மல்லிகை

இந்த பூவுலகில் பூக்கள் பல இருந்தும், மல்லிகைக்கு தான் தனி சிறப்பு.

நம் திரைப்பாடல்களை எடுத்துக்கொண்டால், கவிஞர்கள் மலர்களைப் பற்றி நிறைய பாடல்கள் எழுதி இருப்பார்கள். அதில், மற்ற மலர்களை விட மல்லிகையின் சிறப்பே மேலோங்கி நிற்கும். உதாரணமாக :

மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே
மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி
மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை - அண்ணன் ஒரு கோவில்
மல்லிகையே மல்லிகையே - நினைத்தேன் வந்தாய்
மல்லிகைப்பூவே மல்லிகைபூவே - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
மல்லி மல்லி இது ஜாதி மல்லி

கவிஞர் கண்ணதாசன் கூட காலங்களில் அவள் வசந்தம் பாடலில், மலர்களிலே அவள் மல்லிகை என்று எழுதி இருப்பார்.

பின்னாளில், கவிஞர் வைரமுத்து கூட மண்வாசனை படப்பாடலில் - பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்று எழுதி இருப்பார்.

இன்னொன்றும் இங்கே சொல்ல வேண்டும். மல்லிகையை வைத்து எழுதப்பட்ட பாடல்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

நீங்களும், உங்களுக்கு தெரிந்த மல்லிகை பாடல்கள் இருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடலாமே !!!

4 comments:

Abu said...

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் .....படம் : ரிக்ஸாமாமா
மல்லிகையே மல்லிகையே தூதாக போ....படம் : பெரிய வீட்டு பண்ணக்காரன்
மல்லிகை மொட்டு மனசை தொட்டு .......படம் : சக்திவேல்
காத்திருந்த மல்லி மல்லி ...பூத்திருக்க சொல்லி சொல்லி - படம் : மல்லு வெட்டி மைனர் ..

ஜாதி மல்லி பூட்சரமே .....சங்க தமிழ் பாட்சரமே .... படம் : அழகன் .

அன்புடன்,
அபு - துபாய்

R.Gopi said...

Abu

Thanks for your addtion to the list

Anonymous said...

மல்லிகை மணத்தின் மயக்கத்திலே -

மல்லி புகழ் மதுரைக்கார பண்டியனைப்போலவே நீங்களும் ஒரு தலை பட்சமாக தீர்ப்பு சொல்லி விட்டீர்கள்....

உங்களால் -

நந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்டி ...

பிச்சிப்பூ, குறிஞ்சி, மாம்பூ, ஆவாரம்பூ என எல்லா மலர்களும் ஆளுக்கொரு பாடல் பட்டியலோடு போட்டியில் குதித்துள்ளன.

மலர்களின் ராணி ரோஜா மௌனமாக பரிகசிக்கிறது உங்களைப்பார்த்து -

ஒரே ஒரு பழுப்பு வெள்ளை நிறத்தில் பூக்கும் குட்டி மல்லிகை ரசிகரே !

பல வண்ணங்களில் பெரிதாகப்பூக்கும் என்னை மறந்ததேன் ?

கவிஞர்களின் மனங்களில் கொடி கட்டிப்பறக்கும் எனது வெற்றி பாடல்களில் சில இதோ :

* ரோஜா மலரே ராஜ குமரி

* ரோஜாவை தாலாட்டும் தென்றல்

* காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

* ராசாவே உன்னை நம்பி ஒரு ரோசாப்பூ

* யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ

* ரோஜா ரோஜா (காதலர் தினம்)

* ... துடிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

இந்த பட்டியல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?

ஹ ஹா ஹ ஹா சபாஷ் ! சரியான போட்டி !!

Anonymous said...

ரோஜாவின் மூன்றாவது ரசிகர் (முதலில் நேரு, பிறகு ஆர்.கே.செல்வமணி, இப்போது மூன்றாவதாக நீங்கள்) அருமை அண்ணன் ஜோ.பாஸ்கர் அவர்களே வருக வருக என்று தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

எனக்கும் ரோஜாவில் மலர்ந்த ஒரு பாடல் பிடிக்கும்

ரோஜாப்பூ ஆடி வந்தது, ராஜாவை தேடி வந்தது (அக்னி நட்சத்திரம்)

தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.