மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 7)

முதல் நாள் அலுவலகம் வந்த போது சந்தோசமாய் ஒரு புன்னகை. ஆ...ஹா..நல்லா இருக்கே. குளு குளு சூழல், பள பளவென தரை, மெத்து மெத்துன்னு குஷன் சோபா, பெரிய தோரணையில் மேசை நாற்காலி. இந்தியாவில் மேல் தட்டு மேனேஜருக்கு மட்டுமே கிடைக்கும் சௌகரியம் இங்கே சாதாரணமாய் எல்லாருக்கும் கிடைக்கும். அது என்ன?

அழுது புரண்டு வாங்கும் நமக்கே நமக்காய் உள்ள கணிணி / கம்ப்யூட்டர் உச்ச கான்பிகுரேஷன் இங்கு நாம் கேட்காமல் கிடைக்கும். பேனா, பென்சில், நோட், பன்சிங்க் மெசின், இந்த கூட்டத்தில் ஒரு கம்ப்யூட்டரும் கிடைக்கும். விலை ரொம்ப சல்லிசு ஒரு காரணம் என்றாலும், வேலை செய்ய உபகரணம் அவசியம் என்ற நம்பிக்கையும் இருப்பதால்.

வேலை நேரத்தில் கசக்கி பிழிவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எட்டு மணி நேர வேலையை நம் ஊரில் அழுது அழுது... (மூக்கால் அழுதுதான் - அது எப்படி மூக்கை வைத்து அழுவது) செய்யும்போது சர்வ சாதாரணமாய் இங்கு 12, 15 மணி நேரம் வேலை செய்வார்கள்.

தசாவதானி என்று (கமல்ஹாசன், ராஜேந்தர் அல்ல) கேட்டு இருக்கிறோம். ஆனால் இங்கே பார்த்து விடலாம். கையில் ஒரு தொலைபேசி, கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் முட்டு கொடுத்து ஒரு கைபேசி, கை விரல்கள் ஓட விட்டு கணிணியின் தட்டுதலில், கண்கள் பக்கத்தில் உள்ள ஃபேக்ஸ் இயந்திரத்தில் வரும் சேதியை வாசித்துக் கொண்டும், என கதகளி ஆடி கொண்டு இருப்பார்.

அலுவலகத்தில் உள்ள நம் மனமோ, அத விட்டுட்டோமே (வடை போச்சே), அத மூணு பகுதியா பிரிச்சு, ஊரு கவலை ஒரு பக்கம், ஆபிஸ் கவலை ஒரு பக்கம், தினசரி வாழ்வு கவலை ஒரு பக்கமுன்னு ஓடிகிட்டு இருக்கும் .

சாலை ஒரத்தில் ஒரு வங்கியின் விளம்பரம் பார்த்த போது சட்டென ஒரு ஆச்சரியம் வந்தது. ஆமா!! சரிதான் இல்லே என்று தோன்றியது. அப்படி என்ன. அதன் வாசகம் இதுதான். லட்சியம் - மொழி, கலாச்சாரம் வேறுபட்டு இருந்தாலும், ௨00-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து , ஒற்றுமையாய் வாழ்வதற்கு, தனி மனித லட்சியமே காரணம்.

மிக சரி. மாசம் பூராவும் உழைத்து நாம் ஏங்குவதெல்லாம் அந்த சம்பள தினம் எதிர்பார்த்துதானே. கையில் கிடைக்கும் அந்த தருணம் எத்தனை கடினத்தையும் தள்ளி வைக்கும். சம்பளம் பற்றி சொன்னதுமே அடுத்து, ரூபாயின் மதிப்பு பற்றி பேசுவோம்.

ஒரு யூ.ஏ.ஈ.திராம் கொடுத்து நம்ம ஊர் இந்திய பணம் கேட்டால், ரூ.13 ரூபாய் எண்ணிக் கொடுப்பான். இலங்கை ரூ.31/-, பாகிஸ்தான் ரூ.22/-, நேபாளம் ரூ.21/-, பங்களாதேஷ் ரூ.16.75......பிலிப்பைன்ஸ் ரூ.13/- (ஏறத்தாழ...).

ஒவ்வொரு நாளும், நரக வேதனையுடன், ஒரு யுகமாக ஓடி, அந்த முப்பதாவது நாளின் முடிவில் சம்பளம் வாங்கும் போது, ஏதோ பெரிய போரில் வெற்றி பெற்றவர்களின் மனநிலையில் இருப்போம் என்பது மட்டும் உறுதி...

இந்த நாணய மதிப்பின் காரணமாகவே, ஆசியாவின் அனைத்து ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள், இங்கு அடிமை (சொல்லவே மனசு வலிக்குது, ஏறக்குறைய அடிமைதான்...) போல வேலை செய்து, பணம் ஈட்டுகின்றனர்.


பெரும்பாலோர், அதை நல்ல முறையில் சேமித்து, தாய்நாட்டிற்கு அனுப்பினாலும், சிலர், கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை இங்கேயே தொலைக்கும் கதைகளையும் நாங்கள் கண்டதுண்டு..... (அது ஒரு நாற்றம் பிடித்த கதை.... அதை பற்றி, இங்கே பெரிய அளவில் சொல்ல கூட என் மனம் கூசுகிறது.....)...

இன்னொரு மனம் பதைபதைக்கும் விஷயம்.... இரண்டு அறை உள்ள ஒரு வீட்டில், இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வாழ்வது...... சில வீடுகளில் 1 1/2 டாய்லெட் மட்டுமே இருக்கும்.... சில வீடுகளில் ஒரு ஒரு பாத்ரூம் மட்டுமே இருக்கும். ஒரு பொதுவான சமையலறை.... ஒரு பாத்ரூம் இருக்கும் நிலையில், இரு குடும்பங்களுமே அதையே உபயோகிக்க வேண்டி வரும்..... இது ஒரு பெரிய கொடுமை.....

இந்த நிலையை நாம் விரும்பாமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.... ஏனெனில், கொடுக்க வேண்டி இருக்கும் மாத வாடகையை மனதில் வைத்து..... மிகைப்படுத்தாமல் சொன்னால், இரண்டு படுக்கை அறையை கொண்ட ஒரு வீடு வாடகை மாதம் ரூ.90,000/- (மிகவும் குறைவாக மதிப்பிட்டால்) என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இதற்கு கீழும் கிடைக்கும், ரூ.75,000 - ரூ.80,000/- கொடுத்தால் (மிகுந்த வசதி குறைவோடு.....)

இந்த விஷம் போல ஏறிய வாடகையை பற்றியும், அதற்கான காரணத்தையும் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.

வரும் பகுதிகளில் வேறு பல சுவாரசியமான விஷயங்களுடன் சந்திக்கிறேன்.....

(தொடரும்........)

24 comments:

மணிஜி said...

/லட்சியம் - மொழி, கலாச்சாரம் வேறுபட்டு இருந்தாலும், ௨00-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து , ஒற்றுமையாய் வாழ்வதற்கு, தனி மனித லட்சியமே காரணம்.//

நல்லா இருக்கு கோபி..தொடர்ந்து எழுதவும்.(நீங்க என்னவா இருக்கீங்க ?)

R.Gopi said...

//தண்டோரா said...
/லட்சியம் - மொழி, கலாச்சாரம் வேறுபட்டு இருந்தாலும், ௨00-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து , ஒற்றுமையாய் வாழ்வதற்கு, தனி மனித லட்சியமே காரணம்.//

நல்லா இருக்கு கோபி..தொடர்ந்து எழுதவும்.(நீங்க என்னவா இருக்கீங்க?)//

வாங்க தல......... அந்த விளம்பரப்படம்ல ரொம்ப பிசியா இருந்துட்டு, இப்போ தான் உங்கள பாக்க முடியுது..........

இந்த தொடர் பதிவை, நானும், லாரன்ஸ் (www.padukali.blogspot.com) இருவரும் இணைந்து எழுதுகிறோம்.......

நான் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் SENIOR EXECUTIVE SECRETARY ஆக பணிபுரிகிறேன்......

cdhurai said...

hai gopi.,

this week edition not having much more information... sorry..try to improve... gopi and lawrance

chelladhurai

R.Gopi said...

//cdhurai said...
hai gopi.,

this week edition not having much more information... sorry..try to improve... gopi and lawrance

செல்லதுரை//

வாங்க செல்லதுரை...... நிறைய விஷயங்களுடன் அடுத்த பகுதி தயாராகிறது..... நீங்களும், எந்த மாதிரி விஷயங்கள் எதிர்பார்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால், நாங்களும் அது பற்றி விரிவாக எழுத ஏதுவாகும்......

என்ன தகவல்களை இங்கு சேர்க்கலாம் என்று எங்களுக்கு தெரியபடுத்துங்கள்..... அந்த விஷயங்களை, அடுத்த பகுதியில் சேர்க்க முயற்சிக்கிறோம்....

கார்த்திக் said...

அருமை கோபி.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. அனுபவிக்கிறேன்..

R.Gopi said...

கார்த்திக்.ச said...
அருமை கோபி.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. அனுபவிக்கிறேன்..//

vaanga kaarththik... varugaikkum, karuththu pagirvukkum nandri....

//அனுபவிக்கிறேன்.....//

Enna solla vareenga Karthik? Enjoying or suffering?

sreeja said...

ஆறாவது பாகத்தில ரோட்டுல இருந்தீங்க (சாரி சாலை பற்றி கூறிக்கொண்டிருந்தீர்க்ள்) திடீரென ஆபிசுக்குள்ள வந்திட்டீங்க...பரவால்ல


முந்தைய பதிவுகளில் ,

கண்ணீரை பிழிந்து கருப்பு மை ஆக்கி
காகிதத்தில் எழுதி - அதை
படிப்பவர் மனது பொடிப்பொடியாய்
போக வைத்த பரபரப்பு

இந்த பகுதியில் கொஞ்சம் குறைவுதான்.

வேதனைகள் எல்லா இடங்களில் இருந்தாலும் அந்த வேதனைகளை தாங்கி சாதனை ஆக்கிய மனிதர்கள் (இந்தியர்) பலர் அங்கு இருந்தால் அவர்களை பற்றியும் உங்கள் பதிவில் குறிப்பிடுங்கள். சோர்ந்த மனதிற்கு ஆறுத்லாக இருக்கும் எல்லோருக்கும்.

மற்ற படி உங்கள் பதிவை வழக்கம்போல தொடருங்கள்.

வாழ்துக்கள் கோபி, லாரன்ஸ்.

. said...

கட்டுரையை சுவை கூட்ட கதை போலே இந்தியாவில் தொடங்கி விமான நிலையத்தில் தொடர்ந்து சாலை வழி என்ற கோர்வையை கண்டு, பின்னூட்டத்தில் எழுதிய தங்கள் கூரிய பார்வைக்கு முதல் நன்றி.

கவிதை போல் விரிந்த உங்க‌ள் வ‌ரிக‌ள்,பிரமாதம்

கண்ணீரை பிழிந்து கருப்பு மை ஆக்கி
காகிதத்தில் எழுதி - அதை
படிப்பவர் மனது பொடிப்பொடியாய்
போக வைத்த பரபரப்பு

பாராட்டி விட்டு அதோடு நில்லாமல் விமர்சகராய் சுட்டிக் காட்டிய பெருந்தன்மைக்கு, ஆலோசனை வழ‌ங்கியமைக்கு மிக்க நன்றிகள்.

த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை கொண்டு அடுத்த‌ ப‌திவுக‌ளை ப‌டைக்கிறோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ சுவாரசியமான தொடர் ஓடிக்கிட்டிருக்கா இங்க.. ஆனா எஙகளுக்குத்தான் சுவாரசியம் அங்கே ஓடி இங்கே ஓடி வேலை பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் கொடுமை தான்.

R.Gopi said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஓ சுவாரசியமான தொடர் ஓடிக்கிட்டிருக்கா இங்க.. ஆனா எஙகளுக்குத்தான் சுவாரசியம் அங்கே ஓடி இங்கே ஓடி வேலை பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் கொடுமை தான்.//

Welcome...... Ippothaan unga sitela comment pottuttu vandhen.... Adhukkulla vandhuteenga...

Thanks for your visit and comments....

Do visit regularly ....

gayathri said...

nalla ezuthi irukengapa

ungal blog rompa inrestinga iruku

vazthukkal thodarnthu ezuthungal

Eswari said...

//என்ன தகவல்களை இங்கு சேர்க்கலாம் என்று எங்களுக்கு தெரியபடுத்துங்கள்..... அந்த விஷயங்களை, அடுத்த பகுதியில் சேர்க்க முயற்சிக்கிறோம்...//
அந்த ஊர் காதல், கல்யாணம், குடும்பங்கள், பள்ளி, கல்லுரிகளை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களே.......

R.Gopi said...

வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி காயத்ரி, ஈஸ்வரி.....

//gayathri said...
nalla ezuthi irukengapa

ungal blog rompa inrestinga iruku

vazthukkal thodarnthu எழுதுங்கள்//

நன்றி காயத்ரி.....

//Eswari said...
//என்ன தகவல்களை இங்கு சேர்க்கலாம் என்று எங்களுக்கு தெரியபடுத்துங்கள்..... அந்த விஷயங்களை, அடுத்த பகுதியில் சேர்க்க முயற்சிக்கிறோம்...//
அந்த ஊர் காதல், கல்யாணம், குடும்பங்கள், பள்ளி, கல்லுரிகளை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களே.......//

நீங்கள் கேட்ட விஷயங்கள் வரும் பகுதிகளில் எதிர்பாருங்கள்.....

sindhusubash said...

ஏழு பாகங்களிலும் உண்மை சுடுகிறது.குடும்பத்தோடு வாழவேண்டுமென்றால் சேமிப்பு கடலில் கலக்கும் பெருங்காயம் போல ஆகிவிடுகிறது.

ஒரு பகுதி இந்தியர்களுக்கு சுக வாழ்க்கை..மறுபகுதியோ கஷ்டமே வாழ்க்கை. இனியும் நிறைய எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//sindhusubash said...
ஏழு பாகங்களிலும் உண்மை சுடுகிறது.குடும்பத்தோடு வாழவேண்டுமென்றால் சேமிப்பு கடலில் கலக்கும் பெருங்காயம் போல ஆகிவிடுகிறது.

ஒரு பகுதி இந்தியர்களுக்கு சுக வாழ்க்கை..மறுபகுதியோ கஷ்டமே வாழ்க்கை. இனியும் நிறைய எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.//

Thanks for your maiden visit and comment Sindhu....

Good to know that you have gone through all the 7 parts and encouraging to write more....

Wait for the 8th part to be uploaded soon with more informtion...

Please visit my another blogspot also - www.jokkiri.blogspot.com

ரிஷபன்Meena said...

நானும் துபாயில் தான் இருக்கிறேன். நல்ல எழுத்து நடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ரிஷபன்Meena said...

என்னுடைய

ரிஷபன்Meena said...

என்னுடைய ஈ மெயில் rishaba007@gmail.com - தொடர்பு கொள்ளவும்.இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.

R.Gopi said...

//ரிஷபன் said...
என்னுடைய//

Ungaludaiya ???

Peyar : Rishaban
Iruppadhu : Dubai

கிரி said...

நீங்கள் கூறியது போல வாடகை இங்கு ரொம்ப அதிகம் தான்.... எதனால் இவ்வளவு வாடகை என்று கூற முடியுமா?

மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பளம் கிடைக்கும் நாள் மிக மிக சந்தோஷ நாளே..கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நபர்களுக்கு தான் இதன் அருமை தெரியும்..

கோபி உங்க பின்னூட்ட பெட்டியை அலுவலத்தில் திறக்க முடியவில்லை..அல்லது பெட்டியையே காணோம்..முடிந்தால் ஜோக்கிரி தளம் போல மாற்றி விடவும்.

Vidhoosh said...

can you send me your email id

R.Gopi said...

//கிரி said...
நீங்கள் கூறியது போல வாடகை இங்கு ரொம்ப அதிகம் தான்.... எதனால் இவ்வளவு வாடகை என்று கூற முடியுமா?//

உள்ளூர் பிரஜைகளை காப்பாத்த இந்த ஊர் அரசாங்கம் உண்டாகிய முறை இது. ஊருக்குள்ளே நிலமோ வீடோ வாங்கும் உரிமை இந்த ஊர் பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. நம்மை போல் வெளி தேசத்தவர் வாங்க என்று ஊருக்கு ஒதுக்குபுறமாய் சில ப்ரீ சோன்ஸ் மட்டுமே. அங்கும் நம்மால் தொண்ணூத்தி ஒன்பது வருட லீசுக்கு தான் வாங்க முடியும். அதுவும் வாங்கிய சொத்தை வாரிசுக்கு கொடுக்க முடியாது. இதை செய்வதால் நாம் என்ன சம்பாதித்தாலும் உள்ளூர் ஆள் ஓடாமல் உழைக்காமல் நாம் சம்பாதித்ததையே புடுங்கி கொள்ளும் புத்திசாலித்தனம்.

பெரிதாக புலம்பாமல் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போலே சில சட்டங்கள் இல்லை என்றால் இருபதுக்கும் குறைவான சதவிகிதத்தில் உள்ள உள்ளூர் ஆட்களை எப்படி பாதுகாப்பது. எண்ணிகையில் அதிகம் உள்ள அந்நிய தேசத்தார் இவர்களை நாட்டை விட்டு விரட்டி விடும் சூழலும் சிந்திக்க வேண்டும் அல்லவா.

//மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பளம் கிடைக்கும் நாள் மிக மிக சந்தோஷ நாளே..கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நபர்களுக்கு தான் இதன் அருமை தெரியும்..//

கண்டிப்பாக கிரி......இங்குள்ள தொழிலாளர்கள் இந்த சம்பள தினங்களின் போது மட்டுமே சிரித்த முகத்தோடு இருப்பதை எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்....

என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். செய்து கொண்டிருக்கிறேன்... தொடர்ந்து செய்வேன்...(இறையருள் இருந்தால்...)

//கோபி உங்கள் பின்னூட்ட பெட்டியை அலுவலத்தில் திறக்க முடியவில்லை.. அல்லது பெட்டியையே காணோம்..முடிந்தால் ஜோக்கிரி தளம் போல மாற்றி விடவும்.//

யப்பா.... இது என்ன கிரி.....?? நீங்க தான் மொதல்ல சொல்றீங்க இப்படி.... பாக்கணுமே!! பெட்டி தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல..... மாற்றி விடுவோம்....

//Vidhoosh said...

can you send me your email ID//

Given already....... My best wishes & success for all your efforts......

-------------------------

Anonymous said...

கோபி உங்க ப்லாக்குக்கு முதல்ல வரேன்...அன்னிய நாட்டில் லகரங்கள் வாங்குறாங்க அவங்களுக்கென்ன என்று நினைக்கும் என்னைப் போன்றோர்க்கே இந்த பதிவு..வீட்டு வாடகை படிக்கும் போதே உயிர் நடுங்குதே....லட்சியம்...
மனித தேவை வாழ்வியல் ஆதாரம்..ம்ம்ம்ம் வேறு வழியில்லை வலித்தாலும் வாழ்ந்தாகனும்...

R.Gopi said...

//தமிழரசி said...
கோபி உங்க ப்லாக்குக்கு முதல்ல வரேன்...அன்னிய நாட்டில் லகரங்கள் வாங்குறாங்க அவங்களுக்கென்ன என்று நினைக்கும் என்னைப் போன்றோர்க்கே இந்த பதிவு..வீட்டு வாடகை படிக்கும் போதே உயிர் நடுங்குதே....லட்சியம்...
மனித தேவை வாழ்வியல் ஆதாரம்..ம்ம்ம்ம் வேறு வழியில்லை வலித்தாலும் வாழ்ந்தாகனும்...//

வாங்க தமிழரசி....... தங்கள் முதல் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி...
நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.....

நிறைய வலித்தாலும், (கிரி படத்தின் வடிவேலு போல), தாங்கி கொண்டு, சில காலம் தாக்கு பிடிக்கலாம் என்று நினைத்து லட்சோப லட்சம் மக்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

தொடர்ந்து வாருங்கள்..... இன்னும் நிறைய விஷயங்கள் வர இருக்கிறது..... என் மற்றொரு வலையையும் (www.jokkiri.blogspot.com) நேரம் கிடைக்கும் போது பார்த்து, கருத்து சொல்லுங்கள்....