ஆண்டு விடுமுறை - பொங்கும் உற்சாகம்


அயல்நாட்டு வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், பை நிறைய சேமிப்பு. ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் திரும்பலாம். விடுமுறைக்கு தாயகம் வரும்போது, வேலை செய்யும் நாட்டில் இருந்து, அனைத்துவிதமான பொருட்களையும் தாயகத்திற்கு அள்ளி செல்லலாம்.

ஒவ்வொருவருக்கும் (தன் நாட்டையும், தன் குடும்பத்தையும் பிரிந்தவர்கள்), ஆண்டு விடுமுறை என்பது மிகவும் குதூலிக்கதக்கதாக இருக்கும். இதற்கு அயல்நாடுகளில் வேலை செய்யும் யாரும் விதிவிலக்கு அல்ல. சொந்த பந்தம், நண்பர்கள் என அனைவரையும் காணும் வாய்ப்பு பெறுவோம்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர், பல்வேறு சிரமங்களுக்கிடையில்தான் பணிபுரிகின்றனர். நீண்ட வேலை நேரம், வாரத்திற்கு குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சம் 8 நாட்கள் (ஒரு நாளைக்கு 12 மணிநேரம்) வேலை. விடுமுறைகள் குறைவு. வெயில் காலம் நரகம். வெயிலின் உக்கிரம், நம்மை சுட்டெரிக்கும் (அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரிக்கும் மேல்).

இந்த குளோபல் க்ரைசிஸ் வேறு இங்கு பணிபுரியும் அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. இன்று அட்டன்டன்ஸ் போட்டு விட்டோம், அதனால் இன்றைய சம்பளம் நிச்சயம், நாளை என்ன ஆகும் என்பது நிச்சயம் இல்லை என்பது தான் இன்றைய கசப்பான உண்மை நிலை.

கடின உழைப்பை மட்டுமே நம்பி வாழும் லட்சோப லட்சம் குடும்பத்தார் இங்கு உள்ளனர். தற்போது, அவர்களின் முகத்தில் ஒரு வெறுமையும், ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் தென்படுகிறது.

விடுமுறைக்கு விண்ணப்பம் அளித்ததும், அப்போதுதான் தங்கள் தேவை மற்றும் சேவை கம்பெனிக்கு தேவை என்பதுபோல், 3-4 மாதம் கழித்து போங்களேன் என்ற பதில் வரும். வேலை செய்வது மட்டும் அல்ல, விடுப்புக்கு போவது கூட, கம்பெனியின் கையில் (முடிவில்) தான் இருக்கும். சரி என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

வேண்டுமானால், விடுமுறையை ஒரு மாதத்திலிருந்து 20 நாட்களாக குறைத்து கொள்கிறேன் என்று சொல்லி, நாம் நினைத்த நாளிலேயே பயணம் செய்யலாம்.

மொத்தத்தில் நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகளாகவும், பணிபுரியும் அலுவலகங்களின் அடிமைகளாகவுமே இருக்கிறோம் / இருப்போம்.

இன்று சிரித்த முகத்தோடு வேலை செல்பவர், எங்கே யாராவது தம்மை அழைத்து விடுவார்களோ என்று பயந்த படியே அலுவலகத்தில் அமர வேண்டி இருக்கிறது. அப்படி, யாரேனும் கூப்பிட்டால், ஒரு கவர் அன்றி வேறு எதுவும் கையில் தரப்படுவதில்லை. அந்த கவரில், கண்டிப்பாக ஊக்கத்தொகையோ, சம்பள உயர்வுக்கான தகவலோ இருக்கப்போவதில்லை. ஒரு மாதம் நோட்டிஸ் போன்ற ஏதாவதொரு அணுகுண்டு தான் இருக்கும்.

இங்கு விஷம் போல ஏறி வரும் வீட்டு வாடகை, சாப்பாடு விலை, டெலிபோன் கட்டணம், டாக்சி கட்டணம் (குறைந்த பட்ச மீட்டர் கட்டணம் திராம் 10, நீங்கள் 4-5-6 திராம் அளவு பயணித்து இருந்தால் கூட), ஸ்கூல் கட்டணம் (குடும்பத்தோடு இருப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம்) ........ இப்படி, உங்களை சேமிக்க விடவே மாட்டேன் என்பது போன்ற ஒரு சூழல்.

இதனால், உங்கள் சேமிப்பு என்ற ஒன்று, தற்போதைய சூழலில், பெரிய அளவில் ஒன்றும் இருப்பதில்லை. கைக்கும், வாய்க்குமாக பெரும்பாலோரின் வாழ்வுநிலை உள்ளது.

மகிழ்ச்சியாக ஊர் செல்லும் அனைவரின் மனநிலையை சொல்லும் ஒரு கவிதை இதோ, உங்கள் பார்வைக்கு.

ஊர் சென்றதும் மனமெங்கும்
மகிழ்ச்சியில் நிரம்பியது
சென்று திரும்பியதும் மனமெங்கும்
வெறுமை நிரம்பியது.

(இந்த நிலை வெகுவிரைவில் மாற வேண்டும் என்று நான் உளமார கடவுளை பிரார்த்திக்கிறேன்).

28 comments:

Anonymous said...

உண்மை தான்...

கிரி said...

//நீண்ட வேலை நேரம், வாரத்திற்கு குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சம் 8 நாட்கள் (ஒரு நாளைக்கு 12 மணிநேரம்) வேலை. விடுமுறைகள் குறைவு. வெயில் காலம் நரகம்//

கோபி இது குறித்து என் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் கட்டுரை அனுப்பி இருக்கிறார் அதை தமிழில் வெளியிடக்கூறி..நேரமில்லாததால் (மற்றும் பொறுமை) அதை செய்யாமல் இருக்கிறேன் ..

//ஒரு மாதம் நோட்டிஸ் போன்ற ஏதாவதொரு அணுகுண்டு தான் இருக்கும்.//

ஒரு சிலருக்கு ஒரு நிமிட நோட்டீஸ்

//இங்கு விஷம் போல ஏறி வரும் வீட்டு வாடகை//

இங்கு வீட்டு வாடகை மிக அதிகம் என்று பலர் கூற கேட்டு இருக்கிறேன்

//ஊர் சென்றதும் மனமெங்கும்
மகிழ்ச்சியில் நிரம்பியது
சென்று திரும்பியதும் மனமெங்கும்
வெறுமை நிரம்பியது//

இது எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே என் எண்ணம்.. காரணம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் குடும்பத்தினர் நண்பர்கள் என்று பலரை விட்டு வருவது என்றுமே வெறுமை தான்..

ஒன்றை பெற ஒன்றை இழப்பது தவிர்க்க முடியாதது என்பதால்.. இப்படியே காலம் ஓடுகிறது

R.Gopi said...

//கோபி இது குறித்து என் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் கட்டுரை அனுப்பி இருக்கிறார் அதை தமிழில் வெளியிடக்கூறி..நேரமில்லாததால் (மற்றும் பொறுமை) அதை செய்யாமல் இருக்கிறேன் ..//

வருகைக்கு நன்றி கிரி. அந்த ஆங்கில கட்டுரையை எனக்கு அனுப்ப முடியுமா?(rgopi3000@gmail.com).

//இங்கு வீட்டு வாடகை மிக அதிகம் என்று பலர் கூற கேட்டு இருக்கிறேன்//

உண்மைதான் "தல". இங்கு ஒரு சில வருடம் வீட்டு வாடகை கொடுப்பதை கொண்டு, நாம் நம் ஊரில் ஒரு சிறிய வீடு வாங்கி விடலாம். இது, இங்குள்ள பங்களாதேஷ், பாகிஸ்தான், மலையாளி புரோக்கர்களால் நடக்கிறது. இது ஒழியாதவரை, இதற்கு ஒரு முடிவு இல்லை.

//ஒன்றை பெற ஒன்றை இழப்பது தவிர்க்க முடியாதது என்பதால்.. இப்படியே காலம் ஓடுகிறது//

சரியாக சொன்னீர்கள் கிரி.

இங்குள்ளதை பற்றி எழுதினால் நம் ஆயுள் போதாது பாஸ். அவ்வளவு அட்டகாசம்.

(சிங்கை இப்போது எப்படி உள்ளது?).

R.Gopi said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அனானிமஸ்

கிரி said...

//வருகைக்கு நன்றி கிரி. அந்த ஆங்கில கட்டுரையை எனக்கு அனுப்ப முடியுமா?//

அவரிடம் அனுமதி பெற்று அனுப்புகிறேன் கோபி

//சிங்கை இப்போது எப்படி உள்ளது?//

சிங்கையில் வீட்டு வாடகை அதிகம் தான்...குறைக்காமல் வேண்டும் என்றே இழுக்கிறார்கள்..

உங்கள் ஊர் அளவிற்கு இங்கு மோசமில்லை என்றே கூறுவேன். இங்கே உங்களுக்கு வேலை இருந்தால் கூடுமானவரை எந்த பிரச்சனையும் இல்லை..(எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்)

//இங்குள்ளதை பற்றி எழுதினால் நம் ஆயுள் போதாது பாஸ். அவ்வளவு அட்டகாசம்//

நீங்கள் உங்கள் இடத்தை பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பதிவு எழுதலாமே.. நாங்கள் தெரிந்து கொள்வோம்..

R.Gopi said...

//அவரிடம் அனுமதி பெற்று அனுப்புகிறேன் கோபி //

நன்றி கிரி. விரைவில் உங்கள் நண்பர் அனுமதி தர அந்த "அய்யனாரை" வேண்டுகிறேன்.

//சிங்கையில் வீட்டு வாடகை அதிகம் தான்...குறைக்காமல் வேண்டும் என்றே இழுக்கிறார்கள்..//

இப்போது, இங்கு சிறிது பரவாயில்லை. ஆனால், வேதாளம் மறுபடி எப்போது முருங்கை / புளிய மரம் ஏறுமோ?/

//நீங்கள் உங்கள் இடத்தை பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பதிவு எழுதலாமே.. நாங்கள் தெரிந்து கொள்வோம்..//

அதற்கு கடும் உழைப்பு தேவை பாஸ். முயற்சிக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.

நண்பர் தர்மா கூட சிங்கையில் தான் உள்ளார். ஜெயா ஹோல்டிங்க்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார்.

. said...

வியர்வையில் நனைந்து
சிந்தாமல் நிரம்பி கிடக்கும் கண்ணிரில் மிதந்து வந்த இந்த பதிவு
எங்கள் நெஞ்சை சென்றடைந்தது நண்பரே

திரை கடல் ஓடி திரவியம் தேடும் பளபளப்பான பாமரனின் உண்மை உணர்வு இது.

இன்றைய நிலை என்று கோடிட்டு காட்டியது மிக அருமை

உங்கள் பேனா சிரிக்கும் சிரிக்க வைக்கும் என்று தெரியும், ஆழ சென்று இதயத்தை பதம் பார்க்கும் என்று இப்போது தெரிகிறது

R.Gopi said...

//வியர்வையில் நனைந்து
சிந்தாமல் நிரம்பி கிடக்கும் கண்ணிரில் மிதந்து வந்த இந்த பதிவு
எங்கள் நெஞ்சை சென்றடைந்தது நண்பரே//

நன்றி கலந்த வணக்கம் படுக்காளி

//திரை கடல் ஓடி திரவியம் தேடும் பளபளப்பான பாமரனின் உண்மை உணர்வு இது//

உண்மை "தல". உங்களுக்கு தெரியாத விஷயமா நான் சொல்லிட போறேன்?

//இன்றைய நிலை என்று கோடிட்டு காட்டியது மிக அருமை//

பளபளப்பற்ற வாழ்க்கை தானே இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம், இன்று?

//உங்கள் பேனா சிரிக்கும் சிரிக்க வைக்கும் என்று தெரியும், ஆழ சென்று இதயத்தை பதம் பார்க்கும் என்று இப்போது தெரிகிறது//

இங்கு நாம் அன்றாட வாழ்வில் காண்கின்ற அவலங்களை பார்க்கும் போது, இன்னும் விரிவாக இதைப்பற்றி எழுத வேண்டும், குருவின் (படுக்காளி) துணை இருந்தால்.

இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் பளபளப்புக்கு பின்னால் எத்தனை எத்தனை லட்சம் உழைப்பாளிகளின் வியர்வையும், ரத்தமும் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கண்டிப்பாக விரிவாக இதைப்பற்றி எழுதுவோம்.

மணிஜி said...

அடிப்படை தேவைகள் என்பது வேறு..அதற்கு நம்மூரே சொர்க்கம்.. ஆனால் கடல் கடந்து கனவில் மட்டுமே வாழும் நிலை எனக்கு உடன் பாடில்லை.தபாலில் தாம்பத்யம் நடத்தினால் என்ன பயன்..திருமணத்திற்கு முன் வரை அயல் மண்ணில் இருக்கலாம்..ஆனால் வாழ்க்கையே அதன் பின் தான் தொடங்குகிறது

வினோத் கெளதம் said...

தல

அருமையாக எழுதி உள்ளிர்கள்.
சொன்னது போல் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.
எப்பொழுது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் பலர் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.

வினோத் கெளதம் said...

//அடிப்படை தேவைகள் என்பது வேறு..அதற்கு நம்மூரே சொர்க்கம்.. ஆனால் கடல் கடந்து கனவில் மட்டுமே வாழும் நிலை எனக்கு உடன் பாடில்லை.தபாலில் தாம்பத்யம் நடத்தினால் என்ன பயன்..திருமணத்திற்கு முன் வரை அயல் மண்ணில் இருக்கலாம்..ஆனால் வாழ்க்கையே அதன் பின் தான் தொடங்குகிறது//

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்.

தமிழ் ஸ்டுடியோ said...

super...

Unknown said...

நண்பரே நன்றாக சொன்னீர்கள் இரண்டுவருடம் கழித்து நாம் சரியான நேரத்தில் நம் உறவினர்களை காண முடியுமா தாங்கள் கூரியது போல் விடுமுறை கிடைக்குமா நாம் இருக்கும் வேலை மீண்டும் கிடைக்குமா இதுதான் இன்றைய நிலைமை

இன்றைய நிலை என்று கோடிட்டு காட்டியது மிக அருமை

malar said...

கம்பெனிக்கு அதிக லாபம் வரும்போது உடனே சம்பளத்தை கூட்டவிலை .நஷ்டம் வரும் முன்னே சம்பளத்தை குறைத்துவிட்டார்கள் .12 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்த்தவர்களும் உண்டு .

என்னத்த சொல்ல பிழைப்பு வடிவேல் ஸ்டைலில் சிரியா சிரிக்குது .

malar said...

///இங்கு விஷம் போல ஏறி வரும் வீட்டு வாடகை///


வீட்டு வாடகை மட்டும் ஏறவில்லை .ஸ்கூல் பீஸ் பஸ் பீஸ் எல்லாம் ஏறி விட்டது.

இந்த தடவை ஊர் சென்றால் எல்லாரும் துபாய் பொருளாதார நிலைமையை தான் சந்தோசமாக விசாரிப்பார்கள்

R.Gopi said...

//தண்டோரா said...

அடிப்படை தேவைகள் என்பது வேறு..அதற்கு நம்மூரே சொர்க்கம்.. ஆனால் கடல் கடந்து கனவில் மட்டுமே வாழும் நிலை எனக்கு உடன் பாடில்லை.தபாலில் தாம்பத்யம் நடத்தினால் என்ன பயன்..திருமணத்திற்கு முன் வரை அயல் மண்ணில் இருக்கலாம்..ஆனால் வாழ்க்கையே அதன் பின் தான் தொடங்குகிறது//

வருகைக்கு நன்றி தண்டோரா. உங்கள் கூற்று ஒருவகையில் சரி. ஆனால், நீங்கள் சொல்வது போல், திருமணத்திற்கு முன், இங்கு வந்து சில வருடம் உழைத்து, பின் தாய்நாடு போவது என்பது சரியானதே. இங்கு நீங்கள் இருக்கும் 5-6-10 வருடங்களில் கிடைக்கும் அதிகப்படியான ஊதிய உயர்வு உங்களை (பெரும்பாலோரை) கட்டிப்போட்டு விடும் என்பது என் எண்ணம்.

//vinoth gowtham said...
தல

அருமையாக எழுதி உள்ளிர்கள்.
சொன்னது போல் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.
எப்பொழுது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் பலர் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.//

வாங்க வினோத்,

என் கருத்தை பிரதிபலித்ததற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

//தமிழ் ஸ்டுடியோ said...
super...//

முதல் வருகைக்கும், உற்சாகப்படுத்தியதற்கும் நன்றி.

//Jayaraj said...
நண்பரே நன்றாக சொன்னீர்கள் இரண்டுவருடம் கழித்து நாம் சரியான நேரத்தில் நம் உறவினர்களை காண முடியுமா தாங்கள் கூரியது போல் விடுமுறை கிடைக்குமா நாம் இருக்கும் வேலை மீண்டும் கிடைக்குமா இதுதான் இன்றைய நிலைமை

இன்றைய நிலை என்று கோடிட்டு காட்டியது மிக அருமை//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர் ஜெயராஜ் அவர்களே. நாம் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில், வருடங்களில் முழுதுமாக அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறோம்.

//malar said...
கம்பெனிக்கு அதிக லாபம் வரும்போது உடனே சம்பளத்தை கூட்டவிலை .நஷ்டம் வரும் முன்னே சம்பளத்தை குறைத்துவிட்டார்கள் .12 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்த்தவர்களும் உண்டு .

என்னத்த சொல்ல பிழைப்பு வடிவேல் ஸ்டைலில் சிரியா சிரிக்குது.//

வாங்க மலர். அதுதானே அவர்கள் எப்போதும் செய்வது. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. 12 மணி நேரம் என்றது ஒரு தோராய அளவுதான். நீங்கள் சொன்னதுபோல் அதைவிட அதிகமாக வேலை செய்தவர்கள் / செய்பவர்களை நான் பார்த்ததுண்டு. தொடர் வருகை தாருங்கள்.

//வீட்டு வாடகை மட்டும் ஏறவில்லை .ஸ்கூல் பீஸ் பஸ் பீஸ் எல்லாம் ஏறி விட்டது.

இந்த தடவை ஊர் சென்றால் எல்லாரும் துபாய் பொருளாதார நிலைமையை தான் சந்தோசமாக விசாரிப்பார்கள்.//

சரியே. நான் வீட்டு வாடகை மற்றும் ஸ்கூல் பீஸ் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

இந்த தடவை ஊர் சென்றால் துபாய் பற்றி சந்தோஷமாக விசாரிப்பார்கள். நாம், சிறுது துக்கத்துடன் தான் பதிலளிக்க வேண்டும், இன்றைய சூழலில்.

chelladurai said...

அன்புள்ள கோபி க்கு,

அருமையான பதிவு.. வெறுமையாக வாழ்பவர்களை பற்றி. என்ன சொல்லுவதற்கு இருக்கு இங்கு. மனிதர்களாக வாழாமல் , எதுவாகவோ வாழ பழகி வாழ்வது பற்றி .... மன்னிக்கவும் இருப்பது பற்றி .. வாழ்வது வேறு ! இருப்பது வேறு ! ஆம் நாங்க இருக்கிறோம் ... வாழ்கையே இழந்து கொண்டு.....

என்ன சொல்ல முடியல ... அழுதுடுவேன்.... அழுதுடுவேன்.

அன்புடன்
செல்லதுரை, துபாய் ( ரொம்ப முக்கியம் )

R.Gopi said...

//chelladurai said...

அன்புள்ள கோபிக்கு,

அருமையான பதிவு.. வெறுமையாக வாழ்பவர்களை பற்றி. என்ன சொல்லுவதற்கு இருக்கு இங்கு. மனிதர்களாக வாழாமல் , எதுவாகவோ வாழ பழகி வாழ்வது பற்றி .... மன்னிக்கவும் இருப்பது பற்றி .. வாழ்வது வேறு ! இருப்பது வேறு ! ஆம் நாங்க இருக்கிறோம் ... வாழ்கையே இழந்து கொண்டு.....

என்ன சொல்ல முடியல ... அழுதுடுவேன்.... அழுதுடுவேன்.

அன்புடன்
செல்லதுரை, துபாய் (ரொம்ப முக்கியம்)//

ஏறக்குறைய எல்லோர் நிலையை தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் செல்லதுரை. இந்த நிலைமை விரைவில் சீரடைய இறைவனை வேண்டுவோம். நாம் வேறு என்ன செய்ய முடியும்.

Senthil said...

very much true gopi

senthil bahrain

R.Gopi said...

//Senthil said...
very much true gopi

senthil பஹ்ரைன்//

வாங்க செந்தில். வருகைக்கு நன்றி. இன்னும் நிறைய எழுத வேண்டும், இதைப்பற்றி.

வடுவூர் குமார் said...

அமீரகம் மீட்படைய சில வருடங்கள் பிடிக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.பிரச்சனையின் வீரியம் இன்னும் அவ்வளவாக வெளியே தெரியவில்லை என்பதே நிஜம்.

R.Gopi said...

//வடுவூர் குமார் said...

அமீரகம் மீட்படைய சில வருடங்கள் பிடிக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.பிரச்சனையின் வீரியம் இன்னும் அவ்வளவாக வெளியே தெரியவில்லை என்பதே நிஜம்.//

வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

இங்கு ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதில்லை. அதுவே, பல விஷயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

இந்த மந்த சூழலில் இருந்து பிரச்சனையில் இருக்கும் அனைவரும் சீக்கிரம் மீள, எல்லா வல்ல இறைவனையும் வேண்டுவோம்.

Unknown said...

Gopi ulkumuralgali velikutthi irukkirirgal. Thozhilali vazhkayin yadharthatthi solli iruukiririrgal. Kudavey oru hidden message enakku padugirarathu, adhavthu naam sondha thozhil thodangi mudhalalyaga vazhnthal than nimmadhi endru. Enna seyvathu ellarukkum mudhalali yaga vazha vendum endru than asai anal adharkana neramum suzhalum amayum endru nambi katthu irukka vendyathu than. Adhuvarai venumanal Rajini muthu vil padiya " oruvan oruvan mudhalali padalai kettu vittu arudhal adainthu namathu velaiyai gavanikka vendyathu than. Nalla padhivu vazzthukkal.

R.Gopi said...

நன்றி தர்மா அவர்களே

இது ஆரம்பம்தான். அடுத்த பதிவு, ஒரு தொடராக முயற்சி செய்து, முதல் பாகமும் பதிவு செய்யப்பட்டு விட்டது.

அதையும் படியுங்கள்.

நீங்க சொல்ற மாதிரி, அதுவரை, தலையின் முதலாளி பாடலை பாடி கொண்டிருப்போம்.

பட்டாம்பூச்சி said...

//ஒன்றை பெற ஒன்றை இழப்பது தவிர்க்க முடியாதது என்பதால்.. இப்படியே காலம் ஓடுகிறது//

சரியாக சொன்னீர்கள்.

R.Gopi said...

//ஒன்றை பெற ஒன்றை இழப்பது தவிர்க்க முடியாதது என்பதால்.. இப்படியே காலம் ஓடுகிறது//

சரியாக சொன்னீர்கள்.//

**********

வணக்கம் பட்டாம்பூச்சி. முதல்முறையாக பறந்து வந்து நம் வலைதளத்தில் அமர்ந்து இருக்கிறீர்கள். தொடர் வருகை தாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மேற்குறிப்பிட்டது நண்பர் கிரி சொன்னது. அருமையான வாசகம்.

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல பதிவு, என்ன கருத்து சொல்வதுன்னே தெரியலை.... எல்லாம் உண்மை,

R.Gopi said...

//அது ஒரு கனாக் காலம் said...
நல்ல பதிவு, என்ன கருத்து சொல்வதுன்னே தெரியலை.... எல்லாம் உண்மை,//

************

வாங்க அது ஒரு கனாக் காலம் .......

தங்கள் பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருகை தந்து, எல்லா பதிவுகளையும் படியுங்கள். கருத்து தெரிவியுங்கள்.