ல பதிவு.

நீங்கள் கொடுத்த தீபாவளி பணம்
உண்மையில் அதிரத் தான் வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

தீபாவளி வாழ்த்துகள் கோபி. நீங்க கொடுத்ததுல செல்வழிச்சது போக பாக்கியை எந்த அக்கவுண்ட்ல போட?

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. வெறும் வாழ்த்தோட நிறுத்திக்காம சகோதர்களுக்கு சீர்வரிசையும் அனுப்பிச்சரணும் ஆமா :)

R.Gopi said...

//கல்யாணி சுரேஷ் said...
தீபாவளி குறித்து தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவிய பதிவு. நன்றி கோபி. உங்க gift நிஜமாவே priceless. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய thanks ங்கோ.//

வாங்க‌ க‌ல்யாணி சுரேஷ்...

முத‌ல் வ‌ருகைக்கும்,ப‌திவை ர‌சித்து பாராட்டிய‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி... தொடர்ந்து வாங்கோ...

//கோமதி அரசு said...

தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர விடும் போது அங்கு இறைவன் குடியேறுவான்.

இருள் அடைந்த இதயத்தில் ஞானஒளியை ஏற்றி வைத்தால்
அங்கு இறைவன் குடியேறுவான்.

நல்ல பதிவு.

நீங்கள் கொடுத்த தீபாவளி பணம்
உண்மையில் அதிரத் தான் வைக்கிறது.

வாழ்த்துக்கள்.//

சரியாக சொன்னீர்கள் கோமதி மேடம்... வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி...

//பரிசல்காரன் said...
தீபாவளி வாழ்த்துகள் கோபி. நீங்க கொடுத்ததுல செல்வழிச்சது போக பாக்கியை எந்த அக்கவுண்ட்ல போட?//

அப்பா... ஒரு வ‌ழியா ப‌ரிச‌ல் இந்த‌ க‌ரை ப‌க்க‌மும் ஒதுங்கிய‌தே... அந்த முதல் வருகைக்கும் என் மனமார்ந்த‌ ந‌ன்றி...

செல‌வ‌ழித்த‌து போக‌ மீதியை உங்க‌ள் க‌ண‌க்கிலே வைத்து தொடர்ந்து செல‌வு செய்ய‌வும்... புத்தாண்டு, பொங்க‌ல், வ‌ருட‌ பிற‌ப்புன்னு எம்புட்டு செல‌வு இருக்கு!!

//சின்ன அம்மிணி said...
தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. வெறும் வாழ்த்தோட நிறுத்திக்காம சகோதர்களுக்கு சீர்வரிசையும் அனுப்பிச்சரணும் ஆமா :)//

வாங்க‌ சின்ன‌ அம்மிணி

க‌ண்டிப்பா அனுப்பிட்டா போச்சு... வ‌ருகைக்கும், க‌ருத்து ப‌கிர்வுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி..

. said...

செலவழிச்சதுல மீதிய எங்க போடுறதுன்னு பரிசல் கேட்டாரே, பின்னூட்டம் போட்ட எல்லோருக்கும் போடச் சொல்லுங்க ஜி.

தீபாவளி களை கட்டுது கோபி. வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

ஒருமுறை பொங்கலுக்கு தம்பி நிஜமா நல்லவன் பொங்கல்சீர் கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

இப்போ தீபாவளிக்கு சீர். நாங்கல்லாம் கொடுத்து வெச்சவங்க. அதான் இப்படிபட்ட நல்ல உடன்பிறப்புக்கள் கிடைக்கப்பெற்றிருக்கோம்.

மிக்க நன்றி, இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

R.Gopi said...

//புதுகைத் தென்றல் said...
ஒருமுறை பொங்கலுக்கு தம்பி நிஜமா நல்லவன் பொங்கல்சீர் கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

இப்போ தீபாவளிக்கு சீர். நாங்கல்லாம் கொடுத்து வெச்சவங்க. அதான் இப்படிபட்ட நல்ல உடன்பிறப்புக்கள் கிடைக்கப்பெற்றிருக்கோம்.

மிக்க நன்றி, இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்//

***********

வாங்க புதுகைத் தென்றல்

நீங்க கொடுத்து வச்சவரு... எல்லா பண்டிகைக்கும் சீர் கிடைக்குது...

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

தெய்வசுகந்தி said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.பரிசுக்கு நன்றிங்க கோபி.செலவே பண்ணாம பத்திரமா வெச்சுக்கற மாதிரி ஒரு பரிசு கொடுத்துருக்கீங்களே, அதுக்கு தனியா ஒரு பாராட்டு.

R.Gopi said...

//Deivasuganthi said...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.பரிசுக்கு நன்றிங்க கோபி.செலவே பண்ணாம பத்திரமா வெச்சுக்கற மாதிரி ஒரு பரிசு கொடுத்துருக்கீங்களே, அதுக்கு தனியா ஒரு பாராட்டு.//

வ‌ருக‌ வ‌ருக‌ Deivasuganthi....

த‌ங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி... வ‌ருகை புரிந்து, ர‌சித்து வாசித்து பாராட்டிய‌மைக்கு ந‌ன்றி...

தொடர்ந்து வாருங்க‌ள்...

பின்னோக்கி said...

ம்ம்.ம்ம்..இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்துருக்கலாம். உங்களுக்கு மனசு இல்லை என்ன பண்ண ? :)

R.Gopi said...

//பின்னோக்கி said...
ம்ம்.ம்ம்..இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்துருக்கலாம். உங்களுக்கு மனசு இல்லை என்ன பண்ண ? :)//

*********

வாங்க "தல பின்னோக்கி"

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து...

மருந்து வாங்கியாச்சு இல்ல... ரெடு பண்ணுங்க... அப்புறம் வந்து 10 கிலோ பொன் வாங்கிக்கறேன்...

GEETHA ACHAL said...

மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.

உங்களுடைய அன்பு தீபாவளி அன்பளிப்பிற்கு மிகுந்த நன்றி..

இவ்வளவு பணமா...பெரிய மனசு தான் உங்களுக்கு...நன்றி..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபவாளி வாழ்த்துகள்

R.Gopi said...

//Geetha Achal said...
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.

உங்களுடைய அன்பு தீபாவளி அன்பளிப்பிற்கு மிகுந்த நன்றி..

இவ்வளவு பணமா...பெரிய மனசு தான் உங்களுக்கு...நன்றி..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபவாளி வாழ்த்துகள்//


*********

வாங்க‌ கீதா

த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும், ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

Thenammai Lakshmanan said...

கோபி மிக்க நன்றி

நார்த் இண்டியாவில் தான் தீபாவளிக்கு., சகோதரிகளுக்கு .,தீபாவளி சீர் வருடாவருடம் கொடுப்பார்கள்...

தற்போது தாங்கள் தந்து அசத்தி விட்டீர்கள் அன்புச் சகோதரரே...

வலைத்தளத்தில் எழுத வந்து கிடைத்த மிகப் பெரிய மற்றும் மிகச் சிறந்த பரிசு உங்களைப் போன்ற சகோதரர்கள்தான் ...

நெஞ்சார்ந்த நன்றிகள் கோபி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபவளி வாழ்த்துக்கள் கோபி

தாங்களும் துபாயில் தான் இருக்கிறீர்களா

நான் தற்சமயம் ஷார்ஜாவில் இருக்கிறேன்

Menaga Sathia said...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு பணமும் எனக்காஆஆ கோபி..நீங்க ரொம்ப ரொமப் நல்லவரு வல்லவரு..மயக்கமா வருது கோபி அந்த சைபரை எண்ணி முடிக்கறதுக்குள்....உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றி ப்ரதர்!!

தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கோபி!!

Rajalakshmi Pakkirisamy said...

தீபாவளி வாழ்த்துகள் கோபி.

Saranya said...

தங்கள் பகிர்வுக்கு நன்றி...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்.....


சரி Mrs Gopi ...இங்க பாருங்க...எவ்வளவு தாராளமாக செலவு பண்ணுறதை.....இருந்தாலும் அஞ்சாமல் கோபி அவர்கள் தைரியமாக செலவு செய்ய முற்பட்டதை பாராட்டாம இருக்க முடியுல.....

நன்றிகள்...

R.Gopi said...

//thenammailakshmanan said...
கோபி மிக்க நன்றி

நார்த் இண்டியாவில் தான் தீபாவளிக்கு., சகோதரிகளுக்கு .,தீபாவளி சீர் வருடாவருடம் கொடுப்பார்கள்...

தற்போது தாங்கள் தந்து அசத்தி விட்டீர்கள் அன்புச் சகோதரரே...

வலைத்தளத்தில் எழுத வந்து கிடைத்த மிகப் பெரிய மற்றும் மிகச் சிறந்த பரிசு உங்களைப் போன்ற சகோதரர்கள்தான் ...

நெஞ்சார்ந்த நன்றிகள் கோபி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபவளி வாழ்த்துக்கள் கோபி

தாங்களும் துபாயில் தான் இருக்கிறீர்களா

நான் தற்சமயம் ஷார்ஜாவில் இருக்கிறேன்//

வாங்க தேனம்மை லக்ஷ்மணன்... த‌ங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி... என‌க்கும் வ‌லையில் கிடைத்த‌து நிறைய‌ தோழ‌மைதான். ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கும், பாராட்டிய‌த‌ற்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு பணமும் எனக்காஆஆ கோபி..நீங்க ரொம்ப ரொமப் நல்லவரு வல்லவரு..மயக்கமா வருது கோபி அந்த சைபரை எண்ணி முடிக்கறதுக்குள்....உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றி ப்ரதர்!!

தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கோபி!!//

வாங்க‌ மேன‌கா... இம்புட்டும் உங்க‌ளுக்கே... நான் ஏற்கனவே சொன்னது போல், கீட் இட் யுவர்செல்ஃப் அன்ட் என்ஜாய் இட் யுவ‌ர்செல்ஃப்...

அழைப்பை ஏற்று, வருகை தந்து, பரிசை பெற்றுக்கொண்டு வாழ்த்திய தோழமைக்கு நன்றி...

R.Gopi said...

//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
தீபாவளி வாழ்த்துகள் கோபி.//

வ‌ருகைக்கும், வாழ்த்திய‌த‌ற்கும் ந‌ன்றி இராஜ‌லெட்சுமி மேட‌ம்...

R.Gopi said...

//Saranya said...
தங்கள் பகிர்வுக்கு நன்றி...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்.....


சரி Mrs Gopi ...இங்க பாருங்க...எவ்வளவு தாராளமாக செலவு பண்ணுறதை.....இருந்தாலும் அஞ்சாமல் கோபி அவர்கள் தைரியமாக செலவு செய்ய முற்பட்டதை பாராட்டாம இருக்க முடியுல.....

நன்றிகள்...//

வாங்க‌ ச‌ர‌ண்யா... வ‌ந்து, வாழ்த்தி, பாராட்டி, ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

R.Gopi said...

இந்த‌ தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவிற்கு தமிழிஷில் வாக்க‌ளித்து பிர‌ப‌ல‌மாக்கிய‌ உங்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

Kalakalapriya
girirajnet
pinnokki
menagasathia
kosu
vilambi
tamilz
jollyjegan
ldnkarthik

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

R.Gopi said...

//பிரியமுடன்...வசந்த் said...
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்//

வாங்க‌ வசந்த்... உங்க‌ள் வ‌ருகை என்னை ம‌கிழ்வித்த‌து...

வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி... தொடர்ந்து வ‌ருகை தாருங்க‌ள்...

அன்பேசிவம் said...

ந‌ண்பா! உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்

R.Gopi said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
ந‌ண்பா! உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்கள்//

முதல் வருகைக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி முரளி....

தொடர்ந்து வாருங்க‌ள்... ஆத‌ர‌வு தாருங்க‌ள்...

SUMAZLA/சுமஜ்லா said...

கஷ்டப்பட்டு எத்துணை சைபர்னு எண்ணி, பள்ளியில் படித்த ஒன்ஸ், டென்ஸ் எல்லாம் உபயோகித்து கண்டு பிடித்து விட்டு, கீழே பார்த்தால், பச்சாஸ் கரோட் ருப்யே என்று ஹிந்தியில்...!

பரிசுன்னு செல்லிட்டு, ஒரு நோட்டை இத்தினி பேருக்கு கொடுத்தால்?????????

இட்ஸ் ஓக்கே! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

R.Gopi said...

//SUMAZLA/சுமஜ்லா said...
கஷ்டப்பட்டு எத்துணை சைபர்னு எண்ணி, பள்ளியில் படித்த ஒன்ஸ், டென்ஸ் எல்லாம் உபயோகித்து கண்டு பிடித்து விட்டு, கீழே பார்த்தால், பச்சாஸ் கரோட் ருப்யே என்று ஹிந்தியில்...!

பரிசுன்னு செல்லிட்டு, ஒரு நோட்டை இத்தினி பேருக்கு கொடுத்தால்?????????

இட்ஸ் ஓக்கே! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...//

***************

வாங்க‌ சும‌ஜ்லா...

வ‌ர்ற‌வ‌ங்க‌ எல்லாம் ஒண்ணு எடுத்துக்க‌ வேண்டிய‌துதான்... ச‌ரிதான்... ப‌ச்சாஸ் க‌ரோட் ருப்யாதானுங்கோ...

வந்திருந்து வாழ்த்திய‌த‌ற்கு ந‌ன்றி...

விக்னேஷ்வரி said...

நல்லா எழுதிருக்கீங்க. அப்படியே பணத்தை டி.டி. எடுத்து அனுப்பினீங்கன்னா நல்லது. இங்கே பொதுவா எதுக்குபா... ;)

Kavinaya said...

// சும்மா அதிருதுல்ல.. //

ஆமா... :))) சும்மா சொல்லக் கூடாது, நீங்க பதிவுக்கு அழைத்த விதமும் கூடத்தான் அப்படியே அதிருது :)))

//'தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!//

அருமையான பகிர்தலுக்கு நன்றி கோபி. புத்தாடையும் பட்டாசு பலகாரத்துடன் இதையும் எல்லாரும் அவசியம் நினைவில் கொள்ளணும்.

உங்களுக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

R.Gopi said...

//விக்னேஷ்வரி said...
நல்லா எழுதிருக்கீங்க. அப்படியே பணத்தை டி.டி. எடுத்து அனுப்பினீங்கன்னா நல்லது. இங்கே பொதுவா எதுக்குபா... ;)//

வாங்க‌ விக்னேஷ்வ‌ரி...

வ‌ந்து, ப‌திவை ர‌சித்து ப‌டித்து, பாராட்டி, ப‌ரிசினை பெற்றுக்கொண்ட‌மைக்கு ந‌ன்றி... Just enquired... The DD cost is too too much... Thats why, this cash delivery. ஓகேவா!!???

R.Gopi said...

//கவிநயா said...
// சும்மா அதிருதுல்ல.. //

ஆமா... :))) சும்மா சொல்லக் கூடாது, நீங்க பதிவுக்கு அழைத்த விதமும் கூடத்தான் அப்படியே அதிருது :)))

//'தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!//

அருமையான பகிர்தலுக்கு நன்றி கோபி. புத்தாடையும் பட்டாசு பலகாரத்துடன் இதையும் எல்லாரும் அவசியம் நினைவில் கொள்ளணும்.

உங்களுக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!//

வாங்க‌ க‌விந‌யா...

ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌டித்து அதை நாளும் நினைவில் நிறுத்த‌ வேண்டும் என்ப‌தை அழுத்த‌மாக‌ சொன்ன‌த‌ற்கு ந‌ன்றி...

வ‌ந்திருந்து, பொறுமையாக‌ ப‌திவை ப‌டித்து, ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கு ந‌ன்றி... வாழ்த்துக்க‌ள்...

Kavinaya said...

கோபி, உங்களை இங்கே (அன்பா) மாட்டி விட்டிருக்கேன் :)

http://kavinaya.blogspot.com/2009/10/2009.html

sindhusubash said...

தீபாவளி வாழ்த்துக்கள் கோபி. இப்படி ஒரே நோட்டா கொடுத்தா சில்லறை கிடைக்காதே..

Sanjai Gandhi said...

வாழ்த்துகள்..

R.Gopi said...

//கவிநயா said...
கோபி, உங்களை இங்கே (அன்பா) மாட்டி விட்டிருக்கேன் :)

http://kavinaya.blogspot.com/2009/10/2009.//

அப்ப‌டியா... இதோ வந்து பார்க்கிறேன் க‌வி...

R.Gopi said...

//sindhusubash said...
தீபாவளி வாழ்த்துக்கள் கோபி. இப்படி ஒரே நோட்டா கொடுத்தா சில்லறை கிடைக்காதே..//

வாங்க‌ சிந்து....

ந‌ம்ம‌ நாட்டுல‌ சில்ல‌றைக்கு ப‌ஞ்ச‌மே இல்லேன்னு நோட்டு வாங்கின‌வ‌ங்க‌ எல்லாம் சொன்னாங்க‌ளே!!??

R.Gopi said...

//SanjaiGandhi said...
வாழ்த்துகள்..//

வ‌ருக‌ வ‌ருக‌ ச‌ஞ்ச‌ய்...

த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், வாழ்த்திற்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

Simple Sundar said...

கிருபானந்த வாரியாரின் தீபாவளி உரையை கேட்ட திருப்தி கிடைத்தது. நன்றி கோபி ஜி.

- சுந்தர், Onlysuperstar.com

R.Gopi said...

//Simple Sundar said...
கிருபானந்த வாரியாரின் தீபாவளி உரையை கேட்ட திருப்தி கிடைத்தது. நன்றி கோபி ஜி.

- சுந்தர், Onlysuperstar.com//

**********

வாங்க‌ சுந்த‌ர்ஜி

வருகைக்கும், வாழ்த்தியதற்கும் என் மனமார்ந்த நன்றி...

தங்களின் லேட்டஸ்ட் பதிவு "பாலகுமாரன் வீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" படித்தேன்... சூப்பர்... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....

வாழ்த்துக்கள் சுந்தர்....

பெசொவி said...

அதெல்லாம் சரி, கொடுத்ததுதான் கொடுத்தீங்க, ஒரு நோட்டா கொடுப்பது, ஒரு கட்டாவது கொடுத்தீங்கன்னாதான் இந்த விலைவாசி நிலவரத்தில கட்டுபடியாகும்.

any way, தீபாவளி வாழ்த்துகள்.

R.Gopi said...

//சொல்ல விருப்பமில்லை said...
அதெல்லாம் சரி, கொடுத்ததுதான் கொடுத்தீங்க, ஒரு நோட்டா கொடுப்பது, ஒரு கட்டாவது கொடுத்தீங்கன்னாதான் இந்த விலைவாசி நிலவரத்தில கட்டுபடியாகும்.

any way, தீபாவளி வாழ்த்துகள்.//

************

சொல்ல விருப்பமில்லை...

பேரே ரொம்ப நல்லா இருக்கே "தல".....

க‌ட்டு என்ன‌ சார்... கோணி எடுத்து வாங்க‌... அள்ளிட்டு போங்க‌...

தீபாவ‌ளிய‌ என்ஞாய் ப‌ண்ணுங்க‌...

கீழை ராஸா said...

கோபி கண்ணு நீங்க "ரொம்ப" நல்லவருன்னு தெரியும் ஆன இவ்வளவு நல்லவராய்யா நீ...நீர் தாய அந்த எட்டாவது கொடை வள்ளல்...வாழ்த்துக்கள் நண்பரே...

R.Gopi said...

//கீழை ராஸா said...
கோபி கண்ணு நீங்க "ரொம்ப" நல்லவருன்னு தெரியும் ஆன இவ்வளவு நல்லவராய்யா நீ...நீர் தாய அந்த எட்டாவது கொடை வள்ளல்...வாழ்த்துக்கள் நண்பரே...//

***********

வாருங்கள் கீழை ராசா அவர்களே...

கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னால், இந்த சின்ன சின்ன "ஸைஃபர்கள்"தான் என்னை என் செய்யும்??

நான் இம்புட்டு நல்லவன் என்று சொல்லி உள்ளீர்கள்... நான் நல்லவன் என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும்... ஏதாவது புரிஞ்சுதா??

"ஆதவன்" படம் பார்த்துவிட்டு வந்து பார்க்கலாமா, வேண்டாமா என்று சொல்லுங்கள்...

ஸ்வர்ணரேக்கா said...

ஆஹா... இம்புட்டு ரூவா வா..?

லேட்டா வந்துட்டேனே...முன்னாடியே வந்திருந்தா... இன்னோரு தீபாவளி பர்ச்சேஸ போட்ருக்கலாமே.....

R.Gopi said...

//ஸ்வர்ணரேக்கா said...
ஆஹா... இம்புட்டு ரூவா வா..?

லேட்டா வந்துட்டேனே...முன்னாடியே வந்திருந்தா... இன்னோரு தீபாவளி பர்ச்சேஸ போட்ருக்கலாமே.....//

************

ஹா..ஹா...ஹா...

வாங்க‌ ஸ்வ‌ர்ண‌ரேக்கா...

நீங்க‌ லேட்டா வ‌ந்தாலும் லேட்ட‌ஸ்டா தான் வ‌ந்து இருக்கீங்க‌... இப்போ என்ன‌.. ப‌ண‌த்த‌ எடுங்க‌... நியூ இய‌ர், பொங்க‌ல் ப‌ர்சேஸ் ஆர‌ம்பிங்க‌...

கடை(த்)தெரு said...

நல்ல பதிவு திரு.கோபி

வாழ்த்துக்கள்.


அன்புடன்
இன்பா

R.Gopi said...

//கடை(த்)தெரு said...
நல்ல பதிவு திரு.கோபி

வாழ்த்துக்கள்.

அன்புடன்
இன்பா//

**********

வணக்கம் திரு இன்பா அவர்களே...

அழைப்பை ஏற்று "கடைத்தெரு"வில் இருந்து நம் கடை பக்கமும் வருகை தந்து, வாழ்த்தியத‌ற்கு என் மனமார்ந்த நன்றி...

தொடர்ந்து வாருங்கள்...

cdhurai said...

கோபி....

தீபாவளியா அல்லது தீப ஒளி திருநாளா? - நல்ல சாப்பாடும், போதையும், பணமும் இருந்தால் தினமும் தீவாளி தான்... அப்புறம் டன்...டன்..பேட்ட ராப்பு தான்....

செல்லதுரை

R.Gopi said...

// cdhurai said...
கோபி....

தீபாவளியா அல்லது தீப ஒளி திருநாளா? - நல்ல சாப்பாடும், போதையும், பணமும் இருந்தால் தினமும் தீவாளி தான்... அப்புறம் டன்...டன்..பேட்ட ராப்பு தான்....

செல்லதுரை//

**********

"தீபாவ‌ளி"யா, "தீப‌ ஒளியா"..ஆஹா... அடுத்த‌ தீபாவ‌ளி / தீப‌ ஒளி நாளுக்கான‌ ப‌ட்டிம‌ன்ற‌ம் தலைப்பு போல‌வே இருக்கே...த‌லீவா...

"தெளிந்து", எழுந்து வந்து வாழ்த்து சொன்ன செல்லதுரைக்கு என் மனமார்ந்த நன்றி...

கையில் கொஞ்சம் காசு இருந்தா, தினம் தோறும் தீபாவளிதேன்...

சரியா தான்யா சொல்லி இருக்க நீயி....

ஷைலஜா said...

தாமதமான தீபாவளிவாழ்த்துகள்! இந்தப்பதிவுபத்தி உங்க தலைவர் பாணில சொல்லணும்னா ’ ச்சும்மா அதிருதில்ல?! ’
சபாஷ் கோபி!(

என் மௌனம் கலைந்து தீபாவளிப்பதிவைத்தொடர்ந்து இன்னொண்ணு இதோ அளிக்கப்போறேன் வழக்கம்போல வந்து படிச்சி கருத்து சொல்லுங்க கோபி! நன்றி

R.Gopi said...

//ஷைலஜா said...
தாமதமான தீபாவளிவாழ்த்துகள்! இந்தப்பதிவுபத்தி உங்க தலைவர் பாணில சொல்லணும்னா ’ ச்சும்மா அதிருதில்ல?! ’
சபாஷ் கோபி!(

என் மௌனம் கலைந்து தீபாவளிப்பதிவைத்தொடர்ந்து இன்னொண்ணு இதோ அளிக்கப்போறேன் வழக்கம்போல வந்து படிச்சி கருத்து சொல்லுங்க கோபி! நன்றி//

***********

ஷைலஜா மேடம்...

தங்கள் மௌனம் கலைத்து என் வலைப்பதிவிற்கு வந்து, தீபாவளி சிறப்பு பரிசினை பெற்று சென்றமைக்கு நன்றி...

உங்கள் பதிவை படிக்க ஆவலாய் உள்ளேன்...

Unknown said...

அருமையான விளக்கங்களோடு அழகான பதிவு :)) என் தாமதமான தீபாவளி வாழ்த்துகள். :))

R.Gopi said...

//ஸ்ரீமதி said...
அருமையான விளக்கங்களோடு அழகான பதிவு :)) என் தாமதமான தீபாவளி வாழ்த்துகள். :))//

வாருங்கள் ஸ்ரீம‌தி அவ‌ர்க‌ளே...

த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

நீங்க பதிவு எதுவும் எழுதி கூட ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கே...

R.Gopi said...

இந்த பதிவிற்கு வாக்களித்து தமிழிஷில் பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

Kalakalapriya
girirajnet
pinnokki
menagasathia
kosu
vilambi
tamilz
jollyjegan
ldnkarthik
vasanth1717
csKrishna

சுசி said...

ரொம்ப தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள் கோபி...

ஜஸ்ட்டு மிஸ்ஸு.. இது மட்டும் முன்னாடியே கிடைச்சிருந்தா தீபாவளி அசத்தி இருக்கும்.

நன்றி.....

R.Gopi said...

//சுசி said...
ரொம்ப தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள் கோபி...

ஜஸ்ட்டு மிஸ்ஸு.. இது மட்டும் முன்னாடியே கிடைச்சிருந்தா தீபாவளி அசத்தி இருக்கும்.

நன்றி.....//

********

வாங்க‌ சுசி...வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி

தீபாவ‌ளி போனா என்ன‌... அதான் பொங்க‌ல் வ‌ருதே...