இன்றைய செய்திகள் - 08.02.09

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலி.
*****************
ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசின் மூலமாக செயல்படுவதுதான் ஒரே வழி என்று க.அன்பழகன் கூறினார்.
******************
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி நாகை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் தீக்குளித்து இறந்தார்.
*******************
அமெரிக்கவாழ் இந்தியரான நிக்கோலஸ் ரத்தோட் என்பவருக்கு அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
*******************
அணு விஞ்ஞானி காதிர்கான் விடுதலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பதில்.
*******************
பிரபல கன்னட நடிகர் வினோத்ராஜ் நேற்று, பெங்களூரில் தனது தாயாருடன் காரில் சென்றபோது அவரை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. இதில் வினோத்ராஜ் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூர் நகரின் மையப்பகுதியான மெஜஸ்டிக் பகுதியில், பட்டப்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
*******************
மும்பை தாக்குதல் - பாகிஸ்தானிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
********************
உடல்நிலை தொடர்ந்து மோசம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தொடர்ந்து செயற்கை சுவாசம். சோனியா காந்தி நேரில் சென்று பார்த்தார்.
********************
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சியுடன் நடந்த மோதலில் 5 பேர் படுகொலை.
********************
டெல்லியில் கடும் பனிமூட்டம். விமானத்துக்குள் 7 மணிநேரம் பயணிகள் தவிப்பு.
********************
காதலர் தின கொண்டாட்டங்களை அனுமதிக்க மாட்டோம். பெங்களூர் மாணவர் அமைப்பு தலைவர் அறிவிப்பு.
********************
நடிகை நயன்தாரா லிங்குசாமியிடம் இருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்து விட்டதால், அவரின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியது.
*******************
தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடலூரில் இன்று ஜோதி தரிசனம். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.
*******************
அனைத்துக்கட்சியினரும், பொதுமக்களும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தல்.
******************
"செந்தூர் எக்ஸ்பிரஸ்" ரெயில் இன்று துவக்கம். திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இன்று கோலாகல விழா. மத்திய மந்திரி லாலுபிரசாத் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.
******************
லெஸ்பியன் உதவி மையம் தொடங்கப்பட்டது. எங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கொடுங்கள் - சென்னையில் லெஸ்பியன் பெண் பேட்டி (நாடு வெளங்கிடும்டா மக்கா!!!!).
*******************
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கோரி, சென்னையில் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் மவுன ஆர்ப்பாட்டம். கண்களில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
******************
வாகனக்கடனில் வண்டி வாங்கியோர் இரு மாதம் தவணை செலுத்த தவறினால், வாகனத்தை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில் அறிமுகம்.
****************
விடுதலைப்புலிகளை யாராலும் வெல்ல முடியாது. தமிழ் ஈழம் மலர்ந்தால் தான் இலங்கையில் கால் வைப்பேன் - டாக்டர் ராமதாஸ் பேச்சு.
***************
பிராமணர்களின் நலனுக்காக புதிய அமைப்பு - நடிகர் எஸ்.வி.சேகர் துவக்கினார்.
**************
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை ஏழை விதவை பெண்கள் மற்றும் ஊனமுற்றோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
**************
இந்திய - இலங்கை இடையேயான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தியா ஏற்கனவே நடந்த 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**************
4 நாடுகள் ஹாக்கி. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்.
**************
நியுசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி. ரிக்கி பாண்டிங்கிற்கு அவசர அழைப்பு.
***************

1 comment:

Anonymous said...

first class. wonderful compilation. all i need to do is to spend few minutes here, and i am updated. great. thanks for your efforts. and request you to continue the same.

that 'makka' comment is great.

anbudan
charles
dubai