இன்றைய செய்திகள் - 07.02.09

இலங்கை தமிழர் பிரச்சனை. டெல்லியில் இருந்தபடி, ராஜபக்சேயுடன் ஐ.நா.பொதுச்செயலாளர் டெலிபோனில் பேச்சு. அப்பாவி தமிழர்களின் நலம் பற்றி விசாரித்தார்.
*************
பாகிஸ்தானில் 52 தீவிரவாதிகள் பலி. இராணுவம் அதிரடி தாக்குதல்.
**************
இந்திய நிருபர்கள் பாகிஸ்தானில் தாக்கப்பட்டனர்.
***************
இலங்கை பிரச்சனையை இராணுவம் கொண்டு தீர்க்க முடியாது. அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்படுவதை இந்தியா தலையிட்டு உடனடியாக தடுக்க வேண்டும். தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜனதா வலியுறுத்தல்.
***************
டெல்லி ஆஸ்பத்தியில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு செயற்கை முறையில் சுவாசம். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்று டாக்டர்கள் தகவல்.
****************
வயலார் ரவி உட்பட 5 பேர் போட்டியின்றி டெல்லி மேல் சபைக்கு தேர்வு.
****************
இலங்கை தமிழர்களை பாதுகாக்க அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றுபடுவோம் என்று கலைஞர் கருணாநிதி அழைப்பு.
****************
தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு / சவரனுக்கு ரூ.104 கூடி ரூ.10,536-க்கு விற்பனை ஆனது.
****************
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைப்பு.
*****************
முதுகுவலி அதிகமானதால் கலைஞர் கருணாநிதிக்கு, இன்று வெளிநாட்டு டாக்டர் சிகிச்சை அளிக்கிறார்.
*****************
எல்லோரும் இணைந்து போராடும்போது ஆட்சிக்கு ஆபத்து என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்று கலைஞர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் பதில்.
******************
முன்னணியில் உள்ள பிரபல கதாநாயகனை வைத்து மீண்டும் நம் நாடு படத்தை தயாரிக்க ஆசை என்று நாகிரெட்டியின் மகன் வெங்கடராம ரெட்டி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் தனுஷ் நடித்த பொல்லாதவன் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
*******************
ஐ,.பி.எல்.கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் பிளிண்டாப் தலா ரூ.7 கோடிக்கு ஏலம் (இந்தியா ஏழை நாடுன்னு யார் சொன்னது ??).
******************
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் நியூஜிலாந்து அபார வெற்றி. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின் தர வரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
******************
4 நாடுகள் இடையிலான பஞ்சாப் கோப்பைக்கான ஹாக்கி தொடர் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் நேற்று இந்திய உலக சாம்பியன் ஜெர்மனியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் தனது முதல் தோல்வியை கண்டது.
*******************

No comments: