பதில் இல்லா கேள்விகள் :

இலங்கை தமிழர் பிரச்சினை - கல்லூரிகள் காலவரையற்ற மூடல்

படிக்கும் மாணவ, மாணவர்களின் எதிர்காலம் பற்றிய இன்றைய தமிழ் பற்றாளர்கள், ஆட்சியாளர்களின் நிலை என்ன?? அரசாங்கம் இலங்கை பிரச்சினையை சரியாக கையாள தெரியாமல், திருமா, ராமதாஸ், கொளத்தூர் மணி, வீரமணி, நெடுமாறன், சீமான், அமீர் உள்ளிட்டோரின் மிரட்டலுக்கும், அதட்டலுக்கும் பயந்து இதுபோன்றதொரு நிலையை எடுத்துள்ளதா?

திருமா உண்ணாவிரதம் :

யாருடைய தூண்டுதல் பேரிலும் நடக்கும் எந்த அநியாயத்துக்கும், தூண்டியவர் பொறுப்பாவார் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பின் படி, திருமா உண்ணாவிரதம் இருந்த போது, நடந்த வன்முறை, அதன் விளைவாக எரிந்த பேருந்துகள், பொதுசொத்து நாசம் போன்றவற்றிற்கு திருமா பொறுப்பாவாரா?? கைது செய்யப்படுவாரா?? நஷ்ட ஈடு வழங்குவாரா??
காங்கிரசார் கூறுவது போல், விடுதலை புலிகளை ஆதரித்து பேசும், திருமா கைது நடக்குமா?? அரசு என்ன செய்ய போகிறது??

திருமங்கலம் கள்ள வோட்டு பிரச்சனை :

தேர்தல் நேரம் முடியும் கடைசி ஒரு மணி நேரத்தில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குப்பதிவு இனிவரும் தேர்தல்களிலும் தொடருமா?? அண்ணன் அழகிரியை எதிர்த்து யாரும் மதுரையில் அரசியல் செய்ய முடியாதா?? தேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளதா?? (திருமங்கலம் தொகுதி பீஹாரை மிஞ்சியது என்று தேர்தல் ஆணையரை சொல்ல வைத்த பெருமை அண்ணன் அழகிரிக்கு உண்டு).

தமிழ், தமிழ் :

இந்த மூன்றெழுத்தை வைத்து கொண்டு இன்னும் யார் யார் என்ன செய்ய போகிறார்களோ?? ஏற்கனவே திருமா, நெடுமாறன், மருத்துவர், வைகோ, வீரமணி, கலைஞர், கொளத்தூர் மணி, சீமான் போன்ற தீவிரர்கள் செய்யும் அநியாயமும், அட்டகாசமும் தாங்க முடிய வில்லை... எத்தனை நாள் கடை அடைப்போ, எத்தனை நாள் கல்லூரி அடைப்போ??

விடுகதையா இந்த வாழ்க்கை, விடை தருவார் யாரோ???

No comments: