பற்றி எரியாத உலகம் வேண்டும்



மேகங்கள் சூழ்ந்தால் மழை வரும் என்பது நியதி
ஆனால், இங்கு போர்மேகங்கள் சூழ்ந்துள்ளதே
இறைவா இது என்ன விதி?

நீ வான்மேகம் கொண்டு தேன்மழை பொழிந்தால் மட்டும் போதுமே
அது, விளைநிலங்களையும், எங்கள் வயிறையும் குளிர வைக்குமே

ஆனால், இங்கு குண்டுமழை பொழிகிறதே
அது வெறும் ரத்த வெள்ளத்தை மட்டுமே தருமே
அப்பாவி ஜனங்கள், பெண்டு பிள்ளைகளை அது அழிக்குமே

என்று தணியும் இந்த போர் தாகம், என்று முடியும் இந்த போர்க்கோலம்??

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு. கவிதையாய் சொன்னாலும் அடி வேரான பிரச்சினை மனதை கலக்கியது. தேசங்களின் தலைகள் எல்லாம் பொறுப்புணர்ந்து செயல் பட்டால் மட்டுமே இதை தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது