HAPPY NEW YEAR 2012

புத்தாண்டாம் ஆங்கில புத்தாண்டு

கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு

அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று


கடந்தகால சோதனைகளை துடைத்து விட்டு

சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்து விட்டு

புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்

மதத்தின் பெயரால் மண்டை உடைய வேண்டாம்

நாம் அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்

இதை அனுதினமும் மனதில் நிலைநிறுத்துவோம்


கடினமாய் உழைத்தே பிழைத்திடுவோம்

சோம்பல் எண்ணங்களை அழித்திடுவோம்

தீவிரவாத எண்ணங்களை கைவிடுவோம்

அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்

அனைவரின் வாழ்விலும் அமைதியும், சந்தோஷமும் நிலைத்திருக்க

என்றென்றும் அந்த ஆண்டவனை நினைத்திடுவோம்

(தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய 2012 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....)

9 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

ரொம்ப நாள் கழித்து உங்களிடமிருந்து அருமை கவிதைப் பதிவு :) நன்றி

Kavinaya said...

சரியான சமயத்தில் தேவையான சிந்தனை.

உங்களுக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும், இனிய புது வருட வாழ்த்துகள் கோபி!

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

கடந்தகால சோதனைகளை துடைத்து விட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்து விட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு//

அருமையான வார்த்தைகள்.

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

கே. பி. ஜனா... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html

Anonymous said...

gopi its really a nice wish. wishing you also a very happy new year.2012.

Anonymous said...

gopi its really a nice wish. wishing you also a very happy new year.2012.

தமிழ்ச்செல்வி said...

சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடைய வேண்டாம்

நாம் அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்
இதை அனுதினமும் மனதில் நிலைநிறுத்துவோம்,,,super

Anonymous said...

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.எங்கள் கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக களை இழந்து ( கடைகளில் மக்கள் இல்லாமல், கரும்பு, வாழைபழம், கிடைக்காமல் மின்சாரம் , டிவி இல்லாமல் )பொங்கல் முடிந்தது.