மதுரக்கார ரோசக்கார பய "குடிவேலு"


டேய்,

நீ சரியான ஆம்பளையா இருந்தா, என் மேல கை வச்சு பாருடா....... அப்புறம் தெரியும் நான் யாருன்னு ....... இப்படி வீராவேசமா குரல் கொடுத்தவரின் படம் இதோ இங்கே (சரக்கு கடையில வச்சு எடுத்தது, அதாங்க டாஸ்மாக் கடை).....
அப்படி குரல் கொடுத்ததற்கு காரணம், அவர் கையில் உள்ள மருந்து குப்பிதான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

நான் மதுரக்காரண்டா ........ ரவுசுக்கும், லந்துக்கும் பொறந்தவண்டா ...... என்கிட்டயேவா ...... நீ எந்த ஊர்ல போய் பிரச்சாரம் பண்ணினாலும், என் சங்கத்து ஆளு அங்க வருவாண்டா...... நீ என்கிட்டே கூட பதில் சொல்லாம தப்பிச்சுடலாம் ..... ஆனா என் சங்கத்து ஆளுகிட்ட தப்பிக்க முடியாது.,..........

ஒன்னிய நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்............ இந்த எலக்சன்ல ஒன்னிய பாத்தா எனக்கு பாவமா இருக்குடா ...... நீயும் போண்டி, உன்னிய நம்பி வந்தவனும் போண்டி ............ ஐயோ ஐயோ ..............
நான்கூட நாலாம்பு படிக்கறப்போ 40-க்கு 4 மார்க் வாங்கினேண்டா ..... ஆனா நீ இப்போ 40-க்கு பெரிய முட்டை தாண்டா வாங்கபோற.......... அத வச்சு, நான் அடிக்கற சரக்குக்கு ஒரு ஆம்லெட் கூட போட முடியாதுடா சல்லிப்பயலே என்று கோபமாக திட்டி தீர்த்தார் (யாரை திட்டினார் என்று கேட்க வேண்டாம்).
(சற்றுமுன் வந்த செய்தி - வடிவேலுவை "குடிவேலு" என்று அன்பாக அழைத்ததாக கேப்டன் விஜயகாந்த் கூறினார். அப்போ இது உண்மை இல்லையா என்று கேட்டபோது, சும்மா லுல்லுல்லாயிக்கு என்று கூறினார். ஆயிரம் இருந்தாலும் வடிவேலு தன் ஊர்காரபய என்று பாசமாக தெரிவித்தார். இந்த லுல்லுல்லாயி மேட்டரில் தான் கலைஞரை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்).
திடுக்கிடும் உண்மை - விஜயகாந்த் தன் பிரச்சாரத்தை முடித்தவுடன் நேராய் சென்று வடிவேலுவை சந்தித்ததாகவும், பின் இருவரும் இணைந்து அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று 4-5 மணி நேரம் போதையில் மிதந்ததாகவும் "டாஸ்மாக்கார்" தெரிவித்தார்.

5 comments:

நான் அவன் இல்லீங்கோ said...

அதென்ன சங்கம்?? வருத்தப்படாத வாலிபர் சங்கமா?? இவன் ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்.

கீழை ராஸா said...

ஏன் இந்த கொலைவெறி..?

R.Gopi said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

நான் அவன் இல்லீங்கோ
கீழை ராசா

தொடர்ந்து வாருங்கள், பதிவுகளை படியுங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

padukali said...

படத்துக்கு பதிவா
பதிவுக்கு படமா ----
நிக்க வைச்சு போஸ் கொடுத்தாரோ.

வடி.... அந்த பார்வை சூப்பர் அண்ணன்

முட்டை டாஸ்மாக் நு போட்டு தாளிக்கிரீங்க தலை, தூள் கிளப்புங்க

R.Gopi said...

வாங்க படுக்காளி, வருகைக்கு நன்றி

படத்திற்கு பதிவா

பதிவிற்கு படமா??

நல்ல கேள்வி. இரண்டும் சாத்தியம் அய்யா.

இங்கு, படத்திற்கு பதிவு என்பது சரி.