வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க!!!!
டீச்சர்.... டீச்சர் !!!!! என உச்சஸ்தாயியில் கூப்பிட்டு (கூச்சலிட்டு!!??), மூணு....!!!!! என ஒரே குரலில் சொல்லி, மூன்று விரல்களை காட்டி நாங்கள் இருவரும் எழுந்து நிற்க, ஆசிரியர் குழம்பித்தான் போனார்.
ஆசிரியரா யாரது, .. .. வேற யாரு, நம்ம எடக்குமடக்கு வலைமனையின் ஆசிரியர்தேன்... அப்படியா, சொல்லவே இல்லை, யாரது புதுசா என கேட்பவருக்கு அது வேற யாரும் இல்லை, நீங்கதான்.
வாசக தோழமைதான் எங்கள் வாத்தியார்கள்.
ஆதரித்து வழி காட்டுவது வாசக தோழமைதானே. சரி ரைட்டு, மேலே சொல்லுங்க ஒங்க வீகத்த என்று ஆசிரியர் கேட்கிறார்,
அதென்னடா புதுசா இந்த மூணு. பக்கத்தில உள்ள ”டி.நகர் போனா டீ கிடைக்கும்”, குடிச்சுப் புடலாம். ஆனா, அதுக்காக பஸ் புடிச்சு ”விருதுநகர் போனா விருதா கிடைக்கும்’?. என்ன சொல்லணுமோ, அத்த தெளிவா சொல்லுங்க.
துபாய் லைஃப், ஹூமன் லைஃப்ன்னு இரண்டு தொடர்கள் எழுதியாச்சு. அடுத்ததா ஒரு தொடர் லைவ் வயர் மாதிரி எழுதலாம். அதைதான் மூணாவதுன்னு சொன்னோம் டீச்சர்ர்.. என்றோம் கோரஸாய். வெரி குட்... சொல்லுங்க, எதை பத்தி எழுத போறீங்க.
பண்டைய பல்காப்பியத்தில் கொண்டைமானுக்கு பல் உடைந்து, அதனால தொண்டை கட்டியதைப் பத்தி எழுதலாம் சார். சூப்பர் மேட்டரு, பத்து அத்தியாயம் பட்டைய கிளப்பிறலாம். இல்லன்னா நாளைய நானூறில் நாலுமுக்கு சந்தி சிரித்தது பற்றி ”சிங்கீத சித்தர் சின்ன சேலம் சிங்கமுத்து” சொன்னத சொல்லலாம் சார். உச்சத்தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் சுர்ர்ர்ர்ர்ருன்னு சூடாயிரும், கிர்ர்ர்ர்ர்ர்ருனு கேராயிடும், டர்ர்ர்ர்ர்ர்ருன்னு டாராயிடும் சார் என சொல்லச் சொல்ல மூர்க்கமாய் பாய்ந்து கழுத்தை பிடித்தார்.
நக்கல் நாளுக்கு நாள் கூடிப் போச்சு, ”ஆவி அமுதா” பாவம் பிசியாயிருக்காங்க, பூதம் பூமாக்கா, பேய் பெரியநாயகிய கூப்பிட்டு வேப்பிலை அடிச்சா தேவல என்றார். சலசலப்பு அடங்கி, பெரிய விவாதத்தின் முடிவில் மூன்றாம் தொடர் பற்றிய முடிவு எடுத்தாயிற்று, இதோ நமது புதிய தொடரின் பூர்வாங்க வேலைகள் தொடங்கி, புதுப் பொலிவுடன் உங்கள் விழிகளை தரிசிக்க வருகிறது.
நமது முந்தைய வாழ்க்கை தொடர் மனித வாழ்வை, கோட்பாடுகளை ஒரு சாமான்யனாய் அலசியதென்றால், தொந்தரவில்லாத எளிமையான அன்பான வாழ்வை பற்றி பேசியதென்றால், அடிப்படையாய் ஒரு நல்ல மனிதனாய் வாழ தூண்டியது என்றால் அடுத்த கட்டமாய் வாழ்வில் சாதிக்க தூண்டுவதே இத்தொடரின் பணி.
கண்டிப்பா சாதிக்கணுங்க என சாதிக்கும் எண்ணம் நம் ரத்தத்தில் உண்டு. முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யாரென கேள்வி கேட்டு, சாதித்த சில சாதனையாளர்களின் சாதனைகள்,
சோதனைகளை பட்டியலிட்டு அவர்கள் வாழ்க்கையையே பாடமாய் படிக்கும் முயற்சியே இந்த தொடரின் முக்கிய நோக்கம்...
இன்னும் சில தினங்களில் இந்த தொடரின் முதல் பகுதி இங்கு உங்கள் பார்வைக்கு அச்சேறும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். தங்கள் மேலான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்த்து ஆலோசனைகளை பின்னூட்டமாக்கி வழி நடத்துங்கள் என இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து தலைப்புகளில், தோழமை தேர்ந்தெடுக்கும் தலைப்பை தொடரின் தலைப்பாக வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்...
1) வெற்றியின் விழுதுகள்..........
2) வெற்றி பெற விரும்பு
3) நிச்சயம் வென்றிடுவோம்.....
4) உழைத்துப்பார்..... உலகை வெல்வாய்....
5) வென்றவர்கள் வழியே.... நாம்
கூடிய மட்டும் விரைவாக (4-5 நாட்களுக்குள்) ஒரு தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்து தெரியப்படுத்தினால், முதல் பகுதி விரைவாக அரங்கேற / அரங்கேற்ற ஏதுவாகும்...
22 comments:
வரவேற்புடன் வாழ்த்துக்கள்.
"வெற்றியின் விழுதுகள்" - ஓகே.
//sreeja said...
வரவேற்புடன் வாழ்த்துக்கள்.
"வெற்றியின் விழுதுகள்" - ஓகே.//
**********
வருகைக்கும், தலைப்புக்கும் மிக்க நன்றி ஸ்ரீஜா அவர்களே...
தொடங்கப் போகும் தொடருக்கு வாழ்த்துக்கள். தொடரின் தலைப்புக்கான என் தெரிவு:" உழைத்துப்பார்... உலகை வெல்வாய். " தூள் கிளப்புங்க நண்பரே!
ரேகா ராகவன்.
//KALYANARAMAN RAGHAVAN said...
தொடங்கப் போகும் தொடருக்கு வாழ்த்துக்கள். தொடரின் தலைப்புக்கான என் தெரிவு:" உழைத்துப்பார்... உலகை வெல்வாய். " தூள் கிளப்புங்க நண்பரே!
ரேகா ராகவன்.//
********
வாங்க ராகவன் சார்....
வருகைக்கும், வாழ்த்துக்கும், தலைப்பு தேர்ந்தெடுத்தமைக்கும் மிக்க நன்றி........
//முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது//
உண்மை தான். பலமுறை படுத்து தூங்கவும் போய் விடுகிறது. அதை தட்டி எழுப்பவே ஒரு வாய்ப்பு தருகிறீர்கள்... நன்றி.. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..
'வெற்றியின் விழுதுகள்' க்கே என் வோட்டு..
//ஸ்வர்ணரேக்கா said...
//முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது//
உண்மை தான். பலமுறை படுத்து தூங்கவும் போய் விடுகிறது. அதை தட்டி எழுப்பவே ஒரு வாய்ப்பு தருகிறீர்கள்... நன்றி.. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..
'வெற்றியின் விழுதுகள்' க்கே என் வோட்டு..//
********
வருகைக்கும், கருத்துக்கும், தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்கும் மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா....
வாழ்த்துக்கள் சகோதரரே!எனது சாய்ஸ் "வெற்றியின் விழுதுகள்" பின்னி தூள் கிளப்புங்கோ!!
hai frnds
my suggestion:
1)வென்றவர்கள் வழியே....
2)உழைத்துப்பார்..... உலகை வெல்வாய்.... ( Instead of Ulagai..Uuvagai (Makilchi) kolvaai...
with best regards
chelladurai
நல்ல தலைப்பு
//ஸாதிகா said...
வாழ்த்துக்கள் சகோதரரே!எனது சாய்ஸ் "வெற்றியின் விழுதுகள்" பின்னி தூள் கிளப்புங்கோ!!//
*********
வாங்க ஸாதிகா...வருகை தந்து, பதிவை படித்து, “தலைப்பு” தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி...
//cdhurai said...
hai frnds
my suggestion:
1)வென்றவர்கள் வழியே....
2)உழைத்துப்பார்..... உலகை வெல்வாய்.... ( Instead of Ulagai..Uuvagai (Makilchi) kolvaai...
with best regards
chelladurai//
*********
வாங்க செல்லதுரை... வருகைக்கு நன்றி... உங்களின் கருத்து ஆலோசனையில் உள்ளது... நன்றி..
//அண்ணாமலையான் said...
நல்ல தலைப்பு//
*********
வாங்க அண்ணாமலையான்...
5 தலைப்புகள் கொடுத்து ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்க சொன்னால், எதையுமே தேர்ந்தெடுக்காமல் நல்ல தலைப்பு என்று சொல்கிறீர்களே...
எது நல்ல தலைப்பு என்று சொல்லுங்களேன்... மிக்க நன்றி...
தொடர் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் கோபி..வெற்றியின் விழுதுகள் என்ற தலைப்பு நல்லா இருக்கு....
//தமிழரசி said...
தொடர் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் கோபி..வெற்றியின் விழுதுகள் என்ற தலைப்பு நல்லா இருக்கு....//
**********
வாங்க தமிழரசி...
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், தலைப்பு தேர்ந்தெடுத்தமைக்கும் மிக்க நன்றி...
வெற்றியின் விழுதுகள்..
..... good one.
//Chitra said...
வெற்றியின் விழுதுகள்..
..... good one.//
********
தொடர்ந்து வருகை தந்து பதிவுகளை படித்து ஊக்கப்படுத்தும் தோழமை சித்ராவிற்கு எங்களின் மனமார்ந்த நன்றி....
வரவிருக்கும் தொடரின் தலைப்பு தேர்ந்தெடுத்தமைக்கும் எங்களின் நன்றி...
விழுதுகள் விருட்சங்களாக வாழ்த்துகள் கோபி!
//ஷைலஜா said...
விழுதுகள் விருட்சங்களாக வாழ்த்துகள் கோபி!//
********
வருகை தந்து வாழ்த்தியதற்கு எங்களின் மனமார்ந்த நன்றி மேடம்.
வாழ்த்துக்கள் கோபி, உங்கள் எழுத்து பயணத்தைதொடருங்கள் ,முடிந்த போது கடைசி பெஞ்சிலாவது வந்து படித்து விடுவேன்.
.
"வெற்றியின் விழுதுகள் " கலக்குங்க...
//Jaleela said...
வாழ்த்துக்கள் கோபி, உங்கள் எழுத்து பயணத்தைதொடருங்கள் ,முடிந்த போது கடைசி பெஞ்சிலாவது வந்து படித்து விடுவேன்.
"வெற்றியின் விழுதுகள் " கலக்குங்க...//
*******
வாங்க ஜலீலா மேடம்...
உங்களை போன்ற தோழமைகளின் தொடர் உற்சாகமே இது போன்ற தொடர்களை எழுத தூண்டுகிறது...
அனைத்து நல்ல உள்ளங்களின் ஆசியுடன் “வெற்றியின் விழுதுகள்” தொடரின் பாகம்-1 ஓரிரு நாளில் அரங்கேற இருக்கிறது...
வாழ்த்துக்கள் கோபி,லாரன்ஸ்.
//sindhusubash said...
வாழ்த்துக்கள் கோபி,லாரன்ஸ்.//
*******
வருகை தந்து, வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சிந்துசுபாஷ்...
Post a Comment