வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் - இறுதி பகுதி

சீக்கிரம் கிளம்புங்க….., ப்ளேன் வர்ற நேரமாச்சு. இங்கின இருந்து வேன் போறதுக்கே ஒரு மணி நேரமாகுமாம். சுணங்காம கிளம்பு. வேலுவின் தாயார், அரக்க பரக்க அடுப்படிக்கும் தாழ்வாரத்துக்குமாய் நகர்ந்து கொண்டிருந்தார். என் மகன் பாரின்ல இருந்த வர்றான் எனும் பெருமிதம் அவர் முகத்தில் சிரிப்பாக மலர்ந்திருந்தது. புள்ளைன்னு பெத்தா இவள மாதிரி பெறனும், குடும்பத்தயும் பாத்து பதவீசா நடக்குற நல்ல புள்ளயாவும் இருக்கணும், குடும்பத்த தூக்கி நிறுத்துற புள்ளையா இருக்கணும், என பக்கத்து வீட்டு அக்காள் சொன்னது ரொம்ப பிடித்தது. ஆம் அவள் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது எனவும் உணர்ந்தாள், வெளியில் சொல்லவில்லை.

வேலுவின் அக்கா, அந்த அதிகாலையிலேயே குளித்திருந்தார். வெளியில் செல்ல உடுத்தும் சேலையை வீட்டுக்கு கட்டியிருந்தார்… புதுப் பெண்ணல்லவா….. அம்மாவை பார்த்து ‘ஏம்மா, வேலு எவ்வளவு காசு கொண்டு வர்றதா சொன்னான்’ என லேசான கவலையுடன் கேட்டாள். அம்மா திரும்பி அவளை பார்த்து, நீயேண்டி கவலை படுறே, காசு பிரச்சனைய பாத்துக்கிறது எங்க வேலை. எல்லாம் நல்லபடியா நடக்கும். இடைமறித்து அக்கா சொன்னாள், இல்லம்மா நகையும் ரொக்கமுமா மூணு லட்சம் முகூர்த்ததுக்கு முன்னால கொடுத்துறலாம்ன்னு அவன் சொன்னானே அதுக்கு கேட்டேன்.

எல்லாம் சரியா இருக்கும்டீ. கூட வேண்டிய நேரத்துல எல்லாம் கூடி வரும்.. புகுந்த வீட்டுல போயி, நம்ம வீட்டு கவுரதய காப்பாத்து, அப்புறமா சுணங்காம பருப்பு வேகுறத இறக்கி வைச்சுரு. கவனம் என சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு வேகமாய் நகர்ந்தார்.

**************
விமானம் கிளம்பி, வானத்தில் மிதந்ததும் வேலு தன்னை தளர்த்தி கொண்டான். மனம் லேசாகி, எண்ணமும் கூட இறக்கை கட்டிஅந்த விமானத்துடன் பறந்தது. சோதனைகள் தாண்டினால் தான்யா சாதனை என்று ரஜினி அவர்கள் ஏதோ ஒரு விழாவில்சொன்னாரே... அது எவ்வளவு நிதர்சனமான உண்மை... இப்போது என் மனம் எதையோ சாதித்து விட்டதை உணர்கிறதே. இந்த சாதனை தரும் நினைவே சுகம். அதுதான் உச்சகட்ட சுகம். பெறுவதில் அல்ல கொடுப்பதில் தான் சுகம் என்பது இப்போதல்லவா புரிகிறது.

விர்ரெனும் விமான ஓசையும், உயர்தர உணவும் உறக்கத்தை அன்பளிப்பு செய்தன. கால் நீட்டி, உடலை குறுக்கி வேலு உறங்கினான். உறங்கும் போது தொடர்பில்லாமல் நிறைய கனவுகள் அலை மோதின.
கனவில் ரஜினி வந்தார், பட்டென்று கை பிடித்து, படபடவென நிறைய அறிவுரைகள் கூறினார்.... பல பழைய படங்களில் இருந்து தன்னம்பிக்கை ஊட்டும் பல பாடல்களை கேட்க சொன்னார்.... இன்னமும் என்னன்னவோ நிகழ்வுகள் வரைமுறையின்றி மனதுள் சுழற்றி அடித்தது...

திருச்சியில் விமான பணிப்பெண் தட்டி எழுப்பிய பின் தான் விழித்தான்..,... துள்ளி எழுந்தான்.. தாய் மண்ணில் வந்து சேர்ந்ததும், விமான நிலையத்தின் பெயர் பார்த்ததும் அழுகை வந்தது. கண்ணும் மனமும் அலைபாய்ந்து அங்கும் இங்கும் பார்த்தது.
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து தன்னுடைய பெட்டிகளுடன் தாய் மண்ணில் கால் வைத்தான்.... உடல் மீண்டும் சிலிர்த்தது.... கம்பீரமாக நடை போட்டு வாசல் நோக்கி விரைந்தான். அன்றைய காற்றுக்கு உயிர் இருந்தது. நம்ம ஊரு காத்துக்கு ஒரு தனி உசிரு இருக்குது என மனசுக்குள் சொல்லிக் கொண்டான். காற்றும் அவனை அணைத்து, மெல்ல அவன் உடலை வருடிகொடுத்தது.... பாசமாய் தலை கலைத்தது.... முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றையை மெல்ல விலக்கினான்.. பார்வை பளிச்சிட்டது....
வரவேற்க யார் வந்திருப்பார்கள் என கண்ணாடி தடுப்பின் வழியே பார்க்க முயற்ச்சித்தான். வாசலில் வேலுவின் குடும்பத்தார் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை,, ஆனால் மிகவும் பரிச்சயமான ஒரு முகம், துளசி, துளசியா? ....
ஆம் அது துளசிதான். அந்தமுகத்தை எப்படி மறக்க முடியும்....காதலை எனக்கு அறிமுகம் செய்த முகமல்லவா… என்னை காதலனாக்கி, சாமான்யனான என்னை எவ்வளவு கவிதைகள் எழுத வைத்த முகம் அது.... இந்த மூன்று வருடங்களில் இன்னும் பூசினது போல் இருக்கிறாள்.
அருகில் யார் புதுசாய் இருக்கிறதே? இவ்வளவு நெருக்கமாக இருப்பதை பார்த்தால், அது துளசியின் கணவனா…..ஹும்… இருக்க வேண்டும். இவர்கள் சேர்ந்து வரவேற்க இங்கு ஏன் வந்தார்கள். கேள்விகள் கண்ணாமூச்சி ஆடியது. . நெஞ்சு லேசாக வலித்தது போல் உணர்வு.. தொண்டை அடைத்தது.... பளிச்சிட்ட கண்களில் லேசாக இருள் சூழ்ந்தது... கீழே விழாமல் இருக்க அவஸ்தைப் பட்டான. கண்ணில் பார்வை தடுமாறியது, அருகில் வந்தாகிவிட்டது..

நான்தான் சரவணன், துளசியின் அருகில் இருந்தவன் தான் தொடங்கினான், ' வாங்க வேலு' ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கோம்.. துளசி எந்த சலனமும் இல்லாமல் உடன் வந்தாள். கண்ணில் மட்டும் மகிழ்ச்சி மின்னியது. வேலுவுக்கும் வார்த்தைகள் சண்டித்தனம் செய்தன. நல்லாயிருக்கீங்களா சரவணா....

பளிச்சென்று மின்னியது. சரவணா…. சரவணா... ஆம், இது சரவணகுமார்…. இவர் என் தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைஅல்லவா, ஆம் அவர்கள் அனுப்பிய போட்டோவில் வந்த முகம்தான். நேரில் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சரி இவர் எதற்காக இங்கே வந்தார், இவருக்கு துளசியை எப்படி தெரியும். மற்றவர்கள் எங்கே, அவர்கள் யாரையும் காணவில்லையே. துளசி எப்படி சரவணனுடன் வந்தாள். அடுக்கடுக்காய் கேள்விகள் வந்து விழுந்தன.

கேள்விகள் நிறைய விழுந்தாலும் விடை மட்டும் காணாது நிற்க, மெல்லமான நடையில் வாசலுக்கு வெளியே வந்தாகிவிட்டது..ஆஹ்… இங்கே இருக்கிறார்களே!!! அதோ அம்மா, அக்கா , கூட்டத்தில் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்...

அம்மா எப்படிம்மா இருக்கீங்க.. வார்த்தை வரவில்லை, உதடுகள் துடித்தன, இதயம் பொங்கியது, நெஞ்சடைத்தது, வார்த்தை முட்டியது. வார்த்தை வெளிவராத அந்த சூழலில், கண்கள் மட்டுமே அதை கேட்க, தாயுள்ளம் அதை புரிந்து அவனை அணைத்து கொண்டது.

இத்தனை நாள் பார்க்காத ஏக்கம், அவனை பிரிந்த துக்கம், கண்ணீரின் வடிவில் எட்டிபார்த்தது. உடல் குலுங்கியதில் அவளின் அழுகை தெரிந்தது. தாய் தன் மகனை வாஞ்சையுடன் தோள் தடவி ஆசுவாசப்படுத்தினாள்.
டேய்... ஜம்முன்னு ராஜா கணக்கா இருக்கேடா, வெள்ளக்காரதுரை மாதிரி கால்ல பூட்டிஸ், முழுக்கை சட்டை எல்லாம். வீட்டுக்கு போன மொத வேலையா சுத்திப்போடணும்டா... நம்ம துளசி ரொம்ப கொடுத்து வைச்சவ. அந்த கடைசி வார்த்தை மனதில் ஓராயிரம் சேதி சொல்ல, புது மலர்ச்சியுடன் நிமிர்ந்து வேலு தன் தாயைப்பார்த்தான். அவன் முக மலர்ச்சியில் பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன...

"துளசி இங்கே வாம்மா" - இது அம்மா.. என்னடா வேலு பாக்கிறே . 'உன் துளசி'டா. உன்னை பாக்கணும்னு பிடிவாதமா சண்டை போட்டு வந்தா.. சரவணன் தான் இங்க யாரையோ ஃப்ரெண்ட பிடிச்சு, நான் உள்ளே கூட்டிட்டு போறேன்ன்னு கூட்டிட்டு போனான். வேலு முதல்ல துளசியை பாக்கட்டும்னு சொன்னான்.

எனக்கும் வயசாயிருச்சு, இந்த கல்யாணத்தோட, உன் கல்யாணத்தையும் முடிச்சுறலாம்ன்னு யோசனை. உனக்கு சரின்னா, துளசிக்கும் உனக்கும் அதே முகூர்த்தத்தில ஒரே மேடையில கல்யாணம் வச்சுரலாம்.... என்னடா, அம்மா சொல்றது ரைட்டுதானே. சிரித்தாள் அம்மா..
துளசி வெட்கத்தால் தலைகுனிந்தாள், வழக்கம் போல கால்கள் தரையில் புள்ளி எதுவும் வைக்காமலேயே பெரிய பெரிய கோலங்கள் போட்டது... தலையை குனியும் அந்த ஒரு நொடியில் வேலுவின் கண்ணை சந்தித்தாள். உலகின் உச்சகட்ட சந்தோசம் அவர்கள் இருவருக்கும் அந்த ஒரு நொடி பார்வையில் வாய்த்தது. இதுதான் காதலின் உன்னதம். புனிதம்.
அனைவரும் வாடகை வேனில் ஏறி அமர, டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்து, டேப்பை ஒலிக்கவிட்டார், உச்சபட்ச குரலில் ஒரு அட்டகாசமான சூப்பர் ஹிட் பாடல் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒலித்தது.

'சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறு ,
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு'
வேலு தலை திருப்பி, துளசியை பார்த்தான், துளசியின் கனிந்த பார்வை சொன்ன ஓராயிரம் விஷயங்களை அவன் மனம் ஒரு நொடியில் கிரகித்ததில், அவன் சிகரத்தை அடைந்தான். தன் வாழ்க்கை அர்த்தமும் இனிமையாகவும் உள்ளதாய் வேலு உணர்ந்தான்.
முற்றும்....

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

16 comments:

சொல்லச் சொல்ல said...

அப்படி போடுங்க... கதை எழுதுவீங்களா? "டேப்பை ஒலிக்க விட்டார்" என்றதுமே அது கண்டிப்பாக ரஜினி பாடலாகத்தான் இருக்குமென நினைத்தேன் வீண்போகலை.

எல் கே said...

திருப்பம் பெருசா எதிர்பார்க்க வைத்தது

Jaleela Kamal said...

மிக அருமையான முடிவு, இடையே சூப்பர் ஸ்டார் ஐயும் சேர்த்த்து கலக்கலான கதை.

Jaleela Kamal said...

வெளி நாட்டில் இருந்து வந்து முதலில் பார்க்கும் எல்லா அம்மாக்களின் உணர்வை இந்த கதை உணர முடிந்தது/


துளசியுடன் சரவணன், கொஞ்சம் கலக்கமா இருந்துச்சு, அப்பரம் முடிவு சுமூகம தான்...

Chitra said...

நிச்சயமா வெற்றிதான்.

////கனவில் ரஜினி வந்தார், பட்டென்று கை பிடித்து, படபடவென நிறைய அறிவுரைகள் கூறினார்.... பல பழைய படங்களில் இருந்து தன்னம்பிக்கை ஊட்டும் பல பாடல்களை கேட்க சொன்னார்.... இன்னமும் என்னன்னவோ நிகழ்வுகள் வரைமுறையின்றி மனதுள் சுழற்றி அடித்தது...////


.....கலக்கல்!

வெங்கட் நாகராஜ் said...

கதைக்கு ஒரு நல்ல முடிவு. பகிர்வுக்கு நன்றி.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//உலகின் உச்சகட்ட சந்தோசம் அவர்கள் இருவருக்கும் அந்த ஒரு நொடி பார்வையில் வாய்த்தது. இதுதான் காதலின் உன்னதம். புனிதம்.//

அடடா.. சூப்பர்.. எவ்வளவு பெரிய உண்மைங்க.. :)

ரொம்ப அழகா இருக்கு, உங்க எழுத்து நடை.. கதையுடன் லயித்து விட்டேன்.. :-) நன்றிங்க.

Mrs. Krishnan said...

தலைவர் படம் போலவே பாசிட்டிவ் ஆன முடிவு சூப்பர். தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ள புகைபடங்கள் அருமை.

jokkiri said...

பதிவிற்கு வருகை தந்து, கதையை படித்து கருத்து (பாராட்டியமையும்) பகிர்ந்த தோழமைகளுக்கு மிக்க நன்றி

சொல்லச் சொல்ல
எல்.கே.
ஜலீலா கமல்
சித்ரா
வெங்கட் நாகராஜ்
ஆனந்தி
திருமதி கிருஷ்ணன்

jokkiri said...

இந்த பதிவிற்கு இண்ட்லி/தமிழிஷ் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் நன்றி...

kvrudra
RAHIMGAZALI
karthikvlk
janavin
sriramanandaguruji
chitrax
venkatnagaraj
mrskrishnan
ananthi
arasu08
idugaiman
mvetha
urvivek
boopathee
ambuli
jollyjegan
tamilz
inbadurai
ganpath
ashok92
ants

Kousalya Raj said...

கதை பயணிக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது...அதன் கூடவே வாசகர்களையும் பயணிக்க வைத்த யுக்தி எழுத்தாளரின் சாமார்த்தியம்...

//கேள்விகள் கண்ணாமூச்சி ஆடியது. . நெஞ்சு லேசாக வலித்தது போல் உணர்வு.. தொண்டை அடைத்தது.... பளிச்சிட்ட கண்களில் லேசாக இருள் சூழ்ந்தது... கீழே விழாமல் இருக்க அவஸ்தைப் பட்டான. கண்ணில் பார்வை தடுமாறியது,//

இந்த இடத்தில் அந்த காதலனாய் மாறி இருக்கிறார் எழுத்தாளர்...

ரஜினி ரசிகர் என்பது கதையின் பல இடங்கள் சொல்லியது...

மொத்தத்தில் கதை என்னை கவர்ந்துவிட்டது...

வாழ்த்துக்கள் கோபி...

காத்திருக்கிறேன் இன்னும் பல கதைகள் படிக்க....

jokkiri said...

கதையை படித்து பாராட்டிய தோழமை கௌசல்யா அவர்களே...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி... ஏற்கனவே எழுதிய சில கதைகள் ஜோக்கிரி வலைத்தளத்தில் உள்ளது.. படித்து மகிழவும்... இன்னும் பல கதைகள் அரங்கேற இருக்கிறது...

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல..

கோமதி அரசு said...

சோக முடிவை வைக்காமல் நல்ல முடிவு சொன்னதற்கு வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

தாயின் ஆசீர்வாதம் உள்ள பிள்ளைக்கு எல்லாம் நல்லா நடக்கும் என்பதை உணர்த்தும் கதை.

பெசொவி said...

//உலகின் உச்சகட்ட சந்தோசம் அவர்கள் இருவருக்கும் அந்த ஒரு நொடி பார்வையில் வாய்த்தது. இதுதான் காதலின் உன்னதம். புனிதம்.//

super!

இராஜராஜேஸ்வரி said...

நல்ல முடிவு சொன்னதற்கு வாழ்த்துக்கள்

Asiya Omar said...

முடிவு அருமை,கதையும் விவரித்த விதமும் சூப்பர்.