கேள்வியும் நானே பதிலும் நானே - 1

கேள்வி : நேற்றைய மற்றும் இன்றைய இசை

பதில் : நேற்றைய இசை மெல்லிசையும், தேன் வரிகளும் இணைந்து நந்தவனத்தில் நடந்த தென்றல்
இன்றைய இசை வல்லிசையும் தென்படாத வரிகளும் இணைந்து பாலைவனத்தில் நடக்கும் சுனாமி.

கேள்வி : இன்றைய இந்தியா பொருளாதாரம்

பதில் : நேற்றைய விலைவாசியை விட இன்று குறைவு என்று யாராவது கூறினால் அதைக்கேட்டு சந்தோஷப்படும் முதல் ஆளாக நான் இருப்பேன். ரேஷன் கடையில் கூட குறைவு என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு தான் தெரிந்தது, குறைந்தது விலை அல்ல, எடை என்று ..............

கேள்வி : எந்தப்பால் பிடிக்கும் ??

பதில் : குடிப்பதற்கு பசுவின் பாலும், படிப்பதற்கு திருக்குறளின் காமத்துப்பாலும்

கேள்வி : சாதனையாக நீங்கள் நினைப்பது என்ன ?

பதில் : இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதை

கேள்வி : வேதனை என்றால் ??

பதில் : பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்படும்போது ஏற்படுவது ....

கேள்வி : சோதனை என்றால் ??

பதில் : கேட்டால் பதில் கிடைக்கும் என்பதற்காக என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பது ...........

கேள்வி : போதனை என்பது ??

பதில் : நாம் அடுத்தவருக்கு மட்டும் கொடுப்பது

கேள்வி : தானம் என்பது !!!

பதில் : வாங்குவதில் தான் தனி சுகம்

கேள்வி : லஞ்சம் என்பது ??

பதில் : அப்படி என்று ஒரு வார்த்தை தமிழில் உள்ளதா ??

கேள்வி : சரி, கையூட்டு என்பது ??

பதில் : தன் மகவுக்கு, தாய் தன் கையால் சோறு ஊட்டுவது

கேள்வி : ஆசை என்பது ??

பதில் : அது அளவற்றது .....

கேள்வி : உங்களின் எல்லை !!!

பதில் : அது என்னிடம் இல்லை

கேள்வி : ஒரு தத்துவம் !!!

பதில் : மீசை வைத்தவன் எல்லாம் வீரன் இல்லை ....... ஆசை வைக்காதவன் எவனும் மனிதன் இல்லை ......

கேள்வி : பூ மற்றும் பூவையர் !!

பதில் : செடி கொடியில் பூப்பது, மஞ்சத்தில் மலர்வது

கேள்வி : பட்டம், பதவி, புகழ், செல்வம் !!!

பதில் : படிக்காமலே எனக்கு கிடைத்தது, தேடாமலே என்னை அடைந்தது, தானாகவே எனக்கு கிடைத்தது, தேடி வந்து சேர்ந்தது

(தொடரும்)

1 comment:

Anonymous said...

wow, excellent, when i read this, i recollect abt sivaji & nagesh - question & answer session. good work, keep it up

GR-Chennai