அமைதியை தேடி காடு, காடாக போனார்கள் - அன்று
வளமையை தேடி நாடு, நாடாக போகிறோம் - இன்று
வேண்டிய பொருள்கள் முழு வீட்டை அடைக்க
வருவோர் போவோர் எல்லாம் தின்று தீர்க்க
அணையாமல் எரிந்தது, அனைத்து வீட்டு அடுப்பும் - அன்று
பொருள்கள் ஏதுமின்றி, வீடே வெறிச்சென்றிருக்க
வருவோர் போவோர் என யாருமே இல்லாதிருக்க
அடுப்பே எரிய வில்லை பல வாரமாய் - இன்று
கிடைத்ததில் மிஞ்சியது தானமாக - அன்று
ஏதாவது கிடைக்குமா தானமாக - ஏக்கத்தில் இன்று
நியாயமான வியாபாரத்தில் வாணிபம் செழித்தது - அன்று
கலப்பட வியாபாரத்தில் கள்ளத்தனம் சிரித்தது - இன்று
எடைக்கு மேலே சேர்த்து கொடுத்தார்கள் - அன்று
எடையே சிறிதளவு தான் கொடுக்கிறார்கள் - இன்று
மனதில் உண்மையுடன் வியாபாரம் - அன்று
மனம் முழுதும் பொய்மையுடன் வியாபாரிகள் - இன்று
வேண்டிய மழை தேவை மட்டும் - அன்று
வேண்டி கேட்டும் துளி மழை இல்லை - இன்று
கிடைத்ததைக்கொண்டு மகிழ்ச்சியில் குடும்பம் - அன்று
எவ்வளவு கிடைத்தும், குறை சொல்லும் குடும்பம் - இன்று
வேலை முடிந்து, களைத்து, சிறிது நேர கேளிக்கை - அன்று
வேலை ஏதுமின்றி, கேளிக்கையே வாழ்க்கையாய் - இன்று
நம் இன்றைய தேவை கடின உழைப்பு - இதை
நம் மனதில் நிறுத்தினால் நாளும் சிறப்பு
எப்போதும் நம் தேவை பெற்றோரின் ஆசி
இப்போது கிடைத்தால், நீதான் சுகவாசி
2 comments:
மிகச் சிறந்த கவிதையை எழுதி விட்டீர்கள் - அன்று
தாமாய்ப் படித்து ரசித்து பின்னூட்டமிட்டேன் - இன்று.
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மிகச் சிறந்த கவிதையை எழுதி விட்டீர்கள் - அன்று
தாமாய்ப் படித்து ரசித்து பின்னூட்டமிட்டேன் - இன்று.//
***********
பட்டையை கிளப்பும் பின்னூட்டம் இன்று
இதை நான் மறவேன் என்றும்....
Post a Comment