தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தீபாவளி பண்டிகையை விட சந்தோஷம் பொங்கி ஓடும். பல கவிஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு அவரவர் இஷ்ட தெய்வங்களை (அதாங்க தலைவர்களை) புகழ்ந்து கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.
ஏற்கனவே முத்தமிழ் வித்தகர், கவிஞர் வாலி, ஜல்லிக்கவி ஜெகத்ரட்சகன் ஆகியோர் "தல"யை பாராட்டி பல கவிதைகளை எழுதி உள்ளனர். மேலும், பல புகழ்ச்சி கவிதைகள் அரங்கேற உள்ளது.
அவர்களோடு சேர்ந்து நாமும் பயணித்தால், இது போன்றதொரு கவிதையை காணும் வாய்ப்பை பெறலாம்.
******************
தலைவா உன் வருகை,
கண்டதும் கூப்புவேன் என் இருகை
தலைவா நீ பாப்புலர் பிகர்
கண்டதும் ஏறுது என் ஷுகர்
கண்டதும் ஏறுது என் ஷுகர்
நீ உண்பாய் ஒரு கவளம்
அதனால் சுத்துது இவ்வுலகம்
தங்கத்தமிழே, தமிழ் நீரின் குமிழே
குமிழின் சிமிழே, நீ பேசுவது செந்தமிழே
நடமாடும் தொல்காப்பியமே,
நாங்கள் சொல்லும் நல்வாக்கியமே
அதிகாலை முன்பனியே
இன்று கிழமை சனியே
நீ வந்தாய் தனியே
கூட்டம் கூடும் இனியே
உன் மயக்கும் சிரிப்பு
அதற்கு உண்டு தனி சிறப்பு
நடமாடும் ஓவியமே
நற்றமிழின் காவியமே
நீ முன்னே வந்து நில்
உன்னை வணங்கும் பார்த்திபனின் வில்
உன் ஒரு சொல்லே
தருமே பல பொருளே
தமிழ் அருவி,
இன்று மருவி
ஆனது உன் புரவி
வில்லெடுத்து போர் தொடுத்து வெல்லாமல்
உன் ஒரு சொல்லெடுத்து அகிலத்தை வென்றிடு
ஆணையிடு காத்திருக்கிறோம் ஆட்சியை தர
வாழ்த்துகிறோம் இந்த தேர்தலில் நீ வெற்றி பெற
***********************
இதை போன்ற ஜல்லி கவிதைகளை தவிர, அங்கே, இங்கே என்று உலகின் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் / ஒளிந்திருக்கும் இவர்கள் வெளியே வருவர். தங்கள் சேவையை செய்வர். யார் அந்த மாமேதைகள். நீங்களே பாருங்களேன், பெயர்களை. பின் தெரியும் யார் இவர்கள் என்று :
கொண்டித்தோப்பு கஜா
புளியந்தோப்பு கெடா குமார்
பங்கிலி கிருகன்
கரிவரதன்
கில்பர்ட் தனசேகரன் (சுருக்கமாக ஜி.டி.)
ஆழ்வார்பேட்டை அருமைநாயகம் (எங்கேயோ வெடித்து எங்கேயோ தெறிப்பார்)
காசிமேடு ஆதி
முட்டை (ஆசிட் முட்டை அடிப்பதில் வல்லவர்)
வெள்ளை ரவி (பயங்கர கறுப்பாக இருப்பார், அதனால் தான் இந்த பெயர்)
வெல்டிங் குமார்
பங்க் குமார் (பெட்ரோல் பங்க் ஓனர் அல்ல, பெட்ரோல் பங்க்கை கொள்ளை அடிப்பவர்)
காடுவெட்டி குரு
அருவா ஆறுமுகம்
அருவா ஆறுமுகம்
கவிதைகள் அரங்கேறும், கல்வீச்சு, சோடா பாட்டில் வீச்சு என்று பல காட்சிகள் வழிமொழியும். பணம் ஆற்று நீரை விட அதிகமாக வெளிவரும்.
மொத்தத்தில் நாடு நாடாக இருக்காது.
மொத்தத்தில் நாடு நாடாக இருக்காது.
வரும் நாட்களில் என்னென்ன கூத்துக்களும் நாடகங்களும் அரங்கேறுகிறது என்று பார்ப்போம்.
(மொத்தத்தில் வாழ்க ஜனநாயகம், வெல்க பணநாயகம்)
"தல"யை நம்பினோர் தவிக்கவிடப்படார் )
2 comments:
இயா இடக்கு மடக்கு
வேதனைக்குரிய ஒரு செய்தியை எப்படி சிரிக்க வைத்தீர். அரசியல் வாதிகளின் நிஜ முகம், ஜனநாயகத்தின் இன்றைய நிலை எனும் அணு குண்டை கவிதை நடையில் நகை சுவை வெடி வெடித்தீரே.
நீங்கள் அங்கு வெடித்து
இங்கு நாங்கள் படித்து சிரிக்கிறோம்
தொடரட்டும் இந்த வெடி
எனக்கு ஒரு டவுட்
நீங்க தி மு கா வா
ஏன்னா தலை போட்டோ எல்லாம் நச் நச்சுனு வருதே
Anony
Thanks for your visit and comment.
What to do?/
THUNBAM VARUM VELAIYIL SIRINGA
Post a Comment