அரசியல் ஆடுகளம்
ஆனதிங்கு போர்க்களம்
கடலென ஓடும் கள்ளப்பணம்
அவை அனைத்தும் நம் வரிப்பணம்
ஏழைகளின் வயிற்றில் அடித்து சேர்த்தது
மொத்தமும் டாஸ்மாக் கடைக்கு போய் சேர்ந்தது.
எங்கெங்கு காணினும், பார்க்கும் இடமெங்கும் வண்ண வண்ண போஸ்டர்கள்
இருக்கும் ஏழை பாழைகளுக்கு என்ன செய்தார்கள் இந்த போஸ்டர் மாஸ்டர்கள்?
களவாணி கயவர்கள், பல கரைவேட்டிகளில்
பட்டி தொட்டியெங்கும், பலபல தட்டிகளில்
நேற்றுவரை வசைபாடிய எல்லோரின் வாய்கள்
நம்மை பார்த்து, கூசாமல் கூப்புது கைகள்
எதிரே நின்றவனை ஏசி ரூமில் இருந்து ஏசியவர்கள்
இன்று அதே ஏசி ரூமில் கூட்டணிக்கு பேசுவார்கள்
கையில் உருப்படியாய் இருக்கும் நம் ஓட்டை
துருப்பாய் வைத்து ஆடுவோம் வேட்டை
நம் கைகளில் இருக்கும் அந்த துருப்பு சீட்டை
வைத்து, பிடிப்போம் கள்ளர்களின் கழுத்தை
சிறிது அசந்தாலும், நம் ஓட்டு நம்மிடம் இல்லை
தெளிவாய் இல்லையேல், நாமே நம்மிடம் இல்லை.
பிடிப்பார்கள் கள்ளர்கள் நம்ம ஊரு கோட்டை
பிடித்ததும் போடுவார்கள் நாட்டை - ஆட்டை!!
மக்களே பாருங்கள் களவாணிகளின் கூட்டணி
பார்த்ததும் சொல்லுங்கள், மவனே மாட்டுனடா நீ ............
No comments:
Post a Comment