பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் அனைவருக்கும் மனம்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போடப்பட்ட நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி

அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பிரகாசம் காட்ட

அனைவரும் உரக்க கூவினோம் - பொங்கலோ பொங்கல்

சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
இறைவனை வேண்டுவோம்

3 comments:

Abu said...

நல்ல கவிதை ! என் மனமார்ந்த பாராட்டுக்கள் !

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

அபு - துபாய்

JoeBasker said...

நல்ல தமிழில் கவி ரசம் பொங்க பொங்கல் வாழ்த்துக்கள். கருத்துகளில் அறிவு முதிர்ச்சி. அருமையான முயற்சி. இவ்வாண்டும் வாழ்க உங்கள் தமிழ் பணி. வளர்க உங்கள் வாசகர் அணி.

Anonymous said...

Mr.Abu
Mr.Joebasker

Thanks for your visit and wishes.