மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 9)

கேளிக்கை, பொழுது போக்கு பற்றி பேசலையே, என்ற சென்ற பகுதியின் கேள்விக்கு விடை தெரிய வேண்டி நண்பர்களை அணுகிய போது, காரசாரமான விவாதம். "நாளைக்கு நிச்ச்யம் இருக்கும்" "இல்லை இருக்காது" என்றெல்லாம் இரு குழுவாக பிரிந்து விவாதம் வீங்கீக் கொண்டு இருக்கிறது. (ஒரு புது தமிழ் பதம் உருவாக்கி விட்டோம் ‍ வீங்குன விவாதம்) என்ன என்று நெருங்கி விசாரித்ததில் தெரிந்தது.

புனித ரமலான் நோன்பு மாதம் :
இஸ்லாம் மார்கத்தின் மூன்று முக்கிய கடமைகள் உண்டு. ஒன்று நாள் தவறாத ஐந்து வேளை பிரார்த்தனை, இரண்டாவது, வாழ்வின் ஒரு முறையாவது மேற் கொள்ள வேண்டிய மெக்காவிற்கான புனித பயணம், அடுத்தது ரமலான் நோன்பு.

புனித மாதமாய் வரையறுக்கப்பட்டு, கடுமையான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உபவாசம், வருமானத்தில் ஒரு பகுதி தானம் செய்தல் என உள்ள உடல் தூய்மை செய்யும் மாதம். சூரிய காலெண்டர் பின்பற்றுவதால், ரமலான் மாதத்தின் தொடக்கம் நமக்கு முன் கூட்டியே தெரியாது. சவுதி அரேபியாவில் பிறை தெரிகிறதா என்று சொன்னதும் தான் நமக்கு தெரியும். இஸ்லாம் இங்கு அரசு மதமானதால் ரமலான் கூடுதல் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும்.

சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை பொது இடங்களில் வைத்து உண்ணவோ, குளிர் மற்றும் சூடான பானங்கள் குடிக்கவோ தடை, அவர்களுக்கும், பொது இடங்களில் நமக்கும். வீட்டினுள் வைத்து மட்டுமே உண்ண முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.....இஸ்லாம் அல்லாதவர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாவம், நோன்பு நேரத்தில் சிகரெட் சீக்ரெட் ஆகும்.

பன்னிரெண்டு மணி நேரம் உண்ணாத வயிறை முதலில் தண்ணீர், பழ ரசம் குடித்தும், பின்னர் பேரிச்சை, திராட்சை பழங்களை உண்டு, பின்னர் கஞ்சி போல உண்பதும் ஆன நோன்பு திறக்கும் விருந்தின் பெயர் இப்தார்.

அருகில் உள்ள படங்களைப் பாருங்களேன்.
பணி நேரம் 12-15 மணி நேரத்திலிருந்து 6-8 மணி நேரமாக குறைக்கப்படும். ரமலான் நோன்பிருக்கும் முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும்.

விடிகாலையில் நான்கு மணிக்கு இறுதியாய் உண்ணவோ, குடிக்கவோ செய்யலாம், அதன் பின் மாலை சூரிய மறைவுக்கு பின் தான். காலை நோன்பு திறந்தவுடன், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும்..... பின், மாலை நோன்பு முடிந்த உடன் ஹோட்டல்கள் அனைத்தும் திறக்கப்படும்.
இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு பார்சல் வசதி சில ஹோட்டல்கள் செய்து தரும். ஹோட்டல்களில் சாப்பிட முடியாது..... பார்சல் தருவதென்றால் ஓகே என்பார்கள்...... நோன்பு இருக்காதவர், அந்த பார்சல் வசதியை உபயோக படுத்தி கொள்ளலாம்..
இந்த ரம்ஜான் நேரத்து, மதிய உணவு சேவையை செய்ய விரும்பும் ஹோட்டல்கள் தனியாக ஒரு சிறப்பு லைசன்ஸ் துபாய் முனிசிபாலிட்டியிடம் இருந்து வாங்க வேண்டும், அதற்கான தொகை திர்ஹாம் 5,000 /- மட்டுமே...... இது, அந்த ரம்ஜான் மாதம் முழுதுக்குமான சிறப்பு லைசன்ஸ் தொகை..... ஆனால் ஒன்று, இந்த சிறப்பு லைசன்ஸ் இல்லாமல், மதிய உணவு சேவையை யாரும் செய்ய முடியாது...... அதிகாரிகள், திடீரென்று உணவகங்களில் வந்து சோதனை செய்வார்கள்....... பிடிபட்டால், பெரிய தொகை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.
ரமலான் மாதத்தை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இன்னொரு விசயம் தொடர்ச்சியாய் கிடைக்கும் விடுமுறை தான். ஆரம்பிக்கும் தேதி நிச்சயம் இல்லாததால், விடுமுறை என்று தொடங்கும் என்பதும் லாட்டரி சீட்டு போலத்தான். வார இறுதி விடுமுறையோடு சேர்த்து இத்தனை நாள் என்று ஏக்கத்தில் ஏங்கும் உழைக்கும் வர்க்கம்.


விடுமுறை நிச்சயம் ஒரு பயணத்தின் துணை கொண்டு இனிமையாய் நகரும். முடிந்த பின் அடுத்த வருடம் இப்படி செய்ய வேண்டும் என்று இப்போதே திட்டமிடும்.


வீங்குன விவாதம் விரிஞ்சு போச்சு (இதுவும் புதுசா!!!).


கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாய் தனியாய் எங்களோடு வாழும் துரதிருஷ்டசாலி என்னருகில். லேசாய் தொண்டையை கனைத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன், ஏங்க குடும்பமாய் வாழக் கூடாதா என்று. அவ்வள்வ்ய் தான். மனிதன் புலம்பித் தீர்த்து விட்டார்.


குடும்பத்தை வைத்துள்ளவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.... விஷம் போல் ஏறிய வாடகை, பிள்ளைகளின் படிப்பிற்கான செலவு, விடுமுறை நாட்களில் வெளியே சென்று வர ஆகும் டாக்ஸி கட்டணம், ஹோட்டலில் சாப்பிடும் ஆகும் செலவு என்று.... பல்முனை தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்....
முன்பு அமீரக அரசாங்கம், திராம் 3,000/- சம்பளம் இருந்தால், உங்கள் குடும்பத்துடன் தங்கி இருப்பதற்கு விசா கொடுத்தது.... பின், அது திராம் 4000/- ஆனது, பின் திராம் 6000/- ஆனது..... மிக சமீபத்தில், சம்பளம் திராம் 10000/- இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் இருக்க முடியும் என்றொரு புது குண்டு போட்டது......


என்ன செய்வது..... இங்கு அவர்கள் வைத்தது தானே சட்டம்.... இஷ்டம் இருந்தால் இரு, கஷ்டமெனில் நாட்டை விட்டு வெளியேறு என்பது தானே அவர்கள் நம்மிடம் மறைமுகமாக சொல்லும் சேதி.....

கொடி பிடிப்பது, அரசாங்கத்தை எதிர்த்து கோஷம் இடுவது, அந்த கும்பலில், கலவரத்திற்கு வழிசெய்வது, அரசாங்க மற்றும் தனியார் வண்டிகளை கொளுத்துவது போன்ற விஷயங்கள் நமக்கு நம்மூரில் வேண்டுமானால் நடக்கலாம்.... இங்கு..... ஹூம்.....மூச்....... நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....

(இன்னும் வரும்......)

22 comments:

நட்புடன் ஜமால் said...

நோன்பு நேரத்தில் அதை முற்படுத்தி பதிவு போட்டு இருக்கீங்க.

நலம்.

இஸ்லாத்தின் கடமைகள் மேலும் இருக்கு, இங்கே பாருங்க.

-----------------

முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும்.

-------------

இது பொதுவான விதி அல்ல.

நான் வேலை செய்த பொழுது

காலை 9 - 2, 7 - 11 என்று வேலை பார்த்தேன். இன்னமும் பல அலுவலகங்களில் இப்படித்தான் இருக்கு.

Eswari said...

I am the first.

//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....//

அப்படி போடு அருவாளை

Eswari said...

//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....//

அப்படி போடு அருவாளை

மணிஜி said...

அப்படி இளமையை தொலைத்து பணம் ஈட்டுவது எதற்கு கோபி?முதுமையில் சுகமாய் வாழவா?எனக்கு அதில் உடன்பாடில்லை...

sreeja said...

// புனித ரமலான் நோன்பு மாதம் //

சின்ன சின்னதாய் தெளிவாக சொல்கிரீர்கள்.

"கட்டதுரை"கள் "கைபுள்ளை"களாக இருப்பது எல்லா இடத்திலும் நல்லது தானே.

R.Gopi said...

// நட்புடன் ஜமால் said...
நோன்பு நேரத்தில் அதை முற்படுத்தி பதிவு போட்டு இருக்கீங்க.

நலம்.

இஸ்லாத்தின் கடமைகள் மேலும் இருக்கு, இங்கே பாருங்க.//

வாங்க ஜமால்..... தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி... இஸ்லாத்தின் கடமைகளை பார்க்கிறேன்.....

//இது பொதுவான விதி அல்ல.

நான் வேலை செய்த பொழுது

காலை 9 - 2, 7 - 11 என்று வேலை பார்த்தேன். இன்னமும் பல அலுவலகங்களில் இப்படித்தான் இருக்கு.//

பொதுவான விதி என்று சொல்லவில்லை ஜமால் பாய்.... நிறைய மற்றும் பெரும்பாலான இடங்களில் இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.... தொடர்ந்து வாருங்கள்... கருத்தை பகிருங்கள்....

R.Gopi said...

// Eswari said...
I am the first.

//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....//

அப்படி போடு அருவாளை//

வாங்க ஈஸ்வரி.... கருத்துக்கு நன்றி.... உண்மைதான்..... இங்கே உரித்து விடுவார்கள்.... கரை வேட்டிகள் வந்து "கட்டதுரை"களை veliye vidu endrellaam அட்டகாசம் செய்ய முடியாது.....

R.Gopi said...

//தண்டோரா said...
அப்படி இளமையை தொலைத்து பணம் ஈட்டுவது எதற்கு கோபி?முதுமையில் சுகமாய் வாழவா?எனக்கு அதில் உடன்பாடில்லை...//

ஆ.....ஹா.... ரொம்ப நாளைக்கப்புறம் வருகை தரும் "தல தண்டோரா" அவர்களே வருக...... உங்களின் கேள்வி மிகவும் அருமையான ஒன்று... ஆனால், அதற்கு பதில் தான் ஒரு வார்த்தையில் சொல்ல இயலாது.... கண்டிப்பாக, நிறை குறைகளை பற்றி விவாதிக்கும் போது சொல்கிறேன்....

அப்புறம் உங்களோட "சேஷு" ரொம்ப டச்சிங்கா இருந்தது பாஸ்.....

R.Gopi said...

//sreeja said...
// புனித ரமலான் நோன்பு மாதம் //

சின்ன சின்னதாய் தெளிவாக சொல்கிரீர்கள். //

வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீஜா...

//"கட்டதுரை"கள் "கைபுள்ளை"களாக இருப்பது எல்லா இடத்திலும் நல்லது தானே.//

கண்டிப்பாக.... இங்கு iruppadhupol, angum irundhaal, நம் naadum vegu vegamaaga munnerume? ithuthaan என் aadhangam......

Anonymous said...

இஸ்லாமியமும் சொல்லியிருக்கீங்க அதோடு அந்த நாட்டின் சட்ட திட்டமும் கண் முன் கொண்டுவந்தீருக்கீங்க நேரம் கிடைக்கும் போது உங்க மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் கோபி..

R.Gopi said...

//தமிழரசி said...
இஸ்லாமியமும் சொல்லியிருக்கீங்க அதோடு அந்த நாட்டின் சட்ட திட்டமும் கண் முன் கொண்டுவந்தீருக்கீங்க நேரம் கிடைக்கும் போது உங்க மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் கோபி..//

***********

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி தமிழரசி...

கண்டிப்பாக எல்லா பதிவுகளையும் படித்து பாருங்கள்...... (இது வேற கண்டிப்பு).

Jaleela Kamal said...

அரபு நாட்டு நோன்பு காலத்தை சரியாக சொல்லி இருக்கிஇங்க .
நல்ல பதிவு,

இங்கும சில அலுவலகத்தில் mornning 9 to 3 evening 7 to 11 என்று
வேலை செய்கிறார்கள்

R.Gopi said...

//Jaleela said...
அரபு நாட்டு நோன்பு காலத்தை சரியாக சொல்லி இருக்கிஇங்க .
நல்ல பதிவு,

இங்கும சில அலுவலகத்தில் mornning 9 to 3 evening 7 to 11 என்று
வேலை செய்கிறார்கள்//

வாங்க‌ ஜ‌லீலா... சுக‌மா? நீண்ட‌ இடைவெளிக்கு பிற‌கு வ‌ந்திருக்கும் உங்க‌ளுக்கு வ‌ண‌க்கம்....

இருக்க‌லாம்....

கார்த்திக் said...

அனுபவித்து எழுதிஉள்ளீர்கள்.. நல்லா பகிர்வு..

R.Gopi said...

//கார்த்திக் said...
அனுபவித்து எழுதிஉள்ளீர்கள்.. நல்லா பகிர்வு..//

வாங்க‌ கார்த்திக்..... வ‌ண‌க்க‌ம்....

த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி.... தொடர்ந்து வாருங்க‌ள்...

shabi said...

இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள் மேலும் எழுதுங்கள்

shabi said...

இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள் மேலும் எழுதுங்கள்

shabi said...

அபுதாபியில் தான் நான் இருக்கிறேன்

R.Gopi said...

//shabi said...
இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள் மேலும் எழுதுங்கள்//

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி ஷபி. எழுதுகிறோம்.. படித்துவிட்டு சொல்லுங்கள்.

/./shabi said...
அபுதாபியில் தான் நான் இருக்கிறேன்//

நல்லது.... உங்களை பற்றிய மேல்விபரங்கள் தெரியப்படுத்துங்கள்....

Erode Nagaraj... said...

//ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்...//

:) :) :)

R.Gopi said...

//Erode Nagaraj... said...
//ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்...//

:) :) :)//

வாங்க‌ நாக‌ராஜ் சார்.... இவ்ளோ நாள் நீங்க‌ ம‌ட்டும் தான் வராம‌‌லே இருந்தீங்க‌.. இப்போ, நீங்க‌ வந்த‌துல‌ என‌க்கு சந்தோஷ‌ம்...

கிரி said...

//சம்பளம் திராம் 10000/- இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் இருக்க முடியும் என்றொரு புது குண்டு போட்டது......//

அப்படியா!

ஹஜ் போய் அங்கே என்ன தான் இருக்குன்னு பார்க்கலாம் என்று இருந்தேன்.. அப்புறம் தான் தெரிந்தது அங்கே முஸ்லிம் மட்டுமே அனுமதி என்று