என் இனிய தமிழ் மக்களே. நேற்று நம் ஜல்லி கவி ஜெகத்ரட்சகன் கலைஞரை வாழ்த்தி எழுதிய ஒரு கவிதை நடை அறிக்கையை பாருங்கள். இதுபோல் ஒரு கவிதைநடை அறிக்கை உலகிலேயே முதன்முதலாக உங்கள் பார்வைக்கு.
*******************************
ஒரு மாதமாக எங்கள் இதயம் ஓரிருமுறை துடிக்கவும் தவறுகிறது! பதைப்பு அலை எங்களைப் பரிதவிக்க வைக்கிறது!
எழுந்து வந்து எங்களைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள்? தம்பி என்ற அழைப்பில் என்னிடம் தாயன்பை காட்டிய தத்துவமே!
வருந்துவதா - வாடுவதா!
மகரந்தப் புன்னகையால் மற்றவர்களை வாழவைத்து மன்னிக்கும் கருணையினால் மாற்றார்க்கும் வாழ்வளித்த நடமாடும் பகுத்தறிவு நலிவடைந்து வருந்துவதா! நல்லோர்கள் உள்ளமெல்லாம் வேதனையில் வாடுவதா!
இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பதே நீங்கள்தான், சங்கத் தமிழ் இன்று மருத்துவ மனையில்! தவிக்கும் என் உள்ளமோ உங்கள் நினைவில்!
தலையணையில் சாய்ந்தபடியே உன் தமிழ் ஆணைகள் தங்குதடையில்லாமல் அன்றாடம் ஆட்சியை நடத்துகின்றன. சூது மதியினர் சுரண்டல் வாழ்வைச் சொந்த வாழ்வாக்கிக் கொண்டவர்கள், அந்தி வந்தால் ஆறலை கள்வர்கள் ஆட்டம் போடுவார்கள்!
வயதில் என்ன போராட்டம்
இந்த நேரத்தில் இது என்ன தாங்க முடியாத இடி! நீ உண்ணாமல் இருந்தால் உலகம் தாங்காது! எந்த வயதில் என்ன போராட்டம்! இருக்கின்ற நாங்கள் உன்னால்தான் உண்ணுகிறோம்! ஊர் நலத்தை எண்ணுகிறோம். எல்லாம் நலமாகும்! எங்கள் பணி உரமாகும்.
மன்றாடி வேண்டுகிறோம். மாமன்னன் உண்ணும் கவளம்தான் உங்கள் உயிர்மூச்சைத் தளிர்க்க வைக்கும்! பொங்கு தமிழ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்! மருத்துவ மனை உன்னை மகிழ்வோடு அனுப்பும் நாள், எங்கள் மனவயல்களில் இன்பமழை பொழியும் நன்னாள்
***************
தல, இதெல்லாம் உங்களுக்கே ரெம்ப ஓவரா தெரியல. எங்களுக்கு தெரியுது, இதெல்லாம் டூ டூ மச்.
2 comments:
இவரோட காமெடி பெரியயயயயய காமெடி
சரியா சொன்னீங்க கிரி.
சொல்ற மாதிரி சொல்லிட்டு, ஒரு சீட்டு வாங்கிட்டாரு பாருங்களேன்.
Post a Comment