மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 1)








துபாய்.

இது என்ன ஒரு ஊரின் பெயரா, இல்லை ஒரு நாட்டின் பெயரா. ஒரு வட்டாரத்தின் பெயரா என்ற தெளிவு இல்லாது, பெயர் சொன்னதுமே மனதில் மரியாதை. கொப்பளிக்கும் மகிழ்ச்சி. ஒரு சொர்க்க புரி கண்ணில் விரியும்.

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ஒரு ஊர் தான் துபாய் என்றால் நிறைய பேருக்கு தெரியாது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்களுக்கு, குவைத், சவுதி என்ற மத்திய கிழக்கு நாடுகள் எல்லாமே கூட துபாய் தான்.

சரி, இது என்ன புது பெயர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

அபுதாபி (தலைநகரம்) துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா (நம்மூர் மட்டன் கைமா அல்ல), புஜைரா, அல் அய்ன் என்று நம் தமிழ் வாயில் நுழையாத அரபி பெயர்களை கொண்ட 7 குட்டி ஊர்கள் சேர்ந்த நாடே அமீரகம் என்றும் அழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

இந்திய தேசத்திற்கு மட்டும் அல்லாது வெள்ளைக்காரனுக்கும் இந்த ஊர் பிடிக்கும். இந்த ஊரை பற்றி மரியாதையான ஒரு எண்ணம் உண்டு. வெள்ளைக்காரன் என்ற ஒரு சொல்லிலேயே, ஐரோப்பிய, சீன, மங்கோலியா வழிவகைகள் அனைத்தையும் அடக்கி விட்டேன்.

நம் தங்க தமிழ்நாட்டிலே "துபாய்" என்ற பெயருக்கும், இங்கிருந்து வாங்கிப்போகும் தங்கத்திற்கும் கொஞ்சம் (ரொம்பவே) மவுசு உண்டு. இதுவே எல்லை தாண்டி சேர நாடு (கேரளா) சென்றால் இன்னும் மவுசு, உபரியாய் பவுசு, சொகுசு எல்லாம் கிடைக்கும். சற்று மேலே நகர்ந்து வடநாடு சென்றால்... சாரி அவ்வளவு இல்லை.

துபாய் பற்றி நமக்கு தெரிந்தது, இந்த துபாய் சென்று திரும்பி வந்த சில "தலைகள்" சொன்னது. அவர்கள் சொன்ன செய்தி கேட்டு, நாம் கூட பல சமயங்களில் அதிசயித்து இருக்கிறோம்.

போய் கொண்டே இருப்போம். பெட்ரோல் காலி ஆச்சுன்னா ரொம்ப கவலை பட மாட்டோம். சரின்னு சொல்லி வண்டிய நிறுத்திவிட்டு ஒரு தண்ணிர் பாட்டில எடுத்துட்டு, ரோட்டோரமா போய், மண்ணை தோண்டி பெட்ரோல் எடுத்து ஊத்தி வண்டியை ஓட்டிடுவோம்.

இதை அட்டகாசமாக நாம் அனைவரும் நம்பும்படி சொன்ன அதிபுத்திசாலி என்ற "அதிமேதாவி அங்குராசு" போன்றவர்களை உங்களுக்கு நிச்சயம் வேறு பெயரில் வேறு ஒரு நிகழ்வில் பரிச்சயம் இருக்கும்.

இன்னொரு விஷயம், இங்கு டீக்கடைகளில் எல்லாம் ஒட்டகப்பாலிலே தான், டீயே போடுவார்கள் (இது வடிவேலு, ஒரு படத்தில் சொன்ன டகால்டி), ஆனால், உண்மையில் பல அங்காடிகளிலே ஒட்டகப்பாலை பார்த்து இருக்கிறோம், அவ்வளவுதான், பருகிய அனுபவம் இல்லை.

எங்க ஊரு மச்சான் சொன்ன கதை இது. "இங்கே சாப்பாடு எல்லாம் பைப்புல வரும். ஒரு பைப்பு தொறந்தா பிரியாணி வரும், இன்னொரு பைப்பு தொறந்தா சாம்பார் சாதம் வரும்" என்று என் பொறாமை தீயை தூண்டியதும் அல்லாமல், "மட்டன் பீசு சிக்கிக்காது" என்ற போது "அது பெரிய பைப்பு" என்ற டகால்டி எல்லாம் நமக்கு அறிமுகம்.

இறை அருளால் துபாய் மண்ணை நேரில் பார்த்து, அங்கேயே வருடங்களாய் வாழும் பாக்கியம் வாய்த்ததால், பெட்ரோல், பிரியாணி தவிர வேறு பல விஷயங்களை பற்றியும் நேரடி தகவல் தர ஆசையும், அக்கறையும் உண்டு.

இத்தகைய தாக்கம் ஏன் வந்தது.

உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பதிக்கும். வெப்பக்காத்து காதை உரச, சாதிக்கும் மற்றும் பாதிக்கும் சில பல, பல, சில விடயங்களை இங்கு பட்டியல் இடுகிறேன்.

***************

முதலில், சொல்ல வேண்டுமானால், யார் யார் எல்லாம் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வருகிறார்கள்? எப்படிப்பட்ட வேலைக்கு வருகின்றார்கள்? இங்கு தற்போது நிலவும் சூழல் என்ன? தோள் தட்டி, புஜ பராக்கிரமம் காட்டி புறப்பட்ட அனைவரும், வெற்றி வீரர்களாக தாயகம் திரும்புகிறார்களா? மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்குள்ள நிறை மற்றும் குறை என்னென்ன என்ற பல விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லாம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள். கட்டுமானம் சம்பந்தப்பட்ட படிப்பாளிகள், மற்றும் கடின உழைப்புக்கு தயாரான உழைப்பாளிகள் துபாய் (யு.ஏ.ஈ. என்ற நாட்டின் ஒரு நகரம்), கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள்.

(தொடரும் ............. )

27 comments:

கிரி said...

துபாய்நாலே வடிவேல் காமெடி தான் நினைவிற்கு வருகிறது :-))

//வெள்ளைக்காரன் என்ற ஒரு சொல்லிலேயே, ஐரோப்பிய, சீன, மங்கோலியா வழிவகைகள் அனைத்தையும் அடக்கி விட்டேன். //

வெள்ளைக்காரன் என்றால் அது அமெரிக்க ஐரோப்பா இடத்தை சேர்ந்தவர்கள் தான்..

சீனர்கள் வெள்ளையாக இருந்தாலும் அவர்கள் வெள்ளையர்கள் கணக்கில் வர மாட்டார்கள்..

சீனர்களும் நம்மை போன்றவர்கள் தான்.. அந்த வெள்ளைகாரர்களை கண்டால் குழைவார்கள்

//தொடரும் ............. //

காத்திருக்கிறேன்

R.Gopi said...

வருகைக்கு நன்றி கிரி

நிறைய எழுத உத்தேசித்துள்ளோம் (நான் மற்றும் லாரன்ஸ் பிரபாகர் (www.padukali.blogspot.com, இவருடையதுதான்).

குருவருள் வேண்டும்

M Arunachalam said...

Gopi (and Lawrence),

Excellant start. Continue rocking with good & insightful narration.

Arun

R.Gopi said...

வருகைக்கு நன்றி அருணாசலம்

நிறைய எழுத இருக்கிறோம்..... வாருங்கள்.........

குப்பன்.யாஹூ said...

யவு செய்து இந்த மாதிரி பர்ஜ் ஆலம், பார் ஜுமான், தேஇரா சிட்டி சென்டர் புகை படங்களை போட்டு சக தமிழர்களை ஏமாற்றாதீர்கள், ஆசையை தூண்டாதீர்கள்.

பர் துபாயில் ஒரு சிறிய அறையில் எட்டு பேர் தங்கும் புகை படத்தை போடுங்கள், அதுதான் யதார்த்தமான பதிவாக இருக்கும். காலை ஆறு மணிக்கு எந்திரித்து எட்டு மணிக்குள், எட்டு நபர்களும் ஒரே கழிவு குளியல் அறை பயன்படுத்தும் நிலையை எழுதுங்கள்.

ஒரே சமையல் அறையில் மூன்று குடும்பப்த்தினர் சமைக்கும் அவலம், மூன்று குடும்பத்து ஆண்கள், பெண்களுக்கும் ஒரே குளியல் அறை போன்ற யதார்த்தங்களை எழுதுங்கள்.

(நான் சொல்வது மூன்று வருடம் முன்பு உள்ள நிலை , இப்போது நிலைமை எப்படி)

வரபோகின்ற சந்ததியினராவது உண்மை நிலை அறியட்டும்.

குப்பன்_யாஹூ

R.Gopi said...

//குப்பன்_யாஹூ said...
யவு செய்து இந்த மாதிரி பர்ஜ் ஆலம், பார் ஜுமான், தேஇரா சிட்டி சென்டர் புகை படங்களை போட்டு சக தமிழர்களை ஏமாற்றாதீர்கள், ஆசையை தூண்டாதீர்கள்.

பர் துபாயில் ஒரு சிறிய அறையில் எட்டு பேர் தங்கும் புகை படத்தை போடுங்கள், அதுதான் யதார்த்தமான பதிவாக இருக்கும். காலை ஆறு மணிக்கு எந்திரித்து எட்டு மணிக்குள், எட்டு நபர்களும் ஒரே கழிவு குளியல் அறை பயன்படுத்தும் நிலையை எழுதுங்கள்.

ஒரே சமையல் அறையில் மூன்று குடும்பப்த்தினர் சமைக்கும் அவலம், மூன்று குடும்பத்து ஆண்கள், பெண்களுக்கும் ஒரே குளியல் அறை போன்ற யதார்த்தங்களை எழுதுங்கள்.

(நான் சொல்வது மூன்று வருடம் முன்பு உள்ள நிலை , இப்போது நிலைமை எப்படி)

வரபோகின்ற சந்ததியினராவது உண்மை நிலை அறியட்டும்.

குப்பன்_யாஹூ//

**********

வருகைக்கு நன்றி குப்பன். நாம் இதுபோன்ற படங்களை போட்டு விட்டு, எழுதும் விஷயங்கள் நீங்கள் சொல்வதை போன்ற விஷயங்களாகத்தான் இருக்கும். அப்போதுதான், இரு வேறுபட்ட நிலையை விளக்க முடியும். நான் தொடர்ந்து எழுத இருக்கும் தொடர்பதிவை படியுங்கள், பின் உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள். இதுபோன்ற எழுத்துக்கள் நிச்சயம் இருக்கும் (இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்).

நிறைய விஷயங்கள் வர இருக்கிறது.

UMA said...

இன்று தான் உங்கள் வலையை படித்தேன் மிக நனறாக இருக்கிறது.

R.Gopi said...

வாருங்கள் உமா

வருகைக்கும், பதிவுகளை படித்து பிடித்தது என்று சொன்னதற்கும்.

நிறைய எழுதி உள்ளேன். அனைத்தையும் படியுங்கள். தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ என்னுடைய மற்றொரு வலைத்தளம், இங்கேயும் விஜயம் செய்யுங்கள்.

www.jokkiri.blogspot.com

Faaique said...

i expect from u too.. not only richness of Dubai but also
tears of labours...

R.Gopi said...

//Faaique said...
i expect from u too.. not only richness of Dubai but also tears of labours...//

***********

Thanks for your visit Mr.Faaique.

I am going to write in detail about everything.

mazhai said...

//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.

R.Gopi said...

//mazhai said...
//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.//

************

மழையின் வருகைக்கும், உள்ளார்ந்த வருத்தம் தோய்ந்த கருத்துக்கும் நன்றி.

உண்மை எப்போதும் கசக்கும். இங்குள்ள சில உண்மைகள் கசப்பின் உச்சம். வெளிச்சம் போடுவோம்............

Anonymous said...

explain about the bachlore accommodation in dubai. 9 people will be using same toilet and bathroom. each person will be allocated a time to use the bathroom. If you get up late you cannot use the washrooms. every one has to clean the wash room on turn basis. The cleaning schedule will be pasted in the washroom door.
The labour accommodation is still worst. there will be 3 tier beds. around 50 to 75 persons has to stay in a small hall. with lot of restriction to use AC.

R.Gopi said...

வருகைக்கு நன்றி அனானி அவர்களே

இந்த அவலநிலை பற்றி எல்லாம் வர இருக்கும் பகுதிகளில் பார்க்கலாம்.

Anonymous said...

If a person coming to dubai, earn (steal) money and go back then it is similar to British came to India and earn our wealths. (ex: kohinoor diamond, Gandhiji belongigs etc)
One must come to dubai or outside india wherever to explore the knowledge only. We have good wealth in our home country. No doubt on them. If Sheik mohammed does not use his brain for this much development then the GCC oil money should have gone to the hands of Anti elements. Sheik has used the labour power (especially from Asian - I dont prefer to shrink as Indians)for the betterment of the world. We dont have guts to criticise the man power agents in Asia who earn money and make the labours stay in bad homes. Because of political system is like that.Dont leave india for money but only for knowledge gain please. HARI OM

Unknown said...

nice beginning.

looking forward to reading more....

raju,dubai

R.Gopi said...

Thanks for your visit and comment Mr.Srinivas

Visit continuously and share your views, comments.

Erode Nagaraj... said...

//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.//

இராஜராஜனின் பெரிய கோவிலுக்குப் பின்னால் கூட கண்ணீர், வியர்வை, ரத்தம் கலந்து தான் இருக்கும்.

அது பிறந்திட்ட மண்ணிலே மறைகின்ற மகிழ்ச்சி-
இது இருப்பிடம் தொலைத்திட்ட இறப்பின் இகழ்ச்சி.
(என் கவிதையிலிருந்து நானே சுட்ட வரிகள்)

R.Gopi said...

//Erode Nagaraj... said...
//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.//

இராஜராஜனின் பெரிய கோவிலுக்குப் பின்னால் கூட கண்ணீர், வியர்வை, ரத்தம் கலந்து தான் இருக்கும்.

அது பிறந்திட்ட மண்ணிலே மறைகின்ற மகிழ்ச்சி-
இது இருப்பிடம் தொலைத்திட்ட இறப்பின் இகழ்ச்சி.
(என் கவிதையிலிருந்து நானே சுட்ட வரிகள்)//

**************

வருகைக்கு நன்றி Erode Nagaraj.

உங்கள் கவிதையும் நன்றாகத்தான் உள்ளது.

தொடர்ந்து வாருங்கள்.

Muruganantham Durairaj said...

அருமையான ஆரம்பம்.

காத்திருக்கிறோம் .

R.Gopi said...

வாங்க முருகானந்தம்

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள், படியுங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ப.கந்தசாமி said...

Joining your blog. Will give comments later.

R.Gopi said...

//Dr.P.Kandaswamy said...
Joining your blog. Will give comments later.//

**********

Welcome Dr.P.Kandasamy.

I am eagerly waiting for your comments.

Anonymous said...

You can also add this information:

http://www.uaetorture.com/

Anonymous said...

also watch latest...

http://www.uaetorture.com/index.php?page=the-video

கயல்விழி நடனம் said...

:)

R.Gopi said...

என்னங்க கயல்விழி

முதல் பாகத்திற்கு எந்த கமெண்ட்டும் இல்லையா??

ஆரம்பம் நன்றாக இருந்ததாக நினைத்து கொண்டிருந்தேன்...........