நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் ஒன்னிய விடமாட்டேண்டா!!!


நம் அருமை அண்ணன் "குடிவேலு" அவர்கள் "டன்மான டமிலன்" அவர்களை பார்த்து சொல்லிய டயலாக் இது.
"நீ எந்த ஊருக்கு போனாலும் ஒன்னிய விட மாட்டேண்டா ..... நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் விட மாட்டேண்டா ..... களவாணி பயலே ... நீயா நானான்னு பாத்துருவோம்டா, சல்லிப்பயலே ............ ஒனக்கு இந்த தேர்தல்ல ஒரு எடம் இல்ல, நிக்கற எடம் கூட ஒனக்கு இல்லாம பண்ணிடுறேண்டா ......"

இந்த இருவருக்கும் உள்ள நெருக்கம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.....

(என்ன ஒண்ணுன்னா, ரெண்டு பேருக்கும் வாய் சவடால் கொஞ்சம் (ரெம்ப) ஜாஸ்தி ........)

அபூர்வ அதிரடி தேர்தல் 2009 கூட்டணி


வாக்காள பெருமக்களே.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் (2009), நீங்கள் பார்த்தால், அதிசயிக்கும் ஏழுலகும் வாய் பிளக்கும் ஒரு கூட்டணி உருவாகி உள்ளது. படங்களை பாருங்கள். தெளிவடையுங்கள்.
இந்த கூட்டணி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா??
இந்த கூட்டணியை பார்த்து, தங்கள் கொள்ளி கண்களையும், நொள்ளை கண்களையும் வைக்க வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (ஓட்டு போட்டு ஏமாறுவோர் சங்கம்) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
(முதலில் இருக்கும் போட்டோவிற்கான "தல"யின் டயலாக் இதோ : ஐயோ கொல்றாங்கோ ....... ஐயய்யோ கொல பண்றாங்கோ ..... ஐயய்யய்யோ காப்பாத்துங்கோ ............... )

யாருங்க இந்த "சின்ன தல"??


பாக்கறதுக்கு அழகா, ஸ்லிம்மா, ட்ரிம்மா இருக்காரே, இவரு யாருங்கோ?? இன்னா சூப்பர் போஸ் குடுக்கறாரு "சின்ன தல"

"சின்னவனே பெரியவனே" பெரியவனா?"
பெரியவனே சின்னவனே"? சின்னவனா?

ஒரு க்ளு வேணும்னா தரேன் .....

இவிங்க அப்பா பெரிய அரசியல்வாதியாம்
(அப்படின்னு அவரே சொல்லிட்டு இருக்காரு...). உங்களுக்கு தெரிஞ்சா கீழ பின்னோட்டத்துல சொல்லுங்க.
பையன் வெறுமனே கை தட்டுறான் .... சரியா பாக்காம, அவன் ஏதோ கசக்கறான்னு நீங்களே முடிவு பண்ணிடாதீங்க ........... பாவம் பச்ச புள்ள ........... போட்டோ புடிக்கறவன் அப்படி போட்டோ புடிச்சுட்டான். அதுக்கு இந்த பச்ச புள்ள என்ன செய்வான்?
(இன்னொரு முக்கியமான விஷயம் ... வளர்ற புள்ளைய பாத்து கண்ணு வச்சுடாதீங்க, சொல்லிப்புட்டேன் )..

தேர்தல் கூட்டணி - களவாணி கயவர்கள்






அரசியல் ஆடுகளம்
ஆனதிங்கு போர்க்களம்

கடலென ஓடும் கள்ளப்பணம்
அவை அனைத்தும் நம் வரிப்பணம்

ஏழைகளின் வயிற்றில் அடித்து சேர்த்தது
மொத்தமும் டாஸ்மாக் கடைக்கு போய் சேர்ந்தது.

எங்கெங்கு காணினும், பார்க்கும் இடமெங்கும் வண்ண வண்ண போஸ்டர்கள்
இருக்கும் ஏழை பாழைகளுக்கு என்ன செய்தார்கள் இந்த போஸ்டர் மாஸ்டர்கள்?

களவாணி கயவர்கள், பல கரைவேட்டிகளில்
பட்டி தொட்டியெங்கும், பலபல தட்டிகளில்

நேற்றுவரை வசைபாடிய எல்லோரின் வாய்கள்
நம்மை பார்த்து, கூசாமல் கூப்புது கைகள்

எதிரே நின்றவனை ஏசி ரூமில் இருந்து ஏசியவர்கள்
இன்று அதே ஏசி ரூமில் கூட்டணிக்கு பேசுவார்கள்

கையில் உருப்படியாய் இருக்கும் நம் ஓட்டை
துருப்பாய் வைத்து ஆடுவோம் வேட்டை

நம் கைகளில் இருக்கும் அந்த துருப்பு சீட்டை
வைத்து, பிடிப்போம் கள்ளர்களின் கழுத்தை

சிறிது அசந்தாலும், நம் ஓட்டு நம்மிடம் இல்லை
தெளிவாய் இல்லையேல், நாமே நம்மிடம் இல்லை.

பிடிப்பார்கள் கள்ளர்கள் நம்ம ஊரு கோட்டை
பிடித்ததும் போடுவார்கள் நாட்டை - ஆட்டை!!

மக்களே பாருங்கள் களவாணிகளின் கூட்டணி
பார்த்ததும் சொல்லுங்கள், மவனே மாட்டுனடா நீ ............

நவ அவதாரம் (தசாவதாரம் அல்ல) - டெர்ரர் டி.ஆர்.

ஹலோ ........ ஹல்லல்லோ ....... இது தசாவதாரம் இல்லீங்கோ ஓ.

இந்த அவதாரங்களை எண்ணி பாருங்கள். பத்தில் ஒண்ணு குறைந்து ஒன்பதுதான் இருக்கும். அதுதான் " நவ அவதாரம்".

அதுவும், டெர்ரர் டி.ஆர்-னா சும்மாவா?? பாருங்க, ஒவ்வொரு போட்டோலயும் ஒவ்வொரு மாதிரி கலக்கறாரு.......... கழுத்துல 12-13 செயினு வேற (செயினு கரடிக்கு கூடவா போடுவாங்க??) ......

திருவிழால
விக்கற வெள்ளை கலர் கண்ணாடி என்ன ...... ஆந்திரா கலர் டிரஸ் என்ன!! ஒரு போட்டோல ஒயிட் அண்ட் ஒயிட்ல கூட கரடி கலக்குதுப்பா ...........
தார் டப்பா சைஸ்ல ஒரு உருண்டையான ஒடம்பு என்ன (கேட்டா நான் இன்னும் யூத்து சார்னு பச்சையா, மஞ்சளா, செவப்பா பொய் சொல்றாரு).

தமிழ்நாட்ட பிடிச்ச கெரகம் யார விட்டது. ...... அடுத்து கூட ஏதோ, "கருப்பண்ணன் காதலி"ன்னு சொல்லி, புது டெர்ரர் குடுக்கறாரு. சின்ன உருளை குறளரசன் உருள (சீ ....... நடிக்க) போறாராம்.!!..........

வரான் பாரு வரான் பாரு குறளரசன்
அவன் வந்து விட்டா, வந்து விட்டா இந்த ஊருக்கே அரசன் ........
அவன் அண்ணன் பாரு, அண்ணன் பாரு சிலம்பரசன் .........

டைட்டில் சாங் ரெடி......... தயாரிப்பாளர் (உஷா ராஜேந்தர்) ரெடி....... டைரக்டர் (பெரிய கரடி) ரெடி......... எல்லாம் ரெடி ...........

ஆனா ........... மக்கா ........ இந்த கண்ராவிய பாக்கறதுக்கு நாங்க மட்டும் ரெடி இல்லேடா ............. மக்கா ........

என்ன பொருத்தம், ஆஹா என்ன பொருத்தம்



மனதில் உறுதி வேண்டும் - சுஹாசினி நடித்து இயக்குனர் சிகரம் கே.பி டைரக்ட் செய்த படம். அருமையான படம். இந்த படத்திற்கு அருமையான இசை இசைஞானி இளையராஜா. சின்ன கலைவாணர் (??) விவேக் அறிமுகமான படம். ஒரு பாடலில், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மூவரும் இணைந்து நடித்து இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் அந்த பாடலில் தன்னுடன் நடித்த மற்ற இரு நடிகர்களையும் தன் ஸ்டைலால் ஊதி தள்ளி இருப்பார்.

மாப்பிள்ளை - சூப்பர் ஸ்டார் நடித்த படம். படத்தின் இயக்குனர் காலஞ்சென்ற ராஜசேகர். இந்த படத்திற்கும் அருமையான இசை, இசைஞானி இளையராஜா. ரஜினி மிகவும் ஸ்டைலிஷாக இருப்பார் இந்த படத்தில். இசையும் அதிரடியாக இருந்தது. ரஜினியின் திரையுலக வரலாற்றில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது (அந்நாளில்)......... அதன் பிறகுதான் அனைவரையும் வசூலில் மிஞ்சும் பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கிறார். வெற்றிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேற்கூறிய இரண்டு படங்களுக்கும் என்ன சம்பந்தம், இசை இளையராஜா என்பதை தவிர. இரண்டும் 1989 வருடம் ரிலீஸ் ஆனது. சரி, வேறு என்ன ஒற்றுமை.
மனதில் உறுதி வேண்டும் படத்தில் வரும் "கண்ணா வருவாயா" என்ற டூயட் பாடலும், மாப்பிள்ளை படத்தில் வரும் "என்னதான் சுகமோ" என்ற டூயட் பாடலும் ஒன்றே. அட்டகாசமான ஒற்றுமை, இந்த இரு பாடல்களுக்கும்.

கேட்டு பாருங்கள், தெரியும். இந்த அளவு வேறு எந்த இரு பாடல்களும் ஒரே மாதிரியாக இருந்ததாக நினைவில்லை. சிறிதளவு ஒற்றுமை இருக்கலாம், ஆனால் இந்த அளவு இருந்ததா??

சிம்பன்ஸி சின்னா (இது விஞ்ஞான சிறுகதை அல்ல)


ப்ரொபஸ்ஸர் மித்ரா, தன் நீண்ட நாள் ஆராய்ச்சியான சிம்பன்சியை மனிதனாக மாற்றும் ஆராய்ச்சியின் பலன் தெரிய ஆரம்பித்ததை சந்தோஷத்துடன் உதவி ஆராய்ச்சியாளரினி (ஆராய்ச்சியாளரின் பெண்பால்) ஸ்வேதாவுடன் பகிர்ந்து கொள்ள இண்டர்காமில் அழைத்தார்.

குட் மார்னிங் ஸ்வேதா, சீக்கிரம் என் அறைக்கு வா. உனக்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்து உள்ளேன், கூடவே சந்தோஷமான செய்தியும்.

குட் மார்னிங் ப்ரொபஸ்ஸர் மித்ரா, நீங்கள் இவ்வளவு சந்தோஷமாக இருப்பதை பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. இதோ வருகிறேன் ப்ரொபஸ்ஸர் என்று இண்டர்காமை துண்டித்து விட்டு அவரின் அறையை நோக்கி விரைந்தாள் ஸ்வேதா.

ப்ரொபஸ்ஸர் மித்ரா மிகுந்த சந்தோஷத்துடன் ஸ்வேதாவை எதிர்கொண்டு, அவளை தன் பிரத்தியேக ஆராய்ச்சி கூடத்திற்கு அழைத்து சென்றார்.
ஸ்வேதா, நீ இவ்வளவு நாள் என்னுடன் இருந்தபோதும், இன்றுதான் உன்னை என் பிரத்தியேக ஆராய்ச்சி கூடத்துள் அழைத்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே வந்து பார், என் ஆராய்ச்சியின் அதிசயத்தை. பேசிக்கொண்டே இருவரும் ஆராய்ச்சி கூடத்துள் நுழைந்தனர்.
அங்கே .......
ஸ்வேதா கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது...... ஒரு உருவம் என்று சொல்லும்படியாக ஒன்று, பெரிய கண்ணாடி கூண்டினுள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அதன் ஈ ஈ என்ற இளிப்பு, மிகுந்த பயத்தை அளிக்கும் வகையில் இருந்தது.
நசுங்கிய சப்பை மூக்கு. அகன்று பிளந்த பெரிய வாய். ப்ரொபஸ்ஸர் மித்ரா அணிவித்த சற்றே அழுக்கேறிய வெள்ளை சட்டை, பட்டன் போடாமல் திறந்து பிரிந்தும், தலையில் ஒரு கருநிற தொப்பியுடனும் காணப்பட்டது. சொல்லப்போனால் ஈ ஈ என்று இளித்தபோது, அவள் பெருங்குடல் வாய் வழியே வெளியே வந்துவிடுவது போன்று இருந்தது. ஸ்வேதா திகிலுடன் அதை நோக்கினாள்.
அது ........
தோலில் பலபல சுருக்கங்கள் நிறைந்து, மனித தோல் போலவே இல்லை. விகார இளிப்பில் வாய் அகன்று விரிந்தது. பற்கள் ஒழுங்கற்று நிறைய இடைவெளிகளுடன் இருந்தது. வாயின் கீழ்வரிசையில் பற்களே இல்லாதது போன்று இருந்தது. காதுகள் இருபுறமும் புடைத்து காணப்பட்டது. உடலில் முழுதுமாக தோல் தொங்கி கொண்டு இருந்தது.
அதிர்ச்சியில் ஸ்வேதா வீல் என்று அலறினாள். அது திடுக்கிட்டு அவளை நோக்கி திரும்பி பார்த்தது. தலையை இருபுறமும் வேகமாக ஆட்டியது.
ப்ரொபஸ்ஸர் மித்ரா பதட்டத்துடன் அவளை அணுகி, தலை தடவி ஆசுவாசப்படுத்தினார். ஸ்வேதா, என்னம்மா இது, நீயே இதை பார்த்து பயந்தால், நம் ஆராய்ச்சியை எப்படி தொடர்வது என்று கேட்டார்.
இதை பார்த்து கொஞ்சமும் பயப்பட வேண்டாம். இது இப்போதைக்கு முக்கால் மனிதனாக உருமாறியுள்ளது. நீயே பார், அதன், தடித்த உடலின் அனைத்து கருமுடியும் கொட்டிவிட்டது. தோல் கூட சிறிது சிறிதாக மனித தோலாக மாறிவருகிறது. இன்னும் ஓரிரு மாத ஆராய்ச்சி முடிவில் கண்டிப்பாக, முழு மனிதனாக மாறும் வாய்ப்பை பெறப்போகிறது. ரத்தத்தை விரும்பி சாப்பிடும் அந்த பழக்கம் கூட, மனிதனாக மாறும்போது அதைவிட்டு போய் விடும் என்றார்.
வரும் வாரத்தில், குரல் மாற்றத்திற்கான ஒரு மருந்தை கொடுக்க ஆரம்பிக்க போகிறேன். பின், ஒரு மாதத்திற்குள், அது மனிதர்களை போல், பேசும் சக்தியை அடைந்து விடும். தோலில் மாற்றம் ஏற்பட்டு, முழு மனிதனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்று விடும். பின், அதனை "சின்னா" என்றழைக்கலாம் என்றார் ப்ரொபஸ்ஸர் மித்ரா.
நடுங்கும் குரலில் ஸ்வேதா ஏதோதோ உளறினாள். அந்த உருவத்தை பார்க்க பிடிக்காமல், மித்ராவின் பின்னல் போய் நின்று கொண்டாள். படபடத்த தன் நெஞ்சை தடவி கொண்டாள். அவளுக்கு வாந்தி வருவது போல் இருந்தது.
ப்ரொபஸ்ஸர் மித்ரா மெதுவாக அந்த கண்ணாடி கூண்டின் அருகே சென்று, வாயிலில் இருந்த அந்த பச்சை நிற பட்டனை அழுத்தினார். கூண்டு திறந்தது. உள்ளே சென்று அந்த சின்னாவின் தலையை வருடினார்.
ஏறக்குறைய மூன்றடி இருந்த அந்த சிம்பன்ஸி அவரை பார்த்ததும் ஒரு இளிப்பை வெளிப்படுத்தியது. பின், கிரீச் என்ற குரலில் அலறியது. அங்கும் இங்கும் குதித்தது. கண்ணாடியில் பிடிப்பு ஏதும் இல்லாததால், எங்கும் பற்றி கொண்டு தொங்க முடியவில்லை. முரட்டுத்தனம் காட்டியது.
ஒரே பாய்ச்சலில், தாவி ப்ரொபஸ்ஸர் மித்ராவின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டது. திடுக்கிட்ட மித்ரா, அதை கீழே தள்ளிவிட முயற்சி பண்ணினார். ஆனால், அது குரங்கு பிடியாக அவரை பிடித்துக்கொண்டு கீழே இறங்க மறுத்தது. உர்ர்ர் என்று வினோத சப்தம் எழுப்பியது. அதன் கை மித்ராவின் கழத்தை சுற்றி வளைத்தது. அதை, கீழே தள்ள முயற்சித்ததில் கோபம் கொண்டு, கழுத்தை பலமாக இறுக்கியது. கழுத்தை சுற்றி, கவ்வியது. மித்ரா, காதின் இருபுறங்களிலும் ரத்தம் வழிவதை உணர்ந்தார். அவஸ்தையாய் கீழே சரிந்தார்.
வெளியில் இருந்து இதை பார்த்த, ஸ்வேதா அவசர அவசரமாக கண்ணாடி கூண்டினுள் நுழைந்து, அதை இழுத்து பார்த்தாள். அதன் இரும்பு பிடி சிறிது கூட இலகுவதாக இல்லை. திடீரென என்ன நினைத்ததோ, பிடியை சற்று விலக்கி, கீழே குதித்து, கண்ணாடி கூண்டை விட்டு வெளியே வந்தது.
வந்த வேகத்தில் திரும்பி அந்த கண்ணாடி கூண்டை தன் கையால் அறைந்தது. பின், வாயிலில் இருந்த அந்த சிகப்பு நிற பட்டனை அழுத்தியதில், கூண்டு சாத்திக்கொண்டது. பச்சை பட்டனை அழுத்தியதில் திறந்து கொண்டது. மறுபடியும் அந்த சிகப்பு பட்டனை அழுத்திவிட்டதில் கூண்டின் கதவு சாத்திக்கொண்டது.
பின் அந்த ஆராய்ச்சி கூடத்தில் இருந்து வெளியே ஓடியது.
கழுத்தை இறுக்கி பிடித்ததில், மிகவும் தளர்ந்து போயிருந்த மித்ரா, சற்றே ஆசுவாசப்படுத்தி, பின் ஸ்வேதாவை நோக்கி கேட்டார். சின்னா எங்கே?? அது அப்போதே நம் இருவரையும் கீழே தள்ளிவிட்டு விட்டு ஓடி விட்டதே என்று ஸ்வேதா சொன்னாள்.
பரபரப்பான மித்ரா, ஸ்வேதாவிடம் உடனே, வாசல் கதவை மூட சொன்னார். அந்த உத்தரவு வாசலை சென்றடைவதற்குள், "சின்னா" வாசல் கதவை தாண்டி தெருவை அடைந்திருந்தது.
மித்ரா மிகுந்த கவலையுடன் சொன்னார். பாதி ஆராய்ச்சியில் இருக்கும்போது இப்படி வெளியே போய்விட்டதே. அதன், குணநலன்கள் கூட நமக்கு தெரியாதே. ஆகாரம், மருந்து எல்லாம் நாம்தானே கொடுப்போம். வெளியில் சென்ற சின்னா இனி என்ன சாப்பிடும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும்?
சோர்வுடன் வந்து, சோபாவில் அமர்ந்து அங்கிருந்த டி.வி.யை ஆன் செய்தார்.
அங்கே....
சிறப்பு செய்தி ஓடி கொண்டிருந்தது. ரோட்டில் தாவி தாவி குதித்து வந்த ஒரு பயங்கர உருவம் தெருவில் போவோர், வருவோர் அனைவரையும் கடித்து, காயப்படுத்தி உள்ளதாகவும். காயம் பட்டதில் பாதி பேரின் நிலைமை மிகவும் கவலைப்படும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்தது. கழுத்து, கை, கால், காது என்ற பல இடங்களில் கடி வாங்கியோரை ஆஸ்பத்திரியில் இருந்தே பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள்.
அனைவரும் முகம் வெளிறி, பயக்குரலில் சொன்னது என்னவெனில் ...........
அந்த மிருகம் மிக மிக பலம் வாய்ந்ததாகவும் நாலைந்து ஆட்கள் கூட அதை ஒரே சமயத்தில் சமாளிக்க முடியவில்லை என்றும், பிடிக்க போன அனைவரையும் கடித்து குதறியதாகவும், குறிப்பாக மனித ரத்தத்தை விரும்பி குடித்ததாகவும் சொன்னார்கள்.
மித்ரா மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து, விரைவான நடையில் தன் ஆராய்ச்சி கூடத்தை அடைந்து, அந்த பச்சை நிற திரவம் (சீரம்) அடங்கிய குப்பியை எடுத்து, ஸ்வேதாவின் கையில் கொடுத்தார்.

ஸ்வேதா, இந்த ஒரு பச்சைநிற சீரம்தான் சின்னாவை மறுபடியும் சிம்பன்சியாக மாற்றும். என் ஆராய்ச்சி வெல்ல முடியவில்லை என்றால்கூட பரவாயில்லை. ஆனால், சின்னாவிடம் இன்று சிக்கிய, மற்றும் சிக்கப்போகும் அனைத்து அப்பாவி மனிதர்களும் உயிர்பிழைக்க வேண்டும். நீ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று எல்லா விபரங்களையும் சொல்லி இந்த குப்பியை ஒப்படைத்துவிடு என்று சொல்லி மயங்கி விழுந்தார். அவர் உடல் நீல நிறத்திற்கு போனது.

ஸ்வேதா நடுங்கும் கைகளால் அந்த சீரம் அடங்கிய கண்ணாடி குப்பியை வாங்கினாள்.
ப்ரொபஸ்ஸர் மித்ராவின் காதின் கீழ்பாகத்தில் இருந்து ரத்தம் பௌண்டன் போல் பீய்ச்சி அடித்தது.
ஸ்வேதா போலீஸ் நிலையம் நோக்கி புயல் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தாள். பின்னால், "சின்னா" துரத்தி வருவது போல ஒரு பிரமை அவளுக்கு இருந்தது.

"தல"யின் முரண்பாடு நாத்திகவாதம்


நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்
அவன் நன்கு குணமாக
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே






தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தீபாவளி பண்டிகையை விட சந்தோஷம் பொங்கி ஓடும். பல கவிஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு அவரவர் இஷ்ட தெய்வங்களை (அதாங்க தலைவர்களை) புகழ்ந்து கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

ஏற்கனவே முத்தமிழ் வித்தகர், கவிஞர் வாலி, ஜல்லிக்கவி ஜெகத்ரட்சகன் ஆகியோர் "தல"யை பாராட்டி பல கவிதைகளை எழுதி உள்ளனர். மேலும், பல புகழ்ச்சி கவிதைகள் அரங்கேற உள்ளது.

அவர்களோடு சேர்ந்து நாமும் பயணித்தால், இது போன்றதொரு கவிதையை காணும் வாய்ப்பை பெறலாம்.

******************
தலைவா உன் வருகை,
கண்டதும் கூப்புவேன் என் இருகை

தலைவா நீ பாப்புலர் பிகர்
கண்டதும் ஏறுது என் ஷுகர்

நீ உண்பாய் ஒரு கவளம்
அதனால் சுத்துது இவ்வுலகம்

தங்கத்தமிழே, தமிழ் நீரின் குமிழே
குமிழின் சிமிழே, நீ பேசுவது செந்தமிழே

நடமாடும் தொல்காப்பியமே,
நாங்கள் சொல்லும் நல்வாக்கியமே

அதிகாலை முன்பனியே
இன்று கிழமை சனியே

நீ வந்தாய் தனியே
கூட்டம் கூடும் இனியே
உன் மயக்கும் சிரிப்பு
அதற்கு உண்டு தனி சிறப்பு

நடமாடும் ஓவியமே
நற்றமிழின் காவியமே

நீ முன்னே வந்து நில்
உன்னை வணங்கும் பார்த்திபனின் வில்

உன் ஒரு சொல்லே
தருமே பல பொருளே

தமிழ் அருவி,
இன்று மருவி
ஆனது உன் புரவி

வில்லெடுத்து போர் தொடுத்து வெல்லாமல்
உன் ஒரு சொல்லெடுத்து அகிலத்தை வென்றிடு

ஆணையிடு காத்திருக்கிறோம் ஆட்சியை தர
வாழ்த்துகிறோம் இந்த தேர்தலில் நீ வெற்றி பெற

***********************
இதை போன்ற ஜல்லி கவிதைகளை தவிர, அங்கே, இங்கே என்று உலகின் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் / ஒளிந்திருக்கும் இவர்கள் வெளியே வருவர். தங்கள் சேவையை செய்வர். யார் அந்த மாமேதைகள். நீங்களே பாருங்களேன், பெயர்களை. பின் தெரியும் யார் இவர்கள் என்று :

கொண்டித்தோப்பு கஜா
புளியந்தோப்பு கெடா குமார்
பங்கிலி கிருகன்
கரிவரதன்
கில்பர்ட் தனசேகரன் (சுருக்கமாக ஜி.டி.)
ஆழ்வார்பேட்டை அருமைநாயகம் (எங்கேயோ வெடித்து எங்கேயோ தெறிப்பார்)
காசிமேடு ஆதி
முட்டை (ஆசிட் முட்டை அடிப்பதில் வல்லவர்)
வெள்ளை ரவி (பயங்கர கறுப்பாக இருப்பார், அதனால் தான் இந்த பெயர்)
வெல்டிங் குமார்
பங்க் குமார் (பெட்ரோல் பங்க் ஓனர் அல்ல, பெட்ரோல் பங்க்கை கொள்ளை அடிப்பவர்)
காடுவெட்டி குரு
அருவா ஆறுமுகம்

கவிதைகள் அரங்கேறும், கல்வீச்சு, சோடா பாட்டில் வீச்சு என்று பல காட்சிகள் வழிமொழியும். பணம் ஆற்று நீரை விட அதிகமாக வெளிவரும்.
மொத்தத்தில் நாடு நாடாக இருக்காது.

வரும் நாட்களில் என்னென்ன கூத்துக்களும் நாடகங்களும் அரங்கேறுகிறது என்று பார்ப்போம்.

(மொத்தத்தில் வாழ்க ஜனநாயகம், வெல்க பணநாயகம்)
"தல"யை நம்பினோர் தவிக்கவிடப்படார் )

அரசியலைவிட்டு கருணாநிதி விலகுவதே நல்லது - ஜெ


அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வது தான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல்.

இதே போன்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை. ஆனால், கருணாநிதியால் குறிப்பிடப்படும் மகாமகம் சம்பவம் (ஜெயலலிதாவும், சசிகலாவும் குளத்தில் புனித நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் பலியானது) தற்செயலாக நடைபெற்ற ஒரு விபத்து.

(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)


(அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருப்பவர்களே, அண்ணன் சாகவும் மாட்டான், திண்ணை காலியும் ஆகாது என்று "தல" ஒரு அறிக்கை விட்டார்.

பின் பாராளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இரு கட்சி தலைவர்களும் அறிக்கை போரை ஆரம்பித்து விட்டனர் (அக்கப்போர் என்பதுதான் சரியான வார்த்தை).

இனி தமிழக மக்கள் தினமும் இதுபோன்றதொரு அறிக்கை காமெடியை பார்க்கத்தான் போகிறார்கள்).
("தல"க்கு தையல் பிரிச்ச உடனே ஜெ.ஜெ. கொடுத்த முதல் ஷாக் இது. "தல" இது ஆரம்பம்தான், இன்னும் இருக்கு, ஷாக்கோ ஷாக்கு)

பாராளுமன்றம் தேர்தல் - "தல"யோட டகால்டி முன்னோட்ட உரை


அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியி்டுள்ள அறிக்கை:
2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சோனியாகாந்தியை அழைத்து, ``இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று வரவேற்பு கூறி வாழ்த்தி- அந்த தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து- பிரதமராக அவர்தான் வரவேண்டுமென்றும், வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியாகாந்தி தியாகத் திருவிளக்காக உயர்ந்து, தான் பிரதமர் பதவிக்கு வரவிரும்பவில்லை என்றும், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பேற்பார் என்றும் கூறி- கடந்த ஐந்தாண்டு காலமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவியாக செயல்பட்டு- சாதனை செல்வியாக நிகழ்ந்து, சாதனைக்கு மேல் சாதனை என்று சாதித்து வருகிறார்.
(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)
(தல, ஆபரேஷன் முடிஞ்சு தையல் பிரிச்சாச்சு. இப்போ அவரு எல்லாரையும் பிரிச்சு மேய ஆரம்பிச்சுட்டாரு........)

திரையுலகில் அரசியல் வேண்டாம்!-ரஜினி










பெங்களூர்: தமிழர்- கன்னடர் என திரையுலகில் அரசியலைக் கலந்து விடாதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்களாக இருப்போம் என்று ரஜினிகாந்த் கூறினார்.

கன்னடத் திரையுலகின் 75 வது ஆண்டு விழாவையொட்டி, அம்ருத மகோத்ஸவம் எனும் பெயரில் 3 நாள் பிரம்மாண்ட திருவிழா நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார். அதில் ரஜினி பங்கேற்கவில்லை. ஹைதராபாத்தில் நடந்த தனது நண்பர் மோகன்பாபு மகன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, நேற்று இரண்டாவது நாள் விழாவில் பங்கேற்றார்.

அப்போது ரஜினி பேசியதாவது:

நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லோருமே அண்ணன் தம்பிங்க மாதிரிதான். இந்த அண்ணன் தம்பிங்க அடிச்சிக்கிறதுனால எந்த நன்மையும் இல்லே.

பாருங்க... அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் மாதிரி. நம்ம சினிமா ஒரு சின்ன குளம் மாதிரி. ஒரு சமுத்திரத்தாலேயே தன்னோட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத போது, அதை இந்த சின்னக் குளம் தீர்த்து வெச்சிட முடியுமா?

அதனால அரசியலை விட்டுடுங்க... சினிமாக்காரங்க சினிமாக்காரங்களா ஒத்துமையா இருப்போம். இதை சாக்கா வெச்சிக்கிட்டு ஜனங்க பாவம் சண்டை போட்டுக்கக் கூடாது. அவங்க கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம்.

கன்னட திரையுலகுக்கு நான் சொல்லிக்க விரும்பறதெல்லாம், நல்ல சினிமா, நாவல்களை அடிப்படையாகக் கொண்ட சினிமா எடுங்க. தா ரா சு, இந்திரா போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை மையமா வச்சி எவ்வளவோ நல்ல படங்கள் தர முடியும். முயற்சி பண்ணுங்க.

குவெம்பு, ஷிவ்ராம் காரத் மற்று பெண்ட்ரே போன்ற சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளை நல்ல படங்கள் எடுக்க பயன்படுத்திக்குங்க. இத்தனை வருஷமா இதையெல்லாம் ஏன் நீங்க செய்யலேன்னு புரியல. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

ஒரு ரசிகனா, கலைஞனா எல்லா மொழிகள்லேயும் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை திரைப்படங்களாக எடுக்கப்படணும் என்று விரும்புகிறேன்.

எனக்கும் ஒரு கன்னடப் படத்துல நடிக்கணும்னு ஆசையிருக்கு. அப்படி நடிச்சா, தளவாய் முத்தன்னா பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் அந்த கேரக்டர். எனக்கு ரொம்ப பிடிச்ச பாத்திரமும் கூட. ஆனால் இந்தப் படத்தை எப்போ பண்ணுவேன், எந்த நேரத்தில் அதற்கு கடவுள் உத்தரவு வரும்னு தெரியல... பார்க்கலாம் என்றார் ரஜினி.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் அரங்கிலேயே இருந்தார் ரஜினி. விழாவில் நடிகை லட்சுமி, நடிகர் பிரபு தேவா உள்ளிட்ட கலைஞர்களை ரஜினி கெளரவித்தார்.
(நன்றி : தட்ஸ்தமிழ். காம் )

பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல்-7 வீரர்கள் படுகாயம்

லாகூர்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரர்கள் சமரவீரா, சங்ககாரா, மெண்டிஸ், சமந்தா வாஸ் உள்பட 7 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர்.

சமரவீராவுக்கு நெஞ்சி்ல் குண்டு பாய்ந்துள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டுள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்க இருந்த நிலையில் ஸ்டெடியத்துக்கு வெளியே இலங்கை அணியினர் பஸ்சில் வந்து இறங்கியபோது தீவிரவாதிகள் திடீரென 4 கிரனைட் குண்டுகளை வீசினர். இதில் அந்த அணியில் நிலை குலைந்து ஓட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் திலன் சமரவீரா, குமார சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, தரங்கா பிரனவிதனா மற்றும் சமிந்தா வாஸ் உள்பட 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் சமரவீராவின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. இன்னொரு வீரரின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சங்கக்காராவுக்கு தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர். இதையடுத்து கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தாக்குதலில் இலங்கை வீரர்கள் வந்த பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ் முழுவதும் குண்டுகள் துளைத்துள்ளன. இந்த பஸ்சுக்கு முன் பாதுகாப்புக்கு வந்த கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த 5 போலீசார் பலியாயினர்.

12 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். பொது மக்கள் கண் எதிரிலேயே அவர்கள் மிக சாவகாசமாக தாக்குதலை நடத்தினர்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சமந்தா வாஸ் ஸடிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். நேற்று 214 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் சமரவீரா என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இலங்கையின் பேட்டிங் முடிந்து இன்று பாகிஸ்தான் அணி பேட் செய்ய இருந்தது.

தாக்குதலில் காயமடையாத இலங்கை வீரர்கள் இன்னும் கடாபி ஸ்டேடியத்தில் தான் உள்ளனர். அவர்களை சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் சென்ற வேனும் தீவிரவாதிகளின் குண்டுகளுக்குத் தப்பவில்லை.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:

இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)

ஜெனரல் டயருடன் ஜெயலலிதாவை ஒப்புமைப்படுத்தலாம்: கருணாநிதி


உயர்நீதிமன்ற மோதலை ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால் கும்பகோணத்தில் மகாமக குளத்தில் ஜெயலலிதா நீராடியபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்களே, அந்த சம்பவத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்குடன் ஒப்புமைப்படுத்த முடியும். ஜெனரல் டயருக்கு சமமானவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

(இப்போதான் ஆபரேஷன் முடிஞ்சு தையல் பிரிச்சாங்க. தல வெளிய வந்த உடனே ஜெ.ஜெ.வ பிரிச்சு மேயறாறு பாத்தீங்களா?? ஆயிரம் சொல்லுங்க தலையோட வேகம் யாருக்கும் வராதுங்க, பிரிச்சு மேயரதுல....)

35 நாள் சிகிச்சைக்கு பின் கருணாநிதி வீடு திரும்பினார்








முதுகு வலி காரணமாக, ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் கருணாநிதி, நேற்று வீடு திரும்பினார்.

கடந்த மாதம் இறுதியில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும், வலி தொடர்ந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அன்னார், விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் குறைந்தது இன்னும் ஒரு மாதமாவது ஓய்வில் இருக்கவேண்டும் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் குணமடைந்து, பணிக்கு திரும்ப அந்த ஆண்டவனை வேண்டுவோம். ( தல கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை).

அதிரடி கதைகள்

நண்பர்களே.

நான் எழுதியுள்ள சில அதிரடி கதைகளை படிக்க இங்கே செல்லுங்கள்.

www.jokkiri.blogspot.com