மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 3)






நம் விசா வந்து விட்டதா இல்லையா என்ற படபடத்த நெஞ்சத்துடன் ஏஜண்டை கேட்ட போது, விசா வந்து விட்டதாக சொன்னதும் மனதார அனைத்து கடவுளுக்கும் நன்றி சொல்லி பயணத்திற்கு தயாராகினேன்.

ஏர்போர்ட் அடைந்து, அங்கிருக்கும் அனைத்து விஷயங்களையும் முடிக்கும் முன் நாக்கில் நுரை தள்ளிவிட்டது. எத்தனை எத்தனை கேள்விகள்... எத்தனை எத்தனை சோதனைகள் .........

அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானம் உள்ளே ஏறி அமர்ந்ததும், கண்ணில் அவனை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

இப்போது அயல்நாடு போனால், தன் சுற்றம், சூழத்தை பார்க்க, எப்போது திரும்பி வருவோமோ?? என்றெல்லாம் எண்ணியது மனது.

விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பியது. சொசுசான விமான பயணம். வண்டி போற மாதிரியே தெரியலையே நம்ம ஊரு பல்லவன் பஸ் 40 கிலோமீட்டர்ல போற போது எப்படி இருக்கும். தூக்கி தூக்கி போடும், சிவ்வுன்னு காத்து அடிக்கும். ஆனா, இது 400 கீமி வேகத்திலே போனாலும் ஒண்ணுமே தெரியலையே... ஒரு சத்தம். வயித்து வலி வந்தா முச்சு பிடிச்சு விடுற மாதிரி ஒரே முக்கல்.... அதே முக்கல்தான் கடைசிவரை.

வந்து இறங்கி தலை நிமிர்த்தி பார்த்தால் என்ன இது, விமான நிலையமா இல்லை இது தான் சொர்க்கபுரியா??. ஆச்சரியத்தில் விரிந்த வாயில், ஒரு நூறு ஈ போய் வந்தால் கூட தெரியாது. என்ன ஒரு வாசனை, சுத்தம் என்று நாட்டின் மதிப்பை இந்த இடத்தை வைத்து மனம் எண்ணி கொள்ளும்.

நாம் அதிர்ஷ்டசாலி என்று உள்ளுணர்வு கூக்குரல் இடும். மிக உயர பறந்து வந்ததால் காது லேசாய் அடைத்து, வயிறு லேசாய் குழம்பி, அசதி சேர்ந்து உடல் சற்று அவஸ்தையாய் இருக்கும்..

புரியாத மொழி, மனிதர்கள், நடப்புகள் என்று எத்தனை படித்தவர் ஆனாலும் சிறு பிள்ளை போல் திருவிழா கூடத்தில் தொலைந்த தோரணையில் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.
சவுதி அரேபியா அளவு (போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனை)இல்லையென்றாலும், துபாயிலும், போதை மருந்து வைத்து இருந்தாலோ, கடத்தினாலோ, பெருங்குற்றம். ஆயுள் தண்டனை நிச்சயம் (நம்மூர் போல் 14 வருடங்கள் இல்லை, இங்கு ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்கள்).

முதல் அதிர்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளின் வெப்பம் தான். வெயில் காலத்தில் வந்து இறங்கும் அத்தனை பேருக்கும் இந்த அதிர்ச்சி உண்டு. இத்தனை சூடும், இதனை பளீர் என்று சூரியனும் நாம் பார்த்திராதது. கண்கள் இந்த பளீர் ஒளி கண்டு அனிச்சையாய் மூடி கொள்ளும். தோல் இந்த சூடு பார்த்து லேசாய் சொரியும். இந்த அசௌகரியங்களையும் மீறி ஊரின் பணம் பளபளப்பு தெரியும்.

வழுக்கி ஓடும் சாலைகள் மிக பறந்து விரிந்து பிரமாண்டமாய் இருக்கும். இது தாரில் செய்த ரோடா அல்லது பளிங்கில் செய்ததா. ஒரு குண்டு, குழி இல்லையே?? இங்கேயே இல்லை விரித்து, கல்யாண பந்தி போடலாமே??

மிக நேர்த்தியான கார்கள். நம் ஊரில் சொகுசு கார் என்று நாம் சொல்லிய டப்பா வண்டிகள் (கரகாட்டக்காரன் படத்தில் வருவது) போல் இல்லை. ஆடாமல் அசையாமல் படகு போல் மிதந்து செல்லும் குளு குளு வண்டிகள்.

இங்கு ஓடும் வண்டிகளில், ஜப்பான் வண்டிகளுக்கே முதலிடம்.. நல்ல வண்டிகளாக இருந்தாலும், ஐரோப்பிய வண்டிகளின் விலையும், ஓடும் எண்ணிக்கையும் குறைவே. இல்லை என்று சொல்லமால் நம் ஊர் பியட் கார் ஒன்று ஐந்து வருடத்திற்கு முன்னால் ஓடி கொண்டு இருந்தது.. இப்போது அது இல்லை. மஹிந்திரா, ஹுண்டாய் வண்டிகள் சொற்ப அளவில் ஓடுகிறது.

ஒட்டு மொத்த துபாயை பார்த்தால், மிக மிக சிறிய ஊர்தான். சென்னையின் டி.நகர் (T.NAGAR) அளவுதான் இருக்கும்.. இதை படிக்கும் போது, மிகைப்படுத்திய வாக்கியம் என்று நினைக்க வேண்டாம்.

எங்கெங்கு காணினும் ஒருவர் மட்டுமே ஒட்டி செல்லும், படகு கார்கள். ஏனெனில், இங்கு பெட்ரோல் விலை, குடிநீர் விலையை விட குறைவு. பஸ்கள் குறைவு, சாமான்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் குறைவு. நகரத்தின் சாலை நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாலை விஸ்தரிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, சாலை வழி கடந்து, தங்குமிடம் வந்து சேர்ந்து விட்டோம். என்ன, அந்த பிரம்மாண்டம் மட்டும் இன்னும் மனதிலும், கண்ணிலும் தேங்கி இருக்கிறது.

இங்கே என்ன !! .............

20 comments:

கிரி said...

//அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானம் உள்ளே ஏறி அமர்ந்ததும், கண்ணில் அவனை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது//

"சோதனை" இங்கேயே ஆரம்பம் ஆகி விட்டது

//முதல் அதிர்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளின் வெப்பம் தான். வெயில் காலத்தில் வந்து இறங்கும் அத்தனை பேருக்கும் இந்த அதிர்ச்சி உண்டு. இத்தனை சூடும், இதனை பளீர் என்று சூரியனும் நாம் பார்த்திராதது//

அனைவரும் கூற கேட்டு இருக்கிறேன்..மூக்கில் ரத்தம் கூட வரும் என்று பயமுறுத்தினார்கள்..இருந்தும் அதை பார்க்க எனக்கு விருப்பமுண்டு

//இங்கேயே இல்லை விரித்து, கல்யாண பந்தி போடலாமே??//

வடிவேல் சொல்ற மாதிரியா! :-)

சூப்பரா போகுது தொடர்

Vishnu - விஷ்ணு said...

// ஒரு குண்டு, குழி இல்லையே?? இங்கேயே இலலை விரித்து, கல்யாண பந்தி போடலாமே?? //

தமிழன் அய்யயோ நான் தமிழன்.

ப.கந்தசாமி said...

மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் படித்த பிறகு வேதனைதான் மிஞ்சுகிறது.

R.Gopi said...

//விஷ்ணு. said...
// ஒரு குண்டு, குழி இல்லையே?? இங்கேயே இலலை விரித்து, கல்யாண பந்தி போடலாமே?? //

தமிழன் அய்யயோ நான் தமிழன்.//

*******

வணக்கம் விஷ்ணு.... நீங்க தமிழன் தான், அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல..

//Dr.P.Kandaswamy said...
மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் படித்த பிறகு வேதனைதான் மிஞ்சுகிறது.//

********

வாங்க Dr.கந்தசாமி,

தொடர் வருகைக்கு நன்றி. எல்லா பூக்களும் வாசனையாக இருப்பதில்லை. பாலைவன வாழ்க்கை என்பது "கானல் நீர்" போன்றது.......

வெளியே இருந்து பார்த்தல், பகட்டாக தோன்றுமே தவிர, உள்ளே வந்தால், யானை வாய் கரும்புதான்.........

R.Gopi said...

//அனைவரும் கூற கேட்டு இருக்கிறேன்..மூக்கில் ரத்தம் கூட வரும் என்று பயமுறுத்தினார்கள்..இருந்தும் அதை பார்க்க எனக்கு விருப்பமுண்டு //

கிரி, எதை..... ரத்தம் வரதையா....... உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி......

வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், இது ரத்த பூமிய்யா.......

அப்படி ஒன்றும், நீங்கள் சொல்வதுபோல், இந்த பாலைவன சூடு விரும்பத்தக்கதாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்..............

அது ஒரு கனாக் காலம் said...

நான் படித்து வளர்ந்த திருச்சி துபாயை விட பெரிது என்று சொன்னால் என்னோட நண்பர்கள் ஒரு மாதிரி பார்பார்கள்... நீங்க தி.நகரை சொல்லிவிட்டீர்கள்.

சித்து said...

தொடர் நல்லா போகுது, படிக்கும் பொழுது அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் ஒவ்வொரு பகுதியும் மிக குறைந்த அளவே எழுதுகிறீர்கள் இது ஒரு சிறிய ஏமாற்றம் அளிக்கிறது, இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுத முயற்சி செய்யுங்கள் நண்பரே. ஒரு ஆவலில் தான் சொன்னேன்.

R.Gopi said...

//அது ஒரு கனாக் காலம் said...
நான் படித்து வளர்ந்த திருச்சி துபாயை விட பெரிது என்று சொன்னால் என்னோட நண்பர்கள் ஒரு மாதிரி பார்பார்கள்... நீங்க தி.நகரை சொல்லிவிட்டீர்கள்.//

************

வாங்க பாஸ்..........

இந்த காலத்துல உண்மைய சொன்னா யாரு நம்புறாங்க.........புல்லா கட்டிட்டு உண்ணாவிரதம் இருக்கறேன்னு சொல்றவன்தான் பெரிய தியாகி ..........

*************

வாருங்கள் நண்பர் சித்து அவர்களே

நிறைய எழுதுவோம். தொடர்ந்து படியுங்கள்..... பார்ப்பதற்கு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இங்கு இல்லை.......... சில பல பெரிய ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர..............

பை நிறைய பணம் இருப்பவர்களுக்கு, துபாய் சொர்க்கம்...........

Anonymous said...

I am also in middle east. Here a lot of people from rural areas have come selling their properties for paying to the agents. Also they donot gt to see their families once in even 2 years. There is very little govt. is doing to help these people. The air ticket to India is the highest compared to other countries in Asia. Indian Govt. can give air fare at concessional rates for Indian citizens with labour visa. This should be possible ,as many economy airlines can afford to fx fare at 1700 Rs + taxes. Indian Govt gives subsidy for Haj travel where It doesnot get anything in return. Whereas the Indians in Mideast earn foreign exchange for the country. If the govt. is not able to do anything in this regard. Well to do Indians(tamils) can set create a trust & set aside a small sum every month to help these unfortunate people.

R.Gopi said...

//Anonymous said...
I am also in middle east. Here a lot of people from rural areas have come selling their properties for paying to the agents. Also they donot gt to see their families once in even 2 years. There is very little govt. is doing to help these people. The air ticket to India is the highest compared to other countries in Asia. Indian Govt. can give air fare at concessional rates for Indian citizens with labour visa. This should be possible ,as many economy airlines can afford to fx fare at 1700 Rs + taxes. Indian Govt gives subsidy for Haj travel where It doesnot get anything in return. Whereas the Indians in Mideast earn foreign exchange for the country. If the govt. is not able to do anything in this regard. Well to do Indians(tamils) can set create a trust & set aside a small sum every month to help these unfortunate people.//

************

உண்மைதான். நல்ல கருத்து...... ஆனால், நம் நாட்டில் உள்ள பாழாய்ப்போன அரசியல்வியாதிகள் தனக்கும், தன் குடும்பத்திற்கும், இந்த பணத்தை தானே எடுத்து ஒழித்து வைக்கிறார்கள்.. என்ன செய்வது, நம் விதியை நொந்து கொள்வதை தவிர..

cdhurai said...

கோபி...

துபாய் பற்றி சொல்லவரும்போது அவசியம் இங்குள்ள மக்களை பற்றி சொல்ல மறந்து விடாதிர்கள்...

உதாரணமாக...கொலையாளி ( மலையாளி ) செய்யும் லிலை வேலைகளை பற்றி... பாகிஸ்தானி மக்களின் கடுமேயான உழைப்பு .... அரேபியா மக்களின் நல்ல பழகும் தன்மை .... மற்றும் அரேபியா சிங்கங்களின் செக்ஸ் விளையாட்டுகள் பற்றி .....

அப்புறம் நம் தமிழ் மற்றும் இந்திய மக்களின் கேவலமான அணுகுமுறை.. ஒரு டீ வங்கி குடிக்க யோசிப்பது பற்றி இப்படி பல பல...

என்றும் அன்புடன்
செல்லதுரை , துபாய்

R.Gopi said...

//cdhurai said...
கோபி...

துபாய் பற்றி சொல்லவரும்போது அவசியம் இங்குள்ள மக்களை பற்றி சொல்ல மறந்து விடாதிர்கள்...

உதாரணமாக...கொலையாளி ( மலையாளி ) செய்யும் லீலை வேலைகளை பற்றி... பாகிஸ்தானி மக்களின் கடுமையான உழைப்பு .... அரேபியா மக்களின் நல்ல பழகும் தன்மை .... மற்றும் அரேபியா சிங்கங்களின் செக்ஸ் விளையாட்டுகள் பற்றி .....

அப்புறம் நம் தமிழ் மற்றும் இந்திய மக்களின் கேவலமான அணுகுமுறை.. ஒரு டீ வங்கி குடிக்க யோசிப்பது பற்றி இப்படி பல பல...

என்றும் அன்புடன்
செல்லதுரை , துபாய்//

***********

வாங்க "தல" செல்லதுரை........

நிறைய சொல்ல இருக்கிறேன்............. தொடர்ந்து படியுங்கள்....... தங்கள் கருத்துக்கு நன்றி.............

கயல்விழி நடனம் said...

Nalla irukkunga....wait..part 1 and 2 padichittu varen...

R.Gopi said...

வாங்க கயல்விழி.........

வருகைக்கு நன்றி............ இது என்ன புது விதமா தலை கீழா படிக்கிறீங்க........

அப்படியே ஜோக்கிரியும் போய் பாருங்க......... உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

UMA said...

புகைப்படங்கள் அருமை.

Abu said...

நண்பர் கோபி அவர்களே ,

துபாய் தொடர் சூப்பர் ஆ போகுது. வாழ்த்துக்கள் !

இது அயல் நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் பிரதிபலிப்பு தான் இந்த தொடர்.

அன்புடன்
அபுதாகிர்

mazhai said...

Awaiting for part 4....

butterfly Surya said...

பதிவிற்கு நன்றி..

உமா அவர்கள் வலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஏப்ரல் 26ம் தேதி நான் இட்ட பின்னூட்டம் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னதான் வலையிலும் ஊடகங்களிலும் நாமெல்லாம கத்தி தீர்தாலும் ஈழப்பிரச்சினை ஒரு பெரிய முக்கிய காரணியாக இந்த தேர்தலில் இருக்க வாய்ப்பில்லை.

தி.மு.க + 25 -27 வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் தோறக போகிற பெரிய தலைகள்

Losers:

தங்க பாலு

ஈவிகேஸ்

பிரபு.


=================

Tentative:

வைகோ ( 50 / 50 )

ப.சி ( 50/50 )

=========

Gainers:

அழகிரி.

மாறன்

டி.ஆர். பாலு.

ரித்தீஷ்.


I am not at all favouring any one. I am not belongs to any party.l

My guess...

ராமகுமரன் said...

article in dinamalar varamalar about a tailor cheated and made as a shepherd in gulf

http://epaper.dinamalar.com/DM/DINAMALAR/2009/05/31/INDEX.SHTML?ArtId=002_001&Search=Y

R.Gopi said...

//வண்ணத்துபூச்சியார் said...
பதிவிற்கு நன்றி..

உமா அவர்கள் வலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஏப்ரல் 26ம் தேதி நான் இட்ட பின்னூட்டம் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.//

********

Yes i remember. Your prediction is excellent. Congrats.

//RamKumar said...
article in dinamalar varamalar about a tailor cheated and made as a shepherd in gulf//

-*-*-*-*-*-*-*-*-*-*

Ramkumar,

There are 1000s of such happenings in and around the world and Malaysia being the leader and next comes GULF.