60-70-80களில் தாய்ப் பாசம், தங்கை பாசம், சகோதர உறவு, தேச ஒருமைப்பாடு, வன்முறைக்கு இடம்தராமல் பாதுகாப்பது, விரலுக்கு ஏத்த வீக்கம், வரவுக்குத் தகுந்த செலவுகள் செய்வது... இதுபோன்ற கருத்துகளை நிலைபெறச் செய்யும் முயற்சிகளில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
அவற்றுள், போலி கௌரவத்தை உடைத்து குடும்ப ஒற்றுமையை உயர்த்திக் காண்பித்து, பெரும் வெற்றியை ஈட்டிய திரைப்படம்தான் பாமா விஜயம்! தமிழ்த் திரையுலக வரலாற்றில், காலத்தால் அழியாத நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்று தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பாமா விஜயம். கருத்தாழம் மிகுந்த கதைக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களை உருவாக்கி, பொருத்தமான கலைஞர்களை உலாவரச் செய்து திரை உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே.பி. விறுவிறுப்பான நகைச்சுவையை காட்சிகளில் நிரப்பி, படம் பார்ப்பவர்களை ஜோராய் சிரிக்கவைத்த கே.பி.யின் திறமையை உயரத்தில் தூக்கி வைத்த படம். ஒரு தலைமுறை பார்த்து ரசித்தது இந்த பாமா விஜயம்….
அந்நாளில் எடுக்கப்பட்ட அனைத்து புராண படங்களில் மட்டுமே நிறைய நட்சத்திரங்கள் பங்கு பெறுவர்… ஆனால் அதிசயமாக சமூகப்படமான “பாமா விஜயம்” படத்தில் அந்த கால கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த ஒரு மிகப்பெரிய நட்சத்திர குவியலையே வைத்து வேலை வாங்கி இருப்பார் இயக்குநர் கே.பி…அவர்கள்...
பாலையா
மேஜர் சுந்தர்ராஜன்
சவுகார் ஜானகி
முத்துராமன்
காஞ்சனா
நாகேஷ்
ஜெயந்தி
ஸ்ரீகாந்த்
சச்சு
வாணிஸ்ரீ
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் “ஆணி முத்து வாங்கி வந்ததேன்”, “வரவு எட்டணா, செலவு பத்தணா” போன்ற இனிமையான பாடல்கள் இருக்கும்....
தமிழில் இது போல் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து வேலை வாங்கிய படங்கள் என்னென்ன என்று சொல்லுங்களேன்...
ஆணி முத்து வாங்கி வந்ததேன்
படம் : பாமா விஜயம்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, P.சுசீலா, L.R.ஈஸ்வரி
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா…
1 2 3 4 5 6 7 8 mmmmm
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது
வயசு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது
வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கினா
30 தே ரூபா
வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கினா
30-தே ரூபா - வரவு
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்காகாது
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்காகாது
அய்யா குடும்பதுக்காகாது
யானையை போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது
பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது
பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
தங்க சங்கிலி இரவல் வாங்கினா
தவறி போச்சுன்னா தகிட, தந்தன
ஹே ஹே ஹே...........
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக
அய்யா இங்கே எதுக்காக
மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறணும் அதுக்காக
அப்பா வேறே எதுக்காக
கன்னியராக மாறனுமென்றால் பிள்ளைகள் எதுக்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக
பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும் – வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா, கடைசியில் துந்தனா, துந்தனா.... துந்தனா….
5 comments:
எனக்கு இந்த பாட்டு ம் படமும் ரொம்ப பிடிக்கும்.
கருத்தும் நகைச்சுவையும் கொண்ட படம்!
enakku romba pidicha padam!!! dvd vanganumnu romba naala try panren!! kedaikkave illai!!! download linkum kedaikala!!!
Anyways nice post
'ஆணி முத்து வாங்கி' பாடல் மிக பிடித்த பாடல் எனக்கு....
இதேபோல் எதிர்நீச்சலிலும் ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்குமே...
naan niriaya murai paartha padam...nice movie
Post a Comment