மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 2)
அன்னிய தேசம் வந்து திரவியம் தேடும் ஆசையில் தங்கள் வாழ்வை தொலைத்த எத்தனையோ கண்ணீர் கதைகள் உண்டு.

கட்டிக் கொடுத்து கரை ஏத்த இரண்டு பெண்கள், சரியான படிப்பு இல்லை, வேலையும் இல்லை. இனி என்ன செய்யலாம் என்று திகைத்த போது,வாழ்வே கேள்வி குறி ஆனது. சமுகத்தின் கேலிப் பேச்சு இதயத்தை துளைக்கும்.

அக்கம் பக்கத்து வீட்டு அனுபவம், தீர்வு போலே தோன்றும். எங்க பையன் துபாய்ல வேலை செய்யறான், மாசத்துக்கு இத்தனை பணம் அனுப்புரான் என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகள்.

அப்படியா !!! வாழ்வு சிறிது நம்பிக்கை தரும்.

சரி எப்படி போவது. எவ்வளவு பணம் வேண்டும், பார்ப்போம்.....அங்கும், இங்கும், இங்கும், அங்கும் சுற்றி ஒரு வழியாக ஒரு பயணத் தரகர் அறிமுகம் கிடைத்துவிடும். அவரின் அலுவலகத்தின் உள்ளே போகும்போது, ஏதோ சொர்க்கத்தின் கதவுகளையே திறந்து கொண்டு போவது இருக்கும்.

ஆச்சரியம், பிரமிப்பு...... இந்த அலுவலகத்தின் வாசலை மிதித்த எத்தனையோ ஆயிரம் பேர், இப்போது, உங்களின் பல பகுதிகளிலும் பறந்து விரிந்து காணப்படுவார்கள் என்றெல்லாம் எண்ணியபடி.

அவரது குளுகுளு அறையும்,சுவரில் உள்ள ஆகாய விமான படமும், தலை சுற்றி ஏதோ ஒரு உலகுக்கு இழுத்து செல்லும்.

அது ஏன், என்னன்னு தெரியல எல்லா ஏஜெண்ட் ஆபிஸ்லயும் ஒரு பொம்மை விமானம் இருக்கும். … வரவேற்பறையில் கூட்டமாய் சில மனிதர்கள். நம்பிக்கை முகத்தில் ஒளிர் விட உலகையே வென்ற தோரணையில் அங்கே அமர்ந்திருக்கும் பயணம் செய்ய காத்திருக்கும் கூட்டம். இந்த கூட்டத்தில் நிச்சயம் ஒரு ப்ரஹஸ்பதி இருப்பார். அவர் முன்னமே இது போல் பல நாடுகள் சுற்றிய உலகம் சுற்றும் வாலிபர்.

அவர் அளந்து விட்ட கதைகள் நாம் முந்தைய பாகத்தில் விவாதித்தது. எது... பெட்ரோலும், பிரியாணியும். விசா, இக்காமா என்று புதிய வார்த்தைகள் சொல்லி மசாலா தடவி… போட்டு தாளிப்பார். நாடுகளை பற்றியும், நடப்புகளை பற்றியும் விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வேறு வேறு நாட்டின் பல காசுகளை (நோட்டையும் தான்) எடுத்து காண்பிப்பார். இந்த ரூபாய் ஒண்ணு குடுத்தா, நம்ம ஊர்ல, 10 ரூபாய், இதோ இருக்கே, இத குடுத்தா, நம்ம ஊர்ல, 130-140 ரூபாய் என்று ..........

சரேலென, சட்டை பையில் கை விட்டு, பாரின் சிகரெட் எடுப்பார். ஸ்டைலாய் பத்த வைத்து, நமக்கும் தானம் செய்வார்.

ஊரில் செய்யது பீடி குடித்தவர் சொல்லுவார், இப்போல்லாம் அது என்னவோ, "பாரின் சிகரெட் தான் ஒத்துக்குது. இல்லேன்னா, தொண்டை பிடிச்சிகுது". கனவுகளோடே இவன் சிகரெட் பிடிப்பான். துளைத்து துளைத்து கேள்விகள் கேட்பான். அவர் சட்டை பையில் திருப்பி வைத்த, அந்த நோட்டுக்களையே பார்த்து கொண்டிருப்பான். அவன் மனதில் தோணும் .....நாமும் இதுபோல் நிறைய சம்பாதிக்கணும் .........

உள்ளே சென்றால் ஏஜெண்ட், முக்காலே மூணு வீசம் தொலைபேசியிலே பேசுவார். நமக்கு சொல்ல விரும்பும் சேதிகளை அவர் போனில் பேசுவார். (இந்த காட்சி நம் கவுண்டமணி சூரியன் படத்தில் பேசும் டகால்டி தொலைப்பேசி காட்சி போலவே இருக்கும்). ஆனாலும், ஒட்டு கேட்டது உண்மை என்று நம்பியும் விடுவோம்.

நாம் அவரை உன்னிப்பாக கவனிக்கிறோமா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, தாறுமாறாக, என்ன என்னவோ பேசுவார். "நாளைக்கு ஐம்பது பேர் சவுதி போயி ஆகணும், .... என்னது, விசா கிடைக்காதா, ஹலோ, கிடைக்கலேன்னா, சவுதி ராஜா கிட்ட சொல்லு, கொல்லிமலை சோலமலை சார் கண்டிசனா சொல்லிட்டாருன்னு... ஆமா .... நாளைக்கே வந்தாகணும் ....... ஊர்ல எல்லாரையும் நாளைக்கே வர சொல்லிட்டோம்ல .....நமக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு." அது என்னிக்கும் மாறாது....

அவர் பேச்சு இன்னும் தேன் தடவியது போலே இருக்கும். தம்பி, இப்போ நீங்க குடுக்கற இந்த பணம், செலவு இல்ல, முதலீடு என்று ("சிவாஜி"யில் நடிகர் சுமன் சொல்வது போல) .. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், பயணம் நிச்சயம். ஊருக்கு போன 8-10 மாசத்துலயே அந்த லட்ச ரூபாய் சம்பாதிச்சுடலாம். நாளைக்கே பணத்தோடு வந்துடுங்க...... அடுத்த பேச்சுல (BATCH) அனுப்பிடறேன்.

அப்புறம் என்ன, பளபளப்பாய் உடை அணியலாம், பாரின் செண்ட் போடலாம். விதம் விதமாய் உண்ணலாம். சமுதாய மதிப்பு பெருகும். வீட்டின் கடன்களும், கடமைகளும் ஒரு ஐந்து வருடத்தில் முடித்து விடலாம். இதை விட வேறு என்ன வேண்டும். லேசாக கண்ணை மூடினால், புகையுடன் கூடிய கனவுதான்...........

இது போக, ஒரு 1-2 வருசத்துல, ஊருக்கு திரும்பி வந்தீன்னா, ஊர்க்கார பய அம்புட்டு பேரும், தன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, கல்யாணம் பண்ணிக்கோன்னு வரிசைல வந்து நிப்பானுவ. இப்படி, கல்யாண பேச்சை கொணர்ந்து, பையனை வளைத்து விடுவார். பையனின் முகமும் 100 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகும். இதையும் கவனித்து, பையனுக்கு இப்போவே கல்யாண களை வந்துடிச்சி என்று சொல்லுவார்.

அதே மப்பில் திரும்பி வந்து, கடனை, உடனை வாங்கி, காடு கரையை வித்து, எப்படியோ பணம் தேத்தி, பாழாய் போன ஏஜெண்டிடம் தந்து ஏமாந்தவர் நிறைய பேர்.

'எனக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் பாரின் போற மூஞ்சியா' என்ற பொறாமையின் உச்சகட்ட வசவுகளையும் கேட்டு வாடிய மலர்கள் பல.

இதை விட கொடுமை. பயணம் எல்லாம் ஏற்பாடு ஆகி வீட்டில் எல்லாம் பிரியாவிடை பெற்று ஜம்மென்று கிளம்பி விடுவார். "இன்னைக்கு சென்னை பம்பாய் ப்ளைட், நாளை மறுநாள் பம்பாய்ல இருந்து நேர பாரின்".

இதை கேட்டதும், அன்றைய ராத்தூக்கம் போச்சு. தன் மனதுக்கு பிடித்த, நடிகைகள் கனவில் (இது கண் முழித்தே காணுவது) வந்து, நம் நாயகனின் கை பிடித்து டூயட் பாடுவார்கள்.

சில சமயம் நடப்பது என்னவோ பம்பாய் சென்று மாத கணக்கில் காத்திருக்கும் கொடுமை உண்டு. அங்கேயும் நிறைய நம்மை போலவே ஆட்கள் உண்டு. காலை விடிந்தால் இன்று விசா வரவேண்டும் என்று பிரார்த்தனைகள்.

போயிட்டு வாரேன் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு செல்லும் பக்கத்து அறை தோழன் . இவன் இன்று நான் என்று என்ற ஏக்கம். இந்த நிச்சயமிலாத நரகத்தில் வாழ்ந்த நிகழ்வுகளும் உண்டு.

ஒரு வழியாக விசா வந்துவிடுகிறது. ஆனால் ...............

(தொடரும்.........)

17 comments:

UMA said...

அப்படியே உண்மையை சரியாக எழுதி உள்ளீர்கள். நிறைய வீட்டில் துபாயிலிருந்து வந்த பணத்தை வீடு உறவினர்கள் விழுங்கும் காட்சிகளும், மனைவி துரோகம் செய்வதும் இன்றும் நடந்து வருகிறது. வெப்ப இடத்தில், கடின உழைப்பில் , ஓவர் டைம் வேலை பார்த்து ,சரியாக சாப்பிடாமல்,தூங்காமல் வேலை செய்து அனுப்பும் பணத்தில் சுகம் அனுபவிப்பது அவரது உறவினர்களே.

mazhai said...

உண்மைகளை போட்டு உடைக்கும் எளிமையான நடை - நன்றாக எழுதுகிறீர்கள் : வாழ்த்துக்கள்.

R.Gopi said...

வருகைக்கு நன்றி உமா,

பொட்டில் அடித்தாற்போல் தங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்.

தொடர் உண்மைகள் பல வர உள்ளன. வந்த வண்ணம் இருங்கள்.

(நீங்கள் மட்டும் என்ன...... படு தைரியமாகத்தான் உங்களின் கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள்.)

R.Gopi said...

//mazhai said...
உண்மைகளை போட்டு உடைக்கும் எளிமையான நடை - நன்றாக எழுதுகிறீர்கள் : வாழ்த்துக்கள்.//

**********

வருக வருக மழை.........

தங்கள் தொடர் வருகையும், கருத்துக்களும், என்னை மேலும் நன்றாக எழுத உற்சாகப்படுத்துகிறது.

சித்து said...

ஆரம்பமே படிக்கும் பொழுது மனம் எதோ ஒரு மாதிரியாக இருக்கிறது. அந்த மாய உலகத்தை பற்றி மேலும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

R.Gopi said...

//சித்து said...
ஆரம்பமே படிக்கும் பொழுது மனம் எதோ ஒரு மாதிரியாக இருக்கிறது. அந்த மாய உலகத்தை பற்றி மேலும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.//

************

வருகைக்கு நன்றி சித்து

தொடர்ந்து வாருங்கள்....... படியுங்கள். இப்போதுதான் ௨ பாகம் முடிந்து இருக்கிறது. இன்னும் நிறைய வர இருக்கிறது.

எழுதும்போது எனக்கே மனது கனக்கிறது.

வாடும் தொழிலாளர்களின் வாழிவில் வசந்தம் வர அந்த ஆண்டவனை வேண்டுவோம்.

அது ஒரு கனாக் காலம் said...

நன்றாக எழதுகிறீர்கள், இதற்கான தீர்வு, அரசாங்கம் மனது வைத்தால் உண்டு, ஒரு பிரிவு , இதற்கென்று உண்டாக்கி , நல்ல I.A.S ஆபிசரை நியமித்து , நிறைய செய்யலாம் , எதிர் காலத்தில் வரும் என நம்புவோமாக

R.Gopi said...

//அது ஒரு கனாக் காலம் said...
நன்றாக எழதுகிறீர்கள், இதற்கான தீர்வு, அரசாங்கம் மனது வைத்தால் உண்டு, ஒரு பிரிவு , இதற்கென்று உண்டாக்கி , நல்ல I.A.S ஆபிசரை நியமித்து , நிறைய செய்யலாம் , எதிர் காலத்தில் வரும் என நம்புவோமாக.//

***********

வருகைக்கு நன்றி அது ஒரு கனாக்காலம்.

தங்கள் கருத்தும் நன்று. இதுபோல் எல்லாம், செய்ய வேண்டும். ஆனால், செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

அதற்கு காரணம், நாம் அனைவரும் (இங்கு வேலை செய்பவர்கள்) ஒன்று பட்டு தங்கள் கஷ்டங்களை முறையாக தெரிவிக்க வேண்டும்.

இதில், பெரிய அளவில், இந்திய அரசாங்கத்தின் தலையீடு தேவை. யோசித்து பாருங்கள். உள்ளூரில் ஓட்டு வாங்குபவர்களே, போட்ட ஓட்டுக்கு எதுவும் செய்யாமல், நம் கண்ணெதிரில் நடமாடுகிறார்கள். நாம் அவர்களை ஏதாவது கேட்கிறோமா?? இல்லையே, அதுபோல் தான் இதுவும்.

நல்லவர்கள் ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்தால்தான், இது போன்ற இழிநிலைக்கு இரக்கப்பட்டு ஏதாவது செய்வார்கள்.

அவ்வளவு கொடுப்பினை நமக்கு இருக்கிறதா என்ன?? (அதான், நல்லவர்கள் ஆட்சி பொறுப்பில் உட்காருவதற்கு).

Govind Seenivasan said...

Excellent Start. Waiting to read more. Keep up the good work.

கிரி said...

//அது ஏன், என்னன்னு தெரியல எல்லா ஏஜெண்ட் ஆபிஸ்லயும் ஒரு பொம்மை விமானம் இருக்கும். … வரவேற்பறையில் கூட்டமாய் சில மனிதர்கள்.//

வெற்றிக்கொடி படம் நினைவிற்கு வருகிறது

//இந்த காட்சி நம் கவுண்டமணி சூரியன் படத்தில் பேசும் டகால்டி தொலைப்பேசி காட்சி போலவே இருக்கும்//

ஒப்பீடு அருமை

//இதையும் கவனித்து, பையனுக்கு இப்போவே கல்யாண களை வந்துடிச்சி என்று சொல்லுவார்.//

கலக்கல் :-)))

கோபி நல்ல எளிமையான நடை ..வாழ்த்துக்கள்

srinivasan said...

i enjoy reading this write up. so very true....

raju,dubai

R.Gopi said...

//srinivasan said...
i enjoy reading this write up. so very true....

raju,துபாய்//

**********

வருகைக்கும் நன்றி ஸ்ரீனிவாசன் ராஜா, துபாய்.

தொடர் வருகை தாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.

கயல்விழி நடனம் said...

ayal naattu mokaththil ullathaiyum tholaiththu yemanthu nirppavarai paarkkum pothu parithabaththai vida kobabe melongi nirkirathu (yeppothu thirunthuvaarkal endru...)....

athai vida kodumai oru murai ayal nadu sendru thirumbum attkal podum padamum mokkaiyum..appadiye avangala yellam..sari vidunga......(vadivelu - parthuban niyabakam thaan varum...)

R.Gopi said...

வாழ்க்கையை சீர் தூக்கி பார்த்து வாழ்பவர்களுக்கு எந்நேரமும் ஒன்றே என்று தோன்றும்...........

நான் இங்கிருந்தாலும், நிதம் என் மனம் அங்கேயே (நம் நாட்டிலேயே) உலவும்..........

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா??""

R.Gopi said...

வாங்க கிரி

தங்கள் பாராட்டுக்கு நன்றி கிரி.......... இன்னும் இருக்கு.........

R.Gopi said...

//Govind Seenivasan said...
Excellent Start. Waiting to read more. Keep up the good work.//

Thanks Govind Seenivasan for your visit and encouragement. Will write more in the days to come. Please visit...

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
ayal naattu mokaththil ullathaiyum tholaiththu yemanthu nirppavarai paarkkum pothu parithabaththai vida kobabe melongi nirkirathu (yeppothu thirunthuvaarkal endru...)....

athai vida kodumai oru murai ayal nadu sendru thirumbum attkal podum padamum mokkaiyum..appadiye avangala yellam..sari vidunga......(vadivelu - parthuban niyabakam thaan varum...)//

*********

Vaanga Kayal Vizhi Nadanam

Neenga solra maadhiri ellaarum appadi irukkaradhu illa.

Even in my case, i do not have any foreign goods (bought in Dubai) in my house. The TV and the Music Set i own in my house at India, is bought in India only......