"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்ட்து
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது "
அதை இங்க பாருங்க....
காட்சி -1
தறுதலை : டாடி, என் மனங்கவர்ந்த ஒரு டேமை நான் கல்யாணம் கட்டிக்கணும்
டாடி : நீ டேம கட்டுவியோ, டூம்ம மாட்டுவியோ, நான் சொல்லுற காண்டிராக்டர் பொண்ணுதான் நீ கட்டணும்... அவதான் என் மருமவ
தறுதலை : ஆனா டாடி, நான் கட்ட போறேன்னு சொன்னது நம்ம “பில் கேட்ஸ்” பொண்ணுப்பா...
டாடி : இத்த முன்னாடியே ஏண்டா சொல்லல... இப்போ, எனக்கு டபுள் ஓகே....
காட்சி – 2
டாடி : உங்க மகள பொண்ணு கேட்டு வந்திருக்கேன்
பில் கேட்ஸ் : நீங்க யாரு, என்ன சோலி, என் புள்ள பச்ச மண்ணாச்சே.....
டாடி : என் மவன் வேர்ல்ட் பேங்க்ல வைஸ் ப்ரெசிடெண்ட்...
பில் கேட்ஸ் : அட....அப்படி போடு அருவாள...அடிச்சாச்சு லக்கி பிரைஸ், அப்ப ஒகே
காட்சி – 3
டாடி : உங்க வேர்ல்ட் பேங்க்குக்கு வைஸ் ப்ரெசிடெண்டா என் மவன சேர்த்துக்கங்க அவன் பெரிய எடம்...
வேர்ல்ட் பேங்க் சேர்மன் : பெரிய எடம்னா... ட்வின் டவர்ஸ் ஓனரா...இல்லன்ன புர்ஜ் அல் அராப் ஹோட்டல் ஓனரா?? ஏற்கனவே அதுக்காக நிறைய பேர் கியூவில நிக்குறாக்களே, தெரியுமா??
டாடி : அது எல்லாம் எனக்கு தெரியும்... நான் இன்னும் மெயின் மேட்டர் சொல்லவேயில்லையே.. என் மவன் நம்ம பில் கேட்ஸ் இருக்காரே. அவரோட மருமகன்... இப்பொ சொல்லுங்க ஒங்க வீகத்த....
வேர்ல்ட் பேங்க் சேர்மன் : இத்த மொதல்லியே சொல்லக்கூடாத “தல... எனக்கு டவுள் ஒகேங்க...
இந்த வீகத்துல தான் எல்லா யாவாரமும் (வியாபாரம்) நடக்குது
கதை சொல்லும் நீதி :
ஒரு ரூவாய்க்கு ”பொட்டுக்கடலை” வாங்கி சட்னி வைக்க வழியில்லைனா கூட, மண்டைல உள்ள மசாலாவ சரியா யூஸ் பண்ணுனா, ”முந்திரி” நெறைய போட்டு ஒரு அண்டா பொங்கலே வைக்கலாம்.
19 comments:
ஒரு ரூவாய்க்கு ”பொட்டுக்கடலை” வாங்கி சட்னி வைக்க வழியில்லைனா கூட, மண்டைல உள்ள மசாலாவ சரியா யூஸ் பண்ணுனா, ”முந்திரி” நெறைய போட்டு ஒரு அண்டா பொங்கலே வைக்கலாம்.
...........தத்துவம் # 67453, அருமையோ அருமை!
டபுள் ஓகே !!
வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்,இல்லையா கோபி?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
உலக நடப்பை சிரிப்பாய் சொல்லி சிந்திக்க வைத்துள்ளீர்கள்.
பதிவிற்கு வருகை தந்து, மேலான கருத்து பகிர்ந்த
சித்ரா
ஸ்ரீஜா
கோமதி மேடம்
அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி..........
நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. அருமை.
ரேகா ராகவன்.
//KALYANARAMAN RAGHAVAN said...
நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. அருமை.
ரேகா ராகவன்.//
********
வாங்க ராகவன் சார்...
இது எங்களுக்கு வந்த ஒரு ஆங்கில ஃபார்வர்ட் மெயில்... (பாசிடிவ் ஆட்டிட்யூட்)... அதை அப்படியே வெளியிடாமல், தமிழாக்கம் செய்து வெளியிட்டோம்... அங்கே சொல்லவில்லை... இங்கே சொல்ல வைத்ததற்கு மிக்க நன்றி...
பொருளாதார மந்திகளால், மந்த நிலைக்குத் தள்ளப்பட்ட நடுத்தரக் கோல்மால்களுக்கு பொட்டுக்கடலை நிவாரணம் நல்லாத்தான் இருக்கு.
அண்டாவில் பொங்கல் நிறையும்போது, எனக்கும் ஒரு கரண்டி ப்ளீஸ்!
//r.selvakkumar said...
பொருளாதார மந்திகளால், மந்த நிலைக்குத் தள்ளப்பட்ட நடுத்தரக் கோல்மால்களுக்கு பொட்டுக்கடலை நிவாரணம் நல்லாத்தான் இருக்கு.
அண்டாவில் பொங்கல் நிறையும்போது, எனக்கும் ஒரு கரண்டி ப்ளீஸ்!//
********
வாங்க செல்வா சார்...
சரியா சொன்னீங்க... கலவர பூமியில இருக்கிறோம்... அதான், நடு நடுவில் இது போன்ற ஆறுதல் பதிவுகள்...
பொங்கல் கிளறும்போது, நீங்களும் அல்லவா பக்கத்தில் இருப்பீர்... நாம் எடுத்தது போக மீதியல்லவா தானமும், தர்மமும்.......
//ஒரு ரூவாய்க்கு ”பொட்டுக்கடலை” வாங்கி சட்னி வைக்க வழியில்லைனா கூட, மண்டைல உள்ள மசாலாவ சரியா யூஸ் பண்ணுனா, ”முந்திரி” நெறைய போட்டு ஒரு அண்டா பொங்கலே வைக்கலாம். //
கரெக்ட்டு தான்...
//ஸ்வர்ணரேக்கா said...
//ஒரு ரூவாய்க்கு ”பொட்டுக்கடலை” வாங்கி சட்னி வைக்க வழியில்லைனா கூட, மண்டைல உள்ள மசாலாவ சரியா யூஸ் பண்ணுனா, ”முந்திரி” நெறைய போட்டு ஒரு அண்டா பொங்கலே வைக்கலாம். //
கரெக்ட்டு தான்...//
********
பதிவிற்கு வருகை தந்தமைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி...
இந்தப் பதிவின் மூலம் நான் அறிந்து கொண்டது.......
1. உண்மையான காதலுக்கு அப்பாக்கள் என்றும் எதிரிதான்
2. ஆளைச் சொல்லு, ரூலைச் சொல்கிறேன் என்னும் பழமொழி(?) காதலுக்கும் பொருந்தும்
3. எந்த லட்சியமும் எட்டிவிடும் தூரம்தான், தகுந்த விதத்தில் அணுகினால்
4. சொல்றதை அப்படியே நம்பாதே, கொஞ்சம் ஆராயவும் செய்
சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த தலைவா, நன்றி!
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இந்தப் பதிவின் மூலம் நான் அறிந்து கொண்டது.......
1. உண்மையான காதலுக்கு அப்பாக்கள் என்றும் எதிரிதான்
2. ஆளைச் சொல்லு, ரூலைச் சொல்கிறேன் என்னும் பழமொழி(?) காதலுக்கும் பொருந்தும்
3. எந்த லட்சியமும் எட்டிவிடும் தூரம்தான், தகுந்த விதத்தில் அணுகினால்
4. சொல்றதை அப்படியே நம்பாதே, கொஞ்சம் ஆராயவும் செய்
சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த தலைவா, நன்றி!//
********
வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை..
இந்த மெயிலின் கதை அங்கே ரேகா ராகவன் சார் அவர்களுக்கு சொன்னதே ரிபீட்டு....
இது எங்களுக்கு வந்த ஒரு ஆங்கில ஃபார்வர்ட் மெயில்... (பாசிடிவ் ஆட்டிட்யூட்)... அதை அப்படியே வெளியிடாமல், தமிழாக்கம் செய்து வெளியிட்டோம்... அங்கே சொல்லவில்லை... இங்கே சொல்ல வைத்ததற்கு மிக்க நன்றி...
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இந்தப் பதிவின் மூலம் நான் அறிந்து கொண்டது.......
1. உண்மையான காதலுக்கு அப்பாக்கள் என்றும் எதிரிதான்
2. ஆளைச் சொல்லு, ரூலைச் சொல்கிறேன் என்னும் பழமொழி(?) காதலுக்கும் பொருந்தும்
3. எந்த லட்சியமும் எட்டிவிடும் தூரம்தான், தகுந்த விதத்தில் அணுகினால்
4. சொல்றதை அப்படியே நம்பாதே, கொஞ்சம் ஆராயவும் செய்
சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த தலைவா, நன்றி!//
********
வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை..
இந்த மெயிலின் கதை அங்கே ரேகா ராகவன் சார் அவர்களுக்கு சொன்னதே ரிபீட்டு....
இது எங்களுக்கு வந்த ஒரு ஆங்கில ஃபார்வர்ட் மெயில்... (பாசிடிவ் ஆட்டிட்யூட்)... அதை அப்படியே வெளியிடாமல், தமிழாக்கம் செய்து வெளியிட்டோம்... அங்கே சொல்லவில்லை... இங்கே சொல்ல வைத்ததற்கு மிக்க நன்றி...
நல்லாத்தேன் நடத்துறாங்கய்யா பொட்டுக் கடலை வியாபாரத்தை.......:)
//SUFFIX said...
நல்லாத்தேன் நடத்துறாங்கய்யா பொட்டுக் கடலை வியாபாரத்தை.......:)//
**********
வாங்க SUFFIX
ரொம்ப நாளைக்கு பிறகு வந்துள்ளீர்கள்...
வியாபாரத்தை புகழ்ந்ததற்கு மிக்க நன்றி....
எனக்கு வந்த ஒரு ஆங்கில ஃபார்வர்டு மெயிலே இங்கே தமிழாக்கப்பட்டு உள்ளது... லேசான மசாலாவுடன்..
அடடா..என்ன யோசிப்பு...!!!
//ஸாதிகா said...
அடடா..என்ன யோசிப்பு...!!!//
*******
வாங்க ஸாதிகா
தாங்கள் முதன் முதலாக இங்கு வருகை தந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...ரொம்ப சந்தோஷம்...
இது எங்களுக்கு வந்த ஒரு ஆங்கில ஃபார்வர்ட் மெயில்... (பாசிடிவ் ஆட்டிட்யூட்)... அதை அப்படியே வெளியிடாமல், தமிழாக்கம் செய்து வெளியிட்டோம்...
தொடர்ந்து வாருங்கள்....
வாழ்க்கை பயணத்தில ஆரம்பிச்சு ஒரு ரூபாய் சட்னி வரைக்கும் கொண்டுவந்திட்டீங்களே!...அடுத்தது என்ன?
//sindhusubash said...
வாழ்க்கை பயணத்தில ஆரம்பிச்சு ஒரு ரூபாய் சட்னி வரைக்கும் கொண்டுவந்திட்டீங்களே!...அடுத்தது என்ன?//
*********
வாங்க சிந்துசுபாஷ்...
ஒரு ரூபாய் சட்னி முடிந்து, அடுத்த தொடருக்கான வெள்ளோட்டம் முடிந்து, “வெற்றியின் விழுதுகள்” என்ற பெயர் ஏகமனதான தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த தொடரின் முதல் பகுதி கூட பதிவேற்றப்பட்டு விட்டதே...
படித்து விட்டு கருத்து சொல்லுங்களேன்...
Post a Comment