இன்றைய செய்திகள் - 17.02.09

மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள், வரிச்சலுகை இல்லை. அடித்தள மக்களின் வாழ்வில் தொடர்ந்து ஒளி ஏற்றும் பட்ஜெட் என கருணாநிதி பாராட்டு.
**********
ரூ.750 கோடி செலவில், நாலாவது கட்டமாக இலவச டி.வி.கொள்முதல் செய்யப்படுகிறது, மு.க.ஸ்டாலின் தகவல்.
***********
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை க.அன்பழகன் இன்று தாக்கல் செய்கிறார்.
***********
பொது வேலை நிறுத்தம் செய்வது அரசியல் கட்சிகளின் உரிமை, அதில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு.
***********
சீன என்ஜினியரை விடுவிப்பதற்காக 16 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு.
***********
இங்கிலாந்து-பிரான்ஸ் நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் மோதல்.
***********
சத்யம் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை போல் மத்திய பட்ஜெட் உள்ளது என்று பா.ஜனதா விமர்சனம்.
**********
ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு ஆபரேஷன். மும்பை ஆஸ்பத்திரியில் நடந்தது.
***********
வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.
************
தமிழக கடலோர பாதுகாப்பு மேலும் வலுப்பெறுகிறது. இந்திய கடற்படைக்கு மேலும் 2 அதிநவீன போர்க்கப்பல்கள். சென்னையில் கவர்னர் அறிமுகம் செய்து வைத்தார்.
************
குடும்ப அரசியலில் இருந்து விலக அமெரிக்க மக்களிடம் இருந்து இந்திய மக்கள் பாடம் பயில வேண்டும். புத்தக வெளியீட்டு விழாவில் நரேந்திர மோடி பேச்சு.
************
ஆப்பரேஷன் செய்த தையல் பிரிக்கும் முன்பே பணிகளை கவனிக்கும் முதல் அமைச்சர் கருணாநிதி. படுக்கையில் இருந்தவாறே கோப்புகளை பார்க்கிறார். (தலையோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா??)
*************
தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம். வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் கொடுக்கப்பட்டு விடும் என்று நரேஷ் குப்தா பேட்டி.
*************
இலங்கையில் போரை நிறுத்த மனிதச்சங்கிலி. பா.ம.க.வினருக்கு ஜி.கே.மணி வேண்டுகோள்.
**************
பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு எம்.ஜி.ஆர்.விருது. 21-ம் தேதி வழங்கப்படும் என்று ஆர்.எம்.வீரப்பன் அறிவிப்பு.
*************
பொருளாதார நெருக்கடியை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை என்று ஜெ.ஜெயலலிதா தெரிவித்தார்.
*************
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடினார் இல கணேசன்.
*************
மார்ச் 1-ம் தேதி ஏ.ஆர்.ரகுமானுக்கு சினிமா இசையமைப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா.
**************

No comments: