இன்றைய செய்திகள் - 22.02.09

கொழும்பில் விமான தாக்குதல் வான் புலிகளால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று விடுதலைப்புலிகள் அறிவிப்பு.
***************
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்.வெடிகுண்டு கார் தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பலி.
***************
"ஸ்லம்டாக் மில்லியனர்" படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு ஆஸ்கார் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
**************
ராணுவமும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
*************
சென்னை ஐகோர்ட் சம்பவம் மிக மிக துரதிர்ஷ்டமானது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து.
***************
இலங்கை பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றச்சாட்டு.
***************
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க.சார்பில் பிரம்மாண்டமான இளைஞர் சங்கிலி போராட்டம். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென தீக்குளித்தார்.
******************
தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கோர்ட்டுகளும், செவ்வாய்கிழமை வரை மூடப்பட்டு இருக்கும் - ஐகோர்ட்.
*****************
நதிநீர் பங்கீட்டு பிரச்சனை உள்ள தமிழ்நாட்டில், தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்தான் நிரந்தர தீர்வாக அமையும் - கருணாநிதி.
****************
சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் - கருணாநிதி உத்தரவு.
****************
வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிக்கை.
****************
ஐகோர்ட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு. கதவுகள் பூட்டப்பட்டதால் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
****************
தங்கம் பவுனுக்கு ரூ.64/- உயர்வு. ஒரு கிராம் ரூ.1,457/-க்கு விற்பனை.
***************
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் - போலீஸார் மோதல் சம்பவம். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் - கருணாநிதி உறுதி.
****************
கலைஞர் குழுமத்தின் சிரிப்பொலி சேனல் - நடிகர் கமலஹாசன் துவங்கி வைத்தார்.
*************
ஐகோர்ட்டு வாசலில் "ஜீப்" எரிக்கப்பட்ட சம்பவம். 100 வக்கீல்கள் மீது மீண்டும் ஒரு வழக்கு.
*************
டைரக்டர் சீமான் புதுச்சேரி ஜெயிலில் அடைப்பு. டைரக்டர் மணிவண்ணன் அவரை சந்தித்தார்.
***************
சென்னையை சொகுசாக சுற்றிப்பார்க்க 4 பஸ்கள் விரைவில் அறிமுகம். தமிழக அரசு அறிவிப்பு.
*************
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - முதல் நாளில் 406 ரன்கள் குவித்தது இலங்கை. ஜெயவர்த்தனே, சமரவீரா அபார சதம்.
**************
இந்தியாவுக்கு எதிரான 20/20 போட்டி. நியுசிலாந்து அணி அறிவிப்பு.
**************
முதலாவது ஹாக்கி டெஸ்ட் - இந்திய - நியுசிலாந்து ஆட்டம் டிரா.
*************
மும்பையில் நவம்பர் 26-ம்தேதி பயங்கரவாதிகள் நடத்திய பேரழிவு தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை இந்திய போலீசாரிடம் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அளித்துள்ளது.
************
அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட நான்கு இந்தியர்களுக்கு நியுஜெர்சி பெடரல் கோர்ட்டில் நடந்த வழக்கில், ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு கோடியே 12 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
**************

No comments: