இன்றைய செய்திகள் - 12.02.09

சிங்கள ராணுவ தாக்குததில் 1000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பழி. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்.
****************
ஆப்கனிஸ்தானில் அரசு அலுவலங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டதில் 19 பேர் பலி, 54 பேர் படுகாயம்.
****************
மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி முகம்மது அஜ்மல் மீது பாகிஸ்தானில் வழக்குப்பதிவு.
******************
மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி, செருப்பு, கடிகாரம் ஏலம். அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கிறது.
********************
வங்காளதேச புதிய ஜனாதிபதி முகம்மது ஷில்லூர் ரகுமான் போட்டியின்றி தேர்வு.
*******************
ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு..ஏ.ஈ.) கடந்த ஒரு மாதத்தில் 55 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று தகவல்.
*******************
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவாக இருக்கிறது என்று போலந்து குற்றம் சாட்டி உள்ளது.
******************
மலேசியாவில் இந்தியர்களின் உரிமைக்காக போராடிய ஹிந்த்ராப் அமைப்பை சேர்ந்த 5 தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி கைதாகி 2 ஆண்டுகள் சிறையில் அடைப்பு. அவர்களை விடுதலை செய்வதில் தலையிட முடியாது என்று பெடரல் கோர்ட் தெரிவிப்பு.
*******************
ஒபாமாவை கொல்ல முயற்சி. துப்பாக்கியுடன் வந்த 64 வயது அல்பிரெட் பிராக் என்பவர் கைது. இவர் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
******************
ராக்கிங்கை தடுக்க தவறும் கல்லூரிகளுக்கு அரசு நிதி உதவியை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
*****************
பொதுத்தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்.
****************
ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டர் விபத்து தவிர்ப்பு. ஹெலிகாப்டர் விமானி மீது தவறு இல்லை என்று விமானப்படை தளபதி பேட்டி.
***************
தன் காதலர் கிறிஸ்டோபர் டோர்ரிஸ் என்ற அமெரிக்கரை, பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா மணக்கிறார்.
****************
கருணாநிதிக்கு முதுகு தண்டவடத்தில் ஏற்பட்ட வலிக்காக நடந்த 3 மணி நேர ஆபரேஷன் வெற்றி.
*****************
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 3,000 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். ******************
ஒரு பவுன் தங்கம் 10,672 ஆக உயர்வு.
******************
சமீபத்திய இந்திய-இலங்கை தொடரின் தோல்விக்கு பொறுப்பேற்று ஜெயவர்தனே காப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார்.
*******************
தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஐ.சி.எல்.வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
********************

No comments: