மரம் வளர்ப்போம், செடி வளர்ப்போம் தந்தானே தானா
மழை வருமே மழை வருமே தில்லாலே லேலோ
மாமழையே நீ வா வா தந்தானே தானா
நீ வந்தா மண்ணு குளிரும் தில்லாலே லேலோ
பாக்கும் எடம் எல்லாமே தந்தானே தானா
பசுமையாக இருக்குமுங்க தில்லாலே லேலோ
மழை நீரை சேர்த்து வைப்போம் தந்தானே தானா
மண்ணில் வளமை சேர்த்திடுவோம் தில்லாலே லேலோ
எல்லாருக்கும் உதவி செய்வோம் தந்தானே தானா
நல்லாருக்கும் நம்ம வாழ்க்கை தில்லாலே லேலோ
புள்ளைங்கள படிக்க வைப்போம் தந்தானே தானா
அந்த படிப்பறிவும் நாட்ட வளர்க்கும் தில்லாலே லேலோ
படிக்காத நாட்டுக்குள்ள தந்தானே தானா
பகுத்தறிவு கொரஞ்சிருக்கும் தில்லாலே லேலோ
படிச்சுப்புட்டு சும்மா இருந்தா தந்தானே தானா
சோத்துக்கு நீ என்ன செய்வ, தில்லாலே லேலோ
நீ படிச்ச படிப்புக்குத்தான் தந்தானே தானா
ஒரு வேல கெடைக்கும் தேடிப்பாரு தில்லாலே லேலோ
சிறுவயசு திருமணம் தான் தந்தானே தானா
வேண்டாமுன்னு சொல்லிடுவோம் தில்லாலே லேலோ
அத்துமீறும் அந்நியரத்தான் தந்தானே தானா
அடிச்சு நாம வெரட்டிடுவோம் தில்லாலே லேலோ
மின்சார தேவைகளை தந்தானே தானா
கவனமாக கொறச்சுக்குவோம் தில்லாலே லேலோ
இலவசமா ஏதும் தந்தா தந்தானே தானா
வேணாமின்னு சொல்லிடுவோம் தில்லாலே லேலோ
ஓட்டு எல்லாம் போட்டு புட்டு தந்தானே தானா
நல்லவங்கள தேர்ந்தெடுப்போம் தில்லாலே லேலோ
நல்லவங்கள தேர்ந்தெடுத்தா தந்தானே தானா
நல்லாட்சி நமக்கு கெடைக்கும் தில்லாலே லேலோ
புல்லுக்கட்ட தின்னும் மாட்ட தந்தானே தானா
ஜல்லிக்கட்டுல வதைக்காதீங்கோ தில்லாலே லேலோ
ஒன் வீரத்த நீ தெரிஞ்சுக்கணும்னா தந்தானே தானா
ஒரு புலியோட மோதிப்பாரு தில்லாலே லேலோ
குடிப்பழக்கம வேணாமுங்க தந்தானே தானா
நம்ம குடி முழுகி போயிடுங்க தில்லாலே லேலோ
உழைக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் தந்தானே தானா
ஒழுக்கம் நெறைய இருக்குமுங்க தில்லாலே லேலோ
அன்னாடம் பகல் பொழுதில் தந்தானே தானா
ஓயாமத்தான் உழைச்சிடனும் தில்லாலே லேலோ
ஒன் உழைப்பை நம்பி வாழ்ந்து பாரு தந்தானே தானா
இந்த ஊரு, ஒலகம் ஒன்ன மெச்சும் தில்லாலே லேலோ
உழைக்காத திரியறவங்கள தந்தானே தானா
சோறு கேட்டு அலைய வைப்போம் தில்லாலே லேலோ
அருமை தெரிஞ்சு உழைச்சாலே தந்தானே தானா
பெருமை வந்து சேந்துடுமே தில்லாலே லேலோ
குடும்பத்துல மகிழ்ச்சி வேணும் தந்தானே தானா
அதுக்கு குடும்பத்தாரை நேசிக்கணும் தில்லாலே லேலோ
இல்லாத ஏழைக்குத்தான் தந்தானே தானா
இருப்பதை நாம் கொடுத்திடுவோம் தில்லாலே லேலோ
வறுமை வேண்டாம், வறட்சி வேண்டாம் தந்தானே தானா
அதை விரட்டி அடிக்க ஒழச்சிடுவோம் தில்லாலே லேலோ
ஜாதி மதம் பாக்காதே தந்தானே தானா
மீதி எதுவும் தேறாதே தில்லாலே லேலோ
அமைதி வேண்டி அனைவருமே தந்தானே தானா
அல்லும் பகலும் பாடுபடுவோம் தில்லாலே லேலோ
எல்லாருமே நல்லா இருக்க தந்தானே தானா
அந்த ஆண்டவன வேண்டுவோம் தில்லாலே லேலோ
சொல்லி வச்ச நல்ல கருத்த தந்தானே தானா
மனசில் வச்சு வழிபடோணும் தில்லாலே லேலோ
கேட்டு புளிச்ச தத்துவம்தான் தந்தானே தானா
கேட்டுபுட்டா வாழ்க்கை இனிக்கும் தில்லாலே லேலோ
12 comments:
super-raga erukku thanthane thana
ennum niraya entha mathiri vendum
thillale lelo
Thanks Anony for your wish and i will keep writing more ........
in a very simple words, the poem stands elite. though it starts with rain, it goes to the level of country, culture and many other things. good food for thought. keep up the good work
yours
Rahim, Dubai
கிராமத்துச்சந்தம்...
பட்டிக்காட்டு மெட்டு..
ஆழமான கருத்துக்கள்...
அறிவுநிறை வாதங்கள்..
சாதாரண வார்த்தைகள் ..
அசாதாரண சிந்தனைகள் ...
தொடர்ந்து எழுதுங்கள் !!
Dear Mr.Joe Basker
Thanks for your regular visit, comments and appreciation.
புரட்சி தமிழரே,
பொங்கல் படைப்பு அற்புதம் !
அற்புதமான இந்த கவி எழுதிய உங்களை இனிமேல் " கவி கோபி " என்று அடை மொழி உடன்தான் கூப்பிட வேண்டும்,
நல்ல சிந்தனையுள்ள கவிதை ! என் மனமார்ந்த
பாராட்டுக்கள் !
அன்புடன்,
அபு - துபாய்.
Thanks Abu for your wish and encouragement
Sir, we are awaiting for your next post. requesting you to give us the new post
with love
charles
Dubai
Gopi pinreenga, superb
சூப்பர் கவிதைதானே தந்தானே தானா
லேட்டாதான் பார்த்திருக்கேன் தில்லாலே லேலோ
கலக்கல்தான் கோபிசார், தந்தானே தானா
பிடியுங்க வாழ்த்துகள், தில்லாலே லேலோ
//rdharma said...
Gopi pinreenga, superப்//
நன்றி தர்மாஜி...
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
சூப்பர் கவிதைதானே தந்தானே தானா
லேட்டாதான் பார்த்திருக்கேன் தில்லாலே லேலோ
கலக்கல்தான் கோபிசார், தந்தானே தானா
பிடியுங்க வாழ்த்துகள், தில்லாலே லேலோ//
********
பாராட்டுக்கு நன்றி சொல்றேன் தந்தானே தானா
மீண்டும் வருகை தர வேண்டும் தில்லாலே லேலோ
Post a Comment