இன்றைய செய்திகள்

இன்றைய செய்தி கோர்வை - நன்றி அனைத்து ஊடகங்கள்

ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து அப்பாவி தமிழர்களை காப்பாற்றுவது பற்றி நடவடிக்கை எடுக்க ஐ.நா.தூதர் இலங்கை விரைகிறார்.
*********
இலங்கையில் அரசும், விடுதலை புலிகளும் போரை நிறுத்தி விட்டு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
**********
அமெரிக்காதான் முஸ்லிம்களின் முதல் எதிரி - அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி.
**********
ஸ்பெயின் நாட்டில் அல் கொய்தாவுடன் தொடர்பு உடைய நான்கு இந்தியர்கள் கைது.
*********
சூரிய கிரகத்திற்கு வெளியே புதிய கிரகம் (ராஜேந்தர், விஜயகாந்த் அல்ல) - ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியை சேர்ந்த மால்கம் பிரிட்லன்ட் தெரிவித்தார்.
**********
பாகிஸ்தானில் முப்பது போலீஸ்காரர்களை தாலிபான்கள் கடத்தி சென்றனர்.
பாபர் மசூதி இடிப்புக்கு மன்னிப்பு கேட்கிறேன் - உத்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்.
************
நவீன் சாவ்லாவை நீக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு - எல்.கே.அத்வானி.
***********
பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி டெல்லியில் தேர்தல் கமிஷனர் கோபால்சாமியை சந்தித்து தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களுக்கு பொது சின்னத்தை ஒதுக்கும்படி கேட்ட போது, அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படும் என்று கோபால்சாமி தெரிவித்தார். தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று சிரஞ்சீவி தெரிவித்தார்.
*********
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்னும் நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
**********
உ.பி.யில் சிறுமி சித்திரவதை. போலீஸார் கோர்ட்டில் சரணடைந்தனர்.
**********
தமிழகத்தில் போது வேலை நிறுத்தம். பஸ், ரயில் வழக்கம் போல ஓடின. ஒரு சில இடங்களில் வன்முறை. சில இடங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடல். திருத்துறைபூண்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.உலகநாதன் உட்பட 24 பேர் கைது.
************
தமிழ் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் அறிவிப்பு.
***********
சென்னையில் நடிகர் வடிவேலு மேனேஜர் வேலுச்சாமி (வயது 50) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நடிகர் வடிவேலுவின் கால்ஷீட் மற்றும் வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார்.
***********
மத்திய ஜவுளித்துறை இணை மந்திரி ஈ.வி.கோ.எஸ்.இளங்கோவன்-வரலட்சுமி ஆகியோர் மகன் சஞ்சய் சம்பத்துக்கும் ராணிப்பேட்டை தொழிலதிபர் ஜி.ராதாகிருஷ்ணன்-ஜெகதா தம்பதியரின் புதல்வி தீபலக்ஷ்மிக்கும் சென்னையில் ௧-ந் தேதி திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண அரங்கில் நடைபெற்றது.
***********
தமிழின கொலைகளை மத்திய அரசு தடுக்க தவறினால், பாராளுமன்ற தேர்தலை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை.
**********
இந்திய-இலங்கை இடையே 4-வது ஒரு நாள் பகலிரவு போட்டி - கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று விட்ட இந்தியா, இதுவரை ஆடுவதற்கு வாய்ப்பு பெறாத வீரர்களை களமிறக்க உள்ளதாக கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
************
4 நாடுகள் ஹாக்கி - ஹாலந்துடன் இந்தியா மீண்டும் டிரா.
***********
பொதுவான இடத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
************
ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் கோப்பையை இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் இணைந்து வென்ற சானியா மிர்சாவை ஆந்திர முதல் மந்திரி டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி புதன்கிழமை ஹைதராபாத்தில் கௌரவித்தார்.

No comments: