புத்தாண்டாம் இனிய புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று
போனது போகட்டும் போனபடி
நாம் நினைப்பது நடக்கட்டும் நல்லபடி
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
கொடு என கேட்டால், தாய் பூமியோ வாரி கொடுக்கும்
நினைப்போம் நாமும் நல்லதே எந்நாளும்
கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு
ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம், நாம் இந்த நேரத்தில்
படைத்தவனின் அருளின்றி நாமெல்லாம் இங்கேது
இதை நாம் புரிந்து கொண்டால் கவலைகள் நமக்கேது
மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்
மனிதகுலம் காக்க, படைத்தவனின் பாதம் பணிவோம்
மரணம் வெல்வோம், மனிதனாய் வாழ்வோம்
நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம் - ஏனெனில்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தத்தை நம் மனமும் கொண்டாடும்
ஆயுதங்களை புறக்கணிப்போம் - நம்மை
அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்
கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் நீயும் நினை
நம்மை வெற்றிகள் அணுக, இல்லை ஏதும் அணை
தானத்தில் உள்ளதோ பலதானம்
அவற்றில் சில - அன்னதானம், கண்தானம், வித்யாதானம்
ஆயினும் - உலகின் தேவை இக்கணம் - சமாதானம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
5 comments:
பொருப்பான வாழ்த்து,
எஙகள் இதயம் கனின்த வாழ்ததுக்கள்
புத்தாண்டு வாழுத்துக்கள் !
என் அருமை நண்பா,
என்ன ஒரு சமூக சிந்தனை உங்களுக்கு !
நீங்கள் டகால்டி கவிதை எழுதினீர் , ரஜினிக்கு பாமாலையை என்னொரு கவிதை எழுதினீர். இப்போது சமுகத்தில் இருக்கும் அனைவருக்கும் நல்ல ஒரு கருத்து சிந்தனையை தூண்டுகிற விதத்தில் எழுதி இருப்பது , நீங்கள் சமுகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையை காட்டுகிறது.
இந்த அக்கறை ஒவ்வொரு இந்தியனுக்கும் வர வேண்டும் என்பதே என் அவா !
அன்புடன்,
அபு - துபாய்.
Nandri
1. Anony
2. Abu, Dubai
//விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
//
என்னவொரு அற்புத வரிகள்!
கலக்கிட்டீங்க நண்பா!
(வருஷ கடைசியில போடறேன்னு நினைக்காதீங்க,
புது வருஷத்துக்கு (2010) அட்வான்சா போடறேன்.
இந்த கவிதை எந்த வருஷத்துக்கும் பொருந்தும்தானே!)
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
//
என்னவொரு அற்புத வரிகள்!
கலக்கிட்டீங்க நண்பா!
(வருஷ கடைசியில போடறேன்னு நினைக்காதீங்க,
புது வருஷத்துக்கு (2010) அட்வான்சா போடறேன்.
இந்த கவிதை எந்த வருஷத்துக்கும் பொருந்தும்தானே!)//
*********
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்து பின்னூட்டம் இட்ட தோழமைக்கு என் நன்றி...
Post a Comment