வெற்றியின் விழுதுகள்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வாசக தோழமைகள் தேர்ந்தெடுத்த தொடரின் தலைப்பையே உறுதி செய்து, நம் தொடரை தொடங்குவோம். நமது மூன்றாம் தொடரின் உருவாக்கத்துக்கு உறுதுணையாய் தோன்றிய சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
மனுசனா பொறாந்தா ஏதாவது சாதிக்கணும், இல்லையா !!! கண்ணு, நீ பொறக்குறது வேஸ்ட், நீ பொறக்காம இருக்கிறது அத விட பெஸ்ட்.
வாழை மரம் தார் போடும், அதுக்குன்னு அத வைச்சு ரோடா போட முடியும், என்னங்க இது ரொம்ப சூடான வார்த்தையாவில்ல இருக்குது என கேட்கிறார் நம்ம வெள்ளந்தி வேங்கிட ராமன். இது நாம சொன்னதில்லீங்க நம்ம தாடி வச்ச தெய்வப்புலவர் வள்ளுவர் தாத்தா சொன்னது
தோன்றிப் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
தோன்றலின் தோன்றாமை நன்று.
அடேயப்பா வார்த்தைகள் ரொம்ப சுடுதே என்று நாம் நினைக்கும் போதே நம்ம சும்மாட்டு கவிஞர் பாரதி சும்மாயிருக்காம இப்படி சொல்றார். பச்சையா வேண்டாங்க வவுறுக்கு ஆவாது, வேக வைச்சு ஏதாவது தினந்தினம் திங்கணும், தின்னுப்புட்டு என்னப்பா வாழ்க்கை இது…! என பீலீங்க்ஸ் விட்டுட்டு புலம்பணும், அப்புறமா பக்கத்தில இருக்கிற ஜனங்களுக்கு பீலா கொடுத்திட்டு அவங்கள வெறுப்பேத்தி டார்ச்சர் கொடுக்கணும், அப்பாலிக்கா சொணங்கி செத்துருவேன்னு எல்லாரையும் மாதிரி என்னையும் நினைச்சியா என்கிறார். யேயப்பா, அவர் சிந்தனையின் சூடு முண்டாசை தாண்டுதே.
சாமான்யானாய் நான் செத்துப் போவேனோ என அப்துல் ரகுமான் பயந்தாரே அது போலத்தான் நாம் அனைவருமே நம் வாழ்வை பற்றி கொஞ்சம் பயத்திலும் மிச்சம் கனவிலுமாய் வாழ்கிறோம்.
கண்டிப்பா சாதிக்கணுங்க என சாதிக்கும் எண்ணம் நம் ரத்தத்தில் உண்டு. முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது.
ஜப்பானிய பழமொழி சொல்வது போல், நாம் அடைய நினைக்கும் இலட்சியத்துக்கும் இன்றைய நடைமுறைக்கும் ஒரு தப்படி தூரந்தான். ஒரே ஒரு சிறிய தப்படி, (தப்பான அடி இல்லீங்கோ... ஒரு காலடி) முன்னங்கால் எடுத்து வைப்பின் அவையத்துள் முந்தியிருப்பச் செயல் என்று முழங்கலாம்.
ஆம் நிச்சயமாய் நாம் எல்லோரும் சாதிக்க பிறந்தவர்களே, நம்
ஓவ்வொருவரிட்த்திலும் ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது அக்கினிக்குஞ்சாய் ஒளியாய் வெப்பமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வக்கினி குஞ்சை அங்கொரு காட்டில் பொந்திடை வைத்து, வெந்து தணிய செய்வதே இத் தொடரின் பணிவான இலட்சியம். அங்கனம் வெந்து தணிந்து, வேள்வித்தீயின் வெப்பத்தில் இம்மானுடம் தளைக்க செய்யும் சிறு சிற்றுளியே இப்பதிவு.
ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா ... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு. என ஒரு உயரிய தத்துவம் ஒன்று உண்டு. நாயர் புடிச்ச புலிவால் மாதிரி சாதிக்கணும்ன்னு நாம சிந்திச்சுட்டா நம்மோட லட்சியம் நம்மை விடாது.
அடாது மழை பெய்தாலும் விடாது பிடிக்கும்.
ரைட்டுங்க புரியுது, நான் ரெடி சாதிச்சுருவோம். சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா, இல்ல வேற ஏதாவது பிளான் இருக்கா என கேட்கும் போது,
மேலை நாட்டு அறிஞர், பிரையன் டிரேசி, ஒரு எளிமையான ஐடியா சொல்வாரே, சாதிச்ச ஒரு ஒண்ணுரெண்டு பேரோட வாழ்க்கைய பார்த்து, அவங்க என்னென்ன செய்தாங்களோ அத்தயே ஈயடிச்சான் காப்பியடிச்சா நாமளும் சாதிச்சுப் புடலாம்ன்னு கண்டிப்பா என்பார். அதே ரூட்ல போகுது நம்ம தொடர். வாழ்ந்ததின் சுவடுகளை சரித்திரத்தில் பதிவிட்டு, தன் தலைமுறை தாண்டி வாழ்ந்தவர் சாதனையாளரே
நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியில் நமக்கு முன் தோன்றிய சில வெற்றி நாயகர்களை அவர்கள் சந்தித்த சாதனை சோதனைகள் பற்றி தெரிவோமே. அவர்களது வாழ்வை தெரிவது மூலம் நம்மிடம் தெளிவு பிறக்காதா எனும் சிந்தனையின் வெளிப்பாடே இத்தொடர்.
சாதித்தவர்களின் வாழ்வை உற்று நோக்கினால், செஞ்சே ஆகணும் எனும் தீவிரம் எல்லா சாதனையாளரிடமும் பொதுவாய் இருக்கிறது. நாம் தொடரின் தொடக்கத்தில் பார்த்த வள்ளுவர், பாரதியின் சிந்தையில் நாம் கண்டதும் அதுதானே. நம் வாழ்வில் சாதிக்க அந்த தீவிரம் மட்டுமே போதுமானது. எஸ்... நாம் முடிவு எடுத்து, மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், எவ்வகை தீமையையும் எதிர்கொண்டு, அருமை பாராமல் அவமதிப்பும் கொண்டு கருமமே கண்ணாயனார் ஆனால் மேட்டர் முடிஞ்சுச்சுப்பா என சுச்சுலிப்பா காட்டலாம்.
சாதித்த நம் ஹீரோக்களை சல்யூட் அடித்து விட்டு, அவர்கள் சாதனையை ஆழமாய் பார்ப்பதே இத்தொடர்.
ரோப் கட்டி தூக்கி எதிராளியை பறந்து பறந்து பந்தாடும் பம்மாத்து திரை ஹீரோக்கள் இல்லை இவர்கள். யாரோ எழுதிய வீர வசனத்துக்கு வாயசைப்பு செய்து, அட்டை கத்தி வீசும் அடாசு வேலை இல்லை இவர்களது. ரத்தமும் வியர்வையுமாய் தங்கள் வாழ்வை தாங்களே செதுக்கி வெற்றி கனி பறித்தவர்கள், சரித்திரத்து பக்கங்களை குத்தகைக்கு எடுத்தவர்.
இதுவரை நான் வாழ்வில் தப்பே செஞ்சதில்ல என யாராவது சொன்னால் அது பெரிய பம்மாத்து என்கிறார் நம்ம பல்பு ஐன்ஸ்டீன். யோவ் முயற்சி செஞ்சு அது தப்பாயிட்டா என எக்ஸ்ட்ரா காஷியசாய் இருப்பதே நம் பலவீனம் , முயற்சி செய்து தவறி, பின் தப்ப திருத்தி அடுத்த்தா டிரை பண்ணரப்போ தான் ரப்ப்ப்போ ரப்பாப்போ..
தப்பே செய்யக்கூடாதுப்பா என முயற்சி எடுக்காமல் நாம் இருந்தால் எக்ஸாம் ஹாலே போகாம ரிசல்ட் பார்க்கிற மாதிரி. அல்லது விதைக்கும் போது ஊர் சுத்திட்டு அறுக்கும் போது அருவாளோடு போன அங்குசாமி கதை ஆகிவிடும். பரமார்த்த குரு சொன்னாராம்ல, நீச்சல சூப்பரா கத்துக்கிற வரைக்கும் சொட்டு தண்ணிய தொட மாட்டேன்னு, அது மாதிரியில்ல இருக்கு. இது ஆவற கதையா, நம்ம கன்னியாகுமரி விவேகானந்தர் சொல்வாரே என்று எந்த தவறும் செய்யாத ஒரு நாள் இருக்கிறதோ அன்று ஏதோ குறை மாதிரி பீலிங்க்ஸ் ஆப் இண்டியா என்பாரே. அது மாதிரிதேன். சரி தீர்வு என்ன.
இரண்ட செய் ஒண்ண குறை என சேக்ஸ்பியர் பீராஞ்ச த்த்துவம் இது. அது என்னங்க தத்துவம், மற்றவரை விட அதிகமாய் தகவல் சேரு, ஜாஸ்தியா முயற்சி பண்ணு. இப்ப சொன்னது செய்ய வேண்டிய இரண்டு, செய்யக்கூடாத ஒண்ணு என்னது. உன் எக்ஸ்பெக்டேஷன குறை. கீதையில சொன்ன மாதிரி கடமைய செய், பலனை எதிர்பார்க்காதே....
வாருங்கள் தன் வாழ்க்கையை நமக்கு பாடமாக சொன்ன சில மனிதருள் மாணிக்கத்தை தரிசிப்போம், அவர் வாழ்வில் இருந்து எடுத்துக் கொள்ள ஏதேனும் இருக்கிறதா என ஆராய்வோம். சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடம் இருந்தும் நான் கற்றுக் கொள்ள ஏதேனும் ஒன்று உண்டு என தீர்மானமாய் நம்புவோம். சாதிக்க பிறந்த நாம் சரித்திரத்திடம் எங்கள் வாழ்வையும் எழுதிக் கொள்ள தயாராக இரு என முறசரைவோம். நம் வெற்றி நிச்சயம்.
வெற்றிப்பாதையின் படிகளில் அமர்க்களமாய் ஏறுவோம்....
முதல் சாதனையாளர்களின் வாழ்க்கையாய் நம் இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பை செதுக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்கள் வாழ்வை அடுத்த பகுதியில் பார்ப்போம். அதனோடு தொடர்புடைய சாணக்கியரின் வாழ்வையும் பின்னி வரவிருக்கிறது நம் அடுத்த பகுதி.
சாணக்கியருக்கும் அம்பேத்காருக்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லீங்களே என புருவம் தூக்குபவருக்கு அடுத்த பதிவு வரை பொறுமை வேண்டி விடைபெறுவோம்.(அடுத்தபடி அடுத்த படி....)
18 comments:
ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா ... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு. என ஒரு உயரிய தத்துவம் ஒன்று உண்டு. நாயர் புடிச்ச புலிவால் மாதிரி சாதிக்கணும்ன்னு நாம சிந்திச்சுட்டா நம்மோட லட்சியம் நம்மை விடாது.
.............superb! மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
//(அடுத்தபடி அடுத்த படி....)//
நாங்களும் படி ஏற தயாராயிட்டோம் நண்பர்களே..
ஆரம்பம் அசத்தலா இருக்கு..
வாழ்த்துக்கள்..
நல்ல இடுகை. தொடருங்கள்!
எங்களது வாழ்த்தை பதிவு செய்கிறோம்.
புதிய தன்னம்பிக்கைத் தொடர்...............வாழ்த்துகள், தல!
நண்பர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தமை நண்பர்களின் மேல் நீங்க வச்சிருக்க மரியாதையை காட்டுது கோபி..ஆரம்பமே எளிமையாவும் அதே சமயம் அசத்தலாகவும் இருக்கு...
//
மனுசனா பொறாந்தா ஏதாவது சாதிக்கணும், இல்லையா !!! கண்ணு, நீ பொறக்குறது வேஸ்ட், நீ பொறக்காம இருக்கிறது அத விட பெஸ்ட்.//
உண்மை தான் கோபி...
சாதித்தவர்களின் வாழ்வை உற்று நோக்கினால், செஞ்சே ஆகணும் எனும் தீவிரம் எல்லா சாதனையாளரிடமும் பொதுவாய் இருக்கிறது. நாம் தொடரின் தொடக்கத்தில் பார்த்த வள்ளுவர், பாரதியின் சிந்தையில் நாம் கண்டதும் அதுதானே. நம் வாழ்வில் சாதிக்க அந்த தீவிரம் மட்டுமே போதுமானது. எஸ்... நாம் முடிவு எடுத்து, மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், எவ்வகை தீமையையும் எதிர்கொண்டு, அருமை பாராமல் அவமதிப்பும் கொண்டு கருமமே கண்ணாயனார் ஆனால் மேட்டர் முடிஞ்சுச்சுப்பா என சுச்சுலிப்பா காட்டலாம்.
எல்லாம் உணர்வை தூண்டும் வார்த்தைகள்...எனக்கென சொன்னது போல இதை ஒரு பாடமா எடுத்துக்கிறேன்..தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கோபி..
ஆஹா...
என்ன தவம் செய்தோம் இது போன்ற தோழமை பெறுவதற்கு...
தொடரின் முதல் பகுதிக்கு வருகை தந்து, படித்து, கருத்தும் வாழ்த்தும் பகிர்ந்த அன்பு நெஞ்சங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி..
சித்ரா
சுசி
ராமலஷ்மி
ஸ்ரீஜா
பெயர் சொல்ல விருப்பமில்லை
தமிழரசி
தங்களின் தொடர் வருகை இந்த தொடருக்கு மிக அவசியம்...
//ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா ... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு//
சரியான தத்துவங்கள் தான்,
எல்லாம் அருமையான் பகிர்வு
நல்ல அழகான முறையில் ஆரம்பித்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.
//Jaleela said...
//ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா ... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு//
சரியான தத்துவங்கள் தான்,
எல்லாம் அருமையான் பகிர்வு
நல்ல அழகான முறையில் ஆரம்பித்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.//
*******
வாங்க ஜலீலா மேடம்..
தொடர்ந்து வருகை தந்து, உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி...
இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...
தொடர்ந்து வருகை தந்து, கருத்து பகிர்ந்து ஆதரவு தாருங்கள்...
annamalaiyaan
kiruban
bhavaan
spice74
ldnkarthik
tamilz
MVRS
mounakavi
Vino23
நானும் அளித்து விட்டேன் வாக்கு:)!
//ராமலக்ஷ்மி said...
நானும் அளித்து விட்டேன் வாக்கு:)!//
*******
வாங்க ராமலஷ்மி...
தங்களை போன்ற தோழமைகளின் உற்சாகமே எங்கள் எழுத்துக்கு பலம் சேர்க்கிறது...
உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...
என் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு பதிவு ஒரே நாளில்....பாருங்க, படியுங்க!
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
என் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு பதிவு ஒரே நாளில்....பாருங்க, படியுங்க!//
***********
வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை
படிக்கிறேன்... உங்களின் சாதனை இடுகைகளை...
//மனுசனா பொறாந்தா ஏதாவது சாதிக்கணும், இல்லையா !!! கண்ணு, நீ பொறக்குறது வேஸ்ட், நீ பொறக்காம இருக்கிறது அத விட பெஸ்ட்.//
ரிப்பீட்டே....
//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//மனுசனா பொறாந்தா ஏதாவது சாதிக்கணும், இல்லையா !!! கண்ணு, நீ பொறக்குறது வேஸ்ட், நீ பொறக்காம இருக்கிறது அத விட பெஸ்ட்.//
ரிப்பீட்டே....//
**********
வாங்க பிரகாஷ்... முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
தொடர்ந்து வாருங்கள்... நன்றி..
//கண்டிப்பா சாதிக்கனுங்க என சாதிக்கும் எண்ணம் நம் ரத்ததில் உண்டு முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது//
உண்மை கோபி.
வெந்ததை தின்று விதிவந்தா சாக பிறக்க வில்லை என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
தின்று திரிந்து உறங்கவோபிறந்தோம்
என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் என்கிறீர்கள்.
//மனுசனா பொறந்தா ஏதாவது சதிக்கனும்//
நிச்சியம் நீங்கள் இருவரும் சாதிப்பீர்கள்.
வெற்றிப் பாதையின் படிகளில் அமர்க்களமாய் ஏறுங்கள் விழுதுகளை ஆழபதியுங்கள்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
//கோமதி அரசு said...
//கண்டிப்பா சாதிக்கனுங்க என சாதிக்கும் எண்ணம் நம் ரத்ததில் உண்டு முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது//
உண்மை கோபி.
வெந்ததை தின்று விதிவந்தா சாக பிறக்க வில்லை என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
தின்று திரிந்து உறங்கவோபிறந்தோம்
என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் என்கிறீர்கள்.
//மனுசனா பொறந்தா ஏதாவது சதிக்கனும்//
நிச்சியம் நீங்கள் இருவரும் சாதிப்பீர்கள்.
வெற்றிப் பாதையின் படிகளில் அமர்க்களமாய் ஏறுங்கள் விழுதுகளை ஆழபதியுங்கள்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.//
********
எங்கள் பதிவிற்கு தொடர்ந்து வருகை தந்து, ஆழ்ந்து படித்து, கருத்தும், வாழ்த்தும் பகிரும் கோமதி மேடம் அவர்களே.. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...
Post a Comment