'சித்தம்' - குறும்படம்

புதிய முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவு தரும் தோழமைகளின் அன்புக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்...

நண்பர்களின் துணையோடு, “சித்தம்”” எனும் ஒரு குறும்படம் உருவாக்கி இருக்கிறோம்...

சித்தம்என்பதென்ன?

“எல்லாம் ஆண்டவன் சித்தங்க... !!! ஆண்டவன் சித்தம் இருந்தா நடக்கட்டும்… !!!”

இப்படி பலர், பல சந்தர்ப்பங்களில் சொல்வதை நாம் அன்றாட வாழ்வில் கேட்டிருக்கிறோம்...

சோதனைகளும், வேதனைகளும் நம்மை சூழ்ந்து கொண்டு தாக்கும் போது, நமக்கு மேல் இருக்கும் மாபெரும் சக்தியை உணர்ந்துசித்தம்’ இருந்தால் நடக்கட்டும் என்று சொல்வது நம் மிகப்பெரிய பலம்.

இந்த நுண்ணிய உணர்வை ஒரு கற்பனை கதையின் மூலம் அனைவருக்கும் எடுத்து சொல்லஒலி ஒளியின்உதவி கொண்டு ஒரு குறுங்கவிதை வடித்துள்ளோம்...

தங்களின் மேலான ஆலோசனையும், கருத்து பகிரலும் வேண்டி விரும்புகிறோம். இனி, ”சித்தம்குறும்படத்தை ரசியுங்களேன்...

”சித்தம்” குறும்படத்திற்கான YOUTUBE LINKS :

பார்ட் - 1

http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

பார்ட் - 2

http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

42 comments:

Chitra said...

WOW!!!!!! Thats super!

Congrats!

எல் கே said...

வாழ்த்துக்கள். வீட்டிற்க்கு சென்று பார்க்கிறேன்

Anonymous said...

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு நண்பரே. காணொளியின் இரண்டு பகுதிகளையும் பார்த்தேன். நல்ல குறும்படம் பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

//சோதனைகளும், வேதனைகளும் நம்மை சூழ்ந்து கொண்டு தாக்கும் போது, நமக்கு மேல் இருக்கும் மாபெரும் சக்தியை உணர்ந்து ‘சித்தம்’ இருந்தால் நடக்கட்டும் என்று சொல்வது நம் மிகப்பெரிய பலம்//

ஆம் உணமை. அது தான் நம் பலம்.

அன்புக்கரசன் என்கிற அன்பு அயராது உழைத்து உழைத்து ஊருக்கு பணம் அன்ப்பும் வரைப் பார்த்தேன் நெட் மிகவும் மெதுவாக வேலை செய்கிறது முழுவதும் பார்த்து விட்டு பிறகும் கருத்து சொல்கிறேன். பார்த்தவரை நன்றாக உள்ளது.

ஐவர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

முதலில் சித்தம் குழுமத்திற்கு மனதார பாராட்டுக்கள்.
சித்தம் அருமையான குறும்படம் ஒரு நல்ல செய்தியை இதில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
அமீரக வாழ்க்கையில் ஏலச்சீட்டில் பங்கெடுக்காத இந்தியர்கள் மிகச்சிலரே!

ஏலச்சீட்டில் ஏமாற்றப்படுவது சில இடங்களில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது அப்படி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

தவறு செய்யும் குணம் மனிதனிடம் இருக்கிறது திருந்தும் குணமும் அவனிடம் இருக்கிறது

எல்லா ஏமாற்றுக்காரர்களுக்கும் இப்படி ஒரு ஜிஎம் அமைவதில்லை என்றாலும் அமைந்த வரை உபயோகம் செய்துக் கொள்ள இது ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

இன்னும் பல குறும்படங்களை எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்கள்

Kousalya Raj said...

மகிழ்கிறேன் கோபி...உங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் ! இரு பாகமும் பார்த்துவிட்டு கருத்துக்களை சொல்கிறேன்...

ஸ்வர்ணரேக்கா said...

அன்புவோட சீட்டு பணமா இல்ல
அன்புவ cheat பண்ண பணமா..

--- சரியான பன்ச் டயலாக்..

அமீரக இந்தியர்களின் கஷ்ட்ட நஷ்ட்டங்களை எடுத்து சொல்லும் இதுபோன்ற இன்னும் பல குறும்படங்களை எதிர்பார்க்கிறோம்

Vijayakrishnan said...

Very nice...neatly done...Keep it up...

Jaleela Kamal said...

மிக அருமை கோபி,
உங்கள் இருவரின் முயற்சிக்கு வாழ்த்துகக்ள்,
அமீரகம் என்றால் மிகவும் சொகுசாக இருக்கிறார்கள் என்று மக்கள் நினைத்துஇருக்கிறார்கள்.
ஆனால் பல இடங்களில் பல பேச்சுலர்கள் கழ்டப்படுவதை இது போல் படம் பிடித்து காட்டனும்.
ஏலச்சீட்டு இது வரை ஏமாற்று கண்டதிலலை இப்படியும் நடக்குதுன்னு இப்ப தான் தெரியும்.

raji said...

பாராட்டுக்கள் மிஸ்டர் கோபி

கதையின் கரு மிகவும் அற்புதம்
தொய்வில்லாமல் சென்றது குறும்படம்

நடித்தவர்களும் நன்றாக செய்திருந்தார்கள்
அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஒரு சில இடங்களில் கதையின் தாக்கத்துக்கிற்கு தகுந்தாற் போல்
இன்னும் நல்ல எக்ஸ்ப்ரஷன்ஸ் கொடுத்திருக்கலாமோ
என்பது மட்டும் எனக்கு தோன்றியது.இது என் கருத்து மட்டுமே, குறை இல்லை.
இன்னும் இதுபோல பல புது முயற்சிகள் தாங்கள் செய்ய வாழ்த்துக்கள்

jokkiri said...

எங்களின் பதிவுகளுக்கும், இப்போதைய முதல் புதிய முயற்சியான இந்த “சித்தம்” குறும்படத்திற்க்கும் தோழமைகள் அனைவருக்கும் தந்த ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி...

தொடர்ந்து பின்னூட்டமும், வாக்கும் அளித்து வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....

Rekha raghavan said...

"சித்தம்" குறும்படத்தின் இரண்டு பகுதிகளையும் இப்போதுதான் பார்த்தேன். வாவ்! தேவையான காட்சி அமைப்புகள் மற்றும் சொல்லாடல்களுடன் கடைசியில் நெகிழவைக்கும் முடிவுடன் முடித்து அருமையாக செய்துள்ள டீம் ஒர்க்குக்கு எனது வாழ்த்துகள். நடித்த அனைவரும் தங்களுக்குரிய பாத்திரத்தில் ஒன்றி நடித்திருப்பது இன்னுமொரு படைப்பை எதிர்பார்க்க வைக்கிறது. நன்றி எங்களுக்கு இதை காணக் கொடுத்ததற்கு.

jayakumar said...

good attempt...proceed...congratulations...

Mrs. Krishnan said...

புது முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
தங்கள் இருவரது திறமை எந்த விதத்தில் வெளிப்பட்டாலும் ரசிக்கும்படியே அமைவது ஆண்டவன் 'சித்தம்' தான்.

தவறு செய்வது மனித இயல்பு தனது தவறை உணரும்போது திருந்தி வாழ முயற்சி செய்வது மகத்தான இயல்பு. அது ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படுகிறது. அனைவரின் நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளது சிறப்பு.

ரஹீம் கஸ்ஸாலி said...

வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

தினகர் said...

அதான் கலக்கிட்டீங்களே இரட்டை இயக்குனர்களே..


இரண்டாவது தடவை பார்க்கும் போது, கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாமோ என்று சில இடங்களில் தோன்றியது. சில காட்சிகளில் பிண்ணணி இசை இல்லையே.. நீங்களாக தவிர்த்தீர்களா, அல்லது மிக்சிங் தவறுதலா?

மதுரை வட்டாரத்தை அடிப்படையாக கொண்டு நிறைய படங்கள் வருவது போலே, நீங்கள் துபாய் வாழ்க்கை பிண்ணணியுடன் ஒரு திரைப்படம் எடுக்கலாம். ஒரு சில டெக்னிஷியன்கள் மட்டும் சென்னையிலிருந்து அழைத்து கொள்ளலாம்.

முயன்றால் கண்டிப்பாக முடியும்.

அன்புடன்
தினகர்

Sharma said...

Very Good effort, Mr.Chella Durai. Wish you all the best in your future efforts.
Regards
Sharma

Natarajan said...

To be honest this is just a great show.. The most I like was the story line and the message in it... It must be a true story for sure... Proud that we have more talented friends around ...


Cheers
Nattu

Ramki said...

Hi Lawrence & Gopi,

i watched your shortfilm this morning.. will write in detail soon.

BTB, my congrats to guy who shoot those lovely flowers in camera. Rest in next mail :-)

- Ramki

Joe Basker said...

நல்ல முயற்சி! இமாலய சாதனை !!

இயல்பான நடிப்பு, சாதாரண கோணங்கள், துடிப்பான இசை, மனப்பாடம் செய்து ஒப்பிக்காத உரையாடல்கள், “ஊருக்காக” உழைப்பவர்களின் ஊமை வலிகள், உயர்ந்து நிற்கும் மனித நேயம், மொத்தத்தில் “சித்தம்” மனதுக்கு நிறைவு தரும் நல்ல குறும்படம்.

கதையில் வரும் அனைவருமே நல்லவர்கள் - உங்களைப்போலவே !!

வாழ்த்துக்கள்.

மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க மனமார்ந்த்த வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.
yes me too

சொல்லச் சொல்ல said...

மிக நல்ல தனி மனித சிக்கலின் வெளிப்பாடு. ஆஸ்திரேலியாவில் முக்கியமாகக் கூறுவது "Asking For Help" என்று. ஏதாவது பிரச்சனை என்றால் தனியாகப் போராடி மனதை நொந்து கொள்ள வேண்டாம். உரியவரிடம் உடனே தெரிவித்து வழி கண்டுபிடிக்க அறிவுறுத்துகிறார்கள். இதை "சித்தம்" நன்றாக விவரிக்கிறது.

இதைத் தவிர எமாற்றுகிரவனின் கட்டாயச் சூழலையும் தெரிவித்தது ரொம்பப் பிரமாதம்.

பஞ்ச் டயலாக் அள்ளி வீசிருக்கீங்க. "கஷ்டப்பட்ட காசு காத்துலையா போயிடும்" செம தூள்.
மொத்தத்தில் படம் துபாய் வாசிகளின் உண்மை நிலவரம் நன்றாக வெளிவந்துள்ளது.

சொல்லச் சொல்ல said...

மிக நல்ல தனி மனித சிக்கலின் வெளிப்பாடு. ஆஸ்திரேலியாவில் முக்கியமாகக் கூறுவது "Asking For Help" என்று. ஏதாவது பிரச்சனை என்றால் தனியாகப் போராடி மனதை நொந்து கொள்ள வேண்டாம். உரியவரிடம் உடனே தெரிவித்து வழி கண்டுபிடிக்க அறிவுறுத்துகிறார்கள். இதை "சித்தம்" நன்றாக விவரிக்கிறது.

இதைத் தவிர எமாற்றுகிரவனின் கட்டாயச் சூழலையும் தெரிவித்தது ரொம்பப் பிரமாதம்.

பஞ்ச் டயலாக் அள்ளி வீசிருக்கீங்க. "கஷ்டப்பட்ட காசு காத்துலையா போயிடும்" செம தூள்.
மொத்தத்தில் படம் துபாய் வாசிகளின் உண்மை நிலவரம் நன்றாக வெளிவந்துள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

வெளிநாட்டில் தேனாறும், பாலாறும்
ஓட, அதை அள்ளிப்ப்ருக, யாரும்
செல்வதில்லை. அத்தனை சிரமங்களும்
படுவதோடு ஏமாற்றமும் படும் அன்பு...
இறைவன் சித்தால் மீண்டிருக்கிறார்.
சிற்ப்பாய் படைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்றைய நிதர்சனத்தை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நேரடி டப்பிங் என்பதால் சில இடங்களில் வசனம் தெளிவாக புரியல.....கொஞ்சம் கவனித்திருக்கலாம். இதை என் வலை பதிவில் மீள் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அனுமதிக்கு காத்திருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

பல இடங்களில் நடக்கிறதுதான். இருந்தாலும், சரியான வழிமுறைகளைக் கையாண்டால் தீர்வு கிட்டும் சாத்தியமுண்டு என்பதைக் கூறும் படம். நேர்மையாச் சம்பாதிச்ச காசு காணாமப் போகாது என்பது சரிதானென்றாலும், அதையும் கருத்தாகப் பேண வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

சீட்டாகச் சேமிப்பதைவிட, வங்கிகள் சேமிப்பதே பாதுகாப்பானது என்பதையும் வலியுறுத்தியிருக்கலாம்.

அடுத்தப் படங்களில் டெக்னிக்கல் விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

வாழ்த்துகள்.

ஸாதிகா said...

தங்களின் குறும்படம் பார்த்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.படிப்பினையூட்டக்கூடிய படைப்பு.படைப்புக்காக உங்களின் கடின உழைப்பு தெரிகின்றது.வாழ்த்துக்கள்.இது போன்று இன்னும் நிறைய குறும்படங்கள் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

RVS said...

கரகாட்டக்காரன் குடகு மலை காற்று பேக்கிரவுண்டுக்கு உதவியிருக்கு... நிறைய இடங்கள்ள இளையராஜாவோட பீட்ட மட்டும் போட்டு போட்டு ஏன் எடுக்கறீங்க? கதையோட ஒன்றிப் போற கவனத்தை சிதைக்குது . பிளாட்டில் கட்டிப்புரண்டு சண்டை போடும்போது பக்கத்துல இருக்குறவங்க சிரிக்கறாங்க...

1064 மணி நேரங்களுக்கு பிறகு... இப்படியெல்லாம் போட்டு குறும்படம் முடியறவரைக்கும் எவ்ளோ நாள்ன்னு யோசிக்க வைக்காதீங்க சார்!! நா கணக்குல வீக்கு.. ;-) ;-)

சீட்டுப் பணமா அன்பை சீட்டிங் பண்ணின பணமா? - வசனம் ...வசனம்............ ;-)

தங்கச்சி கல்யாணம் ஆண்டவன் சித்தம் படி நடக்கும் என்று சொல்லும் அன்பு ... இதயங்களில் நிற்கிறார்.. கொஞ்சம் சிரத்தை எடுத்து நடிக்கிறார்...

வசனம் ஸ்கிரிப்ட் தயார் பண்ணாமல் ஆங்காங்கே அவ்வப்போது பேசி நடித்தீர்கள் என்று நினைக்கிறேன்... ம்... ஆ...ம்.. என்று இழுத்து இழுத்து வருகிறது...

மொத்தத்தில் சித்தம்... உன்னதமான முதல் முயற்சி.. வாழ்த்துக்கள் கோபி!! ;-) ;-)

(குற்றம் குறைகளாக எண்ணாமல் இருந்தால் அதுவே போதும் எனக்கு.. ;-)
)

Anonymous said...

வாழ்த்துக்கள் கோபி

மழலைப் பேச்சு said...

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

கோமதி அரசு said...

கோபி, இரண்டு பகுதிகளையும் இன்று தான் முழுமையாக பார்க்க முடிந்தது.

கதையும், கருத்தும் நன்றாக இருக்கிறது.

நல்லவர்கள் நாட்டில் உண்டு என்றும், சந்தர்ப்பம் மனிதரை தவறு செய்ய வைக்கிறது என்பதையும், அன்பின் மன்னிப்பும் அன்பை உயர்ந்த மனிதனாய் காட்டுகிறது. ஆண்டவன் சித்தம் தன் தங்கை திருமணத்தை நடத்தும் என்ற அசையாத நம்பிக்கையும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் வேண்டியது நம்பிக்கை என்பதை குறிப்பிடுகிறது.

பாடுபட்ட பணத்தை நல்ல முறையில் பாதுகாப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

நடித்த எல்லோரும் நன்கு நடித்தார்கள்.
சித்தம் குறும்படம் கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நிறைய படைப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

கிரி said...

கோபி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

சில குறைகள் இருப்பினும் இதை அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த முயற்சியை இன்னும் சிறப்பாக செய்யுங்கள்.

செல்லதுரை அவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தது.. வாசிம்கான் நடிப்பும் ஓகே. இருவரும் அடிக்கடி முகத்தை மூடிக்கொள்ளாமல் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும். தொழில்முறை நடிகர்கள் இல்லை என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

உண்மையில் கூறப்போனால் இப்படி அறிவுரைகளையும் எதிபார்ப்புகளையும் கூறுவது எளிது ஆனால் நீங்கள் அனைவரும் இதற்காக எவ்வளோ சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று உணர முடிகிறது.

உங்களின் முயற்சிகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அடுத்த முயற்சியில் மேலும் சிறப்பாக செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Pranavam Ravikumar said...

"Effort taken by you appreciated" My wishes.

jokkiri said...

பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தும், பதிவிற்கு வாக்களித்து பதிவை பிரபலமாக்கியமைக்கும், சித்தம் குறும்படம் கண்டு வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி...

jokkiri said...

பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தும், பதிவிற்கு வாக்களித்து பதிவை பிரபலமாக்கியமைக்கும், சித்தம் குறும்படம் கண்டு வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி...

ரஹீம் கஸ்ஸாலி said...

தங்களின் சித்தம் குறும்படத்தை பற்றி என் வலைப்பூவில் எழுதியுள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும்

Unknown said...

வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறும்படம்... பகிர்வுக்கு நன்றி.
உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

jokkiri said...

எங்களின் முதல் முயற்சியான இந்த “சித்தம்” குறும்படத்தை கண்டு வாழ்த்தியமைக்கும், இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கியமைக்கும் தோழமைகள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....

புவனேஸ்வரி ராமநாதன் said...

வணக்கம் கோபி அவர்களே,
வெளிநாடு வாழ் மக்களின் இன்னொரு வேதனையான பக்கத்தை அருமையாக தங்கள் ''சித்தம்''
குறும்படத்தில் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். மிக நல்ல பணி. கணினி சிறிது காலம் பழுதடைந்து
விட்டதால் நடுவில் சிறிது காலம் பதிவிடமுடியவில்லை. அதனாலேயே தங்களுக்கு பதில் அளிக்க
கால தாமதம் ஏற்பட்டு விட்டது மன்னிக்கவும். இனி தொடர்ந்து பயணிப்பேன். நன்றி.

jokkiri said...

// புவனேஸ்வரி ராமநாதன் said...
வணக்கம் கோபி அவர்களே,
வெளிநாடு வாழ் மக்களின் இன்னொரு வேதனையான பக்கத்தை அருமையாக தங்கள் ''சித்தம்''
குறும்படத்தில் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். மிக நல்ல பணி. கணினி சிறிது காலம் பழுதடைந்து
விட்டதால் நடுவில் சிறிது காலம் பதிவிடமுடியவில்லை. அதனாலேயே தங்களுக்கு பதில் அளிக்க
கால தாமதம் ஏற்பட்டு விட்டது மன்னிக்கவும். இனி தொடர்ந்து பயணிப்பேன். நன்றி.//

******

வாங்க புவனா மேடம்...

உங்கள் வருகைக்கும், குறும்படத்தை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி...