தமிழ் புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள்






புத்தாண்டாம் இனிய தமிழ் புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று

கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
தமிழ் புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்தி அடிப்போம், அதை இந்த நேரத்தில்

மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம் - ஏனெனில்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தத்தை நம் மனமும் கொண்டாடும்
ஆயுதங்களை புறக்கணிப்போம் -
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் நீயும் நினை

தானத்தில் உள்ளதோ பலதானம்
அவற்றில் சில - அன்னதானம், கண்தானம், ரத்த தானம், வித்யாதானம்
ஆயினும் - உலகின் தேவை இக்கணம் - சமாதானம்
தீவிரவாதம் வேரறுக்க பாடுபடுவோம்
அமைதியை நிலைநாட்டி ஆனந்தம் கொள்வோம்
நம் வாழ்வில் அமைதி என்றும் நிலைத்திருக்க
அந்த ஆண்டவனை வேண்டுவோம்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

12 comments:

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

R.Gopi said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜாராமன்

தொடர்ந்து வருக.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கிரி said...

உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி

இந்த (சித்திரை) புத்தாண்டு வாழ்த்து கூறியதில் உள்குத்து உண்டா! ;-)

R.Gopi said...

//கிரி said...

உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி

இந்த (சித்திரை) புத்தாண்டு வாழ்த்து கூறியதில் உள்குத்து உண்டா! ;-)//

*********

கிரி வணக்கம்

நம்ம எல்லாரும் "தல"யோட சேர்ந்து, அவரை படித்து, மிகவும் கெட்டு விட்டோம்,.....

"உள்குத்து இல்லாத அக்மார்க் அசல் தமிழ் புத்தாண்டு" வாழ்த்துப்பா இது,

என்ன நம்புங்க.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மடல்காரன்_MadalKaran said...

கோபி அவர்களுக்கும் அவரை சார்ந்த சேர்ந்த அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நல்லா எழுதுறீங்க.
அன்புடன், கி.பாலு

Abu said...

திரு. கோபி அவர்களுக்கும் மற்றும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
அபுதாகீர்

R.Gopi said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மடல்காரன் மற்றும் அபு

தங்கள் வருகையும், வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்தியது. மேலும், எழுதத்தூண்டுகிறது.

தொடர் வருகை தாருங்கள்.

Unknown said...

தல short time memory loss?

//"தல"

நல்லாத்தான் இருந்துச்சு...... அப்படியே என்னோட, இந்த சிலவரி சிறுகதைகளையும் இங்கே போய் வாசிச்சுட்டு சொல்லுங்க.......
http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html
April 1, 2009 8:24 PM
------------------------------------------------
நண்பா நல்லா இருக்கு.ஆனா.....?

ஒரே டைப்பா இருக்கே? வித விதமா
கொடுங்க.stereotypeஆகாம இருக்கும்.அலுப்புத் தட்டாம படிக்கலாம்.

April 1, 2009 11:51 PM
------------------------------------------------

நாங்களும் எழுதி இருக்கோம்ல, எழுதி இருக்கோம்ல ..... சாம்பிளுக்கு ஒண்ணு இங்க.

**************

படத்தின் கதாநாயகன், தன் பெற்றோர்களை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க அண்ணன், தம்பி என்று மூன்று வேடம் இட்டு ஜப்பான் எக்ஸ்போவில் அவர்களை கண்டு பிடிக்கும் கதை -

ஜப்பானில் ஜானகிராமன்

***************
மீதி இங்க போயி பாருங்கப்பு........
http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html
April 8, 2009 8:23 PM
________________________________________________கோபி,

நான் எழுதிய ஒரு வரி கதை:-


Short time memory lossஆ அப்பு என்று ரவிஷங்கர் கோபியைக் கேட்டவுடன் அவசரமாக கோபி இங்கு http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html ஓடிப் பார்த்தவுடன்
வெட்கம் தாங்க முடியவில்லை கோபிக்கு.
________________________________________________

"தலீவா"

சூப்பரு.......... நான்கூட இதுபோல பல சில, சில பல குறுகதைகள் (சில வரி சிறுகதைகள்) எழுதி இருக்கேன்........ நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.

http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html

April 14, 2009 12:02 AM

Unknown said...

தல,

ரொம்ப சாரி.புத்தாண்டு கவிதை நல்லா இருக்கு.சாப்பாடு வடை பாயசம் புல் கட்டு கட்டிட்டு தூங்கிட்டேன்.

//
ஐயோ, சீ, இது என்ன கலாட்டா? இது ஒரு "A" பதிவுடோய் ..//

ஐயோ, சீ...இத பாக்காம ஓடி வந்துட்டேன்.


திரில்லர் கதை படிச்சீங்களா?
//கதையின் முடிவு என்ன? சொல்லியாச்சு!//

R.Gopi said...

நன்றி நண்பர் ரவிசங்கர்

ஏன், SORRY எல்லாம் நட்புக்கு இடையில்?

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வருக.

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

R.Gopi said...

//வம்பு விஜய் said...
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்//

*********

Welcome Vijay

Wish you all the very best ..........

I will come and vote......