என்ன பொருத்தம், ஆஹா என்ன பொருத்தம்



மனதில் உறுதி வேண்டும் - சுஹாசினி நடித்து இயக்குனர் சிகரம் கே.பி டைரக்ட் செய்த படம். அருமையான படம். இந்த படத்திற்கு அருமையான இசை இசைஞானி இளையராஜா. சின்ன கலைவாணர் (??) விவேக் அறிமுகமான படம். ஒரு பாடலில், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மூவரும் இணைந்து நடித்து இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் அந்த பாடலில் தன்னுடன் நடித்த மற்ற இரு நடிகர்களையும் தன் ஸ்டைலால் ஊதி தள்ளி இருப்பார்.

மாப்பிள்ளை - சூப்பர் ஸ்டார் நடித்த படம். படத்தின் இயக்குனர் காலஞ்சென்ற ராஜசேகர். இந்த படத்திற்கும் அருமையான இசை, இசைஞானி இளையராஜா. ரஜினி மிகவும் ஸ்டைலிஷாக இருப்பார் இந்த படத்தில். இசையும் அதிரடியாக இருந்தது. ரஜினியின் திரையுலக வரலாற்றில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது (அந்நாளில்)......... அதன் பிறகுதான் அனைவரையும் வசூலில் மிஞ்சும் பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கிறார். வெற்றிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேற்கூறிய இரண்டு படங்களுக்கும் என்ன சம்பந்தம், இசை இளையராஜா என்பதை தவிர. இரண்டும் 1989 வருடம் ரிலீஸ் ஆனது. சரி, வேறு என்ன ஒற்றுமை.
மனதில் உறுதி வேண்டும் படத்தில் வரும் "கண்ணா வருவாயா" என்ற டூயட் பாடலும், மாப்பிள்ளை படத்தில் வரும் "என்னதான் சுகமோ" என்ற டூயட் பாடலும் ஒன்றே. அட்டகாசமான ஒற்றுமை, இந்த இரு பாடல்களுக்கும்.

கேட்டு பாருங்கள், தெரியும். இந்த அளவு வேறு எந்த இரு பாடல்களும் ஒரே மாதிரியாக இருந்ததாக நினைவில்லை. சிறிதளவு ஒற்றுமை இருக்கலாம், ஆனால் இந்த அளவு இருந்ததா??

5 comments:

Anonymous said...

ஆஹா நல்ல பதிவு. சங்கீதத்தில் அத்தனை விவரம் இல்லை என்றாலும் இந்த பாமரனுக்கு இரண்டும் ஒன்று போலே தோன்றுகிறது.

மேலும் உயர்ந்த உள்ளம் திரைபடத்தில் வரும் 'காலை தென்றல் பாடி வரும்' என்பதும் இது போலே உள்ளது

. said...

ஆஹா நல்ல பதிவு. சங்கீதத்தில் அத்தனை விவரம் இல்லை என்றாலும் இந்த பாமரனுக்கு இரண்டும் ஒன்று போலே தோன்றுகிறது.

மேலும் உயர்ந்த உள்ளம் திரைபடத்தில் வரும் 'காலை தென்றல் பாடி வரும்' என்பதும் இது போலே உள்ளது

R.Gopi said...

வருகைக்கு நன்றி அனானி, படுக்காளி.

நான் கூறிய இருபாடல்களிலும் வரும் ஒற்றுமை சாயல் என்னை வியக்க வைத்தது.

நீங்களும் நான் குறிப்பிட்டுள்ள இந்த இரு பாடல்களையும் கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

காலை தென்றல் பாடல் கூட, இந்த இரு பாடல்களின் சாயலில் இருந்தாலும் இருக்கும். ஆனால், மேற்கூறிய இரு பாடலும் ஒன்றே என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்.

இந்த விளையாட்டில் நாம் எஸ்.ஏ.ராஜ்குமாரை சேர்க்கவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.

Erode Nagaraj... said...

adhu patdeep endra raagam... evvalavu muyarchiththaalum, andhaa raagaththil mutrilum vEru vaNNam koduppadhu migundha sramam

R.Gopi said...

//Erode Nagaraj... said...
adhu patdeep endra raagam... evvalavu muyarchiththaalum, andhaa raagaththil mutrilum vEru vaNNam koduppadhu migundha sramam//

*******

Oh ho appadiyaa..... Vilakkathukku nandri Erode Nagaraj....