பல்வேறு ஊடகங்களின் மூலம் வெளிவந்த பல செய்திகளின் தொகுப்பே இங்கே நீங்கள் கீழே காணும் செய்தி கோர்வை. (நன்றி - அனைத்து ஊடகங்கள்)
***************************************************
டில்லியில் இரண்டாவது மெட்ரோ லைன் பாதையில் இன்று ரயில் போக்குவரத்து துவக்கப்படுகிறது. இதை டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் துவக்கி வைக்கிறார்.
********
சதி பண்ணுவது, பழி வாங்குவதும் எனக்கு தெரியாத கலை. அதற்கு ஒட்டு மொத்த குத்தகைக்காரர் அவர்தான் (கருணாநிதிதான்) என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாற்றினார்.
**********
இலங்கையில் அமைதி ஏற்பட வழி காண வேண்டும். மத்திய அரசுக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்.
*********
இலங்கை தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதை கருணாநிதி நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
**********
நெல்லை நதிநீர் இணைப்பு திட்ட துவக்க விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேண்டும் என நதிநீர் இணைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
***********
தி.மு.க. அ.தி.மு.க. இடம் பெறாத கூட்டணியுடன், தே.மு.தி.க கூட்டணி. - விஜயகாந்த் திட்டவட்டம்.
***********
சத்யம் ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பளம் தர அதன் நிர்வாகம் முடிவு.
***********
நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
***********
காசியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - தொழிலதிபர் மகாலிங்கம் ஏற்பாடு.
***********
ரயில், பஸ் இன்று வழக்கம் போல் ஓடும். போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லி யாரவது வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.
***********
அமெரிக்காவின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி க்ளிண்ட்டன் நேற்று பதவியேற்றார்.
***********
பிரிட்டனில் ஒரு வார சுற்று பயணம் மேற்கொண்ட சீன பிரதமர் வென் ஜியாபாவோ நேற்று கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் உரை நிகழ்த்தும் போது அவரின் மீது ஷூ வீசப்பட்டது. ஆனால், அது அவர் மீது படாமல் ஒரு மீட்டர் தூரத்தில் விழுந்தது. இந்த சம்பவத்திற்கு சீன நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
*************
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் ஒன்றை தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர். இதனால், நேட்டோ மற்றும் அமெரிக்க படையினருக்கு பாகிஸ்தானில் இருந்து உணவு எடுத்து செல்வது தடைபட்டுள்ளது.
***************
இந்திய இலங்கை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. யுவராஜ் மற்றும் சேவாக் (116 ரன்கள், 17 பௌண்டரிகள்) இருவரின் அதிரடி சதத்தால் இந்திய அபார வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக 117 ரன்கள் (97 பந்துகள், 17 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்சர்) விளாசிய யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
************
ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் நடிகை ஷில்பா ஷெட்டி 75 கோடி முதலீடு (இவங்களுக்கு ஏது இவ்வளவு பணம்??). ராஜஸ்தான் அணியின் 12 சதவீத பங்குகளை வாங்கினார்.
***********
பஞ்சாப் தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி தொடர் சண்டிகரில் நடந்து வருகிறது. இந்த 4 நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியுசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஹாலந்துடன் டிரா செய்தது. நேற்று ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியை ௨-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்திய அணியில் திர்கே மற்றும் பிரப்ஜோத் சிந்த் தலா ஒரு கோல் அடித்தனர்.
************************************************************
2 comments:
super..... super ..... super...........
all it needs is .. come to edakku madakku and spent 2 minutes. result you are updated on the recent happenings.
i thank and appreciate for this great work.
continue to help us out
நன்றி அனானி அவர்களே
வருகைக்கும், தங்களின் மேலான கருத்துக்கும்.
நன்றி, மீண்டும் வருக. உணர்வுகளை பகிர்க.
Post a Comment