மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 8)துபாய் சூரியன்!!! சரிந்து, மெல்ல தவழ்ந்து மேற்கை முத்தமிட்டது. இரை தேடி அலுவலகம் வந்து அடை பட்ட மனித பற‌வைகள், தம் கூட்டுக்கு செல்லும் ஆயத்ததில் மும்முரமாய் இருந்தனர். நாளை வந்தவுடன் முதலில் இந்த வேலை முடிக்க வேன்டும் என்று மனதில் குறித்துக் கொண்டு, வண்டிகள் நோக்கி தளர் நடை இட்டனர். எங்களுக்காக காத்து இருந்து எல்லோரும் அமர்ந்ததும் மெதுவாய் வண்டி கிளம்பியது.

வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் ஸ்விட்ச் போட்ட மாதிரி தலை பின்னோக்கி சாய்த்து, ஒரு சுகமான குட்டி தூக்கம். உச்ச ஸ்தாயியில் சில குறட்டை வேறு. ஏன் இது. சுவாரசியமாய் வெளியில் வேடிக்கை பார்க்க நம் ஊர் போல சுவரொட்டிகளோ, பேனர்களோ இல்லை, மற்றது இந்த ஊர் சீதோஷணம், பளீர் வெயிலும் சூடும், இமைகளை வந்து மூடி விடும் நம்மைக் கேட்காமலே.

சக பிரயாணிகள் அத்தனை பேரும் உறக்கத்தில். டிரைவரை தவிர ( நல்ல வேளை) என்னையும் தவிர. முதல் நாள் அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது, வீட்டு ஞாபகம். பிரிந்து வந்த உறவுகள் எல்லாம் மனக்கண் முன்னால் ஒடியது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழி மனதில், உடன் இருந்த போது தோன்றாத பாசம் வாட்டி, இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆவல் தூண்டும். பணமோ, நேரமோ, தூரமோ மாத்திரம் அல்லாது, அலுவலக அனுமதி என்னும் உச்சகட்ட தடைக்கல் நம் இயலாமையை ஏள‌னம் செய்யும்.

மீண்டும் அதே சாலை, வழுக்கிக் கொண்டு ஒடும் வண்டிகள். வழ‌க்கமான வாகன நெரிசல். எல்லா சாலையும் ஒரே மாதிரி தெரியுது. இத்திஹாத், பர்ஷா, கிசேஷ், உம் சிக்ஹிம், போன்ற உள்ளூர் ஏரியாக்களும், சாலை பெயர்களும், நேற்று சுட்ட வடை போல‌ வாயில் நுழைய மறுக்கிறது. முதலில் தோன்றும், இது எல்லாம் தெரிந்த ஒட்டுனர் பெரிய பிஸ்தா வென்று. ஆறு மாதம் ஆனால் நமக்கே இதெல்லாம் தெரியும் என்பது அப்போது தெரியவில்லை.

ரோடில் போகும் போது, போக்குவரத்து பற்றி கொஞ்சம் விரிவாய் பார்ப்போம். சாலை வழியே பிரதானம். பொது போக்குவரத்து பஸ்களும், டாக்ஸிகளும் கவைக்குதவாததால், நம் கால்களையே.... சாரி நம் கார்களையே நம்ப வேண்டிய நிலை. அதனால் தான் ஒற்றை ஆளாய் உட்கார்ந்து லாரி சைசில் உள்ள வண்டி ஓட்டி கொண்டு போவார் நம் அமீரகத்தின் ஆள்.
ஒற்றை ஆளாய் உட்கார்ந்து ஒட்டும் வண்டியின் எண்ணிக்கைதான் சாலை நெரிசலின் பிள்ளையார் சுழி.

ஓட்டுனர் உரிமம், அதாங்க நம்ம ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது ரொம்ப கஷ்டம். அழ அழ வைத்து பின்னர் தான் கொடுப்பார். ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றால் பயிற்சி பள்ளிக்கு சென்று அட்மிஷன் வாங்க வேண்டும். அனுமதிக்கு முன் உங்கள் கண்ணை பரிசோதித்து கண் நல்லா தெரியுது என்ற சான்றிதளோடு செல்ல மறக்க கூடாது.

முதலில் சாலை விதி முறைகள் மற்றும் சாலை குறியீடுகள் எல்லாம் வகுப்பறையில் சொல்லி கொடுக்கப்பட்டு பின்னர் வண்டியில் ஏற வேண்டும். இதில் இரு நிலை. முதலில் நான்கு சுவர்களுக்கு உள்ளே ஓட்ட தெரிகிறது வண்டியை நிறுத்த தெரிகிறது என்று நிச்சயம் ஆனதும் சாலைக்கு வர அனுமதி. சாலையில் வாத்தியாரோடு பாடம் நடக்கும். பின்னர் வாத்தியார் (எம்.ஜி.ஆர்.அல்ல) ஓகே என்ற உடன் நமக்கு பரிட்சை.

எப்படி தான் அந்த தேர்வு பயம் கொண்டு வருவார்களோ அந்த ஆண்டவருகே வெளிச்சம். எத்தனை பெரிய சூரனும் படபடத்து பயத்தில் மூழ்குவான். மிக குறைவாய் பேசும் பரிசோதகர், எளிதாய் நம்மை பெயில் செய்வார். எட்டு பத்து தேர்வு எழுதியும், ஒரு லட்சம் ரூபா செலவழித்தும் இன்னும் கிடைக்கல என்ற மனித புலம்பல்கள், எங்கும் நிறைந்து இருக்கும்.

சரி ஏன் இத்தனை கெடுபிடி.

வண்டி வாங்கி ஒட்ட துவங்கிய முதல் இரு மாதத்தில், நாம் எப்படி ஓட்டினோம். அதுவே ஒரு இரண்டு மாதத்தில் பழகி, அனாயாசமாய் இது ஒரு வேலையே இல்லை என்று நினைத்தோம் அல்லவா. வண்டி ஓட்ட மூளையை பயன் படுத்தாமல், தன்னிச்சை உணர்வுக்கு விட்டு விடும் போது, கார் தானாய் ஓடும் அல்லவா. அப்படி ஒரு உயர்ந்த நிலை வரும் வரை உரிமம் இல்லை, உக்கி போடு தான். 120 கீ.மீ. வேகத்தில் செல்லும் சாலையில் முதல் நாளே நாம் ஓட்ட வேண்டாமா. க‌த்துகுட்டிக‌ளின் த‌வ‌று அவ‌ர்க‌ளை ம‌ட்டும் அல்லாது, அடுத்த‌வ‌ரையும் கொல்லும் அல்ல‌வா.

கார் வாங்குவது கத்திரிகாய் வாங்குவது போலதான். பழையது, புதியது, எல்லாம் எளிதில் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும், புதுப்பித்து 63 டெஸ்ட் பாஸ் செய்தாலே வண்டி ஓட்ட அரசு அனுமதி கிடைக்கும். அதாவது புள‌க்கத்தில் உள்ள வண்டிகள் எல்லாம் தங்க கம்பிகளே. எனவே தைரியமாக போய் வண்டி வாங்கலாம். ஒட்டை உடைசலை நம் தலையில் கட்டும் வேலை நடக்காது.

நம் ஊரில் லெக்ஸஸ் கார் வாங்க முடியுமா. ஜாகுவார், ரேஞ்சு ரோவெர் வாங்க முடியுமா. மிக பெரிய செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிற ஒரு கோடி ரூபா கார் இங்கே கொஞ்சம் இஷ்டமும் கொஞ்சம் கஷ்டமும் பட்டாலே போதுமானது. நம்ம ஊர் கணக்கிலே பிரமாதம் என்று கருதும் லான்செரும் டொயோட்டா கொரேல்லாவும் தான் இங்கே ஆரம்பம்.


சரி சாலையை விட்டால் நூறடி தூரம் கடலைக் கடக்கும் ஆப்ரா (ABRA) எனும் கடல் வழி போக்குவரத்தை சொல்லலாம்.

துபாய் சரித்திர பிரசித்தி பெற்றதற்கு காரணம் இந்த கிரீக் தான். நிலத்துக்கு நடுவில் தோள் துண்டு போல் கடல் வருவது கிரீக். (தீபகற்பம் என்று நினைக்கிறோம், பின்னூட்டத்தில் சரியான தமிழ் பதம் சொல்லி உதவுங்களேன், கலைஞரை எல்லாம் விவாதிக்காமல்....) இதில் என்ன என்பவருக்கு: கப்பலில் வருபவர், ஊர் உள் வரை வந்து சரக்கு இற‌க்கலாம், இளைப்பாரலாம், கூடி கும்மி அடிக்கலாம்....அடுத்தது ரயில் மார்க்கம்: இப்போது இல்லை. விரைவில் வருகிற‌து, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிதான் சூப்பர்.
09.09.09 : அதாவது, 9ம் தேதி செப்டெம்பர் மாதம், 2009.

கட்டுமான பணிகள் முடிந்து வெள்ளோட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு நாள் இல்லையா, என்ற நம் வாசகரின் மனக் கேள்விக்கு, வெள்ளைக்காரன் புண்ணியத்தில நமக்கு எல்லாம் கிடைத்த ரயில் போக்கு வரத்து, பாவம் வளைகுடா வரை எட்டவில்லை. துபாய் மற்றோரு கோண்த்தில் பார்த்தால் புது பணக்காரன் என்றும் சொல்லலாம். சிலாகித்து சொல்ல வரலாறு இல்லை. 1950-களில் தோண்டி எடுத்த எண்ணையில் வண்டி ஒடும் என்று கண்டு பிடித்தவன் பிடி புதையல் என்று கொடுத்த வரம் இது.

பாலை வனம் உண்டானது எப்படி? வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் "ஞே" என்று விழித்த போது, காது முறுக்கி, "ஆ" என்று அலறவிட்டு, வாத்தியார் சொன்னது "வளமையான காடுகள் மண்ணில் புதைந்ததனால், வறட்சி ஏற்பட்டு பாலைவனம் ஆனது. புதைந்த காடுகளே பெட்ரோலியம் பொருட்களாக உருமாறி, .... தெரியுதா சோமாரி!!!சில சமயம் இப்படித் தோன்றும். ஒரு காலத்தில், சில பல‌ நூற்றாண்டுகளுக்கு முன் நிச்சயம் துபாய் பூத்து குலுங்கி இருக்க வேண்டும். உயர்ந்த மரங்களும், பச்சை இலைகளும் நிறைந்து நம் ஊர் போல் இருந்து இருக்க வேண்டும். பின்னர் காடுகள் பூமி உள் சென்று பெட்ரோலாய் விளைந்து (??) இருக்க வேண்டும். இன்று அடர்த்தியாய் உள்ள கேரளா நாளை பாலைவனம் போல் ஆகுமோ ???? துபாய் அப்போது பச்சையாய் இருக்குமோ??? வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ????

கடுகை துளைத்து ஏழ் கடலை அடக்கிய குறள் நம் தமிழுக்கு அழகு என்றால், சாலையை துளைத்து ஸ்டேஷனை அடக்கிய மெட்ரோ துபாய்க்கு அணிகலனே. சாலைக்கு மேலே சில, பூமிக்கு கீழே பல என்ற ரயில் இருப்புப் பாதைகளும், ஸ்டேஷன்களும் ஜொலி ஜொலிக்குதே, கண்ணைப் பறிக்குதே!!.
ஆனால் துபாய் சூட்டில் ஒரு பிரச்சனை உண்டு. ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் அரசியல் உள் குத்து ஒனறும் இல்லை) நடந்தாலோ, நின்றாலோ தலை சுத்தி விடும். பாருங்களேன் இல்லை என்றால் குளுகுளுவென சாலை ஓர பஸ் ஸ்டாப் தேவையா. பின்னர் எப்படி ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்து நம் இலக்கு அடைய முடியும் என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்க வேண்டியது தான்.
மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க எல்லா அரசாங்கமும் இதுபோல் செய்தால், என் போன்றோர், அரசியலுக்கு வர தேவை இல்லை - உருளை நாயகன்


கல்யாணம் ஒரு பெரிய தமாசு. எப்படி. நம் ஊரின் நேர் மாதிரி. நம்ம ஊரில் வரதட்சணை கொடுக்க முடியாமல் வாடி வதங்கும் முதிர் கன்னிகள் வடிக்கும் கண்ணீர் போல் இங்கு ஆண்கள் வடிப்பார். விளக்கத்துக்கு போகும் முன்னால் ஒரு இளம் அரேபியனின் புலம்பலை கேளுங்கள்.

"நான் ஏழை குடும்பத்தை சார்ந்தவன். அப்பா அம்மா சேர்த்த சொத்து இல்லை. மண வயது தாண்டி விட்டது. என் சோட்டு பையன்கள் எல்லாம் இரண்டு மூன்று கல்யாணம் முடித்து விட்டார்கள். நான் மட்டும்..... " (விசும்பல் ஒலி அங்கு கேக்குதா??).

கல்யாணத்தின் போது, மணமகன், மணமகளுக்கு தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.... சுருங்க சொல்லின், பையன் தான் கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும்...... இது கட்டாயம்....


திருமணத்துக்கு முன் பெண் பார்க்கும் பாக்கியம் அமீரக ஆண்களுக்கு இல்லை. மாப்பிள்ளை வீட்டு பெண்கள் சென்று பார்க்கலாம். தேர்ந்தெடுத்து முடிவு செய்து, திருமணம் முடிந்த்ததும் தான் நேர் (கோ)காணல். இத்தனை விசயம் பேசினோம், கேளிக்கை, பொழுது போக்கு பற்றி பேசலையே, என்ற கேள்விக்கு விடை தெரிய வார இறுதி வரை பொறுத்திருப்போம்.

................... தொடரும்.

முடிக்கும் முன்: உஸ்... ஆ!!!!

வேறோன்றுமில்லை, முதல் ஆறு பதிவில் நல்லா எழுதுறீங்க, நாங்க அனுபவிக்கிறோம் என்றெல்லாம் முதுகில் ஷொட்டு.அதுவே ஏழாவது பதிவில் தகவல் குறைவு, உணர்ச்சி குறைவு என்று தலையில் குட்டு.
நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் கிடைக்கும். இந்த உறவின் பலம், மேன்மை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

கேட்டு வாங்கி சாப்பிடும் குழந்தையை, பரிவோடும் பாசத்தோடும் பார்த்து, வயிறு நிரம்பியதால் விடும் ஏப்பத்தின் சத்தத்தை ரசிக்கும் தாய் உள்ளம் உணர்கிறோம்.

இலக்கியம் எனும் ஊரில் தமிழ் எனும் ராஜ பாட்டையில் தவழ்ந்து நடை பயிலும் எங்களுக்கு நாளை நிமிர்த்தி கை வீசி நடக்க இந்த உறவின் பலம், மேன்மை உதவும்.(இன்னும் வரும்.......)

19 comments:

sreeja said...

// ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் அரசியல் உள் குத்து ஒனறும் இல்லை) //

ம்ம்ம் ரசித்துகொண்டே படிக்கிறோம்.

// நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் கிடைக்கும். இந்த உறவின் பலம், மேன்மை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.//

விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்டால் தரமான படைப்புகள் பல வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

R.Gopi said...

sreeja said...

//ம்ம்ம் ரசித்துகொண்டே படிக்கிறோம்.//

ஸ்ரீஜா...தங்கள் மின்னல் vega வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி..

//விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்டால் தரமான படைப்புகள் பல வரும் என்பதில் சந்தேகம் இல்லை.//

அதே....... உங்கள் கருத்து தான் இந்த பகுதியின் ஊக்கி என்பதை மறுப்பதற்கில்லை.... தொடர்ந்து வாருங்கள்... உற்சாகபடுத்துங்கள்...

R.Gopi said...

////விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்டால் தரமான படைப்புகள் பல வரும் என்பதில் சந்தேகம் இல்லை.////

கவிஞர் வாலி சொன்னது போல...ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்.....

இதை மனதில் நினைக்க வைத்தது உங்களின் முந்தைய முந்தைய பதிவிற்கான விமர்சன ஊக்கி பின்னூட்டம்..

நன்றி ஸ்ரீஜா....

Anonymous said...

உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.

லைசென்ஸ் இங்கயும் கடுமை ஆக்கணும். ( ஹாய் ஹாய். நான் மட்டும் போய் rto ஆபிசில் என் நண்பரை பார்த்து உக்காந்து வாங்கிட்டு வந்துட்டேன்)

ஹும்ம்ம். துபாய்ல பிறந்திருக்கலாமோ?

R.Gopi said...

//mayil said...
உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.... நண்பர் லாரன்சுக்கு (www.padukali.blogspot.com) ஒரு பெரிய "ஒ" போட்டு சொல்லியாச்சு...

//லைசென்ஸ் இங்கயும் கடுமை ஆக்கணும். ( ஹாய் ஹாய். நான் மட்டும் போய் rto ஆபிசில் என் நண்பரை பார்த்து உக்காந்து வாங்கிட்டு வந்துட்டேன்)//

ஆ...ஹா.... ஏன்னா வில்லத்தனம்... லைசன்ஸ் வாங்கரதுல கூட.... (சைலன்ஸ்.... லைசன்ஸ் வாங்கிட்டு இருக்கோம்ல... என்று "மயிலின்" குரல் ஓங்கி ஒலிப்பதால், மீ தி எஸ்கேப்பு..).

//ஹும்ம். துபாய்ல பிறந்திருக்கலாமோ?//

ஏன்.....எப்போவுமே....இக்கரைக்கு அக்கறை பச்சை...... சொர்கமே என்றாலும் நம்மூரு போல வருமா??!!! நாங்களும் கொஞ்ச நாள்தான்.... இந்த நரகத்துல இருந்து வெளில வந்துடுவோம்.... (என்று நம்புகிறேன்).

மணிஜி said...

கோபி...அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்கள்..அலுப்பு தட்டாத நடையில்.சின்ன சின்ன நகைச்சுவைகளொடு..தொடருங்கள்(தீபகற்பத்துக்கு தமிழ் வார்த்தை??)

. said...

வாங்க தண்டோரா... நீங்க வந்தாதான் கட்சேரி களை கட்டுது.

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

கிரீக் ‍என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் பதம் தீபகற்பம் என்று தோன்றுகிறது. நீங்க சொன்னா சரிதான்.

நம்ம பூகோள ஆசிரியர் கேட்டாத்தான் "அதுக்குள்ள மறந்துட்டியாம்பார்"

கிரி said...

//வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ????//

அங்கே மலையாளிகள் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்..

//இரண்டு மூன்று கல்யாணம் முடித்து விட்டார்கள்//

!!!!

கோபி நல்லா விரிவா எழுதி இருக்கீங்க ..போர் அடிக்காம இருக்கு.

நீங்க எல்லாவற்றையும் கலந்து எழுதறீங்க..அப்படி இல்லாமல் குறிப்பிட்ட ஒன்றை பற்றி மட்டும் ஒரு பதிவில் கூறினீர்கள் என்றால் மனதில் வைக்க எளிதாக இருக்கும். நான் சிங்கப்பூர் பற்றி கூறிய போது அப்படி தான் எழுதினேன்

R.Gopi said...

//கிரி said...

கோபி நல்லா விரிவா எழுதி இருக்கீங்க ..போர் அடிக்காம இருக்கு.

நீங்க எல்லாவற்றையும் கலந்து எழுதறீங்க..அப்படி இல்லாமல் குறிப்பிட்ட ஒன்றை பற்றி மட்டும் ஒரு பதிவில் கூறினீர்கள் என்றால் மனதில் வைக்க எளிதாக இருக்கும். நான் சிங்கப்பூர் பற்றி கூறிய போது அப்படி தான் எழுதினேன்.//

நன்றி கிரி..... அப்படியும் ட்ரை பண்ணலாமே.... முயற்சிப்போம்....

Eswari said...

//நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் கிடைக்கும். //
ரொம்ப புகழாதிங்க... கூச்சமா இருக்கு ..

//"என் சோட்டு பையன்கள் எல்லாம் இரண்டு மூன்று கல்யாணம் முடித்து விட்டார்கள். நான் மட்டும்..... " //

//கல்யாணத்தின் போது, மணமகன், மணமகளுக்கு தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.... //
3 பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் 3 பெண்ணுக்கும் தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்கனுமா??

R.Gopi said...

//Eswari said...
//ரொம்ப புகழாதிங்க... கூச்சமா இருக்கு ..//

நெஜமாவே உங்களை போன்றவர்களுக்காக எழுதப்பட்டதுதான்.... கூச்சப்படாதீங்க.......

//3 பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் 3 பெண்ணுக்கும் தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்கனுமா??//

மெய்தேன்...... சரியா கேட்டுபுட்டீக...... பின்னே... இல்லேன்னா வுட்டுடுவாகளா??

தொடர்ந்து வாருங்கள் ஈஸ்வரி.... வருகைக்கும், கூர்ந்து படித்து கேட்கும் கேள்விகளுக்கும் எங்கள் நன்றி......

Anonymous said...

கோபி அக்காரவ்டிசலுக்கு டம்ளர் அளவென்றால் நாற்பது டம்ளர் அளவென்றால் ரொம்ப அதிகமாக வரும்.அதான் ஸ்பூன் அளவில் கொடுத்துள்ளேன்.

அன்புடன்,
அம்மு.

R.Gopi said...

//Ammu Madhu said...
கோபி அக்காரவ்டிசலுக்கு டம்ளர் அளவென்றால் நாற்பது டம்ளர் அளவென்றால் ரொம்ப அதிகமாக வரும்.அதான் ஸ்பூன் அளவில் கொடுத்துள்ளேன்.

அன்புடன்,
அம்மு.//

***********

Thanks for your maiden visit and comment.....

You are right, 40 tumblers means too too much..... May be you can say 40 teaspoons / 2 tumblers...

நட்புடன் ஜமால் said...

7 வருடங்கக்ளுக்கு மேல் உள்ளவங்ககூட லைசென்ஸ் எடுக்க முடியா நிலை அங்கு கண்டேன்

5-1/2 வருடங்கள் அபு தாபியில் பணியாற்றினேன்.


-------------

முதல் பத்தியே மிகவும் இரசிக்கும் படியாக இருக்குங்க ...

தாங்கள் சொல்லியிருப்பது போல்

கார் வாங்குவது மிக எளிது அங்கே


கட்டுரை சுவாரஸ்யம் நண்பரே ...

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
7 வருடங்கக்ளுக்கு மேல் உள்ளவங்ககூட லைசென்ஸ் எடுக்க முடியா நிலை அங்கு கண்டேன்

5-1/2 வருடங்கள் அபு தாபியில் பணியாற்றினேன்.//

வருகைக்கு நன்றி ஜமால்.. பல வருடங்கள், பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், 15-18 டெஸ்ட் முடித்தும் லைசன்ஸ் எடுக்க முடியாத எவ்வளவோ பேர் இருக்காங்க.

ஒ, இப்போ நீங்க இருக்கீங்கன்னு நெனச்சேன்.
------ ------

//முதல் பத்தியே மிகவும் இரசிக்கும் படியாக இருக்குங்க ...

தாங்கள் சொல்லியிருப்பது போல்

கார் வாங்குவது மிக எளிது அங்கே

கட்டுரை சுவாரஸ்யம் நண்பரே ...//

நன்றி..... 8 பாகங்களும் படியுங்கள் ஜமால்...... 9-வது பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது....ஓரிரு தினங்களில் பதிவு செய்யப்படும்....

ஆம்.... கார் வாங்குவது மிக மிக எளிது..... ரூ.1 லட்சத்துக்கு சூப்பர் கார் கிடைக்கிறது (பழைய கார்தான்)....

தொடர் வருகை தாருங்கள்....

KarthigaVasudevan said...

வணக்கம் கோபி ...

என்னங்க இது இவ்ளோ சின்ன பதிவா போட்டு இருக்கீங்க ?உண்மைத் தமிழன் கோபிச்சுக்க போறார்!!!

நல்லா இருக்குங்க உங்க பதிவு...தொடர்ந்து படிக்க முயல்கிறேன் .

தீபகற்பம் தமிழ்னு நினைக்கற அப்பாவிங்க நான் !,மூணு பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலமும் இருந்தா அது தீபகற்பம் ,
நாலு பக்கமும் கடல் இருந்தா அது தீவு ,இவ்ளோ தான் தெரியும்.அப்போ தீபகற்பம் தமிழ் இல்லையா?

அதென்னங்க படுக்காளின்னு ஒரு பேர்ல எழுதறிங்க?! தமிழ் அகராதில இதுக்கென்ன அர்த்தமோ?

R.Gopi said...

//மிஸஸ்.தேவ் said...
வணக்கம் கோபி ...

என்னங்க இது இவ்ளோ சின்ன பதிவா போட்டு இருக்கீங்க ?உண்மைத் தமிழன் கோபிச்சுக்க போறார்!!!

நல்லா இருக்குங்க உங்க பதிவு...தொடர்ந்து படிக்க முயல்கிறேன் .

தீபகற்பம் தமிழ்னு நினைக்கற அப்பாவிங்க நான் !,மூணு பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலமும் இருந்தா அது தீபகற்பம் ,
நாலு பக்கமும் கடல் இருந்தா அது தீவு ,இவ்ளோ தான் தெரியும்.அப்போ தீபகற்பம் தமிழ் இல்லையா?

அதென்னங்க படுக்காளின்னு ஒரு பேர்ல எழுதறிங்க?! தமிழ் அகராதில இதுக்கென்ன அர்த்தமோ?//

***************

மிஸ‌ஸ்.தேவ்

த‌ங்க‌ளின் முத‌ல் மின்ன‌ல் வேக‌ வ‌ருகைக்கும், க‌ருத்து ப‌திவிற்கும், பாராட்டுக்கும் ந‌ன்றி....

இந்த ஏழாவது பதிவு மட்டுமே சிறிது சிறிது...

தீபகற்பம் தமிழா, இல்லையா, பட்டிமன்றம் வைப்போம்...

இதுவரைக்கும் ஒன்பது (9) பகுதிகள் பதிவு செய்தாயிற்று.... எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.....

இந்த மத்திய கிழக்கு நாடுகள் தொடர் நானும் (ஆர்.கோபி) மற்றும் என் நண்பர் லாரன்ஸ் (படுக்காளி)யும் சேர்ந்து எழுதுகிறோம்.... அவரிடம் விளக்கம் கேட்டபோது, "பிரியத்திற்குரிய என் ஆச்சி, அன்பு மிகும் போது என்னை அழைத்தது" என்று கூறினார்.

இதோ என் மற்றொரு வலைத்தளம்...

www.jokkiri.blogspot.com

. said...

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

சந்தடி சாக்குல கும்மிட்டீங்களே.... ரொம்ப சின்னதுன்னு. பாவம் அப்புராணி உண்மத்தமிழன வேற உள்ள இழுத்துட்டீங்க....

குறை(ர), குறைன்னு குறைச்சு பார்த்தோம், வேலைக்கு ஆவலே, அதான் இருக்கட்டும்னு விட்டுட்டோம். சேலைங்க !!!! (சாரின்னு தமிழ்ல சொன்னா வரி விலக்கு கிடைக்கறதில்ல)

படுக்காளி ‍ பெயர் விளக்கம்.

போக்கிலி, சேட்டைக்காரன், எனும் புண்ணிய லிஸ்டில், படுக்காளி ஒரு முக்கிய அங்கத்தினர். படுக்காளி குறும்பு மிகுந்த கோபப் பட வைக்காத குட்டிப் பையன்.

சேட்டை தொந்தரவு தாங்காது, 'போடா படுக்காளி' என்று என் ஆச்சி அன்பாய் திட்டுவார்.

நண்பர் கோபி சொல்கிறார் "பாஸ் விஜய் போக்கிரிக்கு அப்புறமா அப்பிட் ஆனதால, இது போல மரியாதையான பேரு தேடுராறு.... கவனம்னுட்டு "

வடுவூர் குமார் said...

அந்த பேருந்து நிறுத்தம் வெறும் 8 பேருக்கு என்பது கொடுமை.
கட்டுமானத்துறை வேலைகள் அவ்வளவு சில்லாக்கியம் இல்லை என்பது என் கருத்து.வெளிப்புற பளபளப்பு தான் அதிகம்.
சமீபத்தில் விழுந்த 6 மாடி கட்டிடம் ஒரு சின்ன உதாரணம்.