இந்த வார லேட்டஸ்ட் சென்னை பாக்ஸ் ஆபீஸ் டாப் - 5 படங்கள்.
1. அயன்
A.V.M.மின் தயாரிப்பில் வந்துள்ள படம் "அயன்" மிகப் பெரிய ஓபனிங்கை பெற்றிருக்கிறது. சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் என எல்லாமே பெரிய பெயர்கள். படத்தின் முதல் பாதி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இரண்டாவது பாதியில் சின்ன சொதப்பல். பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகாதது ஒரு குறை. சன் பிக்சர்ஸின் விளம்பரம் குறைகளை நிவர்த்தி செய்துவிடும். இதன் முதல் மூன்று நாள் வசூல் ஏறக்குறைய அறுபத்தியெட்டு லட்சங்கள்.
2. அருந்ததீ
கடந்த சில வருடங்களில் தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட எந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் சோபித்ததில்லை. விதிவிலக்கு அருந்ததீ. இரண்டு வாரங்களில் சென்னையில் ஒன்றரை கோடிகளை வசூலித்துள்ளது. வார இறுதி வசூல் ஏறக்குறைய பதிமூன்று லட்சங்கள்.
3. யாவரும் நலம்
மாதவனின் யாவரும் நலம் இன்னமும் ரசிகர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவுக்கு உண்டு. நான்கு வாரங்களில் 1.8 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. வார இறுதி வசூல் பதினொன்றரை லட்சங்கள்.
4. பட்டாளம்
முதல் மூன்று நாட்கள் சுமாரான வசூலை பெற்ற பட்டாளம் வார இறுதியில் பிக்கப்பாகியுள்ளது. இதன் சென்றவார இறுதி மூன்று நாள் வசூல் ஏழரை லட்சங்கள். ஒருவார முடிவில் 75 லட்சங்களை நதியாவின் இந்தப் படம் வசூலித்துள்ளது.
5. சிவா மனசுல சக்தி
காதலும், போதையும் சரிவிகிதத்தில் கலந்த ஜீவாவின் இந்தப் படம் இன்னும் சென்னை ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. படத்தின் லோக்கல் வசனங்கள் காமெடி கிச்சு முச்சு. ஏழுவாரங்கள் முடிவில் சென்னையில் மட்டும் 1.6 கோடிகள் வசூலித்துள்ளது. சென்றவார இறுதி வசூல் மூன்றரை லட்சங்கள்.
(நன்றி : வெப்துனியா)
No comments:
Post a Comment