ச‌ங்கி ம‌ங்கி டெர்ர‌ரோ டெர்ர‌ர் கூட்ட‌ணி - (01.10.09)

எலே சங்கி... எங்கடா பூட்ட இம்புட்டு நாளா.. நாட்டுல எவ்ளோ அக்குரும்பு நடக்குது தெரியுமாடா??

இன்னாடா வர்ற சொல்லவே மெரிசல் வுடற மங்கி... ஒரு வாரத்துல இன்னாடா அக்குரும்பு நடந்துட்ச்சி...

சொல்றேன்டா... நம்ம "தல"க்கு "அண்ணா விருது" குடுத்தாங்கடா... அந்த வியாவுல அன்பய‌கன் "இதயம் இனிக்க, கண்கள் பனிக்க" நின்னாராமாம்...

ஒரு நாளாவ‌து அந்த‌ சீட்ல‌ உட்கார‌ணும்னு நென‌ச்சேன்... அது முடியலியேன்னு நென‌ச்சு அயுதாரோ இன்னா‌வோ?

அதான் தெரிமேடா... யாரும் குடுக்கலியேன்னு, அவிய்ங்களே அவிய்ங்களுக்கு குடுத்துக்கறாய்ங்க.. அதுவும் இல்லாம, அதெல்லாம் "தல"யோட நுண்ணரசியல்டா.

அத்த பத்தியெல்லாம் ஊர்ல த‌கிரியமா "தண்டோரா" மட்டும் தான்டா பேசுவாரு...இதுல நமக்கு இன்னாடா... ரேசன்ல தீவாளிக்கு எக்ஸ்ட்ரா சக்கரை குடுக்கறாய்ங்களா, அத்த பத்தி சொல்றா... பொயப்ப பாப்போம்...

டேய், எடுபட்ட பயலே...நீ எந்த ஊர்ல இருக்கடா??!! எக்ஸ்ட்ரா எதுக்குடா? வயக்கமா குடுக்கறதுல கொறைக்காம இருந்தா போதாதாடா??

அதுவும் சரிதான்... அப்புறம் இன்னொரு மெரிசல் மேட்டர் கேட்டு மயங்கி வுயுந்துட்டேம்பா... "தல"க்கு சினிமாவுல ஏதோ அவார்டு குடுத்தாய்ங்களாமே...

அத்த ஏண்டா கேக்கற... படா டமாசுடா... அவருக்கு "உளியின் ஓசை" படத்துக்கு...

டேய்...டேய்... வேணாம்டா...அந்த பேர கேட்டாலே ஒதறுதுடா மக்கா... பெரிய டெர்ரர் படமாச்சேடா அது... அதுக்கு இன்னாடா??

இல்லடா... அந்த திரைப்படத்திற்கு (அப்படின்னு சொன்னா கோவம் வருமாம்... திரைக்காவியம்னு சொல்லணுமாம்..

இந்த மேட்டர நம்ம டக்ளஸ் ராஜூ அண்ணாத்த ரீஜன்டா சொன்னாருபா...) படா ஷோக்கா வசனம் கட்டுனாருன்னு 2008ம் வருடத்தின் தமிழக அரசுக்கான சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு தந்துட்டாய்ங்களாம்டா...

டேய்... நீ என்னிய திட்டறதுன்னா, நேரடியா திட்டுடா... ஏண்டா, இப்படி கூப்பிட்டு வச்சு வெறுப்பேத்தற... இந்த விருது இப்போ இவருக்கு தேவையா...

ஏண்டா மக்கு பயலே மங்கி... அவரு ஆட்சில இருக்க சொல்லோ கூட அவருக்கு குடுத்துக்கலேன்னா, அப்புறம் வேற யாருடா அவருக்கு தருவாய்ங்க?

அதுவும், சரியான பாயிண்டுடா... இன்னாத்த சொல்றது...
பொறவு, நம்ம கவுர்மெண்டு 2007 / 2008ல சிறந்த நடிகர்னு ரஜினிகாந்த் (சிவாஜி படத்துக்கும்) கமல்தாசன் (தசாவதாரம்) ரெண்டு பேருக்கும் அவார்டு குடுத்தாய்ங்களாம்..

கமல்தாசன் சினிமாவுக்கு வந்து 50 வருசம் ஆவுது... தலைவர் ரஜினிக்கு இந்த வருசம் 60 வயசு ஆவுது... அதனால, இத்த கொண்டாடற மாதிரி ரெண்டு பேருக்கும் இந்த அவார்டு இருக்கட்டும்னு குடுத்ததா சொல்றாங்க...

இன்னொரு மேட்டரு இன்னான்னா, கேப்டன் விஜயகாந்த், அவரு நடிச்ச "எங்கள் ஆசான்", "மரியாதை" படத்துக்கும் ஏதாவது விருது கொடுக்க முடியுமா, முடியாதான்னு கேட்டு கடுதாசி போட்டு இருக்காராம்...தமிழ்நாட்டுல இருந்து பதில் வரலேன்னா, டெல்லியில உண்ணாவிரதம் இருக்கப்போறாராம்...

ஏண்டா... டெர்ரர் மேட்டர் சொல்லிட்டு வர்ர சொல்ல, இந்த மாதிரி கிச்சு கிச்சு மேட்டர்லாம் சொல்ற, இப்போ சிரிச்சு சிரிச்சு வவுறு வலிக்குதுடா... அப்பாலிக்கா டாஸ்மாக் அடிக்க முடியாதுடா...

அப்புறம் பொயப்பு பாக்கற எடத்துல ஒருத்தரு என்னிய ஒரு கேள்வி கேட்டாருடா... எனக்கு பதில் தெர்ல... ஒரே படா டென்சனா கீதுடா... மேட்டர் இன்னானா...
ஈயும் பறக்கும்
ஏரோப்ளேனும் பறக்கும்
அதனால, ஈ மேல ஏறி இந்தியா போக முடியுமான்னு கேட்டாருடா மக்கா...

இத்த கேட்ட ஒடனே, எனக்கு பகீர்னு ஆயிட்சுடா...ஒனக்கு தெரிஞ்சா சொல்லுடா...

இன்னிக்கு இது போதும்டா... வர்ட்டா....

19 comments:

கிரி said...

//கமல்தாசன் சினிமாவுக்கு வந்து 50 வருசம் ஆவுது... தலைவர் ரஜினிக்கு இந்த வருசம் 60 வயசு ஆவுது... அதனால, இத்த கொண்டாடற மாதிரி ரெண்டு பேருக்கும் இந்த அவார்டு இருக்கட்டும்னு குடுத்ததா சொல்றாங்க...//

எல்டாம்ஸ் சாலை மற்றும் ஆர்க்காட் சாலை இரண்டிற்கும் கமல் ரஜினி பெயர் வைப்பதாக கூறப்படுகிறது, இருவரின் நீண்ட திரை வாழ்க்கை அனுபவத்திற்காக.

ரஜினிக்கு வைக்கறாங்களோ இல்லையோ கண்டிப்பா கமலுக்கு எல்டாம்ஸ் சாலை Dr.கமலஹாசன் சாலையாக மாறும் என்று நினைக்கிறேன்.

R.Gopi said...

//எல்டாம்ஸ் சாலை மற்றும் ஆர்க்காட் சாலை இரண்டிற்கும் கமல் ரஜினி பெயர் வைப்பதாக கூறப்படுகிறது, இருவரின் நீண்ட திரை வாழ்க்கை அனுபவத்திற்காக.

ரஜினிக்கு வைக்கறாங்களோ இல்லையோ கண்டிப்பா கமலுக்கு எல்டாம்ஸ் சாலை Dr.கமலஹாசன் சாலையாக மாறும் என்று நினைக்கிறேன்.//

-----------

வாங்க கிரி...

சமீபத்திய செய்தியின் படி (எல்லாம் கேள்விப்பட்டது தான்..), ரஜினியின் 30 ஆண்டு கால சினிமா சாதனையையும் மனதில் கொண்டு, அவரின் பெயரையும் ஒரு சாலைக்கு வைக்கலாம் என்ற பரிசீலனையும் உள்ளதாம்...

இந்த அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 அறிவிப்பாக வெளிவரலாம் என்று நம்பத்தகுந்த வட்டார செய்திகள் கூறுகிறது...

என் பயம் என்னன்னா, இதே ரேஞ்சுல போனா, ஜே.கே.ரித்தீஷ் சாலை என்பது வரை வைக்க வேண்டுமே என்பதுதான்....

பாசகி said...

மெய்யாலுமே டெரர்தான்பா :)

R.Gopi said...

//பாசகி said...
மெய்யாலுமே டெரர்தான்பா :)//


வாங்க பாசகி...

சரிதான்...

vasu balaji said...

கலக்கல் டெர்ரர் கோபி:))

R.Gopi said...

//வானம்பாடிகள் said...
கலக்கல் டெர்ரர் கோபி:))//

---------------

வாங்க வானம்பாடிகள்...

வருகைக்கும், ரசித்து கருத்து அளித்தமைக்கும் நன்றி...

Anonymous said...

உண்மை நகைச்சுவையோட கலந்து தந்து இருக்கீங்க..

//அதான் தெரிமேடா... யாரும் குடுக்கலியேன்னு, அவிய்ங்களே அவிய்ங்களுக்கு குடுத்துக்கறாய்ங்க.. அதுவும் இல்லாம, அதெல்லாம் "தல"யோட நுண்ணரசியல்டா//

இது உண்மை தான் கோபி...

R.Gopi said...

//தமிழரசி said...
உண்மை நகைச்சுவையோட கலந்து தந்து இருக்கீங்க..

//அதான் தெரிமேடா... யாரும் குடுக்கலியேன்னு, அவிய்ங்களே அவிய்ங்களுக்கு குடுத்துக்கறாய்ங்க.. அதுவும் இல்லாம, அதெல்லாம் "தல"யோட நுண்ணரசியல்டா//

இது உண்மை தான் கோபி...//

-------

வாங்க தமிழரசி...

நகைச்சுவையுடன் இணைத்து சொன்ன கருத்தை ரசித்து, பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிங்கோ...

Eswari said...

படிக்க ரொம்ப கஷ்ட படுகிறேன். இந்த எனக்கு தமிழ் புரியமாட்டேன்கிறது.

R.Gopi said...

//Eswari said...
படிக்க ரொம்ப கஷ்ட படுகிறேன். இந்த எனக்கு தமிழ் புரியமாட்டேன்கிறது.//

---------

வாங்க‌ ஈஸ்வ‌ரி...

அட‌டா...என்னே த‌மிழுக்கு வந்த‌ சோத‌னை....!!?? ச‌ரி... மாத்த‌ற‌துக்கு முய‌ற்சி ப‌ண்றேன்...

கோமதி அரசு said...

//ஏண்டா மக்கு பயலே மங்கி... அவரு
ஆட்சில இருக்க சொல்லோ கூட அவருக்கு குடுத்துக்கலேன்னா,அப்புறம் வேற யாருடா அவ்ருக்கு தருவாய்ங்க?//

ஆம் கோபி, அவர்கள் முதுகை அவர்களே தட்டிக் கொள்ள வேண்டியது தான்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
//ஏண்டா மக்கு பயலே மங்கி... அவரு
ஆட்சில இருக்க சொல்லோ கூட அவருக்கு குடுத்துக்கலேன்னா,அப்புறம் வேற யாருடா அவ்ருக்கு தருவாய்ங்க?//

ஆம் கோபி, அவர்கள் முதுகை அவர்களே தட்டிக் கொள்ள வேண்டியது தான்.//

-----------

கரெக்டா சொன்னீங்க கோமதி மேடம்...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

R.Gopi said...

தமிழிஷில் வாக்களித்து இந்த பதிவை பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...


ldnkarthik
mounakavi
Rajeshh
jollyjegan
square
urvivek
mvetha
paamaran

Jaleela Kamal said...

கோபி நகைசுவைய அள்ளி தெளிச்சிட்டீங்க போங்க..

அதுவும் வடிவேலு ந்னா கேட்வா வேனும், சூப்பர்....

R.Gopi said...

//Jaleela said...
கோபி நகைசுவைய அள்ளி தெளிச்சிட்டீங்க போங்க..

அதுவும் வடிவேலு ந்னா கேட்வா வேனும், சூப்பர்....//

*********

வாங்க‌ ஜ‌லீலா மேடம்...

ரொம்ப‌ நாளாச்சு... தாங்க‌ளும், குடும்ப‌த்தாரும் ந‌ல‌மா??

வந்த‌மைக்கும், ப‌டித்து ர‌சித்து க‌ருத்து சொன்ன‌மைக்கும் ந‌ன்றி...

அதானே... வ‌டிவேல் காமெடியை பிடிக்காதோர் யாருமுண்டோ?

Jaleela Kamal said...

கோபி நேரமில்லை மகன் வந்து மறுபடி போயாச்சு.

சில வைரஸ் பிராப்ளம், ஆகையால் யார் பதிவுக்கும் அவ்வளவா வர முடியல.

R.Gopi said...

//Jaleela said...
கோபி நேரமில்லை மகன் வந்து மறுபடி போயாச்சு.

சில வைரஸ் பிராப்ளம், ஆகையால் யார் பதிவுக்கும் அவ்வளவா வர முடியல.//

***********

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்தால், நிறைய பதிவுகள் இருக்கு படிக்க...

மகன் வந்து போனதில் சந்தோஷம்... உங்களை போலவே..

வைரஸ் ப்ராப்ளம் மனுஷனையே விரட்டுது... நம்ம கம்ப்யூட்டர் எல்லாம் எந்த மூலைக்கு...

விரைவில் சரியாகி, மீண்டும் வர வேண்டும் என்பதே என் விருப்பம்...

நன்றி ஜலீலா மேடம்...

Jaleela Kamal said...

கோபி உங்களுக்கு தான் ஒவ்வொருத்தருக்கா போய் அவரவர் பிலாக்கில் பதிவு போட்டு வந்தேன், உங்கள் இடத்தில் பதிவு போட வரும் போது ரொம்ப எரர் தான் அங்கு பதில் போடல,


. என்ன எவ்வளவு சிரமம் எடுத்து பதிவு போடுறீங்க. கொஞ்சமா எழுதுவதே ரொம்ப சிரமாமா இருக்கு எனக்கு நீங்க ஓவ்வொரு பதிவும். விளக்கமா நல்ல எழுதுறீங்க.

அதுவும் எனக்கு ரொம்ப பிடித்த வடிவேலுகாமடி ம்ம்
வாங்க வந்து வாங்கிக்கங்க. உங்களுக்கே தான் அந்த அவார்டு

R.Gopi said...

//Jaleela said...
கோபி உங்களுக்கு தான் ஒவ்வொருத்தருக்கா போய் அவரவர் பிலாக்கில் பதிவு போட்டு வந்தேன், உங்கள் இடத்தில் பதிவு போட வரும் போது ரொம்ப எரர் தான் அங்கு பதில் போடல‌.

என்ன எவ்வளவு சிரமம் எடுத்து பதிவு போடுறீங்க. கொஞ்சமா எழுதுவதே ரொம்ப சிரமாமா இருக்கு எனக்கு நீங்க ஓவ்வொரு பதிவும். விளக்கமா நல்ல எழுதுறீங்க.

அதுவும் எனக்கு ரொம்ப பிடித்த வடிவேலுகாமடி ம்ம்
வாங்க வந்து வாங்கிக்கங்க. உங்களுக்கே தான் அந்த அவார்டு//

********

அப்ப‌டியா ச‌ங்க‌தி... என‌க்கு தானா அந்த‌ அவார்டு??? மிக்க‌ ந‌ன்றி ஜ‌லீலா மேட‌ம்...
பதிவை ரசித்து படித்து, கருத்து சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...